சனி, 26 டிசம்பர், 2009

காலவரையற்ற பந்த்:​ தெலங்கானா போராட்டக் குழு திட்டம்



ஹைதராபாத், ​​ டிச.​ 25: காலவரையற்ற பந்த் உள்பட போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து தெலங்கானா கூட்டு போராட்டக் குழு ஆலோசனை நடத்தியது.கூட்டு போராட்டக் குழு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.​ இதில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசுககு காலக்கெடு விதிப்பது உள்பட தனி தெலங்கானா தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.​ சனிக்கிழமை பந்த் போராட்டம் நடத்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.​ அதற்கு பதிலாக அமைதியான முறையில் ஊர்வலம்,​​ ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் இரண்டாவது நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.​ வியாழக்கிழமை உஸ்மானியா பல்கலைக்கழக வளாகம் அருகே தெலுங்கு தேச எம்.எல்.ஏ.​ தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2-வது நாள் கூட்டத்தில் அக் கட்சியினர் பங்கேற்கவிலலை.ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தெலுங்கு தேச கட்சியினரும் கூட்டு போராட்டக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் என்.​ நரசிம்ம ரெட்டி கேட்டுக்கொண்டார்.​
கருத்துக்கள்

நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்திய அடிமைகளாகத்தான் வாழப் போகின்றீர்கள்! அப்புறம் ஏன் இந்த வன்முறைப் போராட்டம்? உங்களுக்கு வேண்டாப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைத்து உங்கள் பகுதிக்குத் தெலுங்கானா அல்லது தெலங்கானா எனப் பெயர் சூட்டிக் கொள்ளுங்களேன்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆந்திர ஆளுநர் மீது செக்ஸ் புகார்: விடியோ காட்சிகளை ​வெளியிட்டது தனியார் தொலைக்காட்சி



ஹைதராபாத், ​​ டிச.​ 25:​ ​ஆந்திரப்பிரதேச ஆளுநர் என்.டி.​ திவாரி ​(86) செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வெள்ளிக்கிழமை விடியோ காட்சிகளை வெளியிட்டது.​ ஆனால் இந்த விடியோ காட்சிகள் அனைத்துமே பொய் மூட்டை என நிராகரித்துள்ளது ஆளுநர் மாளிகை.​ இந்நிலையில்,​​ இந்த புகாரை அடுத்து ஆளுநர் மாளிகை எதிரில் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.​ ​​ ​ செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள ஆளுநர் பதவியில் நீடிப்பது அழகல்ல.​ அவராகவே பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்,​​ அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஆந்திர சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு.​ சில வாரங்களாகவே தெலங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலவரங்களால் ஆந்திர மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது.​ இந்நிலையில் ஆளுநர் மீது திடுக்கிட வைக்கும் புகாரை வெளியிட்டது ஏபிஎன்-ஆந்திர ஜோதி ​ தொலைக்காட்சி சேனல்.​ ​ ஆளுநரின் செக்ஸ் முறைகேடு தொடர்பான விடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகும் என்று முன்னதாகவே ஆந்திர ஜோதி பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.​ அதற்கேற்ப காலை 10 மணியிலிருந்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஆளுநர் நாராயண் தத் திவாரி பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ பதிவுகளை தொலைக்காட்சி வெளியிட்டது.​ ​​ கோர்ட் தடை:​​ இந்த காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பானால் அவப்பெயர்தான் மிஞ்சும் என்று அதிர்ந்த ஆளுநர் மாளிகை இந்த காட்சிகளை வெளியிடக் கூடாது என தடை விதிக்கும்படி ஆந்திரப்​ பி​ரதேச உயர்​ நீ​திமன்றத்தில் மனு செய்து அதற்கான உத்தரவையும் பெற்றது.​ அந்த உத்தரவை பஞ்சாரா ஹில்ஸ் பகுதி துணை போலீஸ் ஆணையர் அந்த தொலைக்காட்சிக்கு கொண்டு சென்று ஆளுநர் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.​ உயர் ​நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டு ஆளுநர் சம்பந்தப்பட்ட விடியோ பதிவுகளை ஒளிபரப்பாமல் நிறுத்திக்கொண்டது தொலைக்காட்சி நிறுவனம்.​ தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ பதிவு ஆதாரமற்றது.​ ஆளுநர் தொடர்பான அந்த படப்பதிவு காட்சிகள் ஆதாரமற்றவை.​ 86 வயதுடையவர் ஆளுநர்.​ அவரது வயதுக்கு பொருத்தமில்லாத புகார் இது.​ ​ அரசமைப்புச் சட்ட பதவியில் அமர்ந்துள்ள கெüரவமிக்க நபர் மீது இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவது அழகல்ல.​ தேவையில்லாமல் அவர் வம்பில் சிக்கவைக்கப்படுகிறார் என்று தொலைக்காட்சியின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.ஆளுநர் மாளிகை வழக்கறிஞர் ரவிசங்கர் ஜந்தியாலா பேசுகையில் ஆளுநரை தொடர்புப்படுத்தி தொலைக்காட்சி வெளியிட்ட செக்ஸ் புகார் செய்தி ஆதாரமில்லாதது.​ பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் இவை வெளியிடப்படுகின்றன.​ குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் மூட்டைகள்தான்.​ இந்த புகார் அடிப்படையில் திவாரி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.​ மான நஷ்ட வழக்கு தொடருவோம்.​ ​ அந்த தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.காங்கிரஸ் கருத்து:​​ தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்து நடுநிலையாளர்களை கொண்டு விசாரித்து அறியவேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.​ இது தொடர்பாக இந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:​ இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.​ எனவே இதுபற்றி கருத்து கூறுவது முடியாது.​ ​ கம்ப்யூட்டரை பயன்படுத்தி இந்த காட்சிகளை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகப்படவும் தோன்றுகிறது என்றார் திவாரி.
கருத்துக்கள்

இத்தகைய புகார் வரப் போவது குறிதது விளம்பரப்படுத்தியதால்தான் ஆந்திர மாநிலக் கலவரங்கள் குறித்துக் கவலைப்படுபவர் போல் முதல்வரிடம் பேசினாரோ ஆளுநர். வேலையில்லையே என்று வேறு வேலையில் ஈடுபட்டார் போலும். உண்மையெனில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தெலங்கானாவை உடனடியாக அமைக்கவேண்டும்: சந்திரசேகர ராவ்



ஹைதராபாத், ​​ டிச.25: ​ தெலங்கானா தனி மாநிலத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ​(டிஆர்எஸ்)​ தலைவர் கே.​ சந்திரசேகர ராவ் கூறினார்.தெலங்கானா தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்று டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.​ இதனால் ஆந்திரத்தில் கலவரம் வெடித்தது.​ இதையடுத்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.​ இந்நிலையில் ஆந்திரத்தைப் பிரிக்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,​​ எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர்.​ இதையடுத்து உடனடியாக தெலங்கானா மாநிலத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் ஹைதராபாதில் கூட்டுப் போராட்டக் குழுவின் கூட்டம் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது.​ கட்சி பேதமின்றி பல கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.​ கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் சந்திரசேகர ராவ் கூறியதாவது:​ தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள்,​​ எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதால் ஆந்திரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.​ எனவே உடனடியாக தெலங்கானா மாநிலத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக துவங்கவேண்டும்.தெலங்கானா மாநிலம் கோரி போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என கூட்டுப் போராட்டக் குழு தனது முதல் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.​ காலவரையற்ற பந்த் உள்பட போராட்டத்தைத் தீவிரப்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.​ மேலும் ஆந்திரத்தைப் பிரிப்பதற்காக மத்திய அரசுக்கு டிஆர்எஸ் கெடு விதிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.கூட்டுப் போராட்டக் குழுவின் முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் விலகல்தனி மாநிலம் கோரி 13 அமைச்சர்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தனர்.இதையடுத்து இந்த விவகாரத்தில் ராஜிநாமா செய்த ஆந்திர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்தது.ஆந்திரப் பேரவையில் இடம்பெற்றிருந்த 4 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரம் தொடர்பாக கட்சியின் மத்தியக் குழுவுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​ கட்சியின் தேசியத் தலைவர்களை ஆலோசித்த பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் மாநில செயலாளர் கே.​ நாராயணா தெரிவித்தார்.இதுவரை தெலங்கானா பகுதியிலுள்ள 119 எம்எல்ஏக்களில் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்,​​ 36 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள்,​​ 10 தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏக்கள்,​​ 4 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள்,​​ 2 பிரஜா ராஜ்யம் கட்சி எம்எல்ஏக்கள்,​​ 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கருத்துக்கள்

உடனடியாக ஆந்திர மாநிலப பெயரைத் தெலுங்கானா என மாற்றி அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பங்கினர் தனித் தெலுங்கானா வேண்டும் பகுதியினர் என மாற்றி இவர்களுள் ஒருவரே முதலமைச்சர் பிற பகுதியில் இருந்து ஒருவர் துணை முதல்வர் என மாற்றினால் அடங்குவார்களா? அழிவு வேலைகளில் ஈடுபட்ட பின்பே கோரிக்ககைகளுக்குச் செவி சாய்ப்பது என்னும் தன்னுடைய மேலாண்மைப் போக்கை மத்திய காங்கிரசு ஆட்சி கைவிட வேண்டும். கோரிக்கை வைப்பவர்களும் அழிவுமுறை ஆர்ப்பாட்டங்களை விடுத்து அறவழிகளிலேயே போராட வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
13 ஆந்திர அமைச்சர்கள் ராஜிநாமா



தெலங்கானா விஷயத்தில் மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா கடிதங்களை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி பின்னர் ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் 13 அமைச்சர்கள்.புதுதில்லி, ​​ டிச.​ 25: தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் கலவரம் நடைபெற்றது.​ மாநில நீர்ப்பாசன அமைச்சர் பி.​ லட்சுமணய்யாவின் வீட்டை கலவரக்காரர்கள் தாக்கினர்.​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் அரசு அலவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.​ வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.​ இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.​ இதற்கிடையே தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர அமைச்சரவையில் உள்ள 13 அமைச்சர்கள் ராஜிமாநா செய்துள்ளனர்.​ அவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளனர்.மாநில முதல்வர் ரோசய்யாவைச் சந்தித்து தங்களது ராஜிநாமா முடிவை அவர்கள் தெரிவித்தனர்.​ தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.தெலங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதால் ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதி முழுவதும் புதன்கிழமை வன்முறை வெடித்தது.​ மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ​ 48 மணி நேர பந்த் போராட்டத்துக்கு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்பட அனைத்துக் கட்சிகளும் புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்திருந்தன.​ இதனால் தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த பந்த் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி அறிவித்திருந்தது.​ இருப்பினும் தெலங்கானா பகுதியில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.பல இடங்களில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று தாக்குதல் நடத்தினர்.​ சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி இருந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.​ மெகபூப்நகரில் சிவில் சப்ளை நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கி தீ வைத்து கொளுத்தப்பட்டது.​ வன்முறையாளர்கள் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.அமைச்சர் வீடு முற்றுகை:​ வாரங்கல் நகரில் பெரிய நீர்ப்பாசன திட்ட அமைச்சர் பி.​ லட்சுமணய்யாவின் வீட்டை கலவரக்காரர்கள் முற்றுகையிட்டு தாக்கினர்.​ கலவரக்காரர்களை போலீஸôர் அப்புறப்படுத்தினர்.​ மேலும் மாணவர்கள் பெரும் திரளானோர் ஊர்வலமாகச் சென்று ககாதியா பல்கலைக்கழகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுபோல் அடிலாபாத்,​​ கரிம்நகர்,​​ மேடக் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.​ ராகவப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் அறையை தீவைத்து கொளுத்தினர்.இந்திரா காந்தி சிலை:​ புதுகல் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டது.​ ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.சித்திப்பேட்டையில் தனியார் செல்போன் கோபுரத்துக்கு தீ வைக்கப்பட்டது.​ இந்த கலவரங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ தெலங்கானா போராட்டக் குழுவினர் பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர்.பின்வாங்கவில்லை:​ தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்று மத்திய சட்ட அமைச்சரும் ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார்.​ ஆந்திர மாநில அரசியல் கட்சிகள்தான் தங்களது நிலையிலிருந்து பின்வாங்கிவிட்டன.​ கடந்த 7-ம் தேதி முதல்வர் ரோசய்யா கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தெலங்கானா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் இப்போது ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றார் அவர்.​ மத்திய அரசு ஜனநாயக முறையில் செயல்படுவதால் அனைத்து தரப்பினரின் கருத்தையும் ஏற்றும் ஆலோசித்தும் அதன் அடிப்படையில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது என்றார் அவர்.மொய்லியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த தெலங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் -​ எம்.எல்.ஏ.க்கள்,​​ குறிப்பிட்ட காலத்துக்குள் தெலங்கானா பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.சந்திரபாபு நாயுடு கண்டனம்:​ தெலுங்கு தேச எம்.எல்.ஏ.​ ​ நகம் ஜனார்த்தன ரெட்டியை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் தாக்கியதற்கு தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.​ அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்கி உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.​ தெலுங்கு தேச கட்சியினரின் சொத்துக்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.​ ​மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி பேதமின்றி தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள்,​​ 82 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.​ மாநில அமைச்சர் வெங்கட ரெட்டியும் ஏற்கெனவே ராஜிநாமா செய்துள்ளார்.
கருத்துக்கள்

நம் மக்களின் துன்பங்களைத் துடைத்து அவர்கள் உரிமையுடன் வாழ நாம் உரிமையுடன் குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். உரிமையுள்ள மக்களே பிறர் உரிமைக்காக உழைக்க முடியும் என்பதையும் உணர வேண்டும். நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் தமிழ் மட்டுமே பேசிய இக்கண்டம் முழுவதும் தமிழ் இனப் பகைவர்களால் நிறைந்து தமிழ் பேசும் பகுதி மிகவும் குறைந்துள்ளதையும் இப்பொழுதும் கூடத் தமிழ் நாட்டில் தமிழ் பேசும் பகுதியை மேலும் குறைக்கச் சதி நடப்பதை உணர வேண்டும். உதவாதினி தாமதம் உடனே விழி தமிழா! வேத‌னையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:42:00 AM

தெலுங்கானா பகுதி மக்கள் சார்பாளர்களைப் பார்த்தாவது ஒன்று பட்டுக் குரல் கொடுக்கும் துணிவும் உள்ளமும் வரவில்லையே! தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களே முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதே இவற்றிற்கெல்லாம் முதன்மைக் காரணமாகும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் அழிவு நாளை தமக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தாவது விழித்தெழ வேண்டும். உலகத்தமிழர்கள் நலன் நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து மனித நேய உணர்வுடனும் இனப்பற்றுடனும் ஆக்க முறைகளில் செயல்படவேண்டும். கட்சித் தலைமைகளுக்குக் கொத்தடிமையாக இருக்கும் நிலைகளில் இருந்து விடுபட வேண்டும். தமிழ் உணர்வாளர்களையே சார்பாளர்களாயும் தலைவர்களாயும் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் ஆண்டால் என்ன என்ற எண்ணமும் சிறு கண நேர ஆதாயங்களுக்கு இடம் கொடுக்கும் போக்கும் மாற வேண்டும். நம் மக்களின் துன்பங்களைத் துடைத்து அவர்கள் உரிமையுடன் வாழ நாம் உரிமையுடன் குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். உரிமையுள்ள மக்களே பிறர் உரிமைக்காக உழைக்க முடியும் என்பதையும் உணர வேண்டும். நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் தமிழ் மட்டுமே பேசிய இ

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:39:00 AM

ஒரே மொழி பேசும் பகுதியினர் என்றாலும் தங்கள் பகுதி நலனுக்காகத் தங்கள் கோரிக்கைகளைத் துணிந்து தங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துக் கட்சி வேறுபாடின்றிக் கிளர்ந்து எழுகிறார்கள். தமிழ் நாட்டிலோ என்றால் அடிமைத்தனத்தில் போட்டி போட ஒன்று படுகிறார்கள். நம் இனமே அழிந்த போதும் கூட அவன் முதலில் விலகட்டும் இவன் முதலில விலகட்டும் எனக் காத்து விலகல் நாடகம் ஆடினார்களே தவிர ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒன்றுபடவில்லை. இப்பொழுது கூட வதை முகாம்களில் இருபால் இளைஞர்களையும் அழித்துக் கொண்டு வருவதாயும் விடுதலைப்புலிகள் அடைக்கப்பட்டுள்ள வதைமுகாம் மீது போலியான கலவரம் நிகழ்நதது போல் காட்டி அனைவரையும் ஒட்டு மொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு்ளளதாகவும் செய்திகள் வருகின்றன. தெலுங்கானா பகுதி மக்கள் சார்பாளர்களைப் பார்த்தாவது ஒன்று பட்டுக் குரல் கொடுக்கும் துணிவும் உள்ளமும் வரவில்லையே! தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களே முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதே இவற்றிற்கெல்லாம் முதன்மைக் காரணமகும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் அழிவு நாளை தமக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தாவது வி

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 25 டிசம்பர், 2009

உலகத் தமிழ் செம்​மொழி மாநாடு: அறி​வுக் கருவூலத்​தின் அவல நிலை​யைப் போக்​குமா அரசு?!



உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டு​மென சாதிக்கத் துடிக்​கும் மாணவ, மாணவிக​ளின் அறி​வுக் கருவூல​மாக விளங்கி வரும் நூலகத்​தின் அவல நிலையை போக்க அரசு நடவ​டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
"பகுத்தறி​வுக் கவிஞராயர்' என தமிழக மக்க​ளால் அன்​போடு அழைக்கப்ப​டும் உடுமலை நாராயணகவி​யின் பெய​ரில் அமைந்​துள்ள மணி மண்டபத்தை முதல்வர் மு.கருணா​நிதி 23}2}2001ல் திறந்து வைத்​தார்.
சுற்றி​லும் பூங்காவுடன் அழ​குற அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை ஆண்டு முழுவ​தும் தொடர்ந்து பராம​ரிப்ப​தில் பல்​வேறு நடைமு​றைச் சிக்கல்கள் ஏற்பட்டது. இத​னால் 28}09}2004 முதல் உடுமலை முதல் நிலை நூலகப் பராம​ரிப்​பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் செல​வில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்​வுக்​கான புத்தகங்கள், கேட், யுசிஜி, நெட், ஐஐடி, ஐஐஎம், ரயில்வே போன்ற போட்​டித் தேர்வுக​ளுக்​கான புத்தகங்க​ளும், கணிப் பொறியியல், அறி​விய​லில் வளர்ச்​சிகள், உலக வரலாறுகள் உள்​ளிட்ட புத்தகங்க​ளும் இங்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து புத்தகங்கள் வைக்க அலமாரிக​ளும், பிற தளவாடங்க​ளும் பொதுமக்களிடமி​ருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன.
ஆனால், இதன் பிறகு கடந்த 5 ஆண்டுக​ளாக இந்த நூலகத்தை எந்த வித விரி​வாக்க​மும் செய்யாம​லேயே விட்டு​விட்டனர். சாதிக்கத் துடிக்​கும் மாணவ,​மாணவிகளை இது சோர்ந்து போகச் செய்து விட்டது.
எனவே, கோவை​யில் நடைபெ​றும் உலகத் தமிழ் செம்​மொழி
மாநாட்டை ​யொட்டி இந்த நூலகத்​திற்கு போது​மான நிதியை ஒதுக்கி விரி​வாக்கம் செய்ய முதல்வர் நடவ​டிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்ளது.
இது குறித்து உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூறியது:​சாதித்த மாணவர்கள்: இந்த நூலகத்​தில் அமர்ந்து படித்த உடுமலை பகுதி மாணவர்கள் மோகன்​தாஸ் கரம்சந்த் காந்தி மற்​றும் எஸ்.செந்​தில்கு​மார் ஆகி​யோர் ஐஏஎஸ் முடித்தது சாதனை படைத்​துள்ளனர்.
இந்நிலை​யில், இந்த நூலகத்​தில் 2001 ம் ஆண்டு வரையி​லான புத்தகங்கள் மட்​டுமே வைக்கப்பட்​டுள்ளது. அதற்கு பிறகு கடந்த 7 வருடங்க​ளாக புதிய புத்தகங்கள் இந்த நூலகத்​தில் இடம்பெற​வில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்​றும் சிவில் சர்​வீஸ் உள்​ளிட்ட பல்​வேறு போட்​டித் தேர்வுக​ளில் நடப்​பாண்டு தொடர்​பாக கேட்கப்ப​டும் கேள்விக​ளுக்கு பதில் அளிக்​கும் விதத்​தில் புதிய புத்தகங்களை இங்கு வைக்க ஏற்​பாடு செய்ய வேண்​டும்.
உடுமலை​யில் அரசு மற்​றும் தனி​யார் கல்லூரிக​ளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்​திற்​கும் அதிகமா​னோர் படித்து வரு​கின்றனர். இந்நிலை​யில் தின​மும் நூற்​றுக்கணக்கா​னோர் நூலகத்​திற்கு வரும் நிலை​யில் 25 நபர்களே உட்​கார்ந்து படிக்க முடிகிறது. நிறைய​பேர் நின்று கொண்டே படித்து வரு​கின்றனர்.
எனவே, நூலகத்​தில் குறைந்த பட்சம் நூறு பேர் உட்​கார்ந்து படிக்​கும் அள​விற்கு கட்டடத்தை விரி​வாக்கம் செய்ய வேண்​டும்.
அதே ​போல், ஜெராக்ஸ் எடுக்க ஒரு பிர​திக்கு 75 பைசா என்றி​ருப்பதை இங்கு வரும் ஏழை மாணவ,​மாணவிக​ளின் வச​திக்​காக 25 பைசா​வாக குறைக்க வேண்​டும்.
குறிப் ​பாக, இங்கு வரும் மாணவர்க​ளுக்கு குடி​நீர் வசதி செய்து தர வேண்​டும். இதற்​காக உடுமலை நக​ராட்சி சார்​பில் இலவச​மாக ஒரு குடி​நீர் இணைப்பை ஏற்ப​டுத்​தித் தர வேண்​டும், முக்கிய​மாக இந்த நூலகத்தை சுற்றி​லும் உள்ள
ஆக்கிர​மிப்புகளை அகற்ற வேண்​டும், இந்த நூலகத்​திற்​கென ஒரு நிரந்தர பணியிடத்தை உரு​வாக்க வேண்​டும் என்றனர்.
இந்த அறி​வுக் கருவூலத்​தில் இருந்து சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், பொருளா​தார அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள், தொழில் நுட்ப மேதைகள் உரு​வாக வேண்​டும் என்பது​தான் அனைவரு​டைய ஆர்வம்.
தமிழக முதல்வர் இதற்கு உதவ வேண்​டும் எனபதே அனைவரது எதிர்​பார்ப்பு.

கருத்துக்கள்

இச் செய்தியைப் படித்தவுடன் மாண்புமிகு முதல்வரும் நூலகத்துறையும் நடவடிக்கை எடுக்கும் என்னும் நம்பிக்கையில் முன்னதான பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 4:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: கடை, ஹோட்டல் பெயர் பலகைகளை தமிழில் வைக்க உத்தரவு




கோவை, டிச. 24: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி கோவையில் உள்ள கடைகள், ஹோட்டல்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
கடைகள், நிறுவனங்கள், ஹோட்டல்களில் பெயர்ப் பலகைகள் அமைப்பதற்கென்றே தனி நடைமுறைகளை தொழிலாளர் துறை வகுத்துள்ளது. இதன்படி எந்தவொரு வணிக நிறுவனத்தின் பெயர் பலகையிலும் நிறுவனத்தின் பெயர் முதலில் தமிழிலும், அடுத்ததாக ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெரும்பகுதி கடைகளின் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதைத் தீவிரமாக அமல்படுத்த தொழிலாளர் துறை நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை துணை ஆணையர் ப.மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி: 1947-ம் ஆண்டின் கடைகள் நிறுவனச் சட்டம், 1958-ம் ஆண்டின் ஹோட்டல் நிறுவனச் சட்டத்தின்கீழ் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தங்களது பெயர்ப் பலகையில் பெயர்களை தமிழில் பெரிதாக எழுத வேண்டும். பிற மொழி எழுத்துக்களை 2-வதாகவும், ஆங்கிலத்தில் 3-வதாகவும் பெயர்கள் எழுத வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வகையில் பெயர்ப் பலகைகளை வைக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழில் 5 பங்கும் ஆங்கிலத்தில் அடுத்து 3 பங்கும் பிற மொழியில்- தேவையெனில் 2 பங்கும் இருக்க வேண்டும் என்பது விதி.ஆனால்,இங்கு தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. செய்தியில் தவறு எனில் திருத்திவெளியிட வேண்டும். ஆணையர் அறிக்கை யெனில் ஆணையை நன்கு படித்து அதற்கேற்ப மறு அறிக்கை அளிக்க வேண்டும். நடைமுறையில் தமிழில் பெயருக்கு முதலில் சிறியதாக எழுதி விட்டுப் பின் பெரிய எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு வரும் அயல்நாட்டினர் கோயம்புத்தூருக்கு மட்டும் செல்வதாகக் கருதாமல் தமிழ்நாடு முழுமையும் தொழிலாளர் துறையும் தொழிற்சாலைத் துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் மாவட்ட நிருவாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனப் பூர்வமான முயற்சி எனில், தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகளை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்?



கொழும்பு, டிச.25- முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முன்னாள் போராளிகளை கொலை செய்ய இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் போராளிகள் தங்கியுள்ள முகாம்களில் செயற்கையாக ராணுவமே ரகசியமாக தாக்குதல் நடத்திவிட்டு, அதை முறியடிக்கும் போர்வையில் அங்குள்ள விடுதலைப் புலிகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் தேர்தல் நடைபெறும் ஜனவரி 26ம் தேதிக்கு முன்னர் இவ்வாறு புலிகளை ராணுவத்தினர் கொல்லவுள்ளதாகவும், இலங்கை தடுப்பு முகாம்களில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் தங்கியுள்ளனர் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இதுவரை ஈழத் தமிழர் படுகொலைகளில் இந்திய அரசு பங்கு வகித்தது. இனியும் இவ்வாறான படுகொலைத் திட்டங்களில் இந்தியாவிற்குப் பங்களிப்பு இருக்குமெனில் நாம் இந்திய நாட்டவர் எனச் சொல்வதில் வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும். இதில் பங்களிப்பு இல்லை என உறுதிப் படுத்த இந்திய அரசு இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் வல்ரசாக ஆசைப்பட்டு சிதைந்த துண்டங்களாக இந்தியத் துணைக்கண்டத்தை ஆக்கிய பெருமை காங்கிரசு அரசிற்கே சாரும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By anbumalar
12/25/2009 3:53:00 PM

dinamani is always correct.stupid ALSO TAMIL you are not a original tamilan.you better to ask your mother,who is yr father?

By bparani
12/25/2009 3:26:00 PM

சிலோன் காரனுக்கு ஸ்கெட்ச் போட தெரியாது. ஒப்பந்தத்தை மு.க.விடம் கொடுத்தால் கரக்டாக முடித்துடுவார். எல்லா புகழும் தலைவருக்கே.

By pannadai pandian
12/25/2009 3:04:00 PM

This is dinamani's conspiracy to feed anti india sentiments in the society. Strongly condemnable. Every morning and evening you are publishing one such story and squatters come and shitting in this news column as comment.

By Also Tamil
12/25/2009 3:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


அகதிகள் முகாமில் இருந்து வெளியே செல்ல...



இலங்கையில் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதி பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் தமிழர்கள்.​ நாள்:​ புதன்கிழமை.
கருத்துக்கள்

யாரங்கே! ருசாங்கன் என்ற பெயரிலும் வேறு வேறு பெயர்களிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் மனித நேயமற்ற கைக் கூலிகளுக்கு என்ன தண்டனை? அதை உடனே அளிக்க வேண்டும். என்ன? இவர்கள் .... பிறவிகளே அல்ல! முதன்மை கொடுத்து அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்கிறீர்களா? சரி!சரி! ஈனப்பிறவிகள் தாமாகவே அழிய வேண்டும் என்று விதி இருக்கும பொழுது நாம் மனிதர்களாக மதித்து உயர்த்தக் கூடாதுதான்.இப்படி வானுலகில் பேச்சு நடைபெற்றது என் காதில் விழுந்தது.

அன்புடன் இலக்குவனார திருவள்ளவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:20:00 AM

OZHINDHAAN BAYANGARAVAADHI PRABAKARAN !!! Those refugee dogs celebrated when other human shed blood by LTTE but now they couldn't take it when LTTE & their leader killed as street DOGS !!! OZHINDHAAN BAYANGARAVAADHI PRABAKARAN !!! DEAR INNOCENT TAMILIANS, PLEASE ENJOY FREEDOM & DEMOCRACY WITHOUT TERRORISM.

By RUSHANGAN
12/25/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மேலும் 4 புதிய வட்டங்கள்; 2 வருவாய் கோட்டங்கள்: கருணாநிதி உத்தரவு

First Published : 25 Dec 2009 10:54:00 PM IST


சென்னை,​​ டிச.​ 24:​ தமிழகத்தில் மேலும் நான்கு புதிய வட்டங்கள்,​​ இரண்டு வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 30}ம் தேதி நடைபெற்ற வருவாய்த் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது,​​ "வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும்,​​ திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து,​​ மடத்துக்குளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மடத்துக்குளம் வட்டமும்,​​ காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்தை மூன்றாகப் பிரித்து ஆலந்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலந்தூர் வட்டமும் உருவாக்கப்படும்.சோழிங்கநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக சோழிங்கநல்லூர் வட்டம் ஏற்படுத்தப்படும்.வருவாய் கோட்டங்கள்...​ செங்கற்பட்டு வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து தாம்பரம்,​​ ஆலந்தூர்,​​ சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கித் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு "தாம்பரம் வருவாய்க் கோட்டம்' உருவாக்கப்படும்.திருப்பூர் மாவட்டம்,​​ தாராபுரம் வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து மடத்துக்குளம்,​​ உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி உடுமலைப்பேட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக "உடுமலைப்பேட்டை வருவாய்க் கோட்டம்' ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நான்கு புதிய வட்டங்களையும்,​​ இரண்டு புதிய வருவாய் கோட்டங்களையும் உருவாக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயம்! பெரிய மாநில்ங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *