தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களின் ஆளுநர் மாளிகைளிலும் உசாவல் மேற்கொண்டால் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்குத் த்ரப்படும் பதவிகளின் மூலம் செய்த ஒழுக்கக் கேடுகள் வெளிவரும். சென்னாரெட்டி மீது புகார் சொன்னததை அரசியலாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆனால், ஆளுநர் மாளிகைகளின் ஊழியர்களும் காவல் பணி பார்க்கின்றவர்களுக்கும் உண்மைகள் தெரியும். எனவே, ஏற்கெனவே ஒரு பெண் தன் தந்தையாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன வழக்கை மீள் உசாவல் மேற்கொள்வதுடன் நடு நிலையுடன் இதுவரை ஆளுநர்களாக இருந்தவர்கள் மீதும் இப்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மீதும் உசாவல்கள் மேற்கொள்ள வேண்டும்.தோழியர் புடை சூழ இருந்த இருக்கும் ஆளுநர்கள் பற்றிய உசாவல்கள் ஆளுநர் மாளிகைகளில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருக்கத் துணை புரியும்.இதை விடுத்து திவாரிக்கு உறுதுணையாக இருப்பது நாட்டிற்கே நல்லதல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/30/2009 5:33:00 AM