செவ்வாய், 30 ஜூன், 2009

தமிழ் மாணவர்களின் புதிய நடைபயண போராட்டம்
பிரசுரித்த திகதி : 30 Jun 2009

உலகத்துக்கு இலங்கையில் நடப்பது என்ன என்பதை எடுத்துக் காட்டுவதற்கான நடைபயண போராட்டம் தொடங்கியுள்ளது.

கனடாவில் கல்வி கற்கும் மாணவர்களான கண்ணன் சிறீகாந்தா, விஜய் சிவனேஸ்வரன் மற்றும் ராமநாதன் திருக்கேதீஸ்வரநாதன் ஆகிய மூவர் சிக்காகோவில் இருந்து வோஷிங்டன் வரை 1000 மைல் தூரம் நடந்து சென்று இலங்கையில் நடைபெறுவது என்ன என்பது பற்றிய விழிப்புணர்வை அமெரிக்க மக்களுக்கு ஏற்படுத்தவுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக எரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கடந்த வெள்ளிக்கிழமை ஐம்பது பேருக்கு மேற்பட்ட தமிழர்கள் பழுப்புநிற, சாம்பல் நிற, நீல நிற டி சேட்டுகளை அணிந்து அந்த மாணவர்களுக்காக ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் 'இன அழிப்பை நிறுத்து', 'எங்களுக்கு தேவை நீதி' என்ற கோஷங்களை எழுப்பியவாறு அமெரிக்க கொடிகளையும், இலங்கையில் நடைபெறும் கொலைகள், கற்பழிப்புகள், தடுத்து வைப்புகள் என்பவற்றை உணர்த்தும் படங்களையும் வைத்திருந்தனர்.

மேற்படி மூன்று மாணவர்களும், கிழக்கே இந்தியன்பொலிஸ்,சின்சினதி, டைட்டன், ஒகியோ, கேம்பிரிட்ஜ், மாஸ். வீலிங், டபிள்யு.வி, பிட்ஸ்பேர்க் ஆகிய பகுதிகள் ஊடாக வோஷிங்டனை ஆகஸ்ட் 9 இல் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


"Break the Silence" begins 1000 mile journey to Washington D.C.

[TamilNet, Monday, 29 June 2009, 12:07 GMT]
Three Tamil College students from Canada are on a 1000-mile walk from Chicago to Washington D.C. to "raise awareness with the general American population to what is happening in Sri Lanka,” Illinois Times reported. More than 50 people assembled on the steps of the Capitol Friday, wearing tan, gray and blue T-shirts that carried their message: Break the Silence in Sri Lanka, the paper added.

Tamil Rally (Courtesy: Illinois Times)
Tamil Rally (Courtesy: Illinois Times)
Tamil Rally (Courtesy: Illinois Times)
Tamil Rally (Courtesy: Illinois Times)
"Despite the afternoon’s stifling heat, these Sri Lankan natives and descendants showed up to rally behind Kannan Sreekantha, Vijay Sivaneswaran and Ramanan Thirukketheeswaranathan, three college students who are walking from Chicago to Washington, D.C., to call attention to the humanitarian crisis in Sri Lanka," the paper said.

The crowd — with members young enough to ride in strollers and old enough to be grandfathers — chanted “Stop the genocide” and “We want justice.” They wielded American flags and handmade signs that reported the number of deaths, rapes and detainees in the war-torn island country. They even hit the street, passing out fliers to drivers stopped at the intersection of Second and Capitol, according to Illinois Times.

From Springfield, the three men will travel east through Indianapolis; Cincinnati; Dayton, Ohio; Columbus, Ohio; Cambridge, Mass. Wheeling, W.V.; and Pittsburgh before reaching Washington, D.C., during the week of Aug. 9., the paper further said.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக