புதன், 30 டிசம்பர், 2009

தீவிரவாதிகள் எந்த நாட்டிலிருந்தாலும் ஒழித்தே தீருவோம்: ஒபாமா



வாஷிங்டன், டிச.29: உலகின் எந்தப் பகுதியில் அல்-காய்தா தீவிரவாதிகள் இருந்தாலும் அவர்களை அழித்தே தீருவேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். அமெரிக்காவுக்கு எதிராக உலகின் எந்தப் பகுதியிலிருந்துஅவர்கள் திட்டம் போட்டு அதைச் செயல்படுத்தினாலும் அதை உறுதியுடன் முறியடிப்போம் என்றும் அவர் கூறினார். அமெரிக்க விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு வைத்து தகர்க்க அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த நைஜீரிய இளைஞர் முயற்சி மேற்கொண்டார். கிறிஸ்துமஸ் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதன்மூலம் 270 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. தற்போது அந்த இளைஞரிடம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஓய்வுக்காக ஹவாய் தீவில் உள்ள பராக் ஒபாமா, இச்சம்பவம் குறித்து முதல் முறையாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிரவாத நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எவராக இருப்பினும் அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கும் வரை ஓயமாட்டோம். சதிச் செயலில் ஒரு வேளை அந்த தீவிரவாதி வெற்றி பெற்றிருந்தால், விமானத்தைத் தகர்க்கும் முயற்சி ஈடேறியிருந்தால், விமானப் பணியாளர்கள் உள்பட 300 பேர் உயிரிழந்திருப்பர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வந்த அவர்களது நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த தீவிரவாத செயலை மேற்கொண்ட உமர் ஃபரூக் அப்துல் முத்தலப் (23) என்ற இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எப்பிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை அச்சுறுத்தும் எந்த ஒரு அமைப்பையும், தகர்த்தெறிய அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும். அத்தகைய தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை விடமாட்டோம். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் குழுக்களுக்கு நெருக்குதல் அளிக்குமாறு தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பாவி பொது மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குழுவினரை அமெரிக்கா ஒருபோதும் விட்டு வைக்காது. அமெரிக்கா வெறுமனே தனது ராணுவ பலத்தை மட்டும் அதிகரித்துச் செல்வதாக இந்தக் குழுக்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. டிசம்பர் 25-ம் தேதி விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் மூலம் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேலும் ஆராயப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மிகவும் பரிச்சயமான தீவிரவாதிகளைக் கண்டறிந்து அவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞர் கூட, இத்தகைய பட்டியலில் இடம்பெற்றவர்தான். ஆனால் இவரை பயணம் செய்ய அனுமதித்தது தவறு. எனவே இது தொடர்பான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இனி தீவிரமாக ஆராயுமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிவரும் நாள்களில் பயணிகள் பட்டியலில் தீவிரவாதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்படும். அடுத்த கட்டமாக விமான பயணிகளை சோதனையிடுவதில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நவீன கருவிகளையும் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. விமானத்திற்குள் பயணி ஒருவர் அதி பயங்கரமான வெடிப்பொருளைக் கொண்டு வந்தது குறித்தும் ஆராய்ந்து , எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிச்சயம் எடுக்கும். இதற்காக எத்தகைய பலத்தையும் பிரயோகிக்கும். அமெரிக்க மக்கள் இனி விழிப்புடன் செயலாற்றி இதுபோன்ற தீவிரவாதிகளை தனிப்படுத்த வேண்டும். நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒற்றுமையுடன் இருந்து நம்பிக்கையாக செயல்பட்டு இத்தகைய சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஒபாமா. சீருடை அணிந்த அமெரிக்க வீரர்களும் வீராங்கனைகளும் அமெரிக்க மக்களையும் நாட்டையும் பாதுகாப்பர். எனவே புத்தாண்டையும் அதைத் தொடர்ந்து வரும் நாள்களையும் எழுச்சியுடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று தனது புத்தாண்டு வாழ்த்தையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளார் ஒபாமா.
கருத்துக்கள்

அரசாங்கம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளையும் அதைப் பாதுகாத்து உதவும் பிற நாட்டு அரசாங்கங்களின் வன்முறைகளையும் இத்தகைய நாட்டின் படைகள் மேற்கொள்ளும் வன்முறைகளையும் என்றும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. எங்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைக்குரல்களும் எங்களைப் பொறுத்த்வரை வன்முறையே! உரிமைக்குரல்களுக்கு எதிரான எங்களின் அடக்குமுறைகளெல்லாம் நன்முறை களே! இவ்வாறு அடக்குமுறையாளர்கள் எண்ணிச் செயல்படுவதையும நிறுத்தினால் உலகில் வன்முறைகள் அழியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/30/2009 4:53:00 AM

Mr. Obama correctly says to destroy the terrorist in his country. We must go back that the terrorist attack our country also, at Munbay last year. During festival times they blast at New delhi and Large number of People were killed by the terrorist.We can say large number of incidences like this. Not only here but also all parts of the world. The America should take severe action against the terrorist. We should support Opama for his action. Those who are against America are sending their children to America for higher studies. They are not sending to Pakisthan , Afhganishthan, Oman etc.for higher studies. It is the duty of American president to safe guard their People. The terrorist what ever religion they belongs should be encountered. It is not the duty of Opama to compromise in Srilanka or elsewhere.It shows that the America should involve in the problems of other countries. It is not correct. He should safeguard his people.

By M.Natrayan, Guziliamparai
12/29/2009 10:34:00 PM

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவரே! முதலில் தீவிரவாதத்திற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அதை ஒழிக்கப் பாடுபடுங்கள். இதற்கான உலகளவில் நிறையக் கருத்தரங்கு நடத்துங்கள். பின்னர் தீவிரவாதம் தானாகவே அமுங்கிவிடும். தான் பெரியவன், தன்னினம் பெரிது, தன்நாடுதான் உலகில் வலிமையானது, என்னால் ஆக்கிரமிக்க முடியும் என்பதுபோன்ற பிறரை குறைத்துச் செயல்படும் எண்ணத்தைக் குறைக்க வழிசெய்யுங்கள்.

By Gopal
12/29/2009 7:35:00 PM

போடா டுபுக்கு !!! வாயிக்கு வாய் 'அமெரிக்க மக்கள்' 'அமெரிக்க மக்கள்' என்கிறாயே; உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஆசாபாசங்கள், வலி வேதனைகள் ஒன்றுதான். நீ (உன் ராணுவம்) மட்டும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் முதியோர்களையும் கொன்று குவிக்கலாம். கேட்டால், பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்பீர்கள். உன்னால் பாதிக்கப்பட்ட எவனாவது பழிவாங்க திருப்பி அடித்தால் (அல்லது அடிக்க முயற்சித்தால்) உங்களது தூக்கம் பறிபோகிறது. முதலில் நீ திருந்து, உலகம் தானாகவே அமைதியாகி விடும். இந்த பன்னாடைப் பயலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேறு!?

By abdul.com - dubai
12/29/2009 7:32:00 PM

அப்படின்னா இலங்கை தமிழர்களை கொலை செய்த சோனியா மன்மோஹன்சிங் கருணாநிதி ராஜபக்ஷ இவர்களை என்ன பண்ண போகுரீர்கள்? இவர்களின் மய்ரை கூட உன்னால் அசைக்க முடிஞ்சத? பேசாதடா நாயே. பொறம்போக்கு

By Nallaval velvaan
12/29/2009 6:18:00 PM

YOU ARE THE NO.1 TERRORIST. YOUR COUNTRY ONLY PRODUCING TERRORIST ALL OVER THE WORLD. IF POSSIBLE, UPROOT THE WORLD TERRORIST ORGANISATION ' MOSSAD'. YOU ARE THE WRONG SELECTION FOR NOBLE PEACE AWARD'

By Ravi Kumar
12/29/2009 5:51:00 PM

அப்படின்னா இலங்கை தமிழர்களை கொலை செய்த சோனியா மன்மோஹன்சிங் கருணாநிதி ராஜபக்ஷ இவர்களை என்ன பண்ண போகுரீர்கள்? இவர்களின் மய்ரை கூட உன்னால் அசைக்க முடிஞ்சத? பேசாதடா நாயே. பொறம்போக்கு.

By bavani
12/29/2009 5:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக