திங்கள், 3 அக்டோபர், 2011

hunger strike for muuvar uyir-Vaiko greets nedumaran :நெடுமாறன் உண்ணாநோன்பு : வைகோ வாழ்த்து

நெடுமாறன் உண்ணாவிரதம்: வைகோ வாழ்த்து

First Published : 02 Oct 2011 03:54:31 PM IST


சென்னை, அக்.2:  இந்தியாவில் மரணட தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும், ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்யக் கோரியும் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், உலகில் 107 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை இருக்கும் நாட்டை விட மரண தண்டனை இல்லாத நாடுகளில்தான் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. தமிழ்நாட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என மக்கள் கொந்தளித்து எழுந்தனர்.நீதிமன்றத் தடையால் தற்போது மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக அரசும் சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பிறகும் மரண தண்டனையை நிறைவேற்ற சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்

தமிழக மீனவர்களை கொலை செய்து வரும் சிங்கள இராணுவத்தினரைக் கைது செய்து தூக்கிலிட்டுவிட்டு அதன் பின் போபர்ஸ் ஊழல் புகழ் பிரதமரை கொன்ற, கொல்லத் தூண்டியவர்களை தூக்கிலிட்டுவிட்டு, பிறகு இந்த மூன்று அப்பாவிகளை மட்டுமல்லாது நாட்டு மக்கள் எவரையும் தூக்கிலிடலாம்! என்ன செய்வது! ஒரு சிலருக்கு தூக்கிலிடுவது ஏதோ விளையாட்டு போல் ஒரு எண்ணம்! எனவே தான் புத்தர் பிறந்த நாட்டை ஆறறிவுள்ள அப்பாவிகளைக் கொன்ற நாடாக்கப் பார்க்கிறார்கள்!
By பொன்மலை ராஜா
10/3/2011 12:10:00 AM
அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் ௧௭௧(௩), ௧௬௦ கீழ் மாநில அரசும் ஆளுநரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மைய உள்துறை அமைச்சர் எதுவும் செய்யமாட்டார்.
By J.Narayanasamy
10/2/2011 5:55:00 PM

தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வுகளை வளர்க்க வேண்டும்: அன்பழகன்

தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வுகளை வளர்க்க வேண்டும்: அன்பழகன்

First Published : 03 Oct 2011 04:25:39 AM IST


சென்னை, அக்.2: தமிழ் இளைஞர்களிடம் மங்கி வரும் தமிழ் உணர்வை முறையாக வளர்க்க வேண்டும் என்று சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக இலக்கிய விழாவில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.சென்னை மேற்கு மாம்பலத்தில் திமுக தலைமை இலக்கிய அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பெங்களூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் தாமோதரனின், தமிழ்ச் சேவையை பாராட்டி அவருக்கு, திமுக இலக்கிய அணி சார்பில் பொன்னாடை அணிவித்து பரிசு கேடயத்தை வழங்கி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது:அண்ணாவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி தெரியும் என கூறுபவர்களும், அண்ணாவை முழுமையாகத் தெரிந்திருக்க மாட்டார்கள். அண்ணாவை அறிவது என்பது, அவரது எண்ணங்களை, சிந்தனைகளை, செயல்பாடுகளை, கொள்கைகளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மிக குறைவு. இங்கே இலக்கியவாதிகள் கூடியிருக்கிறீர்கள். இலக்கியவாதிகளை பொருத்தவரை அவர்களது எண்ணங்கள் எல்லாம் இலக்கியத்தில் தான் அதிகம் இருக்கும். இலக்கியவாதிகளும் தமிழ் உணர்வுகளைத் தூண்டும் பணியில் ஈடுபட வேண்டும்.தமிழன் கதைகளை கேட்டே கெட்டுவிட்டான் என்பார்கள். அந்த நிலை மாற வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் பெரியாரிடம் பிறந்த சுயமரியாதை கொள்கைகளை, சிந்தனைகளை, தத்துவங்களை தேட வேண்டியுள்ளது. அண்ணா அந்தச் சிந்தனைகளை இளைஞர்களிடம் இனிப்பாகக் கொண்டு சேர்த்தார். சுயமரியாதை உணர்வுகளைத் தூண்டினார். இளைஞர்கள் புது உத்வேகத்துடன் தமிழ் உணர்வு கொண்டவர்களாக வீறு கொண்டு எழுந்தனர். அண்ணாவுக்கு பின்னால் தமிழ் உணர்வை இளைஞர்களிடம் கருணாநிதி வளர்த்தார்.இன்றைக்கு தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வு மங்கி வருகிறது. தமிழன் உணர்வை இழந்து தாழ்ந்து கொண்டிருக்கிறான்.தமிழன் என்ற வெறி இல்லாமல் உணர்வின்றி இருக்கிறான். தமிழன் மனிதனாக மாற வேண்டும். தமிழனிடம் மங்கி வரும் தமிழ் உணர்வை முறையாக வளர்க்க வேண்டும் எனறார் அவர்.முன்னதாக நடந்த கவியரங்கத்தை முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை இலக்கிய அணி செயலாளர் சந்திரசேகர், மாநில இலக்கிய அணி செயலாளர் கவிதைபித்தன், முன்னாள் மேயர் சா. கணேசன் ஆகியோர் பேசினர்.

Muuvar uyir -pazha.nedu hungerstrike: மூவரின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டிப் பழ.நெடுமாறன் உண்ணாநோன்பு

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பழ.நெடுமாறன் உண்ணாவிரதம்

First Published : 03 Oct 2011 04:52:17 AM IST


உண்ணாவிரதத்தில் பேசுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. உடன், ஓவியர் வீர சந்தானம், மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
சென்னை, அக்.2: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி "3 தமிழர் உயிர் காப்புக் குழுவின்' ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை காயிதே மில்லத் கல்லூரி அருகில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது:3 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனும் அவசியம் இல்லை. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினாலே போதுமானது. குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் அனைத்தும் ஆளுநருக்கும் இருக்கிறது. ஆளுநரே தண்டனையை ரத்து செய்யலாம்.மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி யாராவது 3 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தால் தமிழக மக்கள் சீறி எழுவார்கள். மரண தண்டனை 107 நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனை உள்ள நாடுகளைவிட இல்லாத நாடுகளிலேயே குற்றங்கள் குறைவாக இருக்கின்றன. எனவே, இந்தியாவில் முற்றிலுமாக மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றார் வைகோ.அமைச்சரவைத் தீர்மானம்: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரைக் கட்டுப்படுத்தாது. எனவே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மூவர் உயிரைக் காக்க வேண்டும்' என்றார் பழ.நெடுமாறன்.

thamizh sahithya academy: உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

First Published : 03 Oct 2011 03:07:43 AM IST

Last Updated : 03 Oct 2011 05:20:32 AM IST

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2011-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில், பனிநிலவு என்ற நூ
நாமக்கல், அக். 2: தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெüரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3-ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது: தனது பிறந்த நாளை சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் அற்புதமான பண்பாட்டை தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா.தமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர்.ஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.அவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்கு கைவந்த கலை. தனது ஒவ்வொரு நாவலுக்கும் கதைக் கருத்தைத் தீர்மானித்ததும் அதன் கதைக் களனைத் தேடிச் சென்று, அங்கேயே தங்கியிருந்து நிஜமனிதர்களின் உணர்வுகளை, பிரச்னைகளை, நிகழ்வுகளை முழுமையாக உள்வாங்கி நாவல் எழுதுவதுதான் கு.சி.பாவின் பாணி. ஒரு நாவலை எழுத இவர் மூன்று, நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். சமுதாயக் கண்ணோட்டம்தான் இவரது நாவல்களின் அடிப்படை.எனக்கு உள்ள ஆதங்கம் கு.சி.பா. போன்றவர்களுக்கு சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். இவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை.கேரளத்தைப் போன்று தமிழகத்துக்கும் ஒரு சாகித்ய அகாதெமி அமைப்பை ஏற்படுத்தி, விருதுகள் வழங்க வேண்டும். இன்றைய அவசியத் தேவையும், உடனடித் தேவையும் அதுதான். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசுகள் வழங்காமல், நல்ல படைப்பாளியைத் தேடிப் பிடித்து பரிசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியம் என்பதே இல்லாமல் போய்விடும். வருங்காலத்தில் இன்றைய காலம் இலக்கியத்தின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், திறமையான எழுத்துக்கள் இனம் காணப்பட்டு பாராட்டப்பட வேண்டும்.கு.சி.பா. அறக்கட்டளையின் இலக்கிய விருது, ஞானபீட விருதுக்கு நிகரானதாக உயர வேண்டும். அந்த விருது நமக்குக் கிடைக்காதா என்ற ஏக்கத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.விழாவில் விருது வழங்கும் நோக்கம் குறித்து எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி பேசினார். விழாவுக்கு தலைமை வகித்துப் பேசிய கு.சி.பா. அறக்கட்டளைத் தலைவர் பொ.செல்வராஜ், அடுத்த ஆண்டு முதல் அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருதுகளுக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

Folklore songs by Chithira senan: நாட்டுபுறப் பாடல்கள்

நாட்டுபுற கிராமியப் பாடல்கள்

க. சித்திரசேனன்
பதிவு செய்த நாள் : 29/06/2011
கருத்துகள் (21) 4,019 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (21 votes, average: 3.62 out of 5)


4

வாசகர் கருத்துகள் (21)
  1. பாராட்டுகள். நல்ல எதிர்காலம் சித்திரசேனனை நோக்கி வந்துகொண்டுள்ளது. சில இடங்களில் ஒலிப்பில் கருத்து செலுத்த வேண்டும். ஊர் அல்லது சிற்றூர் என்பதுன் அயற்சொல்லே கிராமியம். நாட்டுப்புறம் என்றாலும் அதே பொருளதான். நாட்டுப்புறக் கிராமியம் என்றால் நகர்ப்புறக் கிராமியம் என ஒன்று உள்ளது எனப் பொருள் வருகின்றது. நாட்டார் பாடல்கள் அல்லது ஊரகப்படாடல்கள் அல்லது நாட்டுப்புறப் பாடல்கள் எனக் குறிப்பிட்டால் போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
  2. this all the songs i will like
  3. thomas says:
    திஸ் சாங் use far ஆல் மெம்பெர்ஸ்
  4. Dharshn says:
    வெரி பெஔதிபுல் மேலோடயுஸ் song
  5. manimegalai says:
    கேக்க கேக்க இனிமை மனசுக்கு குளுமை மெட்டும் வார்த்தையும் புதுமை நன்றி நண்பா .
  6. manimegalai says:
    கேக்க கேக்க இனிமை மனசுக்கு இதம்
    கிராமத்த போய் பாத்த குளுமை
    நன்றி நண்பா .
  7. kamal says:
    மிக இனிமையாகவும், இந்த பாடலின் இசை மெட்டும் எனக்கு மிகவும் பிடித்தமாதகவும் உள்ளன்.
  8. pushbalatha says:
    இப்படி வேற பாட்டு இருந்தா போடுங்கப்பா.
  9. rohini says:
    தலையில் முடி வளர்த்த அண்ணாத்த உங்க பாட்டு சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.
  10. pushparaj says:
    நல்ல குரல் வளம்… பாடல்கள் அருமை…
  11. நல்ல குரல் வளம்… பாடல்கள் அருமை…
  12. keetha says:
    ரொம்ப நாள் கழித்து இனிமையான கிராமிய கீதம் கேட்டு அகம் மகிழ்ந்தேன் நன்றி
  13. கிராமத்து பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. தமிழ் கலாச்சாரத்தோடு கிராமத்து மக்களின்
    காதலையும் நன்றாக பாடி உள்ளீர். வாழ்த்துக்கள். தமிழ் வளர்ப்போம் தாய் மொழி மீட்போம்.
  14. வடிவேல்கன்னியப்பன் says:
    மண்ணின் வாசனை நன்றாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.
  15. Arunachalam says:
    நானும் இந்த பாடலை கேட்டேன். மிக இனிமையாகவும், இந்த பாடலின் இசை மெட்டும் எனக்கு மிகவும் பிடித்தமாதகவும் உள்ளன். ஆகையால் இதை மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடுகிறேன்.
  16. SHANMUGAM G N says:
    பாட்டும் மெட்டும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது. பாடகருக்கும் பாட்டு எழுதினவருக்கும் நன்றி!
  17. balan says:
    மிக நன்றாக இருக்கிறது
  18. amala says:
    பாட்டை கேட்டேன் ரசித்தேன்.இதயம் இதமாக இருக்கிறது நன்றி பாடகரே .
  19. poominathan says:
    நான் நகரத்தில் வாழ்ந்தாலும் எனது கிராமத்து காதலியை இந்த பாடல்கள் ஞாபக படுத்திவிட்டது .
  20. senthil says:
    இந்த பாட்டு மிக நன்றாக உள்ளது .நட்புக்கு நன்றி.

wonders about akaththiya malai: அடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா?



6,000 சதுர கி.மீ பரப்பளவு... 1,867 மீட்டர் உயரம்... 11 வகையான காடுகள்... மொத்தமுள்ள 177 ஊர்வன வகைகளில், 157 வகையான உயிரினங்கள் உலா வரும் இடம்... கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து உயிரோடு இருக்குமிடம்... உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல், 2,654 வகை தாவரங்களின் உய்விடம்... 600க்கு மேற்பட்ட மூலிகைகளை, 500 சதுர கி.மீ., பரப்பிற்கு மேல் மழைக்காடுகளை கொண்ட உலகின் ஒரே காடு...

தமிழக - கேரள எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை குறித்து இப்படி நிறைய தகவல்கள். இத்தனை பெருமைகளையும் பெற்ற மூலிகைகளின் மூலஸ்தானமாக விளங்கும் அகத்திய மலையை, எளிதில் யாரும் பார்த்துவிட முடியாது. அனுமதி கிடைப்பதில் அத்தனை கெடுபிடிகள். இன்னும் கொஞ்ச நாட்களில், பூகோள பொக்கிஷமான அகத்தியமலை பற்றிய சுவாரசியதகவல்கள், தொலைக்காட்சி மூலம் வீட்டின் வரவேற்பறைக்கே வரப் போகிறது.அகத்தியமலை காடுகளையும், மலைகளையும், வீரியமான ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டது. இங்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பை நடத்தி, "ஓர் அருந்தமிழ் காடு' என்ற பெயரில் தயாரான சுற்றுசூழல் விழிப்புணர்வு பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன் ராம்.

படப்பிடிப்புக்காக நீண்ட பயணம்:
திரைப்படக் கல்லூரி மாணவர்கள், புகைப்படகாரர்கள், ஆதிவாசிகள் என 18 பேர் கொண்ட குழு இந்த படத்தின் பின்னணியில் இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 100க்கும் மேற்பட்ட பறவை வகைகள், எண்ணற்ற தவளை இனங்களையும், 500 க்கும் மேற்பட்ட அரியமர வகைகள், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள் என, பல்லுயிரிகளின் அணிவகுப்புடன், இந்த பொக்கிஷ மலை படமாக்கப்பட்டுள்ளது. மக்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வடைய செய்யும் நோக்கில், 2,500 கி.மீ., மேல் நடந்து, 2,000 க்கும் அதிகமான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

பக்கத்தில் படுத்திருந்த ராஜநாகம்:
அகத்தியமலை குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, விளக்கமாய் பதில் கொடுத்தார் மோகன்ராம்.""இயற்கை மேல் இருந்த காதலால் வேலையை விட்டு விட்டு, 12 ஆண்டுகள் அகத்திய மலை குறித்து ஆய்வு செய்தேன். மனைவியின் நகைகளையும், சில நண்பர்களின் உதவியை வைத்தே இதில் இறங்கினேன். அகத்திய மலையின் சிறப்புகளை பதிவு செய்ய, அலைந்து திரிந்து செய்த ஆய்வுகளை, வனத்துறையினரிடம் காட்டிய பிறகே, தமிழக அரசின் ஒப்புதலை வாங்க முடிந்தது. படப்பிடிப்பின்போது, 25 கி.மீ., போனால் தான் கேமராவிற்கு சார்ஜ் போட முடியும். எங்களுக்கு உதவியாக காணி மக்கள் இருந்தனர். ஒரு முறை ஆந்தையை தேடி போகும்போது, எதிரில் குட்டி போட்டிருந்த புலியை பார்த்தோம். குட்டி புலியை கேமரா மின்ன வரவேற்றோம். அது அப்படியே இருந்தது தான் ஆச்சர்யம். இரவு படுக்கச் சென்ற குகையில், விடியும்போது தான் தெரிந்தது எங்களுடன் படுத்திருந்தது ராஜ நாகம்'' என தனது "த்ரில்' கலந்த அனுபவங்களை சொல்கிறார் மோகன்ராம்.

வரிவிலக்கு தராத அரசு:
அகத்திய மலையில் உள்ள உயிரிகளை பற்றி, பதிவு செய்ய மோகன்ராமுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரி விதித்தது.எத்தனையோ கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு, வரியை ரத்து செய்யும் அரசாங்கம், இது போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிக்கு வரியை ரத்து செய்யவில்லை.இந்த படத்தை உருவாக்க, இதுவரை 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் மோகன்ராம். ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு மட்டும் தான், இந்த படத்தை கொடுக்கவேண்டும் என, சொல்லி அவரிடம் அரசு சார்பில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.இந்த படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தி ஒளிபரப்பினால்தான், இந்த படம் எடுத்ததற்கான நோக்கமே நிறைவேறும். இல்லையென்றால், மக்களுக்கு இந்த அரிய மலை பற்றிய தகவல்கள் கிடைக்காமலே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. "வனத்தையும், உயிரினங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மக்களுக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தில் உள்ள உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு சுற்றுச்சூழலே காரணமாக அமையும். இது மனிதன் மட்டும் வாழ்றதுக்கான இடம் இல்லை,'' என எச்சரிக்கும் மோகனுக்கு, 2007 ல் நடந்த ஓபன் பிரைன் சர்ஜரி காரணமாக, மாடிப்படி ஏறவே தடை விதித்திருக்கிறார், மருத்துவர். ஆனாலும், சுற்றுச்சூழல் மேல் உள்ள தீராத ஆசையால் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார், இந்த இயற்கையை விரும்பும் மனிதர்.



ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மனம் வருந்தித் திருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்! எனவே, இவ்வளவு பாதுகாப்பு தேவைதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தேக்கடியில் குடும்பத்துடன் ப.சிதம்பரம் ஓய்வு

First Published : 02 Oct 2011 01:06:56 AM IST


படகு சவாரி செய்வதற்காக தேக்கடி படகுத் துறைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
கம்பம், அக். 1: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக, கேரள மாநிலம் தேக்கடிக்கு சனிக்கிழமை வந்தார்.
௧௭ +  ௧௬ + ௫ + ௧0  = ௪௨???? கணக்கு உதைக்கிறதே! ஏப்பிரலில் கூட்டப்படும் ௧0 நாள்களில்   வேலைநாள்கள் எத்தனை? செய்தியில் தவறு எங்கே நேர்ந்தது? கல்வித்துறை அறிவிப்பிலா? செய்தி எழுதப்படும் பொழுதா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


பள்ளிகளுக்கு 42 வேலைநாள்கள் அதிகரிப்பு

First Published : 02 Oct 2011 01:42:18 AM IST


சென்னை, அக்.1: தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 10 நாள்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நிறைவடைந்தது.பள்ளிகளின் வேலை நாள்களை அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டு காலாண்டுத் தேர்வு விடுமுறை 5 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 42 வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வழக்கமாக, காலாண்டுத் தேர்வு வரை 40 சதவீதப் பாடங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு சமச்சீர் வழக்குகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதுவரை 20 சதவீதப் பாடங்களே முடிக்கப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள பாடங்களை முழுவதுமாக முடிக்கும் வகையில் பள்ளிகளுக்கு வேலைநாள்களை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான திட்டம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.மாதத்துக்கு இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்துவதன் மூலம் 17 வேலை நாள்களும், பள்ளிகளின் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரிப்பதன் மூலம் 16 வேலை நாள்களும், காலாண்டுத் தேர்வு விடுமுறையைக் குறைப்பதன் மூலம் 5 வேலை நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஏப்ரல் 18-ம் தேதிக்குப் பதில் இந்தக் கல்வியாண்டில் ஏப்ரல் 28-ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்படும். இதன்மூலம் 10 வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 வேலை நாள்கள் அதிகரிக்கப்படுகின்றன.மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு முழுவீச்சில் அமல்செய்யப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.60 வேலை நாள்கள் இழப்பு: சமச்சீர் புத்தகங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்தக் கல்வியாண்டில் பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு அறிவித்தது. சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தமும் செய்யப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சமச்சீர் கல்வி தொடர்பான நிபுணர் குழு, வழக்குகள் போன்றவற்றால் ஆகஸ்ட் 18 வரை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 60 வேலை நாள்கள் இழக்கப்பட்டன.ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட பாடங்களைக் கொண்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வு சனிக்கிழமையோடு நிறைவடைந்தது.விடுமுறை குறைப்பு: வேலை நாள்கள் இழப்பை ஈடுகட்டும் வகையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை இந்த ஆண்டு 5 நாள்களாகக் குறைக்கப்பட்டது. வழக்கமாக, காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு 10 நாள்கள் விடுமுறை விடப்படும்.இந்த ஆண்டு 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையோடு (செப்.27) தேர்வுகள் நிறைவடைந்தன. 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (அக்.3) அந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.9 முதல் 12 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் சனிக்கிழமை நிறைவடைந்தன. 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை (அக்.7) அவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.சிறப்பு வகுப்புகள்: பொதுத் தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான பாடங்களை விரைந்து முடிக்கும் வகையில் அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.35 நிமிடங்கள் அதிகரிப்பு: பள்ளி வேலை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது காலாண்டு விடுமுறைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. அதன்படி, காலை நேரத்தில் கூடுதலாக 5 நிமிடமும், பிற்பகல் நேரத்தில் கூடுதலாக 30 நிமிடங்களும் பள்ளிகள் செயல்படும்.

மாக்கவி பாரதி விருது அறிவிப்பு

மகாகவி பாரதி விருது அறிவிப்பு

First Published : 01 Oct 2011 03:02:27 AM IST


சென்னை, செப்.30: சிறந்த நூல்களுக்கான மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் 2011-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மகாகவி பாரதி விருதுக் குழுவின் தலைவர் இளங்கோ சேனாவரையன் வெளியிட்ட அறிவிப்பு:கோவை மகாகவி பாரதியார் அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்களுக்கான மகாகவி பாரதியார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருது பாரதிபுத்திரன் பாலுசாமி எழுதிய, "அர்ச்சுனன் தபசு' என்னும் நூலுக்கும், உல. பாலசுப்பிரமணியம் பதிப்பித்த "தமிழ் இசை இலக்கண வரலாறு', "தமிழ் இசை இலக்கிய வரலாறு' ஆகிய இரு தொகுதிகளுக்கும், யுவன் சந்திரசேகரன் எழுதிய "யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்' என்னும் நூலுக்கும் வழங்கப்படுகிறது.

E-file system introduced: காகிதக் கோப்புகள் இனி இல்லை; அரசுத் துறைகளில் மின்-கோப்பு முறை அறிமுகம

அரசிற்கு மின்னஞ்சலில் அனுப்பினால் எந்த நடவடிக்கையும் இருக்காது. முதலில் அதை மாற்றுங்கள். மின்னஞ்சலின்மீது உடனடிநடவடிக்கை இருக்குமெனில் அரசிற்கு வரும் தாள்களும் மிகவும் குறையுமன்றோ! நீதி மன்றங்களிலும் பதிவு  அஞ்சலுக்கான ஒப்புகை அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்வதுபோல்மின்னஞ்சலில் அனுப்பியதற்கான சான்றையும் ஆவணமாகக் கருத ஆணை பிறப்பிக்கட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
காகித கோப்புகள் இனி இல்லை; அரசுத் துறைகளில் இ-கோப்பு முறை அறிமுகம்

First Published : 02 Oct 2011 02:59:01 AM IST


சென்னை, அக்.1 : அரசுத் துறைகளில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் காகிதங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இ-கோப்பு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் அமல்படுத்தப்படுகிறது.தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கோப்புகள் முக்கியமாகும். அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கோப்புகள் வழியே நடைபெறும். அரசு வெளியிடும் முக்கிய உத்தரவுகள் என்றாலும் மக்கள் தொடர்பான பிரச்னைகளானாலும் அனைத்தும் கோப்புகள் வழியே தீர்க்கப்படும். தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் 32-க்கும் அதிகமான துறைகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் பயன்படுத்தப்படும் துறையாக விளங்குவது வருவாய்த் துறையாகும்.பணிகளின் போது கோப்புகளின் முக்கிய பக்கங்களோ அல்லது அந்தக் கோப்புகளோ காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும், ஒரு கோப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அந்த அலுவலகத்தைச் சார்ந்தவர்களே கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இந்தப் பிரச்னைகளைப் போக்க கோப்புகளை கம்ப்யூட்டர் வழியே உருவாக்கும் புதிய முயற்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை இறங்கியுள்ளது.இ-கோப்பு முறை: இ-கோப்பு முறைப்படி தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பயனர் பெயர் (யூஸர் நேம்), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) ஆகியன வழங்கப்படும்.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது பயனர் பெயர் மூலமாக உள்ளே சென்று கோப்புகளை தயாரித்து அதை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பி விடலாம். கோப்புகளைத் தயார் செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைக் கம்ப்யூட்டர் வழியே சரி செய்வார். இதன்மூலம், ஒரு இடத்தில் இருந்து கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அலுவலக உதவியாளர்கள் அலைவது தவிர்க்கப்படும். கோப்புகளின் ரகசியம் காக்கப்படுவதற்கும் வழி ஏற்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அனைத்துத் துறைகளுக்கும் அமல்: தகவல் தொழில்நுட்பத் துறையில் சோதனை அடிப்படையில் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த இ-கோப்பு முறையின் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற அரசுத் துறைகளுக்கும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் புதிய முறை வெற்றி பெற்றால், காகிதத்தாலான கோப்புகள் தாறுமாறாகப் போடப்படுவதும், அவை தீயால் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். கோப்புகளும் விரைவில் பைசல் செய்யப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.