debit card லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
debit card லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 நவம்பர், 2012

கடன் / சேமிப்பு அட்டையில் பொருட்களை வாங்கும் போது கவனியுங்கள்

கடன் /  சேமிப்பு அட்டையில் பொருட்களை வாங்கும் போது கவனியுங்கள்

First Published : 29 November 2012 12:21 PM IST
கிரடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, காசாளரிடம் உங்கள் கார்டைக் கொடுத்துவிட்டு அதனை கவனமாகப் பாருங்கள் என்கிறார்கள் காவல்துறையினர்.
டெல்லியில், போலியான கிரடிட் கார்டை தயாரித்து அதன் மூலம் பல கோடி ரூபாய்களை சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த கும்பலின் செயல்பாடு குறித்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரி, மிகப் பெரிய கடைகளில் பணியாற்றும் காசாளர்களோடு இவர்கள் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு ஸ்கிம்மர் என்ற கருவியை அவர்களுக்கு கொடுக்கின்றனர்.
ஒரு கிரடிட் கார்டை காசாளர் வாங்கியதும், கிரடிட் கார்ட் கருவியில் ஒரு முறை தேய்த்து விட்டு, இந்த ஸ்கிம்மர் கருவியில் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் ஒரு முறை தேய்த்துவிடுவார். அப்போது ஸ்கிம்மர் கருவி, அந்த கார்டின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அந்த தகவல்களைக் கொண்டு அதேப்போன்ற போலியான கிரடிட் கார்டை இந்த கும்பல் தயாரித்து அதனைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய்களை சுருட்டியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
எனவே எப்போதும் கிரடிட் கார்டை காசாளரிடம் கொடுத்துவிட்டு அங்கே இங்கே வேடிக்கை பார்க்காமல், நமது கார்டை அவர் எத்தனை முறை எந்த கருவில் தேய்க்கிறார் என்பதை சரி பார்த்து, உடனடியாக அதனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 1 ஜூன், 2010

டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம்: விரைவில் அமலாகும்

புது தில்லி, மே 30: வங்கி டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.÷அதேபோல ரூ.1.25 லட்சம் வரை டெபிட் கார்ட் மூலம் கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.÷இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணியாற்றும் நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு ஓட வேண்டியுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக ஜூன் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.÷மேலும் ரூ.1.25 லட்சம் வரை கடைகளில் டெபிட் அட்டைகள் மூலம் ஷாப்பிங்கும் வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளலாம்.÷இந்த அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுக்கும் வசதி ஜூன் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
கருத்துக்கள்

கடன் அட்டையில் மிகுதியாகப் பணம் எடுக்கும் வாய்ப்பிருப்பினும் சேமிப்பு அட்டையில் இருப்பில் பணம் இருந்தும் எடுக்க முடியாத இன்னல் நீங்குகிறது. பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2010 3:06:00 AM

While it may be good for customers allowing them with higher limits for purchases and cash withdrawals from ATM by Debit Cards - debit card assumes a significant importance from the angle of safety and protection. Otherwise, if DC gets lost, the customer run a risk of his card being used by unscrupulous eliements unless there is protection given by way of pw before useing DC at commerical places. Banker stand to gain by lesser disbursement activities in counter and can reordine manpower in bank.

By veeram
5/31/2010 11:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்