திங்கள், 18 ஜூலை, 2011

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து எடுத்துத் தண்டித்துப் புறக்கணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியல் உருவாக்கி முதல்நாடாகச் சிங்களர் ஆளும் இலங்கையைச் சேர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

First Published : 17 Jul 2011 01:11:59 PM IST


கொழும்பு, ஜூலை.17: ஐக்கிய நாடுகள் சபையின் களங்கத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பபு சபை மற்றும் நடவடிக்கைக்குழு என்பன இலங்கையை இந்த பட்டியலில் இணைத்திருந்தன.சிறுவர்களை படைகளில் இணைத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாகவே இந்த பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்காக உறைவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்தார்.விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறுவர் படையினர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் பிள்ளையான் தரப்பும் தமது சிறுவர் படையை கலைத்து அவர்களை குடுமபங்களுடன் இணைத்துள்ளது.எனவே இலங்கையை களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று கோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக