வியாழன், 2 ஜூலை, 2009

Justify Fullதொழில்: "ஆன்-லைன்' மூலம் அள்ளலாம் வருமானம்!
தினமணிக் கதிர்


சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஐ.டி. துறையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இத்துறை மீது அச்சம் கொண்டிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் விதமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் சுரேஷ் வெங்கடாச்சாரி. "8கே மைல்ஸ்.காம்' என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கி "ஆன்-லைன்' மூலம் வேலைவாய்ப்பை அளித்து வருகிறார். ஐ.டி. மட்டுமன்றி அனைத்துத் துறையினருக்கும் அவர் வேலைவாய்ப்பு அளித்து வருகிறார் என்பது இதன் சிறப்பம்சம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நம்மிடம் விரிவாக விவரித்தார்.""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர்தான். அங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் டாக்டர் பட்டம் பெற்றேன்.1988-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் படிப்படியாக வளர்ந்து 2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள பல ஐடி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினேன்.சிங்கப்பூரில் உள்ள டாயிஷ் வங்கியில் மின்னணு வங்கி வளர்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினேன். இதைத் தவிர, ஐ.டி., அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுக்கு கன்சல்டன்ட்டாகவும் பணியாற்றினேன்.ஒரு நாள் என்னுடைய ஆடிட்டரை சந்தித்த போது, அவர் தன்னுடைய பிசினஸýக்கு வேண்டிய சில சாஃப்ட்வேர்களை உருவாக்கித் தரும்படி கேட்டார். உடனே, என்னுடைய நண்பர்கள் சிலர் உதவியுடன் அதை உருவாக்கிக் கொடுத்தேன். அப்போதுதான், கம்ப்யூட்டர் "ஆன்-லைன்' மூலம் இதுபோன்ற சாஃப்ட்வேர்களை உருவாக்கும் ஐடியா தோன்றியது.என்னுடைய நண்பர்களின் உதவியுடன் www.8kmiles.com என்ற இணையதளத்தை இதற்காகத் துவக்கினேன். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இணையதளத்தில் ஐ.டி., மாணவர்கள் மட்டுமன்றி பொறியியல், மருத்துவம், சட்டம், ஃபைனான்ஸ் என எந்தத் துறையைச் சேர்ந்த மாணவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சேரும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலையை நாங்கள் வழங்குகிறோம்.இதற்காக, வெளிநாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்து கொடுக்க எங்கள் இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். நாங்கள் அவர்களுடைய வேலைக்குத் தகுந்தாற்போல் ஆட்களைத் தேர்வு செய்து அவர்களிடம் அப்பணிகளைக் கொடுப்போம்.ஊழியர்களைச் சில டெஸ்ட்கள் மூலம் தேர்வு செய்வோம். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு சில அடிப்படை பயிற்சிகளையும் வழங்குகிறோம். சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரேட்டிங் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவோம். அதிக மதிப்பெண்கள் பெறும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவோம்.சுயமாகத் தொழில் செய்ய விரும்புவோருக்கும், வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய விரும்புவோருக்கும், குறிப்பாக, பெண்களுக்கும், பகுதிநேர வேலை செய்ய விரும்புபவர்களுக்கும், ஃப்ரீலான்ஸராகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கும் இப்பணி ஒரு வரப்பிரசாதமாகும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, யாருக்கும் கட்டுப்பட்டு நாம் பணிபுரியாமல், முழு சுதந்திரத்துடனும், ஈடுபாட்டுடனும் வேலை செய்யலாம். வருமானமும் டாலரில் இருப்பதால் கைநிறைய நல்ல சம்பளமும் கிடைக்கும்.இன்டர்நெட் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, "ஆன்-லைன்' மூலம் இதுபோல வேலை செய்பவர்களுக்கு பணம் சரியாகக் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.இதற்காகவே, நல்ல நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஓர் ஏஜென்ஸியிடம் கொடுத்துள்ளோம். எந்தவித முதலீடும் இன்றி பிசினஸ் செய்ய விரும்பும் குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கும், புராஜெக்ட் மேனேஜர்கள், சிறிய ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. சேல்ஸ் புரொபஷனல்களுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு இது.எங்கள் நிறுவனம் 2007-ம் ஆண்டுதான் துவக்கப்பட்டது. இக்குறுகிய காலத்திற்குள் ஏராளமானோர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். சர்வதேச அளவில் ஐ.டி. துறையில் தற்போது வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனால், எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக