வியாழன், 10 அக்டோபர், 2013

வெற்றிக்கான தேடலுக்கு முடிவு இல்லை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82338220131010012020.jpg



வெற்றிக்கான தேடலுக்கு முடிவு இல்லை!
உலகின் சிறந்த மலிவு க் கட்டண விமான சேவை செய்யும், மலேசியா ஏர்ஆசியாவின் தலைவரான, 33 வயது தமிழக இளைஞன், மிட்டு சாண்டில்யா: நான், தமிழகத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை சென்னையில் முடித்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். படிப்பு முடிந்ததும், பகுதி நேர விளம்பர மாடலாகவும், தொலைக்காட்சியிலும் வேலை செய்தேன். கைநிறைய சம்பளம் வாங்கினாலும், என் வெற்றிக்கான தேடல், அத்தோடு நின்று விடவில்லை.
செய்யும் தொழிலில் சலிப்பு ஏற்பட்டதால், தொழிற்சாலையை நிர்வகிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில், இளம் தலைமுறையினர் புதிய தொழில் துவங்க, கிடைத்த மானியத்தால் துவங்கப்பட்ட ஒரு சிறிய கம்பெனியை வளர்த்து, மூன்று ஆண்டுகளில் அதை, ஒரு சர்வதேச நிறுவனத்திற்கு, மிகப்பெரிய விலைக்கு விற்று, பெரிய லாபம் ஈட்டி தந்தேன். பின், வேறொரு சிறிய நிறுவனத்தின், 'ஜெனரல் மேனேஜர்' பொறுப்பேற்று, வர்த்தகத்தை பன்மடங்காக அதிகரிக்க வைத்ததுடன், அதன் புதிய கிளையை, மெக்சிகோ நாட்டிலும் திறந்து, நிறுவனத்தை விரிவடைய செய்தேன். மிகச் சவாலான பணிகளை, வெற்றிகரமாக செய்து காட்டி, அமெரிக்க கார்ப்பரேட் உலகத்தை, என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தேன். சிங்கப்பூரில், ஒரு சர்வதேச நிர்வாக ஆலோசனை நிறுவனத்தின், மனித வள மேம்பாட்டுத் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை, இளம் வயதிலேயே பெற்றேன். ஆரம்பித்த செயலை முடித்துவிட வேண்டும் என்ற வெறியும், துணிவும், என்னை மலேசியா ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் தலைவராக்கியது. விமானத் துறை பற்றிய அறிவு, எனக்கு துளியும் இல்லாததால், 'விமான சர்வீசின்' எல்லா பிரிவையும் அறிந்து கொள்ள, இரு மாதங்கள் சாதாரண ஊழியராக வேலை செய்தேன். பயணிகளுக்கு சாப்பாடு கொடுப்பது முதல், விமான தொழில்நுட்பம் வரை கற்று, உலகின் சிறந்த மலிவு கட்டண விமான சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றினேன். நான் படித்து வளர்ந்த சென்னையில், இந்தியாவிற்கான தலைமை அலுவலகம் ஆரம்பித்து, இங்கும் மலிவு கட்டண விமான சேவை ஆரம்பிக்க உள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக