indonesiya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
indonesiya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 செப்டம்பர், 2012

Genuine boat refugees fear for life, send SOS from Indonesia

Genuine boat refugees fear for life, send SOS from Indonesia

[TamilNet, Tuesday, 04 September 2012, 20:57 GMT]
53 Eezham Tamil boat refugees, seeking asylum in Australia but driven to Indonesia, are on a fast-unto-death protest on-board their vessel for the past four days, against the decision of the Indonesian authorities to hand them over to Sri Lanka Navy. The refugees claim that they will be persecuted, even killed, if handed over to the SL Navy. On Tuesday, they sent SOS messages to their families, relatives and journalists in the island to urge the international human rights groups to address their plight. A university student representative in Jaffna confirmed that there were genuine refugees needing international protection in the boat. The refugees heading for Christmas Island of Australia were taken to Indonesia on 28 August by that country’s navy after their boat ran out of fuel in mid sea.

After a dangerous travel on seas for 20 days, their health is steadily deteriorating over the hunger strike and casualties are feared if appropriate action is not taken, sources informed. Among the asylum seekers are 2 disabled persons, 4 women and 3 children.

In the meantime, a spokesman for the refugees in the boat has told reporters in Jaffna and Colombo through a phone conversation that they had started off from a dock near Chennai on 09 August 2012. According to his statement, the boat ran out of fuel on 19 August.

After being provided with 100 litres of fuel by friendly fishermen in the mid-sea, they were able to travel till 28 August when they again ran out of fuel, the spokesman told journalists in the island.

Following this, they were driven by the wind towards waters of Indonesia and were taken by the Indonesian navy to a port on the west coast, he added.

Hearing decision of authorities to deport them to Sri Lanka, the refugees began a fast-unto-death, on-board the vessel, claiming that they would be persecuted or killed in the island. They pleaded for 2000 litres of fuel that would suffice them to reach Christmas Island, Australia.

Separately, another group of 43 asylum seekers from the island have been detained at the Mentawai Island, 9 days after their boat's engine broke. This group too is reported to be having women and children.

Meanwhile, a message with photos from an unverified source, claiming to be ‘Friska Simamora from Mentawai, attached to GKPM church Radio Station,’ also states that there are two boats, “one that has got engine trouble and the other which has ran out of fuel”. The photos originating from this source have been provided below without verification.

Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia


Chronology:

வியாழன், 31 மே, 2012

இலங்கைத் தமிழர்கள் இந்தோனேசியாவில் உண்ணாநோன்பு

இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாவிரதம்

indonesia_refugee_004
இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு வருடகாலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை தற்போது மேற்கொண்டுள்ளனர்.
தமக்கான உரிய தீர்வினை UNHER தன்னார்வு நிறுவனம் தெரிவிக்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ள போவதாக, இந்தோனேசியா அகதிமுகாமிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாக தொடர்ந்து தமது உண்ணாவிரதத்தினை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். தமக்கான விடியலினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பெற்று தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது இந்த அபாயகரமான நிலையினை உணர்த்து, அவர்களுக்கான தீர்வினை பெற்று தரும் படி அவர்கள் கோரிக்கை தமிழ் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதன், 30 மே, 2012

புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இந்தோனேசியாவில் உண்ணா நோன்பு

இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாவிரதம்

indonesia_refugee_004
இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு வருடகாலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை தற்போது மேற்கொண்டுள்ளனர்.
தமக்கான உரிய தீர்வினை UNHER தன்னார்வு நிறுவனம் தெரிவிக்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ள போவதாக, இந்தோனேசியா அகதிமுகாமிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாக தொடர்ந்து தமது உண்ணாவிரதத்தினை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். தமக்கான விடியலினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பெற்று தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது இந்த அபாயகரமான நிலையினை உணர்த்து, அவர்களுக்கான தீர்வினை பெற்று தரும் படி அவர்கள் கோரிக்கை தமிழ் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
YouTube Preview Image

வியாழன், 14 ஜூலை, 2011

Newzeland refuses to give asylum for eexham thamizhs: இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

இந்தோனேசியாவும் நியூசிலாந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு மக்களுக்கு இணையான உரிமையும் வசதிகளு்ம் பெறும் வகையில் அடைக்கலம் தர வேண்டும். தமிழ் ஈழ அரசு அமைந்ததும் உரிய  செலவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

First Published : 13 Jul 2011 12:00:00 AM IST


மெல்போர்ன், ஜூலை 12: அடைக்கலம் கோரி நியூசிலாந்து நாட்டை நோக்கிச் சென்ற இலங்கை அகதிகளை ஏற்க அந்நாடு மறுத்துவிட்டது.இலங்கை அதிகதிகள் 88 பேர் சிறிய ரக கப்பலில் அகதிகளாக நியூசிலாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா கடற் பகுதியில் கடந்த சனிக்கிழமை அவர்கள் சென்றபோது அந்நாட்டு கடற்படையினரால் அவர்கள் வழிமறிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும் நியூசிலாந்து நாட்டை வாழ்த்தும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.இதுபற்றி இந்தோனேஷியா அதிகாரிகள் நியூசிலாந்து நாட்டுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இலங்கை அகதிகளை அந்நாடு அனுமதிக்கவில்லை, அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு வருவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த 88 அகதிகளும் எந்த நோக்கத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை என அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் ஜோநாதன் கோல்மன் தெரிவித்தார்.இதுபற்றி நியூசிலாந்து பிரதமர் ஜான் கி கூறுகையில், அகதிகள் நியூசிலாந்து நாட்டுக்கு வரும்போது அதை மிகவும் கவனமாகவே நாங்கள் கையாளுவோம். இதை நாங்கள் நியூசிலாந்து சட்டத்திட்டப்படியே அணுக முடியும். இதை நாங்கள் கடுமையாக கடைப்பிடிக்காவிட்டால், நியூசிலாந்தில் அகதிகள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். அவ்வாறு அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார் ஜான் கி.

திங்கள், 11 ஜூலை, 2011

Indonesia naval force arrested 87 eezham thamizhs: இலங்கைத் தமிழர்கள் 87 பேரைக்கைது செய்தது இந்தோனேசிய்க் கடற்படை

உயிர் பிழைப்பதற்காகத் தப்பிச் செல்பவர்களைத் தளையிடுவது மனித நேயமல்ல; அறமுமல்ல என இந்தோனேசியா உணர வேண்டும். ஈழத்தமிழர்கள் அனைவரும் சம உரிமையுடன் நல்வாழ்வு வாழும் வகையில் தன் நாட்டில் வசதிகள் செய்து தரவேண்டும். எனவே பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனே விடுவித்து வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். இந்தோனேசியா கலை பண்பாட்டுக் கூறுகளில் தமிழின் தாக்கம் மிகுதி என்பதை உணர்ந்து அதற்கான  நன்றியாகவாவது இவ்வாறு மனித நேயமும், தமிழ் நேயமும் பேண வேண்டும். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
இலங்கைத் தமிழர்கள் 87 பேரை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை

First Published : 10 Jul 2011 11:44:03 AM IST


ஜாகர்தா, ஜூலை 10- இலங்கைத் தமிழர்கள் 87 பேரை இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் தஞ்சம் கோரி நியூசிலாந்து நாட்டில் நுழைய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதி வழியிலேயே அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் பயணம் செய்த "அலிசியா" என்ற கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

இந்தோனேசியாவில் 6 மாதங்களாக கப்பலில் சிறை: தமிழக முதல்வரின் தயவை எதிர்நோக்கும் 252 இலங்கைத் தமிழர்கள்



சென்னை, ஏப்.1: இந்தோனேசியாவில் கடந்த 6 மாதங்களாகக் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும் என்று 252 இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையைச் சேர்ந்த 254 இலங்கைத் தமிழர்கள், கப்பல் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் நடுக்கடலில் இந்தோனேசியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தாங்கள் பயணம் செய்த கப்பலிலேயே கடந்த 6 மாதங்களாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சத்தான உணவு, சுகாதார வசதி, மருத்துவ வசதி எதுவும் கிடைக்காததால் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொற்று நோய் தாக்குதலால் ஒருவர் கப்பலிலேயே உயிரிழந்து விட்டார். மற்றவர்களின் உடல் நிலையும் மிக மோசமாக உள்ளது. இது குறித்து கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான வேந்தன் என்பவர், வியாழக்கிழமை தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி: இந்தக் கப்பலில் உள்ள அனைவரும் இலங்கையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். நான் அங்குள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினேன். மற்றவர்களும் அதிக வருவாய் தரும் வேலைகள் மற்றும் தொழில்களைச் செய்து வந்தனர். இந்நிலையில் 2008}ல் இருந்து இலங்கையில் போர் உக்கிரம் அடைந்ததை அடுத்து, இனியும் அங்கு உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எனவே, அங்கிருந்து தப்பித்து, குடும்பம் குடும்பமாக வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியா வந்து சேர்ந்தோம். மலேசியாவில் ஒன்று சேர்ந்த நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டோம். ஏனெனில், அகதிகளாகச் செல்லும் நாங்கள் அமைதியாக வாழவும், எங்கள் திறமைக்கேற்ப வருவாய் ஈட்டவும், குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கவும் மொத்தத்தில் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழக் கூடிய சூழல் ஆஸ்திரேலியாவில் உள்ளதால், அந்த நாட்டைத் தேர்வு செய்தோம். இந்தோனேசியாவைச் சேர்ந்த தனியார் கப்பல் மூலம் ஆஸ்திரேலியா செல்ல ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதற்காக ஒவ்வொருவரும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாகக் கொடுத்தோம். மலேசியாவிலிருந்து 31 பெண்கள், 30 குழந்தைகள் உள்பட 254 பேர் 1.10.2009 அன்று ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டோம். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எங்களை 10.10.2009 நள்ளிரவு இந்தோனேசியக் கடற்படையினர் கைது செய்தனர். இந்தோனேசிய கடற்பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததால் கைது செய்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். போர்ச் சூழலில் இருந்து தப்பி வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தும், எங்களை அகதிகளாக அங்கீகரிக்க முன்வராத இந்தோனேசிய அரசு, பயங்கரவாதிகளைப் போல நடத்தி வருகிறது.அந்நாட்டில் உள்ள "மெராக்' துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலேயே நாங்கள் கடந்த 6 மாதங்களாகச் சிறை வைக்கப்பட்டுள்ளோம். தரமற்ற மோசமான உணவு வழங்கப்படுகிறது. சுகாதார வசதி இல்லை. மருத்துவ உதவி கிடைக்கவில்லை. இதனால் தொற்று நோய் பரவியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டின் ஜேக்கப் என்ற 29 வயது இளைஞர் 22.2.2010 அன்று உயிரிழந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இலங்கைக்குத் திரும்பிவிட்டார். எங்களுக்கு உணவு, மருந்துகள் வழங்க பல தொண்டு நிறுவனங்கள் தயாராக இருந்தும் இந்தோனேசிய அரசு யாரையும் அனுமதிக்க மறுக்கிறது. ஊடகங்களையும் சந்திக்க முடியவில்லை. இதற்கிடையே அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அதிகாரிகள் எங்களைச் சந்தித்து, அகதிகளுக்கான சான்றிதழை அளிக்க வேண்டும். எனினும், ஐ.நா. அதிகாரிகளை அனுமதிக்க இந்தோனேசியா மறுக்கிறது. எங்கள் கப்பலில் தமிழ்ப் போராளிகள் இருக்கலாம் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. எனவே, இலங்கை அரசின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படவே, இந்தோனேசிய அரசு விரும்புகிறது.இப்பிரச்னையில் உடனடியாக சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். குறிப்பாக எங்களை விடுவிக்குமாறு இந்திய அரசு மூலம், இந்தோனேசிய அரசை வற்புறுத்த முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும் என்றார் வேந்தன்.
கருத்துக்கள்

கலைஞர் பரிவு காட்டுவதாக இருந்தால் 6 திங்களாக உறங்கிக் கொ்ண்டிருக்க மாட்டாரே! எனவே, நேரடியாக மத்திய அரசை அணுகலாம்.ஈழப் படுகொலைகளுக்குக் காரணமான இந்தியம் உதவுமா என்ற எண்ணம் வரலாம். சிங்களத்துடன் முறுக்கிக் கொண்டுள்ளதைக் காட்டுவதற்காக உதவலாம். எனினும் உலக மனித நேயர்களின் ஒன்று பட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே இவர்களின் வாழ்வு அமையும். எனவே, தமிழ் உணர்வாளரக்ளே! மனித நேயர்களே! கொலைகாரக் கூட்டணியை நம்பாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து இவர்களைக் காப்பாற்றுங்கள்!அறியாமையால் நம் நாட்டவரை நம்பி அழிய இருக்கும் இவர்களை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டெடு்ங்கள்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/2/2010 4:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 16 அக்டோபர், 2009

அடைக்கலம் அளிக்க ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்கள் வேண்டுகோள்



மெல்போர்ன், அக். 15: இலங்கையிலிருந்து படகில் தப்பிச் சென்ற போது இந்தோனேசிய கடற்படையிடம் சிக்கிக் கொண்ட தமிழர்கள், தங்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெரிய படகு ஒன்றில், 250-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தீவில் தஞ்சம் அடைவதற்காக சென்று கொண்டிருந்தனர். ஆனால், அந்தப் படகைத் தடுத்து நிறுத்துமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூத் கேட்டுக் கொண்டதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினர் அவர்களைத் தடுத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இலங்கையிலிருந்து தப்பி வந்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைவதற்காக பல மாதங்களாகப் பல இடங்களில் சுற்றித் திரிந்தனர். மலேசிய வனப் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்தனர். இந்தத் தமிழர்களைச் சந்திப்பதற்கு செய்தியாளர்கள் சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தப் படகில் உள்ளதைவிட மிக மோசமான நிலையில், இலங்கையில் உள்ள முகாம்களில் தமிழர்கள் வசித்து வருகின்றனர் என, தப்பி வந்த தமிழர்களின் சார்பில் அலெக்ஸ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கையில் இனப் பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்றும், தங்களது எதிர்காலத்தை உத்தேசித்து அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். "இலங்கைக்கு மீண்டும் சென்றால் நிச்சயமாக சாக நேரிடும்; இந்தோனேசியாவிலும் நீண்ட காலம் தங்கியிருக்க முடியாது. எனவே, ஆஸ்திரேலியா போன்ற மூன்றாவது உலக நாடுகள்தான் எங்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும்' என்றார் அலெக்ஸ். "இலங்கையில் எங்களால் வசிக்க முடியாது. எங்களை உங்கள் நாட்டில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என ஆஸ்திரேலியாவுக்கு இந்தக் குழுவினருடன் வந்துள்ள 9 வயதான சிறுமி பிருந்தா வேண்டுகோள் விடுத்தார். தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் படகைத் தகர்த்து தற்கொலை செய்து கொள்வோம் என இந்தத் தமிழர்கள் முன்னதாக எச்சரித்தனர்.
கருத்துக்கள்

குமரிக்கண்டம் இருந்த பொழுது தமிழ் நிலமாக இருந்த ஆசுதிரேலியா உடனே இக் கோரிக்கையை ஏற்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 14 அக்டோபர், 2009

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2009, 04:52.45 PM GMT +05:30 ]

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்) தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கப்பலில் இருந்து தகவல் தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அலெக்ஸ் என்பவர், தாம் யார் எனத் தெரிந்தால் இலங்கை அதிகாரிகள் தமது மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தூம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே பயணித்தோம். இந்தநிலையில் இந்தோனேசிய கடற்படையினர் தம்மை கப்பலில் இருந்து கீழே இறக்கினால் தாம் கப்பலை வெடிக்கவைப்போம். என்றும், கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

(Photo AP)