விமானம் வடிவமைக்கும் பெண்!
விமானங்களை வடிவமைக்கும், உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற, மாணவி ஸ்வீட்டி பாடே: நான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவள். சென்னையில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்'கில், நான்காம் ஆண்டு படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது, ஆகாய விமானத்தை, அண்ணார்ந்து பார்ப்பதில் ஏற்பட்ட சந்தோஷம் காரணமாக, "ரிமோட்டில்' பறக்கும் சிறிய ரக விமானங்களை, சிறு வயதிலேயே செய்ய ஆரம்பித்தேன். தற்போது, அதற்கான படிப்பையும் தொடர்கிறேன். அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்,"கிரீன் ஏவியேஷன் - பசுமை வான்வெளி போக்குவரத்து' என்ற தலைப்பில், போட்டி நடத்தியது. அதில், 200 பேர் வரை பயணம் செய்யும் வசதியுள்ள, "டால்பின்' வடிவில் அமைக்கப்பட்ட, எங்கள் விமானம், மற்ற விமானங்களை விட, குறைந்த எரிபொருள் மற்றும் அதிக செயல் திறன் மிக்கதாக இருந்ததால், 2011ம் ஆண்டு, மூன்றாம் பரிசு கிடைத்தது. இதற்கு, குறைந்தபட்ச விமான ஓடுதளமே போதும். கடந்த, 2012ம் ஆண்டு நடந்த போட்டியில், பல்வேறு சிறப்பு தன்மைகளோடு, விமானத்தை கையாளும் செலவையும் குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட, "செரா கருடா - 2.0' விமானம், இரண்டாம் பரிசு பெற்றது. "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அஸ்ட்ரோனாடிக்ஸ் பவுண்டேஷன்' நடத்திய, வடிவமைப்பு போட்டி மற்றும் சாதாரண மக்களும், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர, என் தலைமையில் தயாரிக்கப்பட்ட, "நவசிட்ஜிவாஹா' என்ற விண்வெளி விமான வடிவமைப்பு என, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். பிரான்சில் நடந்த, ஏரோஸ்பேஸ் தொடர்பான கான்பரன்சில், என் ஆய்வு அறிக்கைகள், தேர்வு செய்யப்பட்டன. அதற்கான காப்புரிமையும், என்னிடம் உள்ளது. ஜெர்மன் ஏரோஸ்பேஸ் சென்டர், அவர்களின் புதிய ஏரோகிராப்ட் புராஜெக்ட்டுக்கு பணியாற்ற, அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், "இஸ்ரோவில்' பணியாற்றி, விண்வெளி துறையில், இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக