சனி, 2 ஜனவரி, 2010

ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்



இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று
சென்னை, ஜன.1: "குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:"கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
கருத்துக்கள்

படிப்பதற்கு நன்றாக உள்ளது. குறையைக் கேட்டால் களைவார் என்னும் நம்பிக்கையுடனே கேட்கின்றேன். முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் தெரிவித்தபின் உரியவர்களைத் தண்டிக்கவும் செய்வாரா மாண்புமிகு முதல்வர் அவர்கள்? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் எனும் திருவள்ளுவர் வாக்கை நினைந்து கூறுபவரைப் பழி வாங்காமல் கூறப்படும் குறையை உடனே சரி செய்ய முன் வருவாரா? நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (இதனைப் படிக்கும் அதிகாரிகள் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன். நன்றி.)

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:16:00 AM

தமிழகத்தைப் பிடித்த இந்தப் பீடை என்றுதான் ஒழியுமோ?

By தமிழன்
1/2/2010 4:27:00 AM

இந்த கருணா பிணத்தை இன்னும் எரிக்கவில்லையா!! வெகு சீக்கிரத்தில் தமிழ் நாடு நாற்றம் எடுக்க போகிறது இந்த பிணத்தால்.

By usanthan
1/2/2010 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக