வியாழன், 20 ஜூன், 2013

தோற்றுப் போகவில்லை!


தோற்றுப் போகவில்லை!

ஐந்து ரூபாய் சம்பளத்திலிருந்து, 30 கோடி வருமானம் ஈட்டுமளவிற்கு முன்னேறிய கிராமத்து பெண், ஜோதி ரெட்டி: நான், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்தின், மிக பின்தங்கிய கிராமத்தில் பிறந்தேன். பெற்றோருக்கு, ஐந்து பெண் குழந்தைகள். குடும்பத்தின் வறுமை காரணமாக, என் தந்தையே, நான் அனாதை எனச் சொல்லி, ஒரு இலவச காப்பகத்தில், 10 வயதிலேயே சேர்த்து படிக்க வைத்தார். மூன்று வேளை உணவு கிடைத்தாலும், இரவு தூங்கும் போது, அம்மா நினைவு வந்து அழுவேன். நன்கு படித்து, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். வறுமையால் மேற்கொண்டு படிக்க முடியாமல், 18 வயதிலேயே திருமணம் நடந்தது. பொறுப்பில்லாத கணவரும், வதைக்கும் மாமியாரும், என் வாழ்க்கையை சீரழித்தனர். என்னை போல், பிள்ளைகளும் பசியால் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில், 5 ரூபாய் சம்பளத்திற்கு விவசாய வேலை செய்து வந்தேன். நேரு யுவ கேந்திரா என்ற அமைப்பு, எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு, எழுத படிக்க சொல்லித் தர, 150 ரூபாய் சம்பளத்தில், என்னை ஆசிரியராக நியமித்தது. ஆசிரியர் பணியின் போதே, தபால் மூலம் பட்ட மேற்படிப்பும், கம்ப்யூட்டர் தொடர்பான கல்வியும் படித்தேன். வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்ற பயத்தால், குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்க வைத்து, மாத ஊதியத்தை சிறுக சிறுக சேர்த்து, றவினர் மூலம் அமெரிக்கா சென்றேன். "என் தலையெழுத்தை, நான் தான் மாற்றியமைக்க வேண்டும். வேறு யாரும், எனக்காக கவலைப்பட போவதில்லை' என, புரிந்தது. பணம் சம்பாதிக்க, பல கடைகளில் வேலை செய்தேன். அமெரிக்க கம்பெனி ஒன்றில் நிரந்தர வேலை கிடைக்க, அங்கேயே தங்க முயற்சி பட த்து கஷ்டப்பட்டு, "ஒர்க் பர்மிட் விசா' பெற்றதால், விசா பெறும் வழிமுறைகள் நன்கு தெரியும். அதனால், "கீ சாப்ட்வேர் சொல்யூஷன்' என்ற, விசா வாங்கி தரும், குட்டி நிறுவனத்தை ஆரம்பித்தேன். வாழ்க்கையில் தோற்று போகாமல், கடின ழைப்பால், ஆண்டிற்கு, 30 கோடி சம்பாதிக்கும் அளவிற்கு முன்னேறி, இன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக
இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக