திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_788727.jpg


இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி
 
சென்னை:"தமிழக மீனவர்கள் பிரச்னையில், இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும்; தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பார்லிமென்ட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான்குர்ஷித் பேசுகையில், "மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து பேச வேண்டும். தமிழக மீனவர்கள் குழு, தமிழக அரசின் ஆதரவுடன், இலங்கை சென்று திரும்ப வேண்டும் என, விரும்புகின்றனர்.ஆனால், இதுவரை அவர்களுக்கு உரிய அனுமதியை, தமிழக அரசு தரவில்லை.இப்பிரச்னையில், உண்மையிலேயே, தமிழக அரசு சுமூகப் பேச்சுவர்த்தைக்கு, தாமதம் செய்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்த செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீது பழிசுமத்தி, காலம் கடத்தி வந்ததை போல செய்யாமல், தற்போதாவது, தாமதத்தை தவிர்த்து, மீனவர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திரா பிரதமராக இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், அடிக்கடி, தமிழக மீனவர்களை, தமிழக எல்லை பகுதிக்குள்ளேயே வந்து, தாக்கி வருவதை கேள்விப்பட்டு, கோபமடைந்த இந்திரா, அந்த கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார். கடற்படை வீரர்களும் சிங்கள கேப்டனை பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.பின், அந்த கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்ப பெற்றது. இச்சம்பவத்தை இந்திய அரசும், தமிழக அரசும் நினைவிலே கொண்டு, இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும். இலங்கை அமைச்சர்களும் தங்கள் மனம் போன படிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள முன்வருவர். தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்
.
 

TamilNet news 21.08.13 23:43 to 25.08.13 21:17

இரக்கமனத்திற்குரியவர்

இரக்கமுள்ள மனசுக்காரன்டா...


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_787295.jpg
பட்டப்படிப்பு ப் படித்துவிட்டு ப் பல்வேறு வேலைகளை ப் பார்த்த ஒருவர் தற்போது மதுரை மக்களின் அன்பைப் பெற்ற மிதியூர்தி/ஆட்டோ ஒட்டுநராக உள்ளார்.
அவர் பெயர் டி.மதன்


மதுரை வக்பு கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பு எடுத்து படிக்கும் போது இதை படித்தால் வேலை கிடைக்காது என்று நண்பர்கள் சிலர் சொல்ல,"நான் வேலைக்காக படிக்கவில்லை என் அறிவை விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன், மேலும் வரலாறு என்பது எனக்கு பிடித்த விஷயம், நாட்டோட வரலாறும் நகரத்தோட வரலாறும் தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் நானே வரலாறு படிக்காவிட்டால் எப்படி'' என்று சொல்லிவிட்டு வரலாறு படித்தவர். தொடர்ந்து வரலாற்று பாடத்தில் முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது வேலை பார்க்கவேண்டிய குடும்ப சூழ்நிலை.
சென்னையிலும், திருப்பூரிலும் பல்வேறு வேலை பார்த்தார் எதுவுமே அவருக்கு மனது பிடிக்கவில்லை சொந்த ஊரான மதுரைக்கே திரும்பினார். பொழுது போக்காக "கிளாரினட் 'எனும் இசைக் கருவியை வாசிக்கப் பழகியிருந்ததால் உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில் கிளாரினட் இசைக் கலைஞராக கொஞ்ச நாள் இருந்தார்.அதில் பணம் வரவில்லை ஆனால் புகழ் கிடைத்தது.


இதிலும் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இவரது சகோதரர் "கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஒட்டிப்பாருப்பா உனக்கு பிடிக்கும்' என்று சொல்லி வழிகாட்ட மதன் ஆட்டோ ஒட்ட துவங்கினார்.
எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன் ஆட்டோ ஒட்டுவதிலும் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தினார், படித்த பட்டப்படிப்பும் இவரது அணுகுமுறையில் பண்பாட்டினை வெளிப்படுத்தியது. இவர் கிளாரினட் வாசித்ததன் மூலம் கிடைத்த புகழும் எளிதில் மக்களை அணுகவைத்தது.


நியாயமான கட்டணம், ஒரு எஸ்எம்எஸ் கொடுத்தால் போதும் உடனே தொடர்பு கொள்வது எந்நேரம் அழைத்தாலும் செல்வது என்பது போன்ற காரணங்களால் மதுரை திருப்பாலை பகுதி மக்களின் அன்பிற்கு பாத்திரமானார், அந்த பகுதி பெண்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன் போல அக்கறை எடுத்து செயல்படுவார். இதன் காரணமாக எங்கே போகவேண்டும் என்றாலும் கூப்பிடு மதனை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
இது மட்டுமின்றி தனது ஆட்டோ சவாரி இல்லாமல் போகும் போது வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால் இலவசமாக ஏற்றிச் சென்று விட்டுவிடுவார், பிரசவத்திற்கு இலவசம், ஆள் இல்லாத பெரியவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கூட்டிக்கொண்டு வருவது, நள்ளிரவு நேரமானாலும் ரயில் பெட்டிக்கே வந்து வாடிக்கையாளர்களை வரவேற்று வீட்டில் கொண்டு போய்விடுவது, அதே போல ஏற்றிவிடுவது என்று தனது ஆட்டோ பணியை பாசத்துடனும், நேசத்துடனும் செய்வதன் காரணமாக, வருடத்தில் 365 நாளும் ஒய்வு ஒழிவின்றி, நேரம் காலம் பார்க்காமல் இரக்கமுள்ள மனசுக்காரனாக ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.


ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து எட்டு வருடமாகிறது.வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டியவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த ஆட்டோ ஒட்டுனராகப்போகிறார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை போன் மூலம் அழைத்தால் அழைத்தவர்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டோ ஏற்பாடு செய்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வேண்டும் என்றாலும் அமைத்து தருகிறார்.


கல்லூரியில் வரலாறு படித்தவர் என்பதால் மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால் தெரியாதவர்கள் ஆட்டோவில் ஏறும்போது மதுரையின் வரலாறை சுவராசியமாக சொல்கிறார். விரும்புபவர்களுக்கு சம்பந்தபட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.
வரலாறு முதுகலை படிக்கவேண்டும் என்ற ஆசையை தற்போது தபால் மூலம் படித்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.


என் தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது எனக்கு அது போதும் வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும் இந்த அளவு நிம்மதியும், உறவும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் ஆட்டோ மதன் உண்மையின் அனைவரின் அன்பை பெற்ற மதன்.
செய்யும் தொழில் எதுவானாலும் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பொன்மொழியின் இலக்கணமாக திகழும் மதனுடன் பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9367792728.


- எல்.முருகராசு,

கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_787332.jpg








கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் அசோக் கேடியா.
இவருக்கு சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பது என்பது விருப்பமான பொழுதுபோக்கு

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியை, புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் பொன்னுசாமியுடன் சேர்ந்து கடந்த 2002ம் ஆண்டு துவக்கியவர். இந்த அமைப்பு இந்தியா இன்டர்நேஷனல் போட்டோகிராபிக் கவுன்சில், பெடரேஷன் ஆப் போட்டோகிராபி, போட்டோகிராபி சொசைட்டி ஆப் அமெரிக்கா ஆகிய புகைப்பட கழகங்களுடன் இணைந்து செயல்படும் சிறப்பைக்கொண்டதாகும்.
அமைப்பின் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று படமெடுக்கும் இவர் கடந்த மே மாதம் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் குடிகொண்டிருக்கும் இந்த மலைகளின் அழகை, அற்புதத்தை, இயற்கையை, பசுமையை, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற உயிரோவியத்தை, வெயிலின் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முகம் காட்டும் சிகரங்களை, கண்ணாடி போல தெளிந்து ஒடும் ஆறுகளின் அழகை தனது கேமிரா கண்களால் அள்ளினார்.
இத்தனை நாள் இத்தகைய அழகை பார்க்காமல் இருந்துவிட்டோமே, இனிமேல் அடிக்கடி இங்கு வரவேண்டும் என்று தான் எடுத்த படங்களை எல்லாம் நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து அடுத்த கேதார்நாத் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

இவர் கேதார்நாத் போய்வந்து சரியாக ஒரு மாதம் கூட ஆகாத சூழலில்தான் அந்த துயரம் நடந்தது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பேரழிவாக கருதப்படும் அபாய வெள்ளம் ஏற்பட்டது. கண்ணில் பட்டவைகளையும், கரையில் இருந்தவைகளையும் சூறையாடிய வெள்ளம் கேதார்நாத்தின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது.
இவர் போய்வந்த பகுதிகள் எல்லாம் மண்மேடிட்டதை பார்த்து முதல் இவருக்குள் ஏற்பட்ட சோகமும், வருத்தமும் இன்னமும் குறையவில்லை.

சமீபத்தில் நடந்த உலக புகைப்பட தினவிழாவின் போது இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் தான் எடுத்த கேதார்நாத்தின் உயிரோட்டமுள்ள படங்களை கண்காட்சியாக வைத்திருந்தார். படங்களின் அழகை பார்க்க, பார்க்க எப்படி இருந்த கேதார்நாத் என்று பார்த்தவர்கள் மனதிலும் வலி.
இவரிடம் கேதார்நாத் புகைப்பட அனுபவங்கள் பற்றி பேசவும், மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9841026580.

இவரது கேதார்நாத் படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

கொசுக்களை அழிக்கும் சப்பாத்திக்கள்ளி!

கொசுக்களை அழிக்கும் சப்பாத்திக்கள்ளி!


கொசுக்களின் பெருக்கத்தை, இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த, பள்ளி மாணவன் காசுட்ரோ:

நான், பதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள, பாரதி அரசு மேல்நிலைபள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். மலேரியா, "டெங்கு' போன்ற, நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது. மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி, கொசுக்களின் பிறப்பிட மாக அமைகிறது.இதனால், பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில், கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்க்கரசி உதவியுடன் முயற்சித்தேன். செயற்கையான வேதியியல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திக்கள்ளிஉதவியது.

கொசுவின் முட்டைகள், "லார்வா, பியூபா, அடல்ட்' என, இந்த படிநிலைகளை தாண்டி தான், கொசுக்களாக உருவம் பெறுகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன். அதிலிருந்து, "மியூசிலேஜஸ்' எனும், வழுவழுப்பான திரவம் கிடைத்தது.
பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி, அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன். கொசுவின், "லார்வா'க்களுக்கு, உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன. இச்சோதனையில், கொசுவின் கூட்டுப் புழுக்கள்முற்றிலும் அழிந்ததைநிரூபித்தேன்.
இது இயற்கை முறையிலானது என்பதால், தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன், கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்தும், "மேக் சயின்ஸ்' போட்டியில், முதல் பரிசு மற்றும், 300 யூரோ பெற்றேன். தொடர்புக்கு: 88707 89884.

மாற்றுத்திறனாளியின் 2,467 அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பரப்புரை

விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளியின் 2,467  அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பயணம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_788754.jpg 

கும்மிடிப்பூண்டி:விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தும் நோக்கில், கோல்கட்டா முதல் கன்னியாகுமரி வரை, மூன்று சக்கர கைவண்டியில் 2467 கி.மீ., பயணத்தை மேற்கொண்டு வரும் மாற்று திறனாளிக்கு வழி எங்கும்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த இரத்தினம், பூதங்கம் தம்பதியரின் மகன் தங்க இராசா, 32; மாற்றுத்திறனாளியான இவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திர தகவல் மையத்தின், ஊழியராக பணியாற்றி வருகிறார்.விவேகானந்தரின் சிந்தனைகள் மீது இருந்த உன்னத ஈடுபாட்டின் வெளிப்பாடாக, அதை இந்திய இளைஞர்களிடம் கொண்டு சென்று எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது, அவரின் தீராத வேட்கையாக இருந்தது.அதன் எதிரொலியாக கோல்கட்டாவில் இருந்து, கன்னியாகுமரி வரை, தன் மூன்று சக்கர கைவண்டியில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் விவேகானந்தர் பிறப்பிடமான பெல்லுார்முட் பகுதியில் இருந்து, ஒடிசா, ஆந்திரா வழியாக கன்னியாகுமரி வரையிலான 2467 கி.மீ., தூர பயணத்தை, வருகிற செப்டம்பர் மாதம், 11ம் தேதி அன்று முடிக்க திட்டமிட்டுள்ளார்.பயணத்தின் முக்கிய நோக்கமாக, மேற்கண்ட மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து, அந்தந்த இடத்திற்கு ஏற்றபடி ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர மாநில பயணங்களை முடித்து, நேற்று காலை, தமிழக எல்லைப் பகுதியான, கும்மிடிப்பூண்டிக்குள் நுழைந்தபோது, அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயணத்தின் அனுபவம் குறித்து, தங்கராஜா கூறுகையில், பயணத்தின் களைப்பு தெரியாதபடி மேற்கு வங்கம், ஓடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றைய இளைஞர் சமுதாயம் கட்டாயம், விவேகானந்தரின் வழியை பின்பற்ற வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் செழிக்க, என் பயணம் மேலும் தொடரும் என, தெரிவித்தார்.

மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம் : முதல்வர்

இதைவிட  ஒப்பு நோக்கில், வாடகை ஊர்திகளின் கட்டணம் குறைவாகவே உள்ளது. அழைப்பூர்திகளை வாடகைக்கு அமர்த்தும் பொழுது 5 நிமையத்திற்கு உரூ.4 வீதம், மணிக்கு 48 உரூ. மட்டும் வாங்குகின்றனர்.

பொதுவாக இக்கட்டண விகிதத்தைப் பின்பற்றினாலே ஊர்திகள் வசதி வாய்ப்பின் அடிப்படையில் குறைவாக உள்ளமையால், கை வண்டி, குதிரை  வண்டிகளை ஒழித்ததுபோல்  மிதியூர்திகளை  ஒழித்து விட்டு ஊர்தி வசதிகளையே ஏற்படுத்தித் தரலாம்.  அல்லது ஒருவருக்கு ஒன்றுக்குமேல் மிதியூர்தி உரிமம் தருவதில்லை என அரசு கடைப்பிடித்தால், இப்பொழுது வரையறுத்துள்ளதைவிடக் குறைந்த கட்டணத்திலேயே வாடகை மிதியூர்திகள் கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



++++++++++

சென்னையில் மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம்  நடைமுறை: முதல்வர் உத்தரவு


சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை இரவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காத்திருப்புக் கட்டணம் 5 நிமிஷங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னை நகரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம் 2007-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணங்களையும் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 10-ல் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆக.22-ம் தேதி நடைபற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதத்துக்குப் பிறகு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை செப்டம்பர் 15-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது அந்த அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு ரசீது: சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவிகள், அதாவது, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்ட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர்கள் ரூ.80 கோடி செலவில் இலவசமாகப் பொருத்தப்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், ஆட்டோக்களின் இயக்ககங்களின் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.
ஆபத்துகால பட்டன்: ஆட்டோ மீட்டரில் புதிய பட்டனும் பொருத்தப்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், ஆட்டோ மீட்டருடன் பட்டனை (டஹய்ண்ஸ்ரீ ஆன்ற்ற்ர்ய்) பயணிகள் அழுத்தலாம். இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்து, அதனடிப்படையில் காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி ரத்து: ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்கும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இதுதவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.
பொதுவான புகார் எண்: ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டண விவரம்...
முதல் 1.8 கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.25 - ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ரூ.3.50-- ஒரு மணி நேரத்துக்கு ரூ.42
புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்.15 வரை அவகாசம்.
ஆட்டோ பயணிகளுக்கான பொதுவான புகார் தொலைபேசி எண் உருவாக்கப்படும்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு:பாப்பையா

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு கட்டாயத்தேவ‌ை: சாலமன் பாப்பையா









மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியம் என்றும் அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும் என்றும், பேராசிரியர் சாலமன் பாப்பையா கேட்டுக் கொண்டார்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், திருக்குறள் ஆராய்ச்சி மையத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருக்குறள் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கிவைத்து சாலமன்
பாப்பையா ஆற்றிய உரை:
தில்லிவாழ் மக்கள் திருக்குறள் பற்றி அறிந்து கொள்ளும் புதிய வேள்வியாக தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கிவைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
திருக்குறளில் ஆராய்ச்சி என வரும் போது, மிக நுணுக்கமாக ஆய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. அக்காலத்தில் திருக்குறளை வீதியோர சாதாரண மனிதருக்கும் கிடைக்கச் செய்ய மு. வரதராசனார் போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அவருக்கு முன்பாக வீரமாமுனிவர் 250 குறள்களுக்கு உரை எழுதி, படிப்பறிவற்ற மக்களும் படித்துப் பயன்பெற வழிகண்டார்.
திருக்குறள் போன்ற இலக்கிய நூல்களை அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பித்து வெளியிடுவதில் திருப்பனந்தாள் திருமடம் போன்ற அமைப்புகளின் பணி போற்றத்தக்கது.
மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியமாகிறது. அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும். ஆய்வையும் தெளிவாகச் செய்யும் முடியும் என்றார் சாலமன் பாப்பையா.
தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ஆற்றிய தலைமையுரை: தில்லி தமிழ்ச் சங்கத்தைப் பொருத்தமட்டில், எனக்கு 6 கனவுகள் இருந்தன. அதில் நான்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. திருக்குறள் ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
மேலும், சங்கத்தில் இசை, நாட்டியக் கல்லூரி அமைக்கும் கனவு நிறைவேற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, தில்லிவாழ் தமிழர்களும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடு, மனமாச்சரியங்களை மறந்து தில்லி தமிழ்ச் சங்கப் பணிக்கான வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அக்கனவும் நிறைவேறும். இதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
ஏழாவது கனவாக தற்போது எனக்கு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது திருவள்ளுவர் போன்று கம்பனுக்கும் விழா எடுப்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் கம்பன் விழா எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, தில்லி தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், "புதிய கருத்துகளை உள்ளடக்கி, எழுதப்பட்ட திருக்குறள் சிந்தனைப் பெட்டமாகத் திகழ்கிறது. இந்த ஆராய்ச்சி மையத்தைத் தொடர்ந்து, விரைவில் இசைக் கல்லூரியும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மாரியப்பன், தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் புலவர் ரா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கச் செயற்குழு உறுப்பினர் பி. சங்கர் நன்றி கூறினார். விழாவில் சாலமன் பாப்பையாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருக்குறள் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகளும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
"திருக்குறளை குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்'
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காசிமடம், இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்திப் பேசியது:
எந்த ஓர் இனம் சிந்தனை உடையதாக இருக்கிறதோ, அந்த இனத்தின் மொழி வளமுடையதாகிறது. அந்த மொழி வளம்பெறும் போது சிந்தனையும் மேலும் வளம்பெறும்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் சிந்தனை பெற்றவர்களாக விளங்கினர். அதனால், தமிழும் வளமுடையதாக விளங்குகிறது. திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருக்குறள் படிக்க ஆர்வம் பெறச் செய்ய வேண்டும். தாங்களே திருக்குறளை ஆர்வமுடன் படிப்பதுடன், குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். திருமடத்தின் திருக்குறள் அறக்கட்டளை மூலமும், திருமடத்தின் மூலமும் திருக்குறளை அடக்க விலைக்கே பதிப்பித்து வழங்கி வருகிறோம் என்றார் தம்பிரான் சுவாமிகள்.

அ.) கே.எம். பணிக்கரால் பறிபோன தமிழ் நிலம் ஆ.) மொழிபெயர் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி

 

கருத்துகள்(1)

பணிக்கர் மற்றும் அன்றைய கொச்சி-திருவிதாங்கூர் முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை ஆடிய ஆட்டத்தால், பாலைக்காடு, இடுக்கி, நெய்யாற்றின்கரை, சபரிமலைப்பகுதிகளை மட்டுமன்று, மலபார் முதல் மங்களூர் வரை, நிறைய நிலப்பரப்புக்களைத் தமிழர் இழந்ததை நினைவுபடுத்திய ஆசிரியருக்கு நன்றிகள் கோடி!
பதிவுசெய்தவர்  08/25/2013 19:47

 

இந்த வார க் கலாஇரசிகன்

சேக்கிழார் அடிப்பொடிக்கும், தினமணிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. "தினமணி'யைப் போலவே அகவை 80 இல் இந்த ஆண்டு அடியெடுத்து வைப்பவர். வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய டி.என்.ஆரைத் தமிழ் தனதாக்கிக் கொண்டது. எஸ்.வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் வரிசையில் தமிழால் கவரப்பட்டுக் கருப்புக் கோட்டை உதறியவர்களில் இவரும் ஒருவர்.
மகாகவி பாரதி "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பார். ஆனால், இன்றைய தேவை தமிழிலுள்ள நல்லறிஞர் சாத்திரங்களைப் பிறமொழிகளில் பெயர்த்தல்தான் என்பது எனது கருத்து. என்னால் நினைக்கத்தான் முடிகிறது. டி.என்.ஆர். நிகழ்த்திக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் என்பதுடன் நின்றுவிடாமல், பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கும் பெருமை சேக்கிழார் அடிப்பொடியைச் சாரும். தருமபுரம் ஆதீனத்தால் "சைவ சித்தாந்த கலாநிதி' பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டி.என்.ஆருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தியதென்னவோ தமிழகமல்ல; யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.
சமீபத்தில் இவர் வெளிக்கொணர்ந்திருக்கும் மொழிபெயர்ப்பு திருஞானசம்பந்தரின் முதலாம் திருமுறை. ஏனையோரைப் போல, வார்த்தைக்கு வார்த்தை போட்டு மொழிபெயர்க்கும் பாணியைக் கடைப்பிடிக்காமல், கவிதையின் உட்பொருளை உள்வாங்கிக்கொண்டு, மூலத்தின் எழுத்தையும், கருத்தையும் வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்பு சேக்கிழார் அடிப்பொடியினுடையது.
""இந்திய மொழிகளை, குறிப்பாக தமிழ்மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது நமது மொழிபெயர்ப்பாளர்கள் மேலைநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் கையாளும் உத்தியை கையாளக்கூடாது. மேலைநாட்டு மொழிபெயர்ப்புகள் கிரீக், லத்தீன் போன்ற மொழிகளை மொழிபெயர்ப்பதை அடிப்படையாகக் கொண்டவை. அந்த மொழிகளைப் போலவே பழைமையான மொழி நமது தமிழ். தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எப்படி என்பதற்கு சரியான வழிகாட்டுபவர்கள் இல்லை. முடிந்தவரை நான் மூலத்தை எழுதிய புலவரின் பார்வையில்தான் எனது மொழிபெயர்ப்புகளை எழுதுகிறேன்'' என்கிறார் டி.என்.ஆர்.
பாரதியைக் கரைத்துக் குடித்திருக்கும் டி.என்.ஆரிடம் பேசும்போதுதான் தெரிகிறது, பாரதியை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் இல்லை என்பது. பாரதியை நாம் பார்க்கும் பார்வையே முழுமையானதல்ல, தவறானது என்பது டி.என்.ஆரின் கருத்து.
என்னிடம், யாருக்காவது வாழ்நாள் சாதனையாளர் விருது பரிந்துரைக்கக் கேட்டால், நான் தயங்காமல் சொல்லும் பெயர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.ராமச்சந்திரன் என்பதாகத்தான் இருக்கும்.
புத்தகக் குவியலுக்குள் அமர்ந்து படிப்பதும், எழுதுவதுமாகக் கழிக்கும் டி.என்.ஆரின் சிறப்பு -
சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமல், தமிழை உலகறியச் செய்து கொண்டிருப்பது. தமிழாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கே.எம். பணிக்கரால் பறிபோன தமிழ் நிலம்
 

இராசசுதானிலுள்ள பிகானிர் சமசுதானத்தின் திவானாக இருந்த "சர்தார்' கே.எம்.பணிக்கர், சுதந்திர இந்தியாவில் சீனாவின் இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டார். பல நாடுகளில் தூதுவராக அவர் இருந்தாலும்கூட, "சர்தார்' கே.எம்.பணிக்கர் என்கிற பெயர், அவர் மாநில சீரமைப்புக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோதுதான் பரவலாகப் பிரபலமானது.
ஜஸ்டிஸ் மகன் பசல் அலி, பண்டித எச்.என். குன்ஸ்ரூ ஆகியோருடன் மாநில சீரமைப்புக் குழுவின் மூன்றாவது உறுப்பினராக இருந்த கே.எம். பணிக்கர், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய பங்களிப்பு நல்கியவர். ஒரு வகையில் பார்த்தால் தமிழகத்தை வஞ்சித்தவர் என்று அவரை விமர்சிக்கலாம் என்றாலும், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைத்த பெரும்பணியில் அவரது பங்களிப்பை மறுக்க முடியாது.
சமீபத்தில் தெலுங்கானா பிரச்னை பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, சர்தார் கே.எம்.பணிக்கரின் சுயசரிதையில், ஆந்திர மாநிலம் உருவானதைப் பற்றி அவர் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. கே.எம்.பணிக்கரின் சுயசரிதை "என் வாழ்க்கை' என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு, அதை வாங்கிவரச் செய்தேன்.
சிலருடைய வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். மிகப்பெரிய சாதனைகள் தத்தம் பணியில் செய்திருப்பார்கள். ஆனால், சுயசரிதை என்று வரும்போது அது அடுத்தவர்களைக் கவரும்படியாகவோ, பயன்படும் விதத்திலோ, சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ இல்லாமல் இருக்கும். தனிப்பட்ட முறையில் பெரிய பொறுப்புகளை வகித்து சாதனைகள் நிகழ்த்தியவர் சர்தார் பணிக்கர். ஆனால், அவரது சுயசரிதை மேலே குறிப்பிட்டதைப் போல சுவாரஸ்யமானது என்று கூறிவிட முடியாது.
ஆனால், அடிமை இந்தியா சுதந்திர இந்தியாவாக மாறிய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் சர்தார் பணிக்கர். குறிப்பாக, மாநில சீரமைப்புக் குழுவின் பணிகள் பற்றியவை, ஆவணங்கள். அதேபோல, முகலாய சரித்திரம் பற்றியும், சமஸ்தானங்கள் பற்றியும் பணிக்கர் தெரிவித்திருக்கும் கருத்துகள் இந்திய சரித்திரத்தில் அக்கறை உள்ளவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.

தமிழால் தழைக்கிறது செளராட்டிரம்!

தமிழால் தழைக்கிறது செளராட்டிரம்!









வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும். அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செüராஷ்டிர மொழியாகும். இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர். ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.
உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம் செüராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது. ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...!

கருத்துகள்(1)

நீலகிரிவாழ் படுகர்களும் தம் பேச்சுமொழியின் வரிவடிவத்திற்குத் தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்! ஆனால் ஒன்று.., படுகர்களின் பேச்சு கிட்டத்தட்ட தமிழை ஒத்தது! சௌராஷ்டிர மொழிக்குடும்பங்கள், அய்யங்கார் என்ற அடைமொழியுடன் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்! பூணூலும் அணிந்துகொள்கின்றனர்! அவர்களின் கிரந்தமொழி மூலத்தோடு பல தமிழ்ச்சொற்கள் சிறிது திரிபுகளோடு கலந்திருப்பதை, அவர்களோடு பேசிப்பழகும் யாரும் உணரலாம்! "தமிழும் - சௌராஷ்டிரமும் ஓர் ஒப்பாய்வு" என யாராவது ஆய்வுகள் நடத்தி முடிவுகளை வெளியிட்டால், அது இருமொழிகளுக்குமே பயன் உள்ளவையாக இருக்கும்!
பதிவுசெய்தவர்  08/18/2013 20:51
E