மலைப் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலைப் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜனவரி, 2013

விமானத்தில் பயணம் செய்த 10அடி நீள மலைப் பாம்பு!

விமானத்தில் பயணம் செய்த 10அடி நீள மலை ப் பாம்பு! பயணிகள் பரபரப்பு!

சிட்னி: ஆசுதிரேலியாவின்விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் விமானம் ஒன்று கைரேன்ஸ் என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400கி.மீ வேகத்தில் பறக்கிறது. மேலும் வெளி வெப்பம் -12 டிகிரி செல்சியஸ் யாக உள்ளது, எனவே இந்த பாம்பு இனியும் உயுருடன் இருக்க வாய்ப்பு எல்லை என விமானி தெரிவித்தார். விமானத்தில் பாம்பு பயணிக்கும் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் பாம்பு உயுருடன் இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். விமானத்தில் பாம்பு எவ்வாறு ஏறியது ? விமானம் கிளம்பும் முன்பு விமானத்தின் இறக்கைகள் சரிபர்க்கபடும். அப்பொழுதும் கூட பாம்பு இருப்பதை ஏன் கவனிக்க வில்லை போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த நிறுவனம், விமானம் அதிக வேகத்தில் பறக்கும் பொழுது பாம்பு தனது கட்டுப்பாட்டை இழந்து வெளியில் தெரிந்ததாக கூறினார்.