திங்கள், 29 அக்டோபர், 2012

தமிழ்நாடு சிறப்பு க் காவல் இளைஞர் படை,முதல்வர் அறிவிப்பு

காவல்துறை யினருக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு க் காவல் இளைஞர் படை: சட்டசபையில் செயலலிதா அறிவிப்பு
போலீசாருக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, அக்.29:-

சட்டசபை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது, விழாக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை முறைப்படுத்துவது என பல்வேறு இன்றியமையாப் பணிகளை தமிழக காவல் துறை ஆற்றி வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 629 ஆகும். இது, 635 மக்களுக்கு ஒரு காவல் அலுவலர் என்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது.

1.1.2012 நிலவரப்படி, இந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிராக 82 விழுக்காடு காவல் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள். காவல் துறையில் நிலவும் இந்தப் பற்றாக்குறையினை சீர் செய்யும் வகையில், காலியாக உள்ள 12,208 காவலர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புமாறு நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவினையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை 24.6.2012 அன்று நடத்தியது. இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உடற்தகுதித் தேர்வினை நடத்திய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2012 அன்று  தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12,162 காவலர்களுக்குத் தற்போது மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு 7 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் பணியில் சேரும் நிலை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 19,096 காவல் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டும் பார்க்கும் போது, காவல் துறை ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றில் அவர்களுக்கு துணையாக ஒரு துணைப் படையை உருவாக்குவது அவசியமாகிறது.

இவ்வாறு அமைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், குற்றப் புலனாய்வு போன்ற பிரதான காவல் பணிகளில் தற்போதுள்ள காவலர்களை முழுமையாக ஈடுபடுத்த இயலும்.

இதற்கு வழி செய்யும் வகையில், ‘தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை’ என்ற ஒரு சிறப்புப் படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறப்புப் படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்; நீதிமன்றங்களால் வெளியிடப்படும் வருவிப்பு ஆணைகளை சார்வு செய்தல்; கூட்ட நெரிசல்களை ஒழுங்குபடுத்துதல்; இரவு ரோந்து மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விளம்பரம் செய்யப்பட்டு; மாவட்ட வாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர் ஆவர். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களாக பணி அமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கு பயிற்சி காலத்திலும்; பணி காலத்திலும் மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7,500/- ரூபாய் வழங்கப்படும். மேலும், அவர்கள் காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இதுதவிர, அரிசி, கோதுமை, சர்க்கரை, மைதா, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வகுக்கப்பட்டுள்ள அளவுகோலின்படி அவர்களுக்கு வழங்கப்படும். ஓர் ஆண்டு காலம் திருப்திகரமான பணியினை நிறைவு செய்யும் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்கள், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தகுதியைப் பெறுவர்.

ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் காவலர் நிலையில் ஏற்படும் காலியிடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த சிறப்புக் காவல் இளைஞர் படையிலிருந்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இதற்கென ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் தேர்வினை நடத்தும்.

அத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவரின் பட்டியல் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். இத்தேர்வில் வெற்றி பெறாதவர்கள், 40 வயது வரை, இந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படையிலேயே, தொடர்ந்து பணியாற்றுவர்.

40 வயதிற்கு மேல், அவர்களுக்கு, தமிழக அரசே வேறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும். இந்த நிதியாண்டில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென மாநிலம் முழுவதும் 10,000 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதற்கான தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்த நிதியாண்டிற்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

2013-2014 ஆம் நிதியாண்டில் 15,000 பேர் இந்த இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப 50,000 உறுப்பினர்கள் வரை இந்த தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர்க்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்

தானாகவே காற்று அழுத்தத்தை ச் சரிபார்க்கும் புதுமை வட்டை(டயர்)

தானாகவே காற்று அழுத்தத்தை ச் சரிபார்க்கும் புதுமை  வட்டை(டயர்)
தானாகவே காற்று அழுத்தத்தை சரிபார்க்கும் புதுமை டயர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வாகன டயர்கள் தயாரிப்பு நிறுவனம் புதுமையான டயர் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த டயரானது தேவையான காற்று அழுத்தத்தை தானாகவே சரி செய்து கொள்ளும். இதன் மூலம் வாகனம் எளிதாக ஓடுவதுடன், டயர் நீடித்து உழைக்கும், எரிபொருள் செலவு குறையும் என்று கூறுகிறார்கள்.

இதை விரைவில் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடுகிறார்கள். இது பற்றி நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி ஜேம்ஸ் கூறுகையில், இந்த சோதனைகள் நிறைவடைந்ததும் இந்த புதுமையான டயர்கள் விற்பனைக்கு வரும் என்கிறார்.

உலகச்சிக்கனநாள் - சேமிப்புக்கணக்குகளைத் தொடங்குங்கள் : முதல்வர்

சேமிப்புக் கணக்குகளை த் துவக்குங்கள் : முதல்வரின் வாழ்த்துச் செய்தி

First Published : 29 October 2012 10:46 AM IST
இன்று உலக சிக்கன தினம் கடைபிடிக்க உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு உலக சிக்கன நாள் தின வாழ்த்துச் செய்தியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பொது மக்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும்.  “சிறுக கட்டி பெருக வாழ்” என்பதற்கேற்ப  எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும்.
சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது. எனவே, பொது மக்கள் அனைவரும்  தமிழக அரசின் சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அன்போடு நான்  கேட்டுக் கொள்கிறேன்.
“இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு”  என்பதால் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கை வளம் பெற  அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்க வேண்டும் என இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Genocidal Sinhala state manoeuvres Tamil speaking communities in occupied Mannaar

Genocidal Sinhala state manoeuvres Tamil speaking communities in occupied Mannaar

[TamilNet, Sunday, 28 October 2012, 17:39 GMT]
Unlike the Eastern Province, where Colombo has waged a successful campaign of divide-and-rule, creating and sustaining communal disharmony among the Tamil-speaking people, the people of Mannaar have managed to co-exist in the district against all odds in the past. Vanni knew it better. The solidarity went to the extent of coastal Muslims in Mannaar sustaining a lifeline to Vanni in transporting crucial energy supplies across Sri Lanka to the de-facto state of Tamil Eelam during the Eelam War III and IV. Now, as the balance of power is gone and the country of Eezham Tamils is under genocidal occupation, the agents of Colombo manoeuvre to divide Catholics and Muslims in Mannaar and thereby to create sectarianism among the Tamil-speaking people. The vacuum of a competent Tamil polity in the region has also been favourable to the SL state, writes a political observer in Mannaar.

While the latest two episodes of such conflicts are about burial grounds of Muslims and Catholics at two different places in Mannaar, the occupying Sinhala military is fast engaged in building Buddhist stupas and erecting Buddha statues in the region.

A Muslim gang, allegedly incited by SL minister Rishard Badurdeen, is engaged in petty violence opposing Catholics burying their dead in a cemetery situated behind Kappaleanthi Maathaa church, which is situated in Chinnak-karisal in Mannaar division. The gang inciting violence is from the nearby Periya-karisal village.

Mr Badurdeen is also targeting to evict the Tamil landowners by harassing them. The SL minister has already promised the lands of the Catholics to his supporters, say concerned Muslim civil society leaders belonging to the opposition of the UPFA.

The goons are reportedly damaging the burial grounds, pulling out the cross, the symbol of Christianity and are throwing stones and bottles at the church when prayers are being held. The church has been in existence there since the times of the Portuguese.

Several attempts made by the Catholic leaders to have a meeting with the opposing Muslim group has been systematically ignored due to the political involvement by the SL minister, say Catholic community leaders.

In the meantime, tension between Tamils and Muslims have arisen following the burial of a deceased Muslim person behind the houses of Tamil occupants, who had earlier bought these lands from Muslims. Now the Muslim gang claims that these lands were used earlier as a burial ground of the Muslims and had warned the Tamil residents in person and by telephone to move away from the site immediately.

Meanwhile, the organizers of Muththamizh Community Centre in the area also complain that persons claiming to be from SL military intelligence harass them and instruct them to dissolve the centre. The callers, allegedly making the phone calls from the SL military intelligence unit, were questioning the activists whether the community organisation was formed when the LTTE was in existence in the area.

The majority of residents along the Moor Street are Tamils and Mr Badurdeen has very little electoral interest in gaining votes here. But, the SL military intelligence has allegedly found it easier to incite a ‘burial ground’ conflict in Mannaar city by nurturing a Muslim youth gang.

Despite the public outrage displayed against him, the SL minister Rishard Badurdeen, is continuing his project of causing communal disharmony that serves the divide-and-rule counter-insurgency line of the ‘military-genocide politics’ of the occupying Sinhala military.

Mr Badurdeen has also his own interests of creating and sustaining a loyal electorate of Muslims for himself, say Muslims who are concerned of the consequences of larger designs behind the tip-of-the-iceberg incidents in recent times.

On the other front, the Tamil National Alliance (TNA) has failed in paving ways to foster the already prevailing harmony among the Tamil-speaking people in Mannaar. It failed in addressing the civil disputes and in providing a leadership with statesmanship, say young Tamil politicians.

TNA under the LTTE was more attractive to the Muslims of Mannaar. Even though the perspectives are said to be wider today, the TNA has failed in even maintaining the level of attraction that became possible with the Muslim people during the ceasefire times.

SL military, paramilitary embark on ‘legal intimidation’ against Tamil media

SL military, paramilitary embark on ‘legal intimidation’ against Tamil media

[TamilNet, Sunday, 28 October 2012, 15:28 GMT]
Sri Lanka's military establishment and EPDP paramilitary opt for new ways in recent times to suppress media critical of the SL defence ministry and its paramilitary operatives. Sri Lanka's military commander Lieutenant General Jagath Jayasuriya has reportedly filed a defamation case against Jaffna-based Uthayan daily and SL minister Douglas Devananda, who is also the leader of EPDP paramilitary, has filed a similar case in the courts in Jaffna demanding a huge sum of compensation against a WikiLeaks-based story filed by the paper, media sources in Jaffna told TamilNet. Sri Lankan Defence Ministry, led by SL presidential sibling Gotabhaya Rajapaksa has found ‘legal operations’ more effective than ‘white van operations’ in silencing critical media, journalists in Colombo said adding that the role of ‘registered’ media in the island has now come to almost an effective end.

An informed legal source in Jaffna said that the EPDP leader was seeking 10 billion rupees in compensation from the paper for a report it had filed based on WikiLeaks. According to EPDP's lawyer, WikiLeaks is not a legally valid source to be cited by Uthayan paper.

The administration of Uthayan paper is yet to receive details on the nature of the case filed by the SL military. So far, there has only been reports in SL military run news outlets that the SL military commander and Defence Secretary have filed defamation case against the paper at Jaffna High Court regarding two news items.

In July, there was a ‘leaked’ gossip-based reporting in web-media that SL Army Commander had complained to former SLA commander General Rohan Daluwatte that he could issue orders only to the Seva Vanitha Unit (women’s organization), led by his wife, and the Civil Administration Unit. All his subordinate commanders say that they receive orders directly from Mr Gotabhaya Rajapaksa, he allegedly told Daluwatte. Uthayan paper filed the story days after several websites had run the story. Later, a team of CID officers from Colombo visited the paper office grilling the editors of the paper.

Now, the SLA commander, under the instruction of Gotabhaya Rajapaksa, has allegedly filed a case against the paper.

The SL military commanders in North and East have been chasing the media for their reports on war crimes.

A senior journalist working for a Tamil paper said that he had recently been questioned by a team of military officials coming to the office of the paper investigating about the source of a war-crime related photo the paper had used. The journalist had pointed at a reliable international website that had published the photo.

The SL military has also fielded intelligence operatives as covert journalists monitoring the activities of journalists.

Recently, the SL military was behind launching a newspaper in Jaffna.


ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு

சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு
சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமை செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை, அக்.28-

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நாளை சென்னை கோட்டையின் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளைய போராட்டத்தில் இந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை கூட்டமும் நாளை தொடங்குகிறது.

இதையடுத்து கோட்டையை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். காமராஜர் சாலை, ரிசர்வ் வங்கி, தீவுத்திடல் உள்ளிட்ட கோட்டையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து பஸ் மற்றும் வேன்களில் சென்னைக்குள் நுழையும் போராட்டக்காரர்களை அந்தந்த மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, கைது செய்யவும் மாவட்ட சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஜார்ஜ் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 589 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

மந்திய மந்திரி சபையில் மாற்றம்:துறைகள் || Cabinet reshuffle Prime Minister Manmohan Singh reallocates portfolios

கவிக்கோ தமிழ்க்கோ அல்ல - மெய்ப்பை அணிந்த இனத்தவர் குறித்த பொய்மை

Elangovan N




கி.பி 600/700 வரை சட்டை போடாமலே திரிந்தாரா? :-))
அந்தத் திருவாசகப் பாடலைத் தப்புத் தப்பா படித்துவிட்டு, 
கவலையே படாமல் கவிஞர் அள்ளி விடுகிறாரோ?

இனிமேல் நானும் கவிதை எழுதப்போறேம்ப்பா... 
தமிழில் கவிதை எழுதத் தெரிந்தால் எல்லாமே தெரிந்துவிடும் போல.



அன்புடன்
நாக.இளங்கோவன்

தாள் பொமமை, தினமலர்


மனநிறைவு கிடைக்கிறது

சொல்கிறார்கள்

"ஆத்ம த் திருப்திகிடைக்கிறது!'

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், "கருணை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும், நியூசிலாந்தை சேர்ந்த ஜீன் வாட்சன்: நான் முதன் முதலில், 1984ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி, எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், மீண்டும், 1986ம் ஆண்டு இங்கு வந்து, அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலம், நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன் முதலாக என்னைப் பார்த்த அந்த ஊர் மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்து, தங்கள் குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி, என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக மிகவும் வருந்தினேன். அந்த எண்ணம் தான், கருணை இல்லமாக உருமாறியுள்ளது.

போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு, என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். மீண்டும் நியூசிலாந்திற்கே சென்றேன். கருணை இல்லம் துவங்க, நிதி திரட்ட முயற்சி செய்தும், போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள எங்களின் பூர்வீக வீட்டை விற்று, கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தேன்.

கையிலிருந்த சொற்ப தொகையுடன், இந்தியா வந்து, ஏழு குழந்தைகளுடன் கருணை இல்லத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும், கருணை இல்லத்தில் இல்லை. கையிலும் போதிய நிதி இல்லாததால் செய்வதறியாது திகைத்தேன். அப்போது, என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்தனர். பல இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து, கருணை இல்லம் அறக்கட்டளை துவங்கி, நிதி திரட்டினோம்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை, நன்கு ஆராயப்பட்ட பின்பே, அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடம் அளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தில் சேராத மாணவர்களுக்கும், உதவி செய்கிறோம். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வு தான். அது, நான் எதிர்பார்த்ததை போன்றே, நிறைவேறி வருவதில், எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை.