வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 அக்டோபர், 2013

வெற்றிக்கான தேடலுக்கு முடிவு இல்லை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82338220131010012020.jpg



வெற்றிக்கான தேடலுக்கு முடிவு இல்லை!
உலகின் சிறந்த மலிவு க் கட்டண விமான சேவை செய்யும், மலேசியா ஏர்ஆசியாவின் தலைவரான, 33 வயது தமிழக இளைஞன், மிட்டு சாண்டில்யா: நான், தமிழகத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை சென்னையில் முடித்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். படிப்பு முடிந்ததும், பகுதி நேர விளம்பர மாடலாகவும், தொலைக்காட்சியிலும் வேலை செய்தேன். கைநிறைய சம்பளம் வாங்கினாலும், என் வெற்றிக்கான தேடல், அத்தோடு நின்று விடவில்லை.
செய்யும் தொழிலில் சலிப்பு ஏற்பட்டதால், தொழிற்சாலையை நிர்வகிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில், இளம் தலைமுறையினர் புதிய தொழில் துவங்க, கிடைத்த மானியத்தால் துவங்கப்பட்ட ஒரு சிறிய கம்பெனியை வளர்த்து, மூன்று ஆண்டுகளில் அதை, ஒரு சர்வதேச நிறுவனத்திற்கு, மிகப்பெரிய விலைக்கு விற்று, பெரிய லாபம் ஈட்டி தந்தேன். பின், வேறொரு சிறிய நிறுவனத்தின், 'ஜெனரல் மேனேஜர்' பொறுப்பேற்று, வர்த்தகத்தை பன்மடங்காக அதிகரிக்க வைத்ததுடன், அதன் புதிய கிளையை, மெக்சிகோ நாட்டிலும் திறந்து, நிறுவனத்தை விரிவடைய செய்தேன். மிகச் சவாலான பணிகளை, வெற்றிகரமாக செய்து காட்டி, அமெரிக்க கார்ப்பரேட் உலகத்தை, என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தேன். சிங்கப்பூரில், ஒரு சர்வதேச நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின், மனித வள மேம்பாட்டுத் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை, இளம் வயதிலேயே பெற்றேன். ஆரம்பித்த செயலை முடித்துவிட வேண்டும் என்ற வெறியும், துணிவும், என்னை மலேசியா ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் தலைவராக்கியது. விமானத் துறை பற்றிய அறிவு, எனக்கு துளியும் இல்லாததால், 'விமான சர்வீசின்' எல்லா பிரிவையும் அறிந்து கொள்ள, இரு மாதங்கள் சாதாரண ஊழியராக வேலை செய்தேன். பயணிகளுக்கு சாப்பாடு கொடுப்பது முதல், விமான தொழில்நுட்பம் வரை கற்று, உலகின் சிறந்த மலிவு கட்டண விமான சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றினேன். நான் படித்து வளர்ந்த சென்னையில், இந்தியாவிற்கான தலைமை அலுவலகம் ஆரம்பித்து, இங்கும் மலிவு கட்டண விமான சேவை ஆரம்பிக்க உள்ளேன்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81484520130929010412.jpg

விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்!
பெண்ணாக இருந்தும், பயத்தை விட்டுவிட்டு, விடாமுயற்சியுடன் உழைத்ததால், அடுபணி(பேக்கரி) தொழிலில் வெற்றி பெற்ற, தனலட்சுமி: நான், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பாஸ்கர், நகை கடை வைத்திருக்கிறார். பொழுதுபோக்கிற்காக, அவ்வப்போது பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை, வீட்டிலேயே செய்து சாப்பிடுவதுடன், பக்கத்து வீடுகளுக்கும் தருவேன்.
கடைகளில் கிடைப்பதை விட சுவையாக இருப்பதாக, என் தயாரிப்பை பாராட்டுவர். காலம் செல்ல செல்ல, திண்டுக்கல்லின் மற்ற பெரிய நகை கடைகளுடன் போட்டியிட்டு, முன்பு போல் கணவரால் சம்பாதிக்க இயலவில்லை. அச்சமயத்தில், நமக்கு தான் பிஸ்கட், கேக் போன்றவை சுவையாக செய்ய தெரியுமே, நாம் ஏன் பேக்கரி கடை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ள பேக்கரி கடைகளுக்கு சென்று, சாதக, பாதகங்களை விசாரித்ததுடன், பயிற்சியும் பெற்றேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையில், கணவர் உதவியுடன், 15 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெ ற்று, ‘சூர்யா கேக்ஸ் அண்ட் பேக்கரி’யை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். போட்டியாளர்களை சமாளிக்க, நவீன இயந்திரங்கள், போட்டோ பிரின்டுடன், ‘பர்த் டே கேக்’ போன்ற வசதிகளை அமைத்தேன். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், இம்முறை பழையது என்றாலும், கிராமங்கள் சுற்றியுள்ள பகுதியில் இதெல்லாம் தேவைதானா என, அப்போது திட்டியவர்கள், இன்று என் வெற்றியை பாராட்டுகின்றனர். ஏனெனில், என் கடின உழைப்பால், பேக்கரி இரண்டு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிரீம் கேக்குகளில், சிறிது நேரம் காற்று பட்டாலும் சுவை மாறிவிடும். அதனால், தயாரிப்புடன், பராமரிப்பும் இத்தொழிலில் அவசியம். ஒரு பெண்ணாக தொழில் ஆரம்பிப்பது, மிகவும், ‘ரிஸ்க்’கான காரியம் தான். ஆனால், பயத்தை விட்டுவிட்டு, விடா முயற்சியுடன் உழைத்தால், நாம் நினைத்த தொழிலில் சாதித்து காட்டலாம்.  
தொடர்புக்கு: 97919 00521

சுய­தொ­ழி­லிலும் அதிகம் சம்­பா­திக்­கலாம்!
பெண்கள் விரும்பும் பேஷன் நகை­களை, சுட்ட களி­மண்ணில் அழ­காக செய்து, மாதம், 50 ஆயிரம் லாப­மீட்டும், தேன்­மொழி: நான், வேலுாரை சேர்ந்­தவள். திரு­ம­ண­மாகி சென்­னையில் வசிக்­கிறேன். எங்கள் வீட்டில் உள்ள அனை­வ­ருமே, சுய­தொழில் தான் செய்­கின்­றனர். அதனால், எனக்கும் சுய­தொழில் மீதே ஆர்வம். படிப்பு முடிந்­ததும், ‘கம்ப்­யூட்டர் எஜு­கேஷன் சென்­டரில்’ வேலை செய்தேன். அந்த அனு­ப­வத்தால், நானே, 2003ல் ஒரு கம்ப்­யூட்டர் சென்டர் ஆரம்­பித்தேன். அங்கு, ‘கம்ப்­யூட்டர் கிளாஸ்’ மட்­டு­மின்றி, ‘டியூஷன், ஸ்போக்கன் இங்­கிலீஷ்’ போன்­ற­வற்­றையும் சொல்லி தந்தேன். கலை நயத்­தோடு, வேறு ஏதேனும் கற்க, ‘பேஷன் ஜுவல்­லரி’ செய்யும் பயிற்­சிக்கு சென்றேன். பயிற்­சியில் கற்­றதை, நண்­பர்கள் மற்றும் படிக்க வரும் மாண­வர்­க­ளுக்கும் இல­வ­ச­மாக சொல்லி தந்தேன். இதனால், மற்­ற­வற்றை விட, ‘பேஷன் ஜுவல்­ல­ரி’யில் ஆர்வம் அதி­க­மா­னது. பெங்­களூரில், சுடு­மண்ணில் பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி தரு­வ­தாக அறிந்து, அங்கும் பயிற்சி பெற்றேன். பின், சென்னை, அரும்­பாக்­கத்தில், ‘நியூ டிரெண்ட்ஸ் அக­டமி‘ எனும், ஜுவல்­லரி மேக்கிங் பயிற்சி மையத்தை ஆரம்­பித்தேன். இப்­ப­யிற்சி வகுப்­பிற்கு, பெண்கள் மத்­தியில் நல்ல வர­வேற்பு கிடைத்­ததால், ‘ஓவிஸ் கிரி­யேஷன்’ என்ற வெப்சைட் ஆரம்­பித்தேன். இதன் மூலம், பல வெளியூர், ‘ஆர்­டர்’­களை எளி­தாக பிடிக்க முடிந்­தது. கிடைக்கும் ஆர்­டரில் கேட்­கப்­பட்ட நகை­களை, என்­னிடம் பயிற்சி பெற்று வரு­ப­வர்கள் மூலமே செய்­கிறேன். இதனால், குறைந்த நாட்­களில் அதிக ஆர்­டர்கள் எடுத்­தாலும், சரி­யான நேரத்தில், ‘டெலி­வரி’ செய்ய முடி­வ­துடன், பயிற்சி பெறு­ப­வர்­களும் செய்­மு­றை­யோடு எளிதில் கற்­கின்­றனர். ஏதேனும் ஒரு தனியார் நிறு­வ­னத்தில் வேலைக்கு போயி­ருந்தால், மாதம், 10 ஆயி­ரமோ, 15 ஆயிரமோ சம்­பா­தித்­து­இருப்பேன். ஆனால், சுடு­மண்ணால் ஆன, ‘பேஷன் ஜுவல்­லரி மேக்­கிங்’கில், மாதம், 50 ஆயிரம் சம்­பா­திக்­கிறேன். எனவே, சுய­தொ­ழி­லிலும் அதிகம் சம்­பா­திக்­கலாம். தொடர்­புக்கு: 98413 61192

வியாழன், 20 ஜூன், 2013

தோற்றுப் போகவில்லை!


தோற்றுப் போகவில்லை!

ஐந்து ரூபாய் சம்பளத்திலிருந்து, 30 கோடி வருமானம் ஈட்டுமளவிற்கு முன்னேறிய கிராமத்து பெண், ஜோதி ரெட்டி: நான், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்தின், மிக பின்தங்கிய கிராமத்தில் பிறந்தேன். பெற்றோருக்கு, ஐந்து பெண் குழந்தைகள். குடும்பத்தின் வறுமை காரணமாக, என் தந்தையே, நான் அனாதை எனச் சொல்லி, ஒரு இலவச காப்பகத்தில், 10 வயதிலேயே சேர்த்து படிக்க வைத்தார். மூன்று வேளை உணவு கிடைத்தாலும், இரவு தூங்கும் போது, அம்மா நினைவு வந்து அழுவேன். நன்கு படித்து, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். வறுமையால் மேற்கொண்டு படிக்க முடியாமல், 18 வயதிலேயே திருமணம் நடந்தது. பொறுப்பில்லாத கணவரும், வதைக்கும் மாமியாரும், என் வாழ்க்கையை சீரழித்தனர். என்னை போல், பிள்ளைகளும் பசியால் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில், 5 ரூபாய் சம்பளத்திற்கு விவசாய வேலை செய்து வந்தேன். நேரு யுவ கேந்திரா என்ற அமைப்பு, எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு, எழுத படிக்க சொல்லித் தர, 150 ரூபாய் சம்பளத்தில், என்னை ஆசிரியராக நியமித்தது. ஆசிரியர் பணியின் போதே, தபால் மூலம் பட்ட மேற்படிப்பும், கம்ப்யூட்டர் தொடர்பான கல்வியும் படித்தேன். வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்ற பயத்தால், குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்க வைத்து, மாத ஊதியத்தை சிறுக சிறுக சேர்த்து, றவினர் மூலம் அமெரிக்கா சென்றேன். "என் தலையெழுத்தை, நான் தான் மாற்றியமைக்க வேண்டும். வேறு யாரும், எனக்காக கவலைப்பட போவதில்லை' என, புரிந்தது. பணம் சம்பாதிக்க, பல கடைகளில் வேலை செய்தேன். அமெரிக்க கம்பெனி ஒன்றில் நிரந்தர வேலை கிடைக்க, அங்கேயே தங்க முயற்சி பட த்து கஷ்டப்பட்டு, "ஒர்க் பர்மிட் விசா' பெற்றதால், விசா பெறும் வழிமுறைகள் நன்கு தெரியும். அதனால், "கீ சாப்ட்வேர் சொல்யூஷன்' என்ற, விசா வாங்கி தரும், குட்டி நிறுவனத்தை ஆரம்பித்தேன். வாழ்க்கையில் தோற்று போகாமல், கடின ழைப்பால், ஆண்டிற்கு, 30 கோடி சம்பாதிக்கும் அளவிற்கு முன்னேறி, இன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக
இருக்கிறேன்.

சனி, 4 மே, 2013

மத்தியப் பணியாளர் தேர்வு - கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி

வெளியானது  மத்தியப் பணியார் தேர்வு முடிவு கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி
கோவை:சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(460 ரேங்க்), அபிநயநிஷாந்தினி(717) டில்லியை சேர்ந்த மனோஜ்(771), சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(343), ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (789), உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
* வெற்றியின் ரகசியம்!சாதனை மாணவ,மாணவியர் கூறியதாவது:தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி மையத்தில், பேராசிரியர் கனகராஜ் அளித்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கடினமாக உழைத்தோம். தினமும் 10 மணி நேரம் வரை படிப்பதை வழக்கமாக கொண்டோம். "டிவி', "சினிமா' பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டோம். தினமும் செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கினோம். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பக்கபலமாக அமைந்தது. கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி கொண்டு செயல்பட்டால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை உயர்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு, இம்மையத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டு முதல், நேர்காணல் பயிற்சியை, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்குகிறோம். கோவை மாநகராட்சிக்கும், அரசு கலை கல்லூரிக்கும், பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பில் நன்றி,'' என்றார்.
"விருப்பத்துடன் படித்ததால்ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது'
மதுரை:""சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,'' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.மதுரை மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தங்கராஜ் குணாளன். மனைவி வசந்தி. இவர்களது மகன் பிரபுசங்கர், 29. இவர், டி.வி.எஸ்.,லட்சுமி மெட்ரிக் பள்ளியில், 1 முதல், 12ம் வகுப்பு வரை படித்தார். 2000ல் பிளஸ் 2 தேர்வில், 1157 மதிப்பெண்கள் பெற்றார்.பின், மதுரை மருத்துவக்கல்லூரியில், 2005ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., நிறுவனத்தில், எம்.டி., பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்க தலைவராக திகழ்ந்தார்.தற்போது, சென்னை செட்டிநாடு மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும், டாக்டர் நவீனா என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. நவீனா, நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்., படிக்கிறார்.இரண்டாவது முறையாக, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதிய பிரபுசங்கர், அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபுசங்கர் கூறியதாவது:சிறிய வயதிலிருந்து, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆசை இருந்தது. கடந்த முறை, தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. இந்தாண்டு புவியியல், வரலாறு பாடங்களை தேர்வு செய்து படித்தேன். டிப்பதை சுமையாக கருதாமல், விருப்பத்துடன் படித்ததால், சாதிக்க முடிந்தது.சென்னை "சத்யா கோச்சிங்' சென்டரில் சர்ந்தேன். பணி காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை. தினமும், "தினமலர்' நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொண்டேன். ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றத்தை கொண்டு வருவேன்* முதலிடம் பெற்ற அருண் பேட்டி
சென்னை:""மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்,'' என, யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
தேசிய அளவில், ஆறாம் இடமும், தமிழக அளவில், முதலிடமும் பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த அருண் தம்புராஜ் கூறியதாவது:சொந்த ஊர் மதுரை; வளர்ந்தது சென்னை. மயிலாப்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்சி மருத்துவ கல்லூரியில படிக்க இடம் கிடைத்தது. திருச்சி மருத்துவ கல்லூரியிலிருந்து, சென்னை மருத்துவ கல்லூரிக்கு மாற்றலாகி வந்தேன். சென்னையில் தான் மருத்துவ படிப்பை முடித்தேன்.அப்பா, காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து, எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. மருத்துவ படிப்பு முடிந்த உடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்; ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்தது. இன்றும், ஐ.பி.எஸ்., தேர்வு தொடர்பான வழக்கு கோட்டில் உள்ளது.நன்றாக தேர்வு எழுதியும், ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்ததால், இரண்டு ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவில்லை. நண்பர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தான், மறுபடியும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில், முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோரே, என் வெற்றிக்கு காரணம். மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்.இவ்வாறு, அருண் கூறினார்.

திங்கள், 15 ஏப்ரல், 2013

வெற்றி நடைபோடும் யூலைமாத வட- அமெரிக்க மகாநாடு --- கலாநிதி இராம் சிவலிங்கம்

வெற்றி நடைபோடும் யூலைமாத 
வட- அமெரிக்க மகாநாடு
--- கலாநிதி இராம் சிவலிங்கம்

ஒற்றுமையும் எம்மவர்க்குச் சத்தியசோதனையா? என் எண்ண வேண்டிய வேளையிலே, தமிழருக்கான ஓர் மாநாட்டை வருடா வருடம் யூலை மாதத்தில் அமெரிக்காவின் மூன்று நாள் விடுமுறை நாள்களில் பிரமாண்டமான முறையில்  நடாத்தும் "பெற்னா" எனும் வட அமெரிக்கத் தமிழர் பேரவை,  இவ்வருடம் இந்த மகாநாட்டை யூலை மாதம் 5, 6 ,7 ஆம்  நாள்களில் கனடா நாட்டின் ரொறந்தோ நகரிலே நடாத்த ஏற்பாடுகள் செய்துவரும் வேளை, கரும்புலிகள் நாளான யூலை 5 இல் எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவது தப்பானது என்ற மக்களவையின தலமையிலான பதினொரு அமைப்புக்களின் நியாயமான எதிர்ப்பு உருவானது.

உலகத் தமிழரைக், குறிப்பாக வட அமெரிக்கத் தமிழரை சென்ற சில நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்திய இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாதது  என்றார்கள் சிலர். அமைதிப்பாடு என்ற சொல் எம் அகராதியில் இல்லை என்றார்கள் பிரிவினை வாதிகள்.  இவை எல்லாவற்றையும் தாண்டி ஓர் அமைதிப்பாடு வந்ததென்றால் அது எம் இனத்துக்குக் கிடைத்த வெறியாகவே நாம் கருதவேண்டும். அதைப் பெற்றுத் தந்த பெருமை எல்லாம் மக்களவை அணியினரையும், பெற்னாவையுமே சாரும்.

மகாநாட்டின் முதல் நாளான  யூலை 5 ஆம்  நாளைக் கரும்புலிகள் நாளாக, பெற்னாவால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே மண்டபத்தில்,  நடத்துவதாகவும், அதனை மக்களவை அணியினர் நடாத்துவார்கள் எனவும், யூலை 6, 7 ஆம் நாள்களில் நடைபெறும் மகாநாட்டை பெற்னா  நடாத்தும் எனவும், இந்த் மகாநாட்டிற்கு மக்களவை அணியினர் தமது ஒத்துழைப்பையும்,  ஆதரவையும், நல்குவார்கள் எனவும் எடுத்த முடிவே  இந்த அமைதிப்பாட்டின் சாராம்சமாகும். 

ஒருவர் தோற்றால்தான் மற்றவருக்கு வெற்றியென எண்ணும் காலத்தில், இருதரப்பினருக்கும் வெற்றியைத் தரும் விதத்தில் இந்த முடிவு அமைந்தது கண்டு இருசாராரையும் மெச்சுகிறேன்,  பாராட்டுகிறேன்.  பரந்த மனமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், அதிலும் மேலாகத், தமிழர் எவருமே தோற்கக்க்கூடாது என்ற பாசம் மிக்க உறவுமே இந்த இருசாராரின் வெற்றிக்கான காரணங்களாகும்.

இந்த வெற்றி நிறைந்த அமைதிப்பாடு, உலகெலாம் வாழும் எம் உறவுகளுக்கு ஓர் புத்துணர்வையும், புதிய தெம்பையும் தரவேண்டும்.  பன்னாட்டு அளவில்  எம் இனத்தின் தேவைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முயலும், ஆனால் இயலாமையால் தடுமாறி செயல் இழ்ந்து நிற்கும்,, புலம்பெயர் தலமைகளுக்கு இந்த வெற்றி  ஒரு தேர்வில்லாப் பாடமாக அமைய வேண்டும்.

கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca

திங்கள், 8 ஏப்ரல், 2013

இசுடெர்லைட்டு ஆலை : போராட்டம் வெற்றி: வைகோ

இசுடெர்லைட்டு ஆலையை அகற்ற தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெற்றி: வைகோ அறிக்கை
 
ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெற்றி: வைகோ அறிக்கை
சென்னை, ஏப். 8-

தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு அறிவித்த முழு கடை அடைப்பு பொது வேலை நிறுத்தப் போராட்டம், அம்மாநகர வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்று உள்ளது.

20,000-க்கும் மேற்பட்ட கடைகளை, வணிகர்கள் தாங்களாவே அடைத்து விட்டனர். ஒருநாள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் எவையுமே ஓடவில்லை. வீதிகள் வெறிச்சோடி விட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களின் உடல் நலனை, தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழ்வை, உயிரை, பாதுகாத்துக் கொள்வதற்கு ஸ்டெர்லைட் நாசகார ஆலையை, அகற்றியே தீர வேண்டும் என்று, மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.

நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நச்சுமயமாக்கி, போபால் விஷவாயு அழிவைப் போல், உயிர் குடிக்கும் எமனாக அமைந்து உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை, மக்களின் தர்ம யுத்தம் தொடரும். அரசியல் கட்சிகள், சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, பொதுமக்கள் போர்க் கோலம் பூண்டு விட்டனர்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை, ஸ்டெர்லைட்டை அகற்றும் போர்க்களத்தில் பங்கு ஏற்கின்ற உன்னதமான நாளும் வரத்தான் போகிறது. மக்கள் சக்திதான், நீதியைத் தீர்மானிக்கும் என்பதை, கடந்த காலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எரிமலையாகச் சீறிய தீராதி தீரர்கள் உலவிய வீர பூமிதான் தூத்துக்குடி என்பதை, மீண்டும் அம்மக்கள் நிரூபித்து விட்டனர்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பயிற்சியினால்வெற்றி நிச்சயம்!





சொல்கிறார்கள்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012,00:00 IST


பயிற்சியினால்வெற்றி நிச்சயம்!

மாநில அளவில் வெற்றி பெற்ற, சைக்கிளிங் வீரர், சுரேந்திர பாபு: என் வயது, 20. என் தந்தை, மாட்டு வண்டியில் மணல் ஒட்டி வந்தவர். தாய் செல்வராணி, கட்டடத் தொழிலாளி.முதன் முதலில் நான் ருசித்த பெரிய வெற்றி, கோவையில், 2009ல் நடைபெற்ற, மாநில அளவிலான, "சைக்கிள் ரேஸ்' போட்டி தான். அந்த போட்டிக்காக, 18 ஆயிரம் ரூபாய் சைக்கிளை, என் தந்தை இளங்கோ வாங்கித் தந்தார்.அதற்கு முன், 6,000 ரூபாய் சைக்கிளை பயன்படுத்தி, கடும் பயிற்சி öŒ#து, மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றேன்.என் ஆர்வத்தைக் கண்டு, குடும்ப கஷ்டத்திலும், 85 ஆயிரம் ரூபாய்க்கு, "கொலங்கோ' ரேஸ் சைக்கிள் வாங்கித் தந்தார் என் தந்தை. அதை, சிறப்பாகப் பயன்படுத்தி, தொடர்ந்து பயிற்சிகள் பல மேற்கொண்டேன். அதற்கு, கை மேல் பலன் கிடைத்தது.

நாகர்கோவிலில், 2011லும், கோவையில், 2012லும் நடந்த போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்திலேயே முதலாவதாக, வெற்றி பெற்றேன்.அகில இந்திய அளவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 70 கி.மீ., சைக்கிளிங் போட்டி, 2011ல், மகாராஷ்டிராவில் நடந்தது. 50 பேர் கலந்து கொண்டதில், எட்டாவது இடமே மிஞ்சியது.ஏன், என்னால் வெற்றி பெற இயலவில்லை என, சிந்திக்கும் போது, சைக்கிள் தரத்தில், மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது. அந்த போட்டியில் வென்றவர்கள், மிகக் குறைந்த, எடை கொண்ட, ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கார்பன் சைக்கிள் வைத்திருந்தனர். அது, 6 கிலோ எடையும், அதி வேகமாகவும் செல்லக் கூடியது; மிகக் குறைந்த உராய்வு தன்மையும் கொண்டது.ஆனால், என்னுடைய கொலங்கோ சைக்கிள், 13 கிலோ எடையும், அதிக உராய்வுத் தன்மையும் கொண்டது. புதுடில்லியில், ஜனவரி, 2013ல் நடக்கும், தேசிய சைக்கிள் போட்டியில், கார்பன் சைக்கிள் இருந்தால், வெற்றி நிச்சயம்.

பயிற்சியினால்வெற்றி நிச்சயம்!

மாநில அளவில் வெற்றி பெற்ற, சைக்கிளிங் வீரர், சுரேந்திர பாபு: என் வயது, 20. என் தந்தை, மாட்டு வண்டியில் மணல் ஒட்டி வந்தவர். தாய் செல்வராணி, கட்டடத் தொழிலாளி.முதன் முதலில் நான் ருசித்த பெரிய வெற்றி, கோவையில், 2009ல் நடைபெற்ற, மாநில அளவிலான, "சைக்கிள் ரேஸ்' போட்டி தான். அந்த போட்டிக்காக, 18 ஆயிரம் ரூபாய் சைக்கிளை, என் தந்தை இளங்கோ வாங்கித் தந்தார்.அதற்கு முன், 6,000 ரூபாய் சைக்கிளை பயன்படுத்தி, கடும் பயிற்சி öŒ#து, மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றேன்.என் ஆர்வத்தைக் கண்டு, குடும்ப கஷ்டத்திலும், 85 ஆயிரம் ரூபாய்க்கு, "கொலங்கோ' ரேஸ் சைக்கிள் வாங்கித் தந்தார் என் தந்தை. அதை, சிறப்பாகப் பயன்படுத்தி, தொடர்ந்து பயிற்சிகள் பல மேற்கொண்டேன். அதற்கு, கை மேல் பலன் கிடைத்தது.

நாகர்கோவிலில், 2011லும், கோவையில், 2012லும் நடந்த போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்திலேயே முதலாவதாக, வெற்றி பெற்றேன்.அகில இந்திய அளவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 70 கி.மீ., சைக்கிளிங் போட்டி, 2011ல், மகாராஷ்டிராவில் நடந்தது. 50 பேர் கலந்து கொண்டதில், எட்டாவது இடமே மிஞ்சியது.ஏன், என்னால் வெற்றி பெற இயலவில்லை என, சிந்திக்கும் போது, சைக்கிள் தரத்தில், மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது.

அந்த போட்டியில் வென்றவர்கள், மிகக் குறைந்த, எடை கொண்ட, ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கார்பன் சைக்கிள் வைத்திருந்தனர். அது, 6 கிலோ எடையும், அதி வேகமாகவும் செல்லக் கூடியது; மிகக் குறைந்த உராய்வு தன்மையும் கொண்டது.ஆனால், என்னுடைய கொலங்கோ சைக்கிள், 13 கிலோ எடையும், அதிக உராய்வுத் தன்மையும் கொண்டது. புதுடில்லியில், ஜனவரி, 2013ல் நடக்கும், தேசிய சைக்கிள் போட்டியில், கார்பன் சைக்கிள் இருந்தால், வெற்றி நிச்சயம்.

வியாழன், 8 நவம்பர், 2012

மீண்டும் ஒபாமா!




வாசிங்டன்: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின், 45வது அதிபராக மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர், மிட்ரோம்னி போட்டியிட்டார்.
பல மாதங்களாக இருவரும் தீவிர பிரசாரம் செய்தனர். தேர்தல் நேரத்தில் வீசிய, "சாண்டி' புயலால், இவர்களது பிரசாரம் பாதிக்கப்பட்டது. "போதுமான நிவாரண பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால், ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்' என, கூறப்பட்டது.மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 10 மாகாணங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருந்தது. அதிபர் வேட்பாளர்களின் வெற்றிக்கு, கேள்வி குறியாக இருந்த மாகாணங்களில், ஒபாமா கணிசமான ஓட்டுக்கள் பெற்றுள்ளார்; இதன் மூலம் அவர் வெற்றி கனியை பறித்துள்ளார்.
ஒபாமாவிற்கு 303 ஓட்டுக்கள்


இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கு, 435 பேரும், செனட் சபைக்கு, 100 பேரும், வாஷிங்டன் சார்பில், மூன்று பேரும் என, 538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு, அதிபர் மற்றும் துணை அதிபரை, அடுத்த மாதம், முறைப்படி தேர்வு செய்வர். குறைந்த பட்சம், 270 ஓட்டுகள் பெற்றால் வெற்றி நிச்சயம், என்ற நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு, 303 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மிட்ரோம்னிக்கு 206 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_16712.jpeg
செனட் சபையில் மொத்தமுள்ள, 100 இடங்களில், குடியரசுக் கட்சிக்கு, 45 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 51 இடங்களும் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகள், இரண்டு இடங்களை பிடித்துள்ளன.பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள, 435 இடங்களில், குடியரசு கட்சிக்கு, 231 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 187 இடங்களும் கிடைத்துள்ளன.தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த மிட்ரோம்னி, அதிபர் ஒபாமா மீண்டும் பதவியில் தொடர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்


தன் தொகுதியான, சிகாகோவில் அதிபர் ஒபாமா, வெற்றியை மக்களிடையே பகிர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:என்வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி வாய்ப்பை இழந்த, மிட்ரோம்னி, நாட்டு முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடு படவேண்டும். நாட்டு மக்கள் தங்கள் உரிமையை தெரிவிக்கும் முக்கியமான நிகழ்வு தான் தேர்தல். இதற்காக தான், உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.நம்நாட்டின் கடன் சுமையை குறைக்கவும், வரி சீர்திருத்தங்கள், குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் செய்யவும், எதிர்கட்சியினருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன்.மக்களும் ஓட்டு போட்டதோடு நின்று விடாமல், இக்கட்டான சமயங்களில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
Advertisement
.நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடைய, வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மேலும், தொழில் வாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு வழிகாண வேண்டியது அவசியம். எனவே, ஏழை, பணக்காரன், கருப்பர், வெள்ளையர், ஆசியர், ஐரோப்பியர், ஊனமுற்றவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
அமெரிக்க செனட் சபைக்கு 19 பெண்கள் தேர்வாகியுள்ளனர்

தேர்தல் பிரசாரத்துக்கான விளம்பரத்துக்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள், 3,560 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.
ஹவாய் தீவில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டதுளசி கபார்ட் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரல்ல.
துணை அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்வு


வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக, மீண்டும், ஜோ பிடன் தேர்வு செய்யப்படுவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் போட்டியிட்டது போல, ஜனநாயக கட்சியின் சார்பில், துணை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள், ஜோ பிடனை, அடுத்த துணை அதிபர் தேர்வுக்கு தகுதியாக்கியுள்ளது.தற்போது தேர்வாகியுள்ள பிரதிநிதிகள், அடுத்த மாதம் கூடி, அதிபரையும், துணை அதிபரையும் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். எனவே, ஜோ பிடன் துணை அதிபராவது உறுதியாகியுள்ளது. இப்போது அவருக்கு வயது 69. "வயதான நபரை, துணை அதிபராக, மீண்டும் தேர்வு செய்வதா' என்ற தயக்கம் சில பிரதிநிதிகளிடம் காணப்படுகிறது.
- தினமலர்