Last Updated :
மத்திய அரசின் உறுதிமொழியை அடுத்து தனி தெலங்கானா கோரி 11 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்
ஹைத ராபாத், டிச. 10: தனி தெலங்கானா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து ஆந்திரத்தில் 105 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி. தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.இதனால் ஆந்திர மாநிலத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.எம்எல்ஏக்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஆந்திர சட்டப் பேரவைத் தலைவர் கிரண் குமார் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.விஜயவாடா தொகுதி எம்.பி. லகடபதி ராஜகோபாஜ்ல் தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அளித்துள்ளார்.ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களில் 52 பேர் காங்கிரûஸச் சேர்ந்தவர்கள், 42 பேர் தெலுங்கு தேசம், 11 பேர் பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதுதவிர ஆந்திரத்தைச் சேர்ந்த மேலும் பல எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தெலங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் ஆந்திர எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.ஆந் திரத்தை பிரிக்கும் முடிவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது ஒருதலைப் பட்சமான முடிவு. எங்களுக்கு இது பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதி மக்களும் தலைநகர் ஹைதராபாதில் பிழைப்புக்காக வந்துள்ளனர் மாநிலத்தை இரு துண்டுகளாக்கினால் அவர்களின் நிலை பரிதாபமாகிவிடும் என்று கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பி. வெங்கட்ராமையா கூறியுள்ளார். தெலங்கானாவில் தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைஉண் ணாவிரதத்தை கைவிட்ட நிலையிலும் சந்திரசேகர ராவ் இன்னும் 3 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.பாக்டீரியா நோய்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.÷முன் னதாக தனி தெலங்கானா மாநிலம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி தலைவர் சந்திரசேகர ராவ் 11 நாள்களுக்குப் பின் புதன்கிழமை இரவு தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.எனினும் அவர் தொடர்ந்து ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இப்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.தற்போது சந்திரசேகர ராவ், இளநீர், பால் போன்ற திரவ உணவுகளைச் சாப்பிட்டு வருகிறார். அவரது உடல் எடை 8 கிலோ குறைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சீராக உள்ளது. 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.சோனியா காந்திதனி தெலங்கானா குறித்து இறுதி முடிவுக்கு வரும் முன்பு தெலங்கானா பகுதியைச் சேராத எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.பிரணாப் முகர்ஜிதெலங்கானா அமைப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் முழுமை யாக பின்பற்றப்படும்.ப. சிதம்பரம்தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்துப் பேச தில்லி வருமாறு ராவுக்கு அழைப்புசந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுதெலங் கானா அமைக்கும் முடிவை எடுத்ததற்காக மத்திய அரசையும், சோனியா காந்தியையும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாகக் குறை கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிற பிரிவினரின் ஆலோசனையைப் பெறாமல் இத்தகைய முடிவு எடுத்தது மிகவும் தவறானது. மாநிலத்தைப் பிரிப்பதால் பாதிக்கப்படும் மக்களை ஆலோசிக்காமால் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் செயல்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.எம்.பி. ராஜிநாமாகாங் கிரûஸச் சேர்ந்த மற்றொரு எம்.பி. அனந்த வெங்கட்ராமி ரெட்டியும் தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.தனது ராஜிநாமா கடிதத்தை தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் எம்.வி. எம். ரெட்டி கூறியுள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 3:14:00 AM
By Vannian
12/11/2009 2:37:00 AM
By sree
12/11/2009 1:50:00 AM
By zoyza
12/11/2009 1:45:00 AM
By Indian
12/11/2009 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*