ஒளிப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒளிப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_787332.jpg








கேதார் நாத்தும் அசோக் கேடியாவும்...

சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் நிர்வாக அறங்காவலராக இருப்பவர் அசோக் கேடியா.
இவருக்கு சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பது என்பது விருப்பமான பொழுதுபோக்கு

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியை, புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் பொன்னுசாமியுடன் சேர்ந்து கடந்த 2002ம் ஆண்டு துவக்கியவர். இந்த அமைப்பு இந்தியா இன்டர்நேஷனல் போட்டோகிராபிக் கவுன்சில், பெடரேஷன் ஆப் போட்டோகிராபி, போட்டோகிராபி சொசைட்டி ஆப் அமெரிக்கா ஆகிய புகைப்பட கழகங்களுடன் இணைந்து செயல்படும் சிறப்பைக்கொண்டதாகும்.
அமைப்பின் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று படமெடுக்கும் இவர் கடந்த மே மாதம் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் குடிகொண்டிருக்கும் இந்த மலைகளின் அழகை, அற்புதத்தை, இயற்கையை, பசுமையை, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற உயிரோவியத்தை, வெயிலின் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முகம் காட்டும் சிகரங்களை, கண்ணாடி போல தெளிந்து ஒடும் ஆறுகளின் அழகை தனது கேமிரா கண்களால் அள்ளினார்.
இத்தனை நாள் இத்தகைய அழகை பார்க்காமல் இருந்துவிட்டோமே, இனிமேல் அடிக்கடி இங்கு வரவேண்டும் என்று தான் எடுத்த படங்களை எல்லாம் நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து அடுத்த கேதார்நாத் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

இவர் கேதார்நாத் போய்வந்து சரியாக ஒரு மாதம் கூட ஆகாத சூழலில்தான் அந்த துயரம் நடந்தது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பேரழிவாக கருதப்படும் அபாய வெள்ளம் ஏற்பட்டது. கண்ணில் பட்டவைகளையும், கரையில் இருந்தவைகளையும் சூறையாடிய வெள்ளம் கேதார்நாத்தின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது.
இவர் போய்வந்த பகுதிகள் எல்லாம் மண்மேடிட்டதை பார்த்து முதல் இவருக்குள் ஏற்பட்ட சோகமும், வருத்தமும் இன்னமும் குறையவில்லை.

சமீபத்தில் நடந்த உலக புகைப்பட தினவிழாவின் போது இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் தான் எடுத்த கேதார்நாத்தின் உயிரோட்டமுள்ள படங்களை கண்காட்சியாக வைத்திருந்தார். படங்களின் அழகை பார்க்க, பார்க்க எப்படி இருந்த கேதார்நாத் என்று பார்த்தவர்கள் மனதிலும் வலி.
இவரிடம் கேதார்நாத் புகைப்பட அனுபவங்கள் பற்றி பேசவும், மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9841026580.

இவரது கேதார்நாத் படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...


நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...























கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையாக வறண்டு கிடந்த மேட்டூர் அணை கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக நிரம்பிவருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு , 1934-ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்ட போது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே அதிக பெரிய நீர்தேக்க அணையாகவும் விளங்கியது.

அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கிறது. நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கிறது, எங்கும் சந்தோஷம் பொங்கியிருக்கிறது.
பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணை நீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து காவிரியாக கிளம்பும் ஆறு பல்வேறு கிளை நதிகளாக பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்விக்க இருக்கிறது.

கடந்த 2ம்தேதி அணையில் கூடுதல் நீர் திறப்பின் போது நேரில் போயிருந்த போது அணையின் பல்வேறு பகுதிகளுக்கு போய் அபூர்வமான படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
-எல்.முருகராசு



ஞாயிறு, 14 அக்டோபர், 2012

6ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியின் ஒளிப்படங்கள்



6ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியின் ஒளிப்படங்கள் 

ஒருங்கிணைப்பாளர்
தமிழகப் பெண்கள் செயற்களம்
9094430334, 9884187979
13 attachments — Download all attachments   View all images   Share all images  
100_3342.JPG100_3342.JPG
2532K   View   Share   Download  
100_3342.JPG100_3342.JPG
2532K   View   Share   Download  
100_3347.JPG100_3347.JPG
2285K   View   Share   Download  
100_3348.JPG100_3348.JPG
1946K   View   Share   Download  
100_3358.JPG100_3358.JPG
2214K   View   Share   Download  
100_3359.JPG100_3359.JPG
2033K   View   Share   Download  
100_3383.JPG100_3383.JPG
1936K   View   Share   Download  
100_3385.JPG100_3385.JPG
1961K   View   Share   Download  
100_3393.JPG100_3393.JPG
2037K   View   Share   Download  
100_3402.JPG100_3402.JPG
2393K   View   Share   Download  
100_3436.JPG100_3436.JPG
2188K   View   Share   Download  
222015_262016623919063_799185890_n.jpg222015_262016623919063_799185890_n.jpg
193K   View   Share   Download  
223951_279556898821807_1217450694_n.jpg223951_279556898821807_1217450694_n.jpg

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

சென்னையில் முழுஉவா மறைப்பு – ஒளிப்படங்கள்


சென்னையில் முழுச்சந்திரகிரகணம் – ஒளிப்படங்கள்

பதிவு செய்த நாள் : 11/12/2011 (நட்பு)


நாம் மீண்டும் ஒரு முழு சந்திரகிரகணத்தை பார்க்க வேண்டுமென்றால் இன்னும் ஏழு ஆண்டுகள் ( 2018 சூலை 27 ம் தேதி வரை) காத்திருக்க வேண்டும்.
பௌர்ணமி நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் செல்லும்போது, பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் செல்கிறது. இதை சந்திர கிரகணம் என்கிறோம். இதுபோல் இன்று முழு சந்திரகிரகணம் இந்தியாவில் தெரிந்தது.
இந்த நிகழ்வு மாலை 6.15 முதல் துவங்கி, இரவு 7.30 முதல் நிழல் மறைக்கத் துவங்கியது. தொடர்ந்து இரவு 8.30 வரை முழுமையாக மறைத்தது. பின்னர் படிப்படியாக 9.15 அளவில் நிழல் விலகத்துவங்கியது. மேகமூட்டம் காரணமாக நிழல் விலகுவதைக் காண இயலவில்க்லை.
கீழே இன்றைய முழுநிலவின் படங்கள் சில… (படத்தைச் சொடுக்கி பெரித்தாக்கிக் கொள்க)





















முழு சந்திரகிரகணம்: ஆர்வத்துடன் ரசித்த மக்கள் (தினமணி)

First Published : 11 Dec 2011 12:32:32 AM IST


நிலவு மீது பூமியின் நிழல் விழும் சந்திர கிரகணத்தின் காட்சிகள். படம்: ஏ.எஸ்.கணேஷ்.