water dispute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
water dispute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 நவம்பர், 2012

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது

 
அப்படியானால் ஆட்சியில் இருக்க முடியாது என மத்திய அரசு சொல்லுமா?
 
பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்."நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை.கர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, "மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்.
 

அணைகள் கட்டுப்பாட்டு அறைகளைப்பூட்டுவோம் - இந்தியா சிதையப் போகிறதா?

பெங்களூரு:""மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.

தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம், கர்நாடகாவில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள, விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்துவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து முடிவு செய்ய, காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்குப் பின், "தமிழகத்துக்கு வரும், 30ம் தேதி வரை, 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இதையறிந்த, கர்நாடகா மாண்டியா விவசாயிகள், மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், தங்கள் போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர், மாதே கவுடா கூறியதாவது:கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவே இல்லை. 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் மற்றும் கரும்பு பயிரிட தேவையான தண்ணீர், கர்நாடக அணைகளில் இல்லை. அதனால், சில பகுதிகளில், நெல், கரும்புக்கு பதிலாக, தினை விதைக்கப்பட்டுள்ளது.

மேலும், மைசூரு, பெங்களூரு நகரங்களுக்கு, குடி தண்ணீர் சப்ளை குறையும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடிதம் எழுத உள்ளேன்.காவிரி நதி நீர் அடிப்படை பிரச்னை பற்றி, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியைச் சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள, 28 எம்.பி.,க்களுக்கும் விவரித்து கடிதம் எழுத உள்ளேன். கர்நாடக அணைகளில் உள்ள, தண்ணீர் இருப்பை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், தமிழகத்தில் பெய்த மழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன; பலர் உயிரிழந்தனர். வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 55 தடுப்பு அணைகள் மற்றும் முக்கிய அணைகளில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியுள்ளது; பாசன கால்வாய்களும் நிரம்பியுள்ளன.இதில், உண்மை என்னவென்றால், தற்போது, அதிகமாக உள்ள தண்ணீரை, தமிழகம் கடலில் விடுகிறது.மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இங்குள்ள, கே.ஆர். எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்.இவ்வாறு மாதே கவுடா கூறினார்.

வியாழன், 11 அக்டோபர், 2012

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

First Published : 11 October 2012 04:43 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்து, கர்நாடக செயலர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இன்று புது தில்லியில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, புதுச்சேரி, கர்நாடக மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது.
அக்டோபர் மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவையும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையும் நிராகரித்துள்ளது கர்நாடக அரசு.