வெள்ளி, 1 ஜனவரி, 2010

புதுமையோடு பிறந்த புத்தாண்டு

First Published : 01 Jan 2010 02:09:33 AM IST


ஒவ்வொருமுறையும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் புத்துணர்வு பெறுவோம், ஆனால் இந்த புத்தாண்டே புதுமையோடு பிறந்திருக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2010 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில்தான் முதல்முறையாக புத்தாண்டு கொண்டாப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அவர்கள் காலண்டரை அடிப்படையாக கொண்டு புத்தாண்டை கொண்டாடவில்லை. பாபிலோனிய மக்கள் புத்தாண்டு பிறப்பை 11 நாள்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அதேவேளையில் ரோமானிய மக்கள் புத்தாண்டு பிறப்பை மார்ச் மாதம் கொண்டாடி இருக்கிறார்கள். ரோமானிய மக்கள்தான் முதல்முறையாக காலண்டரை அடிப்படையாக வைத்து புத்தாண்டை கொண்டாடி இருப்பதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. ரோமானிய அரசில் சில மாற்றங்களுக்கு பின்னர் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. முதலில் அவர்கள் ஒரு ஆண்டுக்கு 445 நாள்கள் என கணக்கீட்டு இருந்தனராம். காலச்சக்கரம் வேகமாக சுழன்றதின் காரணமாக தற்போது, உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு மதம், இனம், மொழி, நாடு, கலாசாரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டாப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் ஒரே நாளில், புத்தாண்டு பிறப்பு கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இதுவரை பிறந்த எந்த புத்தாண்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு, இந்த 2010 ஆம் ஆண்டு பிறப்புக்கு கிடைத்துள்ளது. 2010 புத்தாண்டு பிறப்பு சந்திரகிரகணத்தோடு பிறந்துள்ளது. இதுவரை அதாவது 1901-ல் இருந்து புத்தாண்டு தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டதில்லை, தற்போதுதான் முதல்முறையாக புத்தாண்டில் சந்திரகிரகணம் ஏற்பட்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1901 -ல் இருந்து சந்திரகிரகணத்தை பற்றி விவரங்கள் இருப்பதால், அதற்கு முன்பு புத்தாண்டு பிறப்பின்போது சந்திரகிரகணம் ஏற்பட்டதா என்ற தகவல் இல்லை எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல புத்தாண்டின்போது சந்திரகிரகணம் 2028 ஆண்டும், 2066 ஆண்டும் வரும் என கூறப்படுகிறது. புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு கேளிக்கைக்கும், கும்மாளத்துக்கும் உரிய நிகழ்ச்சியாக அண்மைக்காலமாக மாறி வருகிறது. ஆனால், புத்தாண்டின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பையும், புதிய அத்தியாத்தையும் கொண்டு லட்சியத்தையும், நோக்கத்தையும் அடைய சபதம் ஏற்று பாடுபட வேண்டும் என்கின்றனர் அறிஞர்கள். அவ்வாறே புத்தாண்டு மூலம் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை கொண்டு லட்சியத்தை அடைய இன்று முதல் பாடுபடுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக