சடங்காகிப்போன வீர வணக்க நாள்


திருவள்ளூர் : "தனது 14வது வயதிலேயே சக பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு தமிழ்க் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியவர் தான் முதல்வர் கருணாநிதி' என, வீர வணக்க நாள் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் மொழிப் போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூரில் நடந்த கூட்டத்திற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாவட்ட செயலருமான சிவாஜி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "என்றுமே தியாகிகளை மறக் காத ஒரே இயக்கம் தி.மு.க., தான்.இன்றைக்கு பல கட்சிகள் வீர வணக்க நாள் கூட்டங்களை அறிவித்துள்ளன. நான் அவர்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை.நம்மைப் போலவே, அ.தி.மு.க., வும் இன்று வீர வணக்க நாள் கூட்டங்களை நடத்துவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் இதுவரை அக்கட்சி சார்பாக நடத்தப்பட்ட வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திலாவது ஜெயலலிதா கலந்துகொண்டுள்ளாரா? ஏன் கலந்து கொள்ளவில்லை.
இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தி.மு.க., தான் போராடியது. அதற்காக சிறையிலேயே உயிர் நீத்தவர் தான் தாளமுத்து நடராசன். அவரைப் போலவே சின்னசாமி, தீரன் சிவலிங்கம், சண்முகம், சாரங்கபாணி, ஆசிரியர் வீரப்பன் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அவர்களது தியாகங்களை போற்றும் விதமாக தான் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தனது 14 வயதில் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தமிழுக் காக தமிழ்க் கொடி ஏந்தி போராடியவர் தான் முதல்வர் கருணாநிதி.பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்க, கலைஞர் வீட்டு வசதி திட்டம், கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 21 லட்சம் கூரை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி, ரங்கநாதன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், திரு வள்ளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.எஸ்.சண்முகம், வி.ஜி.ராஜேந்திரன், காயத்ரி ஸ்ரீதரன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.அம்பத்தூர் நகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பையா, கூளூர் ஜெயலலிதா பேரவையைச் சேர்ந்த தேவகி ராஜேந்திரன் உட்பட 200 பேர் கட்சியில் இருந்து விலகி துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க., வில் சேர்ந்தனர்.திருவள்ளூர் நகர செயலர் கா.மு. தயாநிதி நன்றி கூறினார்.
நீத்தார் பெருமையைப் போற்றம் நாட்டில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதைத்தடை செய்ய வேண்டிய கொடுமை ஏன்? பண்பாடற்ற செயலில் அரசு ஏன் ஈடுபட வேண்டும? அச்சமா? ஆணவமா? எதுவாக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்துவதே நல்லது. தாய் மண் மீட்க உயிரிழந்த களப் போராளிகளுக்கும் மனைப் போராளிகளுக்கும் (வஞ்சகத்தால், அரச வன்முறையால், பன்னாட்டுச சதிகளால் உயிரிழந்த பொதுமக்கள்- இக் கொடுமைகளில் இறக்கும் யாவரும் போராளிகளே!) தினமணி வாசகர்கள் சார்பில் வீர வணக்கம் ! வீர வணக்கம்! வீர வணக்கம்! வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்கள் மீதான அடக்குமுறைக் குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படுகின்றன.குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமாஅதிபரிடம் நான ஆலோசனை கோரியுள்ளேன். முன்னொரு போது என்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் நான் உரியமுறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றேன்.எனக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் பொய்ச்சாட்சி சொன்னமைக்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் திஸ்ஸநாயகமும் தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் மு
One correction. That is the Thamizh National flag and soon would be the National Flag of the Greater Thamizh Nation. Maveerar Naal should be accepted as a National Day for Thamizhs all over the world. Let us salute their sacrifices for our liberation and freedom.