google லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
google லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மே, 2012

சூலை 9- ஆம் நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



சூலை 9- ஆம்  நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



வாஷிங்டன், மே.28: கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக இணையதள குறுக்கீடுகளைத் தடுக்க அரசு கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை எஃப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜூலை 9ஜம் தேதி மூடப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எஃப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவந்தும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வியாழன், 3 மே, 2012

மின்னஞ்சலை மொழிமாற்றம் செய்ய கூகுளில் வசதி

கூகுளின் மொழி பெயர்ப்பு  மிக மிக மோசமாக உள்ளது.  எடுத்துக்காட்டு ல் The five birds, viz., vallūṟu, āntai, kākam, kōḻi, mayil என்பதற்கான மொழி பெயர்ப்பு > ஐந்து பறவைகள், அதாவது., Vallūṟu, துறவியான ஒருவர், kākam, தி கோலன்ஸ், மயிலஎன உள்ளது. எனவே, தமிழ் மொழி பெயர்ப்பைச் செம்மை செய்து விட்டு அதன் பின்னர் மின்னஞ்சல் மொழி மாற்று வசதியை அளிப்பதே சிறந்தது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

மின்னஞ்சலை மொழிமாற்றம் செய்ய ஜி மெயிலில் வசதி

First Published : 03 May 2012 01:04:06 AM IST


ஹைதராபாத், மே 2: இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்தவசதியை கூகுள் நிறுவனத்தின் சேவையான ஜிமெயில் வழங்க இருக்கிறது.  ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் "டிரான்ஸலேட்' என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் "டிரான்ஸலேட்' சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.  இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.  முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் "லேப்ஸ்' பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.