internet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
internet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மே, 2012

சூலை 9- ஆம் நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



சூலை 9- ஆம்  நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



வாஷிங்டன், மே.28: கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக இணையதள குறுக்கீடுகளைத் தடுக்க அரசு கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை எஃப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜூலை 9ஜம் தேதி மூடப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எஃப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவந்தும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சனி, 31 மார்ச், 2012

Conspiracy to cripple the Internet worldwide on Saturday: உலகம் முழுதும் சனிக்கிழமையன்று இணையத்தளத்தை முடக்க சதி:

உலகம் முழுதும் சனிக்கிழமையன்று இணையத் தளத்தை முடக்க சதி:

திரு
பதிவு செய்த நாள் : 31/03/2012


உலகம் முழுதும் சனிக்கிழமையன்று இணையதளத்தை முடக்க சதி: இன்டர்போல் எச்சரிக்கை
 -   தினமணி    First Published : 30 Mar 2012 10:32:08 PM IST
புது தில்லி, மார்ச் 30: உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை சனிக்கிழமை முடக்க சமூக விரோதிகள் (சைபர் கிரிமினல்) சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் – சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டார்.  “ஆபரேஷன் அன்மாஸ்க்’ என்ற பெயரில் அவர் ஆற்றிய உரை:இணையதளங்களில் “அனானிமஸ்’ (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.யார், எவர் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், “”ஆப்பரேஷன் பிளாக் அவுட்” என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அவர்.
 


வெள்ளி, 7 அக்டோபர், 2011

history of the internet: இணையத்தின் வரலாறு

நீங்கள் இணையதில் வலம் வருபவரா? அறியுங்கள் இணையத்தின் வரலாறு

1957ல் USSR “Sputnik” என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப்போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET) இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்பட்ட கால பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும். 
இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. இணையம் பல பரிமாணங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.
 
1969ல் இரு கணனிகளுக்கிடையில் “Log-in” என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.

1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்கழகங்களை இணைத்தனர்.

1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. UK ஆண்டு ஸிறி ஐ சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.

1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருத்துக்கோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன. 

(TCP/IP) 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.

1976இல் முதலாவது மின் அஞ்சல் e-mail பிரித்தா¡னிய மகாராணியினால் அனுப்பப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவார்.

1982 முதல் முதலாக “internet” சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.) என்ற குறியீடு இணைக்க தொடங்கப்பட்ட வருடம்.

1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொடங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.

1985 AOL, .com, .edu, .gov உதயம்
1986 .net அறிமுகம்
1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.

1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.

1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம் Tim Berners-Lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் www. ஐயும் நிறுவினார்.

1990ல் world.std.com தனது dial-up சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான இணைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது கணக்கிடப்பட்டது.

1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு “www” நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.
1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1993 இணைய வானொலி, இணையத்தள பேசுமொழி பரிமாற்றி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு சீosaiணீ உதயம்.

1994 இணையம் பிறந்து 25வருடம் பூர்த்தி கொண்டாட்டம், அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar mozilla வருகை, இணைய வர்த்தகத்தில் அழியா புகழ்பெற்ற e-bay (இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, Mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.

1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி, இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki,Alexa என்பவற்றின் வருகை tv.com விற்கப்பட்டது ($15,000) இணைய உகலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம், Business.com விலைபோனது ($150,000) இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் $ ஒரு மில்லியன்) செய்தனர்.

1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப் பெரிய விலைக்கும் ( $4.2 பில்லியன்கள். மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் Alta vista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.

1999 இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் “Blog” என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $ 250 மில்லியன்களை கொடுத்தது.

2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து ஹிiசீலீ warnலீr ஐ சொந்தமாக்கியது.
2001மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன் (Virus of the year). biz,info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipலீனீia பிறந்ததும் இந்த ஆண்டில்தான்.

2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியன்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.

2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune அறிமுகமானது இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol- microsoft தீர்ப்பானது. AOL இற்கு $ 750 மில்லியன் நஷ்டஈடாக கொடுத்ததுடன் Netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.

2004 கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய் $ 117 பில்லியங்களையும் தாண்டியது.

2005 இணைய உலகின் பெயர்பெற்ற Video தளம் youtube உருவானது.
2006 Google தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து youtube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலாக இணையதளங்கள் வலம் வந்தன.

2007 மிகவும் அண்மையில் (30th September)எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,244,449,601ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது
You might also like:

திங்கள், 3 அக்டோபர், 2011

everest peak view through net: இணையத்தில் ஒளிபரப்பாகும் இமயமலை உச்சி

இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகும் எவரெஸ்ட் சிகரம்
காத்மாண்டு, அக் 2-
 
எவரெஸ்ட் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். இது. இமயமலையில் உள்ளது. பனி படர்ந்த இந்த சிகரத்தின் இயற்கை எழில் நேபாளத்தில் இருந்து இன்டர்நெட்டில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
அதற்காக இமயமலையில் 5675 மீட்டர் உயரத்தில் வெப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இது சூரியசக்தியில் இயங்கும் தானியங்கி காமிராவாகும். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எவரெஸ்ட் சிகரத்தின் இயற்கை எழிலை இன்டர்நெட்டில் கண்டுகளிக்கலாம்.
 
மைனஸ் 30 டிகிரி தட்பவெப்ப நிலையில் இமயமலையின் அருகே இருந்து இது ஒளிபரப்பப்படுகிறது.

திங்கள், 12 செப்டம்பர், 2011

thamizh internet in cellphone: உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில்  தெரிய… www.m.opera.com போகவும். download opera mini 5.1 (English India) என்ற இணைய உலாவிக்கான (browser) மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini  என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள்   உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.
Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.
அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும்போது மட்டும் கொஞ்சம்   நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆப்ரா ப்ரவுசர் இணைய தளம் திறக்கப்பட்டு, பிரவுசர் அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும்.
accept கொடுத்து தொடருங்கள்.
தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு பிரசர் செட்டிங்கில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆப்ரா பிரவுசரின் அட்ரஸ் பார் போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறகு… தவறில்லாமல்… opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும்.
அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை  விட்டு, வெளியேறவும்.
தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.
எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள்.
அவ்வளவுதான்!
நோக்கியா, சோனி எரிக்சன் தயாரிப்பு கைப்பேசிகளில் சோதித்துப் பார்த்தபோது சரியாகவே இயங்குகிறது.
- மனிதன் ( foryouths@beyouths.com )
மீனகம் தளத்தினை செல்பேசியில் காண: http://meenakam.com/?mobile என்று தட்டச்சு செய்யவும்..
Popularity: 11% [?]
Short URL: http://meenakam.com/newsnet/?p=4069

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இணையதளத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது

 

First Published : 24 Jul 2011 02:05:51 AM IST


பெய்ஜிங், ஜூலை 23: பொதுவாக வறுமை காரணமாக தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழலில் மற்றவர்களுக்கு குழந்தைகளை விற்பவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக தங்களது மூன்று குழந்தைகளையும் விற்றுள்ளனர் சீனாவைச் சேர்ந்த பெற்றோர். இவர்களை போலீஸôர் கைது செய்துள்ளார்.  மத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது, உணவு விடுதிகளுக்குச் சென்று விரும்பியதை உண்பது போன்றவற்றுக்கு செலவிட்டுள்ளனர்.  விற்ற குழந்தைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு இணையதள மையத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதில் லியிங் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முயன்றபோது அதற்கு லோங்வாங்கின் தாய் அனுமதிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவ்விருவரும் குழந்தையை பெற்றோரிடம் விட்டுவிட்டு கிராமத்திலிருந்து 30கி.மீ. தொலைவில் உள்ள இணையதள மையத்துக்கு சென்றுவிடுவராம். அங்கிருந்து லோங்வாங்கின் தாய் இவர்களிருவரையும் வீட்டிற்கு இழுத்துவருவாராம். இதனிடையே 2009-ம் ஆண்டில் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. வேலை ஏதும் இல்லாத நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.  இந்நிலையில் பெண் குழந்தையை 3,000 யுவானுக்கு விற்றுள்ளனர். இந்தப் பணத்தை செலவிட்ட சிறிது நாள்களிலேயே மூத்த மகனை 30 ஆயிரம் யுவானுக்கு விற்க ஒரு இடைத்தரகரை அணுகியுள்ளனர். அடுத்து பிறந்த குழந்தையை 7 ஆயிரம் யுவானுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸôர் இவர்களை கைது செய்தனர்.  

வியாழன், 9 செப்டம்பர், 2010

தமிழ் இணையப் பயிலரங்கம்


பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

>> வியாழன், 9 செப்டெம்ப்ர், 2010

திருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.

தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.

ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு - 9443851775

வியாழன், 25 மார்ச், 2010

இணையதளத்தில் சீரழிக்கப்படும் தமிழ்



சென்னை, ​​ மார்ச் 24:​ இணையதளத்தில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்களும்,​​ பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்றைய நவீன உலகில் இணையதளம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.​ எதில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனடியாக எல்லோரும் இணையதளத்தையே நாடுகின்றனர்.தொடக்க காலத்தில் இணையத்தில் ஆங்கிலம் மட்டுமே இருந்தது.​ தமிழ் உள்பட பிற மொழிகளை இணையத்தில் காண்பது அரிதாகவே இருந்தது.​ இப்போது தமிழ் உள்பட எந்த மொழியிலும் எழுதுவதற்கும்,​​ படிப்பதற்கும் புதிது புதிதாக மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் தமிழில் வரத் தொடங்கியுள்ளது.​ அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட இணையம் மூலம் தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.தமிழில் ஏராளமான இணையதளங்கள் உள்ளன.​ தினமும் பல தளங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன.​ அரசுத் துறைகள்,​​ நிறுவனங்கள்,​​ அரசியல் கட்சிகள்,​​ அமைப்புகள் மட்டுமல்லாது பல தனி நபர்களும் தங்களை இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.சிற்றிதழ்கள் மூலம் தங்களை மெல்ல மெல்ல எழுத்தாளர்களாக வளர்த்துக் கொண்டவர்கள் இன்று இணையதளம் மூலம் வாசகர்களை வலைவீசி பிடித்து வருகின்றனர்.​ எஸ்.​ ராமகிருஷ்ணன்,​​ ஜெயமோகன்,​​ சாரு நிவேதிதா,​​ மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் இணையதளங்கள் பிரபலமாக உள்ளன.இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இணையத்தில் ஒரு தகவலைப் பெற விரும்பினால் அனைவரும் கூகுள் தேடு பொறியை நாடுகின்றனர்.​ அதன் மூலம் தேவையான தகவல்களை பெறுகின்றனர்.​ ஆனால் கூகுள் தேடு பொறியில் ஏதாவது தமிழ் எழுத்தை தட்டினால் அது பட்டியலிடும் செய்திகள் 90 சதவீதம் ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன.அம்மா -​ மகன்,​​ அப்பா -​ மகள் போன்ற வார்த்தைகளை இட்டு தேடினால் கூட ஆபாசக் கதைகளே வருகின்றன.​ அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் ஆபாசக் கதைகள் நிறைந்துள்ளன என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஆபாசக் கதைகள் இருந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.​ அப்பா -​ மகள் போன்ற தலைப்புகளில் கூட ஆபாசக் கதைகள் இருப்பதால் அதனைத் தடுக்கவும் வாய்ப்பில்லை.​ இது போன்ற கதைகளை படிப்பதால் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஒருவித மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.எனவே இதுபோன்ற விஷயங்களையும் சைபர் கிரைம் போலீஸôர் கண்காணிக்க வேண்டும்.​ அதுபோல தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் தனி மனித தாக்குதல்களிலும்,​​ மதங்களை இழிவுப்படுத்தி எழுதியும் வருகின்றன.​ பல நேரங்களில் இவர்கள் எழுத்துக்கள் மூலம் மோதி வருகின்றனர்.​ இதனால் சமூக அமைதி குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சைபர் கிரைம் போலீஸôர் இணையத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துக்கள்

இணையதளங்களில் தமிழின் சிறப்பைக் குறைப்பனவும் மறைப்பனவும் ஆகிய செய்திகளை வேண்டுமென்றே பதிந்து பரப்பியும் வருகின்றனர். தமிழன்பர்களைவிடத் தமிழ்ப் பகைவர்களே மிகுதியாகக் கையாளுகின்றனர். ஒவ்வொரு தமிழன்பரும் இணையதளத்தைக்கையாளத் தெரிந்து கொண்டு தமிழ் நலச் செய்திகளைப் படிக்கவும் பதியவும் செய்தால் மட்டுமே விடிவு பிறக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *