வியாழன், 18 பிப்ரவரி, 2010

நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு: ராமதாஸ் எதிர்ப்பு



சென்னை, பிப்.17- பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு திட்டம் என்பது ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானது.

கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பொது நுழைவுத் தேர்வு என்னும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் திட்டம் கூட்டாட்சி முறையை மீறுவதாக உள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டு வரப்படும் இந்த சட்ட முன்வடிவை கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேரளம் போன்ற மாநிலங்களை ஒன்றிணைத்து போராட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கட்சி அரசியல் நோக்கத்தில் இல்லாமல் உள்ளபடியே தமிழ் மக்கள் நலன கருதி பிற தேசிய மக்களுடன் இணைந்து நாடு தழுவிய கல்வி முறையை எதிர்த்து மத்திய அரசு இதனைக் கைவிடச் செய்ய வேண்டும். இல்லையேல் அரசியல் அல்லது அரசு பேரத்திற்கான எதிர்ப்பு என எண்ணி பதவி எலும்புத் துண்டைப் போட்டு மத்திய அரசு வாயை அடைத்துவிடும். உண்மையான கூட்டாட்சி நம் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/18/2010 3:49:00 AM

untill before british period muslim community was more than 80 percent educated. Once british gouvt introduced compulsory english teaching,after 50 yrs muslim community educated level decresed to 20 percent. Till now it is going on (except in tamilnadu and kerala). so we in tamailnadu poor people and village student can be affected in near future if we face any change before prepared to be ready. Education is the only tools to any society to develop or dying. nowadays north inda and upper caste is getting jeolosy of tamil nadu's development in education, industries, etc.So we (tamil nadu) should be very careful. TN Gouvt should not loose its control in education.

By Raja
2/18/2010 1:50:00 AM

தொப்புள் கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழன் அறியத் தருவது யாதெனில்,கல்வியில் கை வைத்து பின்னர் படிப்படியாக அடி மடியில் கை வைக்கும் நிலை வந்து விடாமல் முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியில் பேதமின்றி எதிர்க் குரல் எழுப்புங்கள்! நாம் ஈழத் தமிழர்,இலங்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தோம்,இருக்கிறோம்!ஆனால் கல்வியில் நாம் தான் முன்னனியில் இருக்கிறோம்!இதன் காரணமாகவே எழுபதுகளில் கல்வியில் தரப்படுத்தல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டோம்!இதுவும் கூட ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு உந்து சக்தியானது!உங்களுக்குப் புரிய வேண்டும்,ஆரம்பத்திலேயே கல்வியில் கை வைத்தால் அது எதற்காக?தொடரும் பல்கலை அனுமதி,வேலை வாய்ப்பு என்று வாழ்க்கையே போராட்டமாகி விடும்!எமது ஆயுதம் தாங்கிய போராட்டம் வெறுமனே ஹீரோ ஆவதற்கல்ல!உரிமைக்கானது

By Yoga
2/18/2010 1:02:00 AM

ஐ.ஏ.எஸ், தேர்வுக்கு அடிப்படை கல்வி தகுதி பட்டபடிப்பு, பெரும்பாலும் பட்டபடிப்பை ஆங்கில வழியிலேயே கற்றதால் முன்பு அதிக அளவில் தேர்வுபெற்றனர். பள்ளி கல்வியில் பொதுவான பாடதிட்டம் பொதுவான ஒரே ஒரு மொழியில் இல்லாத நிலையில் தாய்மொழி வழியே கற்கும் மாணவர்கள் பாதிப்படையவே செய்யும். தவிர்க்க, இந்தி பேசும் மாணவர்களும் இந்தி அல்லாத பொதுமொழி ஆங்கிலத்திலேயே, எந்த ஒரு சூழலிலும், இருப்பது கட்டாயம். இந்தி அனுமதிக்க படுமானால,1 கட்டாயம், தாய்மொழியையும் அனுமதிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வில் குறைவானவர்கள் தேர்ச்சி பெறுவது தேர்வு தாள் திருத்துவோரே காரணம். ஆங்கிலத்தில் அதிக அலவு தேர்வு பொற்றவர்கள் திடீரென திறமை குறைந்தவர்களாகிவிட முடியாது. தமிழில் தேர்வெழுதினால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நிலை வரவேண்டும். இல்லாமல் போனதற்க்கு நமது புலமை மிக்க பேராசிரியர்களே காரணம்.

By Unmai
2/17/2010 11:54:00 PM

Tamilal என்ற பெயரில் ஏதோ பெரிய புடுங்கி போல எழுதியதாக நினைப்பா?

By Indian
2/17/2010 11:52:00 PM

ramadoss solvadu migaum sari.nallavttukku atharau enhirundu vanthalum erpom

By appu
2/17/2010 11:27:00 PM

Ramadas you are correct. Go head.

By jerome
2/17/2010 10:54:00 PM

I agree with Gopal's comment.

By Manidhan
2/17/2010 9:23:00 PM

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எதிர்கட்சிகாரன பார்த்து கேட்கிரேன் ஆட்சி நடத்துறியா இல்ல அராஜகம் நடத்துரியா என்னய்யா தப்பு பன்னுனான் எங்க ராமதாஸு கோபாலபுரத்துல குனியவச்சு என்னா அடி போன மாசம் போயஸ்கார்டன்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு அவருக்கு வலி தெறியாம இருக்க பின்னால கிரீஸ் தடவி விட்டு அடுச்சாங்க அந்த நாகரீகம் கூட தெறியாது உனக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா அடி....

By வண்டு முருகன் - ப.ம.க
2/17/2010 9:00:00 PM

பாகம் -1 தமிழ்மக்களுக்கு வனக்கம்! சமீபத்தில் ஒரு நாள் நான் டெல்லியில் இருந்து இரயிலில் சென்னைக்கு முதல் வகுப்பு பெட்டியில் பயனம் செய்தேன் நான் இருந்த கம்பார்ட்மெண்ட் நிரம்பியிருந்தது அப்போது எதிர் இருக்கையில் இரண்டு மனிதர்கள் வெள்ளை வேஷ்ட்டி சட்டை அனிந்த தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் நான் அவர்களை கவனித்தேன் அப்போது அதில் ஒருவர் மற்றொருவரிடம் நீங்கள் எங்கே போறீங்க...? மற்றொருவர் நான் சென்னைக்கு போகிறேன், ஓ அப்படியா நானும் சென்னைக்குத்தான் போறேன் ஆமாம் சென்னயில எங்க போறீங்க..? பக்கத்துலதான் விழுப்புரத்துக்கு போறேன், ஓ அப்படியா நானும் விழுப்புரம்தான் போறேன், விழுப்புரத்துல எங்க போறீங்க..?

By Tamilan
2/17/2010 8:59:00 PM

பாகம்-2 பக்கத்துலதான் தைலாபுரம் போறேன் அப்படியா நானும் தைலாபுரம்தான் போறேன், தைலபுரம் எதுக்கு போறீங்க..? ராமதாஸு வீட்டுக்கு போறேன், அட நானும் ராமதாஸு வீட்டுக்குத்தான் போறேன், ஆமா ராமதாஸ் வீட்டுக்கு ஏன் போறீங்க, அட அந்த ராமதாஸே நான் தாண்டா அது சரி என் வீட்டுக்கு நீ ஏன் வர்ற..? ஏன்னா நான் உங்க மகன் அன்புமனிப்பா இதை கேட்டுக்கொண்டிருந்த பயனிகள் (என்னை தவிர) அடப்பாவிங்களான்னு ஓடுற ரயில்ல இருந்து குதிச்சு தற்கொலை பன்னிகிட்டாங்க இவனுங்களுக்கு பொழுது போகலைன்னா இப்படித்தான் பேசி பேசி மக்களையெல்லாம் கொல்லுவானுங்க அதனால தமிழர்கள் கவனமாக இருக்கவும் இவனுங்க பேச்சுக்கு தமிழர்கள் யாரும் செவிசாய்க்கவேண்டாம்

By Tamilan
2/17/2010 8:58:00 PM

அய்யா ராமதாஸ் அவர்களே நான் உங்கள் கட்சியின் தீவிரமானதொண்டன் உங்களுக்கு ஒரு வின்னப்பமுங்க எங்க வீட்டு டாய்லட் பைப்புல தன்னி வர மாட்டேங்குது நீங்க தான் அதை எப்படியாவது ஒரு அரிக்கை விட்டு தன்னி வர வைக்கனும்ங்க ஒங்களுக்கு புன்னியமா போகும் செய்வீங்களா

By முனியாண்டி
2/17/2010 8:48:00 PM

Gopal's comment is very valid.

By Karthik
2/17/2010 8:34:00 PM

மருத்துவரின் எதிர்ப்பு நிலை அரசியல் உள்நொக்கமும் அடங்கியதாக இருக்கலாம். ஆனாலும் நாடு தழுவிய பொதுத்தேர்வு என்பது தென்னிந்தியர்களுக்கு அதுவும் குறிப்பாகத் தமிழர்களுக்கு, கிராமப்புறத் தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. இது இந்தி மொழி மக்களுக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பே மிக அதிகம். முன்பு ஆங்கிலத்தில்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃஃப்.எஸ், எழுத முடியும் என்ற நிலை இருந்த காலத்தில் தென்னிந்திய மக்கள்தான் அதிகமான அளவிலும், டாப் ரேங்கிலும் தேர்வு பெற்றார்கள். பின்னர் பிராந்திய மொழிகளில் (இந்தியில்) எழுதலாம் என்ற நிலை வந்ததும் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை நிலை தலைகீழாக மாறியது. இந்தநிலை +2 கல்வியில் நாடு தழுவிய பொதுத்தேர்வு மூலம் நடக்க வாய்ப்புகள் அதிகம். நாடு தழுவிய பொதுத்தேர்வு முறை நல்ல நோக்கம். ஆனால், அதை நடைமுறைப்படுத்தி வருங்காலத்தில் ஆதாயம் பெற நினைக்கும் மக்களால் ஒருதலைப் பட்சமான குறைகளே அதிகமாக்கப்படும். ஆகவே, நாடு தழுவிய பொதுத்தேர்வு முறை இப்பொழுது நல்லதல்ல, வரவேற்கத்தக்கதல்ல‌.

By Gopal
2/17/2010 7:50:00 PM

Dr. Ramadoss statement is correct

By priya
2/17/2010 7:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக