புதன், 30 டிசம்பர், 2009

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தாமதம் ஏன்?: கருணாநிதி



சென்னை, ​​ டிச.​ 29: தமிழ்ச் செம்மொழி என்ற அறிவிப்பைச் செய்வதில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தள்ளிப் போட்டது ​ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' என்ற தொடர் கட்டுரையில் "செம்மொழி சிறந்திட;​ தொடர் செயல்பாடுகள்' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை அவர் எழுதியுள்ளதாவது:தமிழைச் செம்மொழியாக அறிவித்திடத் தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசின் சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.2000 டிசம்பர் 18}ம் தேதி அன்று முதல்வர் என்ற முறையில் பிரதமர் வாஜ்பாய்க்கு நான் அனுப்பிய கடிதத்தில்,​​ "தொன்மையும்,​​ வளமும் நிறைந்த தமிழைச் செம்மொழி எனப் பிரகடனம் செய்திட வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை மத்திய அரசிடம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.​ உண்மையும்,​​ நேர்மையும் வாய்ந்த மாநில அரசின் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து மத்திய அரசு உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கூறியிருந்தேன்.ஆட்சி அளவில் மட்டுமல்லாது,​​ கட்சி,​​ அரசியல் ரீதியாகவும் தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசர அவசியம் என்று திமுக முடிவு செய்தது.2001}ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையில்,​​ முதல்முறையாக "தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்று திமுக வலியுறுத்தும்' என்ற வாக்குறுதியை இடம்பெறச் செய்தது.இதன் தொடர்ச்சியாக,​​ பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் இறங்கியது.பாஜக ஆட்சியில்...​ தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து,​​ 2003}ல் தில்லியில் உண்ணாவிரதம் ​ நடைபெற்றது.இதைத் தொடர்ந்து,​​ அப்போதைய பிரதமர் வாஜ்பாய்,​​ குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரிடம் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளக் கோரும் மனு கொடுக்கப்பட்டது.தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதில் கருத்து வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் வாஜ்பாய் தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால்,​​ தமிழைச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்குமாறு தனது துறை அதிகாரிகளை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கேட்டதாகவும்,​​ அதற்கு அவர்கள் "பயன்பாட்டில் இல்லாத இறந்த மொழியை மட்டுமே செம்மொழியாக அறிவிக்க முடியும் என்று ​ கூறியதாகவும் அதிகாரப்பூர்வமின்றி செய்திகள் வெளிவந்தன.மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்த வந்த பாஜகவில் முரளி மனோகர் ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர்,​​ திராவிட மொழிக் குடும்பத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டிருந்தனர்.இதன் காரணமாக,​​ தமிழ்ச் செம்மொழியென அறிவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர்மறையான அணுகுமுறையும்,​​ காட்டிய தாமதமும் தமிழ்ச் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப்போடச் செய்தன.​ இதை வரலாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

..HE..HE..HE LIVING CORPSE IS TELLING LISTEN..HE..HE..HE HIS OWN MADURAI SON CANT SPEAK IN TAMIL IN PARIMENT( IN SRI LANKA AND SINGAPORE PARLIMENTS MPS AND MINISTERS CAN SPEAK IN TAMIL)...HIS FAMILY SUN TV IS PROMOTING TAMINGILAM....HE HE HE ALL THE SHOPS BOARDS AND ROADS SIGNS ARE IN TAMINGLISH.....HE HE HE...EVEN THE SIMPLE RAILWAY SEAT BOOKING FORM IS IN HINDI AND ENGLISH..BETTER SEMMARI STATUS IS GOOD

By KOOPU
12/30/2009 3:05:00 AM

If this info is true, you should have withdrawn your support to the BJP. Why did you stuck with the central ministry.........

By B Sivanesan
12/30/2009 12:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக