[TamilNet, Friday, 09 March 2012, 09:55 GMT] Organizers of an international conference at Manonmaniam Sundaranar University in Thirunelvely, Tamil Nadu, decided to escort out Ms Jeeva Niriella of the Colombo University law faculty through the side door, when barging in protestors accusing Sri Lanka of genocide demanded Jeeva to leave India. The afternoon session of the 3-day conference on Thursday was disrupted to the disbelief and shock of the organisers, reported Times of India on Friday. During the morning session, Ms. Niriella was eulogising ‘women empowerment’ in Sri Lanka, citing Srimao Bandaranayake, world’s first woman prime minister and the current chief justice who is a woman. She was silent to a question about large-scale crimes committed on women in the island.
Members of Naam Tamizhar Iyakkam, May 17 Movement, Sri Lankan Tamils Protection Federation, as well as MDMK cadres, participated in the protest.
"Jeeva Niriella was visibly shocked by the sudden development. We were also taken aback. Since we thought that the safety and security of the delegate was important, we took her out of the venue through another exit. We then told the protesters that she was sent and that she would not participate in any of the sessions for the rest of the conference," Times of India cited a faculty member from the MS University.
In an orchestrated way Sri Lanka sends abroad its academics, politicians, artists and agents of other walks for an image-building exercise, and some foreign institutions and individuals interested in making inroads into Sri Lanka provide space for these exercises, activists in Tamil Nadu said.
Tamil Nadu chief minister Ms. Jeyalalithaa recently wrote to the prime minister in New Delhi to discourage the frequent visits of Sri Lankan delegations to Tamil Nadu.
The diplomatic missions and immigration desks of New Delhi Establishment stringently vet Eezham Tamil academics visiting India.
ஒக்டோபர் 20, 21, 22ம் நாட்களில் உலகத் தமிழர் மாநாடு அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடத்தப்பட்டது. ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் வருகை தந்தனர். பெருந்திரளான அவுஸ்திரேலியத் தமிழர்கள் மூன்று நாட் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களின் இறைமை, சுய நிர்ணய உரிமை, போர்க் குற்ற விடயங்கள் தொடர்பான தலைப்புக்களின் கீழ் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த விடயங்கள் தொடர்பான நிபுணத்துவ அறிவும் அனுபவமும் உள்ள சட்டவாளர்கள், பேராசிரியர்கள் தமது பெறுமதிமிக்க கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக் கொடூரங்கள் தொடர்பான விழிப்புணர்வு அவுஸ்திரேலிய அரசு மட்டத்தில் ஏற்பட்டுள்ளது. சமஷ்டிப் பொலிஸ் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதால் தமிழ் மக்களின் நம்பிக்கை வலுத்துள்ளது. மேற்கூறிய மாநாடு இந்தப் பின்னனியில் நடப்பதால் அதற்குப் பாரிய முக்கியத்துவம் காணப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் மக்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசினார். இராணுவ ஆட்சியில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களைப் பற்றி எடுத்துச் கூறினார்
கனடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி கனடா அரசு தமிழர்கள் தொடர்பாகக் காட்டும் கரிசனைக்கு கனடிய தமிழர்களின் அரசுடனான நெருக்கமும் அரசை தமிழர் சார்பில் செயற்பட வைக்கும் திறமையும் முக்கிய காரணம் என்று சுட்டிக் காட்டினார்.
அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் தலைவர் டாக்டர் இராஜேந்திரன் அவர்கள் மிகவும் பயனுள்ள பேருரையை நடத்திப் பேராளர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்களை ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, போர் குற்ற விசாரணை, கடினவாழ்வின் பிடியில் அகப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் என்ற தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்படலாம்.
அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிஸ் நடத்தும் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைக்கு ஜெனிவா நகரில் இயங்கும் சர்வதேச நிபுணர்கள் அமைப்பு வழங்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வருகை தந்தோர் எழுப்பிய வினாக்களுக்கு பேராளர்கள் சிரமம் பாரது விடை பகிர்ந்தனர். இது மூன்று நாள் மாநாட்டின் சிறப்பம்சமாக அமைந்தது. ஒக்ரோபர் மாத இறுதி நாட்களில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பேர்த் நகரில் ஒன்றுகூடிப் பேச இருப்பதால் சிட்னி மாநாடு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.
தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.
மதுரை, மார்ச் 22: தமிழில் படித்தவர்களுக்கே அரசு அலுவலகங்களில் வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.மதுரை, யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தின் வெள்ளி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் "மாணவர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரை:இன்றைக்கு தமிழ் மற்றும் தமிழ் உணர்வின் நிலை என்பது மிகவும் கவலை கொள்ளச் செய்வதாக உள்ளது.சமுதாயத்தில் நிலை பிறழ்ந்த செயல்களை, தவறான செய்திகளை, நடைமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், எது நடந்தாலும் பரவாயில்லை என்று வீணாக இருக்கின்றோமே, ஏன் இந்த கையறு நிலை என்று நான் வருத்தப்படுவதுண்டு.எந்த ஒரு சமுதாயமும் சுய சிந்தனை இல்லாததாகிவிட்டால், தவறான செய்திகள், தவறான நிகழ்வுகள், வழிமுறைகள் காணப்படும்போது அதுபற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டால், அதுதான் அந்த சமுதாயத்துக்கு ஏற்படுகின்ற மிகப் பெரிய ஆபத்து.பேராபத்து எதுவென்றால் கவலைப்படாமல் இருப்பது. தவறு செய்தால் கூட தவறில்லை. ஆனால், தவறு செய்கிறோம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் பெரும் தவறாகும்.நாம் தமிழைப் படித்தால் வாழ்ந்து விட முடியுமா?, தமிழ் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கின்ற ஒரு அவல நிலை தமிழருக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டுவிட்டதே என்று நினைக்கும்போதும், இதைப் பற்றி கவலையின்றி இருக்கிறோமே என்று நினைக்கும்போதும் உண்மையிலேயே மனம் வேதனைப்படுகிறது.தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட மொழி இருந்தது. அதனால் தமிழ் அழிந்ததா, இல்லை தமிழ் இலக்கியங்கள் குறைந்திருந்ததா? சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் வரவில்லையா?1,100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோதும் தமிழ் அழியவில்லை. 800 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள் படையெடுப்பு ஏற்பட்டது. அதன் பின் மராத்தியர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதும், தமிழ் பாதிக்கப்படவில்லை.ஆனால், வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேய ஆட்சி இருந்தது. நம்முடைய பேச்சு, உடை, நடை, பாவனை, உணவுப் பழக்கம் என அத்தனையும் மேற்கத்திய கலாசாரமாக மாறிவிட்டதே ஏன்?இந்தியாவுக்குள் ஆங்கிலேயர் நுழைந்த போது அவர்கள் போட்ட முதல் சட்டமே ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை என்பதுதான்.நாம் என்ன செய்திருக்க வேண்டும்? நாட்டின் விடுதலைக்குப் பிறகு அத்தனை மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்றல்லவா சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், நமது ஆட்சியாளர்களுக்கு அது பற்றிய சிந்தனை இல்லை. அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.கடந்த 30 ஆண்டுகளாக நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை சமுதாயச் சிந்தனை இன்றி வியாபாரச் சிந்தனையை மட்டுமே கொண்டுள்ளன. சமுதாயத்தின் பிரச்னைகளை பிரதிபலிப்பதுதான் பத்திரிகைகளின் பணி.தேவையில்லாத செய்திகளையும், ஆபாசமான படங்களையும் கொண்டு பத்திரிகைகள் வெளிவருமானால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமையாகும் என்றார்.பின்னர், சமூக மேம்பாட்டுக்கு இதழ்களின் பங்கு குறித்து பல்வேறு மாணவர்களின் கேள்விகளுக்கு "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் பதில் அளித்தார்.
கருத்துக்கள்
காலங்காலமாக நாட்டுப் பற்றாளர்கள் வேண்டுவதைத் தினமணி ஆசிரியர் வலியுறுத்தியுள்ளதற்குப் பாராட்டுகள். அவர் அரசிடம் நெருக்கமாக உள்ளதால் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்ததற்காகவாவது தமிழ் வழி பயின்றவர்களுக்கும் தமிழைப் பயின்றவர்களுக்கும் வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசை அறிவிக்கச் செய்ய முயல வேண்டும். தமிழுக்காகப் பல போராட்டங்களை நடத்திய திமுக ஆட்சியே தமிழைப் புறக்கணித்தால் வேறுயார்தான் தமிழை அரியணையில் ஏற்றுவார்கள்? செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் மாநாட்டுக்கு முன்னதாக மிக விரைவில் இதற்கான சட்டம் இயற்ற அரசிடம் வற்புறுத்தி வெற்றி காண வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி தமிழினக் காப்பு முதலியவற்றில் கருத்து செலுத்தும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
[படங்கள்] கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை…
உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் முடிந்த கசப்பான அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு கசப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. 2009-ம் ஆண்டு தமிழினத்தின் இருண்டு ஆண்டு என எடுத்துக்கொள்ளலாம்.
கசப்பான சம்பவங்கள் என்று எதை குறிப்பிடுகிறேன் என்றால், இன்று நாம் கூடியிருக்கும் தமிழகத்துக்கு மிக அருகில் ஒரு தேசத்தில், தமிழினத்தின தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும். தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன்.
இனவாத வெறிப்பிடித்த சிங்கள அரசின் கொடுமைகளை எதிர்த்து போராடியது தான் அந்த பிரதேசத்தின் வாழ்ந்த தமிழன் செய்த ஒரே தவறு. தமிழன் என்றாலே அடியும், உதையும் வாங்கிக்கொண்டு அடிமையாகவே கிடக்க வேண்டும் என்று சிலர் நினைத்துவிட்ட காரணத்தால் தான்.
தமிழனத்திற்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் தட்டிக்கேட்ட ஒரு போராட்ட இயக்கத்தின் தேசியவாத போராட்டம் நசுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்ட இயக்கத்தின் கொள்கை போராட்டத்தை நசுக்கியதோடு மட்டுமல்லாமல், அந்த இயக்கம் எந்த மக்களுக்கு காவலரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு எதிரான பல்வேறான நடடவடிக்கைகள் இன்று அனைத்து விதமான முறையிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நான் இப்போது குறிப்பிட்ட அனைத்தும் தென் தமிழகத்தில் இருந்து சில கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழீழத்தை பற்றியதாகும். நான் குறிப்பிட்ட தேசிய இனம், ஈழத்தமிழினம். ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்து, உலகத் தமிழரையெல்லாம் தங்களது தேசியப் போராட்டத்தால் தலைநிமிர வைத்த அந்த போராட்ட இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.
உலக வல்லரசுகள் பலவும் சேர்ந்து தமிழீழ தேசத்திற்கான அந்த போராட்டத்தை ஒடுக்கியதற்கு பிறகு, எந்த மக்களுக்கு அந்த விடுதலைப்புலிகள் இயக்கம் அரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான துன்பங்களைக் கண்டு இன்று உலகத் தமிழினம் வெதும்பி போயுள்ளது. அந்த வெதும்பலின் வெளிப்பாடே இன்றைய மாநாடு.
நமது சொந்தங்கள் அங்கே சொலிலடங்கா துன்பங்களை அனுபவத்துகொண்டிருக்கையில் இந்த மாநாடு இங்கே நடக்கிறது. ஆனால், இன்றைய மாநாட்டின் நோக்கமானது, வெறும் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையை மட்டும் விவாதிக்கும் மாநாடு இல்லாமல், உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பை பற்றி விவாதிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாகும்.
தமிழகம் தாய்த்தமிழகம் என்று உலகத்தமிழர்கள் எல்லாம் எப்போதும் போற்றும் இந்த தமிழகத்தால் கூட அந்த ஈழத்தமிழர்களின் துன்பத்தை துடைக்க முடியவில்லை என்பது தான் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.
ஆனால் சில அதிகார பதுமைகளுக்கு பணிந்து, ஈழத்தில் தமிழர்கள் அனைவரும் நலமாக வாழ்கின்றனர் என்று சான்றிதழ் கொடுத்ததுதான் மிச்சம். தமிழீழம் என்ற கேட்கக்கூடாது, தமிழன் என்பவன் தலைநிமிர்ந்து நடக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தமிழீழ போராட்டத்தை அடக்கி, ஒடுக்கிய கொடுங்கோலனுக்கு சால்வை சாத்தியதுதான் மிச்சம்.
தமிழ் இளைஞர்களின் உதிரத்தை கொடுத்து இந்துமகா சமுதத்திரத்தின் தாகத்தை தீருங்கள், தமிழ் யுவதிகளின் கற்பை களவாடி உங்கள் தாகத்தைத் தீர்த்துகொள்ளுங்கள் என்று சிங்கள ராணுவப்படை வீரர்களிடம் வசனம் பேசிய ஒரு சிங்கள இனவெறியனோடு கைகுலுக்கி விருந்துண்டதுதான் மிச்சம். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியென்பது போல இன்றுவரை வக்காலத்தும் வாங்கப்படுகிறது. இதுதான் உலகத்தமிழர்களின் தலைமையென்றால் இந்த பூமிப்பந்தில் இருந்து தமிழினமே அழிந்தாலும் ஆச்சரியமில்லை.
இந்தியாவில் ஆண்டுதோறும் பாரதிய பிரவாசி திவாஸ் என்ற மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டின் நோக்கம் என்னவெனில், புலம்பெயர் இந்தியர்களின் ஒன்றுகூடல் மாநாடாக அமைவதாகும். இந்த மாநாடு கடந்த ஆண்டு தமிழகத்தின் சென்னையில் நடைபெற்றது. அப்போது மலேசியாவின் மாற்று அரசியல்சக்தியாக உருவெடுத்துள்ள மக்கள் கூட்டணியின் பேராளர்களுக்கு தலைமை தாங்கி நான் வந்திருந்தேன்.
அப்போது ஈழத்தில் பல்வேறான கொடுமைகளும் அரங்கேறிக்கொண்டிருந்த காலம். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றி கரிசனையோடு பேசினார். ஆனால், சில கிலோ மீட்டருக்கு அப்பால் அரங்கேறிக்கொண்டிருந்த இன அழிப்புப்படலத்தை பற்றி ஒரு வார்த்தைக்கூட பாரத பிரதமர் உதிர்க்கவில்லை.
எந்த பாரதத்தில் இந்த தமிழகம் ஒரு அங்கமோ, அந்த பாரதம் தமிழினத்தின் வேதனைகளை புரிந்துகொள்ளவில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாரதத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிக்கு உலகத் தமிழினத்தின் அழுகுரல் கேட்கவில்லை. அந்த மாநாட்டில் எனக்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தில் அதைத்தொட்டு நான் கேள்விஎழுப்பினேன்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு புதுதில்லியில் நடந்த பரவாசி மாநாட்டுக்கு எனக்கும் அதிகாரபூர்வ அழைப்புவிடுக்கப்பட்டது. ஆடம்பர தங்கும் விடுதியில் அறை, முதல் வகுப்பு விமான டிக்கெட் ஆகியவையும் அந்த அழைப்பில் உள்ளடக்கப்பட்டது. இருந்தபோதும் அந்த மாநாட்டை புறக்கணித்தேன். என்னோடு சேர்ந்து மக்கள் கூட்டணையை சேர்ந்த சிலரும் புறக்கணித்தனர்.
நாங்கள் இந்த மாநாட்டை புறக்கணித்ததற்கு முழு காரணம், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு போரில் இந்திய அரசின் பங்கும், அங்கே நடந்த கொலைவெறி படலத்தை தட்டிக்கேட்காத இந்திய பேரசின் இயலாமையுமே ஆகும். மேற்குறிப்பிட்ட காரணத்தை இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சர் வயலார் ரவிக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.
அதேதினத்தில் இன்றைய மாநாட்டுக்கு ஏற்பாட்டளாரான டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தேன். இம் மாநாட்டில் பங்கேற்க முழு சம்மதத்தையும் தெரிவித்தேன். அதையடுத்து மறுநாள் மலேசிய தமிழ் நாளிதழ்களில் முதல்பக்கத்தில் செய்தி வெளியானது. அதில் கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது.
எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் ஈழத்தமிழ் மக்களின் சொல்லொன்னா துன்பங்களுக்கு காரணமாக அமைந்துவிட்ட இந்திய அரசின் ஏற்பாட்டிலாலான மானங்கெட்ட இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டான் என்றம், ஆகவே மானமுள்ள மலேசிய தமிழர்கள் பிரதிநிதிகளான நாங்கள் பங்கேற்கவில்லை என்றும் குறிப்பிட்டேன். கட்டப்பொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான். பிரபாகரன் பிறந்த மண்ணில் தான் கருணாவும் பிறந்தான். இதை எதற்காக கூறுகிறேன் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்த அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தால் இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைக்கு நானும் உடந்தையாக இருந்ததாகிவிடும் என்பது எனது கருத்து. அதற்குப்பிறகு பல்வேறு செய்திகளிலும், இன்று கோவையில் நடக்கும் உலகத் தமிழர்கள் மாநாட்டில் மானமுள்ள தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளேன்.
மலேசியாவில் இருந்து 80 பேராளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் 25 பேர் பினாங்கு மாநில பேராளர்கள். தமிழ் தேசியத்தின் குரல்வலையை நெரித்துபோராட்டத்தை ஒடுக்கிய எந்தவொரு சக்திக்கும் நாம் அடிபணிந்துவிடக்கூடாது என்பது தான் மலேசிய தமிழர்களின் வேட்கையாகும்.
தமிழினத்துக்கென்று தனியொரு நாடடில்லாமல் நாம்படும் அவலங்கள் பல. இருந்தபோதும் அந்த துன்பங்கள் தனியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில் உலகளவில் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினத்தின் பாதுகாப்பு அம்சங்களை கலந்தாலோசிக்க மாநாடு ஒன்றில் நாம் இணைந்துள்ளோம்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலேசியா, சிங்கப்பூர், மவுரிசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அவரவர் வாழ்வுரிமை, மொழி ஆகியவற்றுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான விவகாரங்களையும் இம் மாநாட்டின் வழியாக விவாதிக்க வேண்டும். தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஒரு உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் முதல்படிதான் இன்றைய நமது மாநாடு. ஆகவே, வெறும் கூடிப்பேசி, கலையும் கூட்டமைக இல்லாமல், ஆக்ககரமான விவாதங்களின் வழி நமது நோக்கத்தை நாம் அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்போடு இன்றைய மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்துவைக்கின்றேன். நன்றி வணக்கம்..
மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கு முதல்வர்கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர்வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள்இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில்இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகியஇடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள்நடத்தப்படுகிறது.
சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில்இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில்கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில்பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரைநிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள்பேசுவார்கள்.
2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றிபல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத்தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும்பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில்பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர்ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர்.
நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவுதகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர்எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோசாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில்முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பலஅரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும்என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.
சென்னை:மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்குமுதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
28ம்தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவுமன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும்குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ்ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்னாட்டு தமிழுறவுமன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.
சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில்இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில்கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25-ந் தேதிமாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர்வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ்தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன்உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.
2-ம் நாளில் தமிழ்மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரைஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும்தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும்இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநிலதுணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர்.
நிறைவுவிழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதைஇ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கரஇந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்துதமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்துதரப்பட்டு உள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
மாநாட்டுக்குமுதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்இல.கணேசன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
எங்கும்தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ளவேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின்நோக்கம் என்று தெரிவித்தனர்.
உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு: மலேசியாவில் நாளை தொடக்கம்
ஆறாவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு மலேசியாவில் நாளை தொடங்கி நான்குநாட்களுக்கு (செப்., 25, 26, 27 மற்றும் 28) நடைபெறுகிறது.
இம்மாநாடு குறித்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பன்னாட்டுதமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டுவழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பைசேவியர், தேவதாஸ் ஆகியோர் கூறுகையில்,
“பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6 வதுமாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில்பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாகதமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர்வா.மு.சேதுராமன் வரவேற்பார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர்டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் இலாகா மந்திரி சூ கூன் உள்ளிட்ட முக்கியவிருந்தினர்கள் பேசுவார்கள்.
2 ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில்தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பலஇடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கானதீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில்மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல் மந்திரி ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணாபற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டுதமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபைபேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்மதேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின்இ.மெயில் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
இந்த மாநாட்டுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி, நிதித்துறை அமைச்சர்க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் உள்பட பல அரசியல்தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும்என்பதும்தான் மாநாட்டின் நோக்கம்” என்றனர்.
மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு திருவள்ளுவர் சேதுராமன்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற த்தின் மலேசியா, 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009 செப்டம்பர் 25,25,27,28,29 நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், பினாங்கு, ஈப்போ, மலாக்கா, நகர்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகத்தமிழ்மாநாட்டை முதன் முதலில் நடத்திடத் திட்டமிட்ட அருட்திரு பேராசிரியர்தனிநாயக அடிகளார் பணியாற்றிய கோலாலம்பூர் மலயாப் பலகலைக்கழகத்தில்நடைபெற்றது மாநாட்டிற்கு தனிப்பெரும் சிறப்பாகும்.மலேயாப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் வழித்ததடத்தில் பணியாற்றும் பேராசியப் பெருமக்கள்முனைவர் பேராசிரியர் குமரன், முனைவர் கிருட்டிணன், மற்றும் தமிழ்த்துறைப்பெருமக்களின் ஆதரவு மகத்தானதாகும்,
மாநாட்டின் திறப்பு விழாநிகழ்வில் மலேசியத் தமிழர்களின் விடிவெள்ளி ம.இ.க.தேசியத் தலைவர்டத்தோசிறீ சாமிவேலுவும், மலேசிய பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறையின்அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோசூன் கூன் ஆகியோரும் பங்கேற்றது பன்னாட்டுத்தமிழுறவு மன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியநிகழ்வாகும். மாநாட்டிநற்கு மலேசியாவின் பல்வேறு பகுதியிலிருந்துபன்னெடுங்காலம் தொடர்புடைய தமிழ்ப்பணி அன்பர்கள் பங்கேற்றனர்.மலேசியாவில்தமிழ்ப்பணி இதழின் வழியே மாநாடு குறித்து அறிந்து வந்தோம் எனக்குறிப்பிட்டது நம் தொண்டிண் உயர்வை உணரமுடிந்தது. மலேசிய இந்தியஇயக்கங்களின் பெருமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.மலேசியப்பத்திரிகையாளர்களான தமிழ் நேசன், மலேசியநண்பன், தமிழோசைநிருபர்கள் மாநாட்டு நிகழ்வுகளை பதிவு செய்து இதழ்களில் வெளியிட்டனர்.
தம்வாழ்நாளையேதமிழ் தமிழர்களுக்காக ஒப்புவித்த மன்றத்தின் உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோதம் வரவேற்புரையில் மாநாட்டின் நோக்கத்தையும் மாநாட்ட்டிற்காக ஒத்துழைத்த, வருகை தந்துள்ள உலகப் பேராளர்களையும் நெஞ்சம் நெகிழ வரவேற்றார்.
மிகக்குறுகிய காலத்தில் மாநாட்டின் அழைப்பு விடுத்தவுடன் தமிழ் உணர்வோடு கடந்த 5 மாநாடுகளுக்கும் ஆதரவு அளித்த தமிழகப் பெருகமக்கள் மலேசிய 6ஆம் உலகத்தமிழர் மாநாட்டிற்கு அனைத்து மனமாச்சசிரியங்களை மறந்து தமிழால் ஒன்று சேர்தமிழுக்காக ஒன்று சேர் தமிழர்க்காக ஒன்று சேர் என்ற கொள்கை வழிக்குஉரமூட்டினர். பங்கேற்ற பேராளர்கள் ஐந்து தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள்வழங்கினர். இந்திய செம்மொழி வாரியத்தின் பொறுப்பு அலுவலர் இரா.இராமசாமிஅவர்கள் பங்கேற்றது உலக மொழிகளில் அன்னை மொழியாம் தமிழ் மொழியை உலஅரங்கில்தலைநிமிரச் செய்வதாகும்.
மலேசியப் பல்கலைக்கழக சிறப்பு வாய்ந்தஐந்து அரங்குகளில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.மலேசியப் பல்கலைக் கழகத்தின்இந்தியவியல் தமிழ்த் துறைப் பேராசிரியர் களான பேராசிரியர் குமரன், முனைவர்கிருட்டிணன்,முனைவர் சவகர்லால், இலக்குவனார் திருவள்ளுவன், தொழிலதிபர்தமிழ் வள்ளல் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆய்வரங்கங்கள் நடைபெற்றது.
1.செம்மொழிகளில்தமிழின் தொன்மையும் சங்கைலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும். 2. காலந்தோறும் காலந்தோறும் காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு. 3. அன்றும் இன்றும் உலகளாவிய தமிழ்கர்களின் வாழ்வும் தாழ்வும். 4. ஈழம்உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும். 5. வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கனிணி வளர்ச்சிப் போக்குகள். ஆகியஐந்து தலைப்புகளில் ஆய்வரங்கம் நடைபெற்றது.
திருவேங்கடவன்பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சான் மனுசவல்,மனோன்மணியம்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்அழகேசன்,பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆண்டவர்,தில்லிபல்கலைக்கழக் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இந்திராணி மணியம்முனைவர் சரளாமனெவேல்,முனைவர் இலலிதா சுந்தரம்முனைவர் பேராசிரியர்அக்னிபுத்திரன்,முனைவர் வசுமதி இராசன்,மருத்துவர் இராசேசுவரி அழகேசன்போன்ற கல்வியாளர்களும் மற்றும் பெருமக்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள்வழங்கினர்
மாநாட்டின்சிறப்பாக வருகை தந்த பேராளர்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்புஇராசேந்திரசோழன் கால் பதித்த கடாரம் பகுதிக்குச் சென்றோம். தற்போது மலேசியஅரசு அப் பகுதியை அருங்காட்சியகமாக் வைத்துள்ளனர். நம் தமிழகத்தின்வரலாற்றுச் சின்னங்களான சிலைகள் நம் மக்கள் பயன்படுத்ததிய கற்பொருட்கள்அனைத்தும் உள்ளன.கடல் வழி வாணிபமும் நாடுகளையும் தன்வயப் படுத்திய சோழனின்ஆற்றல் மலைப்படையவைக்கிறது.பூசாங் பள்ளத்தாக்கின் வழியாக கடல் வழிகாடாரத்தை வென்றுள்ளான் சோழவேந்தன். கற்கோயில்களின் சுற்றுச்சுவர்கள்பாதுகாகக்ப்பட்டுவருகின்றன. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்என்ற குறிப்பும் உள்ளது. மாநாட்டிற்கு வருகைதந்த சோழன்வழித்தோன்றல்களான பெருமக்கள் அனைவரும் மலைமீது ஏறி சோழனின் ஆற்றலைக் கண்டுவியந்தனர்.ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் உணர்வாளர்கள் அப் பகுதிமுழுமையும் கண்டு பதிவுகளை நெஞ்சிலும் ஒளிப்படக் கருவியிலும் பதிவுசெய்தனர்.அங்கிருந்து தரைவழியாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் தாய்லாந்தைநாட்டை அடையலாம். இன்று தரைவழியாகச் செல்லக் கூடிய பகுதியை கடல் வழிகடந்து உலகை ஆண்ட சோழனை எண்ணுங்கால் தமிழனின் ஆற்றல் தலைவணங்கச்செய்கிறது.மலேசியா செல்லும் உலகப் பெருமக்கள் கடாரம் சென்று மண்ணைவணங்குங்கள்.
http://tamilsaral.com/news%3Fid%3D229.do
மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு
Submitted by editor on Thu, 09/24/2009 - 05:59
மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கு முதல்வர்கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 28ம் தேதி வரைஇந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின்இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழுஉறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர்செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில்இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகியஇடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள்நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்துதமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பலநாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில்பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரைநிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள்பேசுவார்கள். 2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறுதலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்படஉலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும்அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத்தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமிஉரையாற்றுவார். இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்படஉள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில்பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ.திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்துபுத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்துதமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்துதரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார். மாநாட்டுக்கு முதல்வர்கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன்உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள்நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்றுதெரிவித்தனர்.