பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி இராசபக்சே - சிங்கப்பூரின் லீ குவான் யூ



திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி இராசபக்சே - சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு பேட்டி.
 
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். 

லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். 

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. 

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். 

ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ. 

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். 

முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். 

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். 

அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ. 

இந்த நூலை முன்னணி பத்திரிகையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று சிங்கப்பூரை மலேசியா தனியாக கழற்றி விட்டது. அப்போது சிங்கப்பூர் மக்கள் நிலை குலைந்து போனார்கள்.

ஆனால், அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ குவான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://vannimedia.com/site/news_detail/20769#sthash.s8Q9yfms.dpuf

திங்கள், 15 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது ஐயமே: நா.உ. பேட்டி

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது  ஐயமே:  நா.உ.  பேட்டி
 
""இலங்கை த் தமிழர்களுக்கு, அதிபர் இராசபக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.
ஐந்து பேர் குழு:


இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறியதாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில், சிங்களர்கள் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள்ளனர். மற்றபடி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.

தயக்கம்:

இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்னை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.போலீஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்னைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் குறை சொல்கின்றனர்.அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

நேரமின்மை:


இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம்.இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

- நமது தில்லிச் செய்தியாளர், தினமலர் -

வியாழன், 28 மார்ச், 2013

கல்லூரி மாணவர்களை த் தாக்கிய காங்கிரசாரை க் கைது செய்யவேண்டும்: வைகோ பேட்டி

  மாணவர்களை இழிவுபடுத்தும் வரிகள் இடம் பெற்றதால்தான் மாணவர்கள் அதனைக் கிழித்துள்ளனர். அத்தகைய பதாகைக்கக் காரணமானவர்கள்,  காங்.குண்டர்கள் தடிகளுடன் வந்துள்ளனர் என்பதால் அவ்வாறு திட்டமிட்ட குண்டர்கள், குண்டர்களை ஏவிய குண்டர் தலைவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையினர் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.  குண்டர்கள் அனைவர் கைகளிலும் குண்டாந்தடி இருப்பதால் ஏதேனும் காரணத்தை வைத்துத் தாக்குவதற்குத் திட்டமிட்டு உள்ளனர் என்பது நன்கு புரிகின்றது.இந்தி எதிர்ப்புப் போரின் போது மதுரையில் சந்திரா திரையரங்கு அருகே உள்ள காங். அலுவலகத்தில் இருந்து குண்டன் வீரையா தலைமையில் மாணவர்களை அரிவாள்களால் வெட்டிய காங்கிரசுக் கட்சியினர் தமிழ் நாட்டை விட்டே புறக்கணிக்கப்பட்டனர். இந்த வன்முறையால் இந்தியக் கண்டம் முழுவதும் புறக்கணிக்கப்படுவர்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++
கல்லூரி மாணவர்களை த் தாக்கிய காங்கிரசாரை க் கைது செய்யவேண்டும்: வைகோ பேட்டி
கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசாரை கைது செய்யவேண்டும்: வைகோ பேட்டி
திருச்சி, மார்ச். 28-

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரசாரால் தாக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்யகுமரன், முகமது ஜப்ரி, கஜேந்திரபாபு, பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடேசன் ஆகியோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த 4 மாணவர்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். வைகோ அருகில் வந்ததும் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். எங்களது அறவழி போராட்டத்தை கொச்சைப்படுத்து வாசகங்கள் இருந்ததால் தான் இந்த பேனர்களை நாங்கள் கிழித்து எறிந்தோம். அப்போது காங்கிரசார் எங்களை கடப்பாறை, அரிவாள், மண்வெட்டியால் தாக்கினார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்துக்காக போராட வில்லை. தமிழ் ஈழத்துக்காக தான் போராடுகிறோம். நீங்கள் குரல் கொடுத்தால் நாங்கள் எந்தவிதமான போராட்டத்துக்கும் தயாராக இருக்கிறோம் என்றார்கள்.

அவர்கள் அருகில் அமர்ந்து கனிவுடன் பேசிய வைகோ நீங்கள் ஆத்திரப்படக்கூடாது, பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் அறவழியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொலை பாதகன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாணவர்கள் 12 நாட்களாக உண்ணாவிரதம் உள்பட அற வழியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காங்கிரசார் திட்டமிட்டு குண்டாந்தடியுடன் வந்து தாக்கி இருக்கிறார்கள்.

எனவே காங்கிரசார் மற்றும் தூண்டியவர்கள் உள்பட அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்யவேண்டும். இதுதான் லட்சோப லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். திருச்சியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்து
Thursday, March 28,2013 12:47 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
மாணவர்களை இழிவுபடுத்தும் வரிகள் இடம் பெற்றதால்தான் மாணவர்கள் அதனைக் கிழித்துள்ளனர். அத்தகைய பதாகைக்கக் காரணமானவர்கள், காங்.குண்டர்கள் தடிகளுடன் வந்துள்ளனர் என்பதால் அவ்வாறு திட்டமிட்ட குண்டர்கள், குண்டர்களை ஏவிய குண்டர் தலைவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையினர் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். குண்டர்கள் அனைவர் கைகளிலும் குண்டாந்தடி இருப்பதால் ஏதேனும் காரணத்தை வைத்துத் தாக்குவதற்குத் திட்டமிட்டு உள்ளனர் என்பது நன்கு புரிகின்றது.இந்தி எதிர்ப்புப் போரின் போது மதுரையில் சந்திரா திரையரங்கு அருகே உள்ள காங். அலுவலகத்தில் இருந்து குண்டன் வீரையா தலைமையில் மாணவர்களை அரிவாள்களால் வெட்டிய காங்கிரசுக் கட்சியினர் தமிழ் நாட்டை விட்டே புறக்கணிக்கப்பட்டனர். இந்த வன்முறையால் இந்தியக் கண்டம் முழுவதும் புறக்கணிக்கப்படுவர்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 

திங்கள், 25 மார்ச், 2013

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி
சென்னை, மார்ச். 25-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உலகத் தமிழர்களின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தாலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. அழுத்தம் கொடுக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய போதிலும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்து போய்விட்டது. அதில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்திய அரசு தீர்மானம் கொண்டு வரும் வரை மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம். மாணவர்கள் எழுச்சியை தடுக்க முடியாது. போராட்டம் அறிவித்த உடனேயே கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. காலவரையற்ற விடுமுறை என்பதை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுவரையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. மாணவர்களுடைய போராட்டத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் ஆதரவு தர முன் வந்தார்கள். வெளியில் இருந்து ஆதரவு தந்தால் போதும், போராட்ட களத்திற்குள் வரவேண்டாம் என்று வலியுறுத்தினோம். அதனால் அரசியல் கட்சிகள் மாணவர்களை கையில் எடுக்க முடியாது. அரசியல்வாதிகளை அனு மதிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

போராட்ட களத்தில் உள்ள சில மாணவர்கள் பல்வேறு அரசியல் அடையாளங்களை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அந்த அடையாளத்தை போராட்டத்தில் வெளிகாட்ட வில்லை. மாணவர்கள் என்ற ஒரே அடையாளத்தில்தான் போராடி வருகிறார்கள். மாணவர்கள் கட்சி அடையாளத்தை புறக்கணித்து விட்டனர்.

கல்லூரி மாணவர்களை காவல்துறை விரட்டி பணிய வைக்க முயற்சி செய்தது. மாணவர்கள் ஒன்று கூடினாலே அழைத்து சென்று கல்லூரி அடையாள அட்டை போன்றவற்றை பிடுங்கினார்கள். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு விடுவித்தனர். தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாகம் டி.சி. கொடுப்பதாக மிரட்டல் விடுக்கிறது. அது போன்ற முடிவை நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். எந்த பிரச்சினைக்காக போராட்டம் என்பதை உணர்ந்து அவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும். போராட்டம் ஓய்ந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து நடைபெறும். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது, நசுக்கி விட முடியாது.

இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் அணி திரள்வதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்கள் பல்வேறு அமைப்புகளாக பிரிந்திருக்கலாம் அவரவர் வலியுறுத்தும் கோரிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் போராடக் கூடியவர்கள் மாணவ சமுதாயம். ஒவ்வொருவருடைய இலக்கு வேறாக இருக்கலாம். போராட்ட களம் ஒன்றுதான். தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்ட குழு அடுத்த கட்டமாக மத்திய அரசை முடக்கும் வகையில் தொடர் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளது.

கல்லூரிகள் திறந்தாலும் மாணவர்கள் போராட்டம் தொடரும். வாரம் இரு முறை சென்னை உள்ளிட்ட மத்திய பகுதியிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும். போராட்டம் பெரும்பாலான மாணவர்களுக்கு போய் சேரவில்லை. மக்களுக்கும் போய் சேர வில்லை. அதனால் இதனை மக்கள் போராட்டமாக கொண்டு செல்கிறோம். நாளை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் துண்டு பிரசுரம், ரெயில், பேருந்து மூலம் கொண்டு செல்கிறோம்.

மக்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்லும் போது வெற்றி பெறும், மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர்களின் போராட்டம் படிப்படியாக குறைந்தாலும் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு திவ்யா கூறினார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும்: வைகோ

தமிழகம் மதுவின் பிடியில்
 இருந்து விலக வேண்டும்:
 சிவகாசியில் வைகோ பேட்டி


தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும்: சிவகாசியில் வைகோ பேட்டி
சிவகாசி, டிச. 20-

தமிழகத்தில் முழு மதுவிலக்கு, அதுவே எமது இலக்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 510 கிராமங்களின் வழியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 14 நாட்கள் தொண்டர் படை சூழ விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியிலிருந்து தொடங்கிய பிரசார பயணத்தின் போது வைகோவுக்கு பல்வேறு கிராமங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் வரவேற்பளிக்கப்பட்டது. சிவகாசிக்கு வந்த அவருக்கு வழிநெடுகிலும் சாலையில் இருபுறமும் ஏராளமானவர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரத்தின் போது சிவகாசி புறவழிச் சாலையில் பெருந்திரளானவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் எத்தனையோ நடைபயணம் மேற்கொண்ட போதிலும் மதுவிலக்கு கோரிக்கைக்கு கட்சிகளையும், சாதி, மதங்களையும் கடந்து அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டபடியால் இது ஒட்டுமொத்த சமுதாயத்தை யும் அழித்து விடும்.

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பஸ்சில் செல்லும்போது அவரை மது அருந்திய நபர்கள் நாசப்படுத்திய விவகாரம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசு என்ன பரிகாரம் செய்யப்போகிறது. இதற்குண்டான மதுவின் மூல காரணத்தையே ஏற்க அரசு மறுக்கிறது.

மதுவிலக்கிற்கு முன் உதாரணமாக காந்தி பிறந்த மண் குஜராத் மாநிலம் விளங்குகிறது. தமிழகம் மதுவின் பிடியில் இருந்து விலக வேண்டும். மக்கள் சக்தியை திரட்டினால் தான் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும். பல்வேறு எல்லைகளை கடந்து தமிழக மண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து வருகிறேன்.

மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டால் நாட்டில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் இருக்கும். தெருவுக்குதெரு வீதிக்கு வீதி அரசு திறந்துள்ள மதுக் கடைகள் இருக்காது. தமிழகத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கின்ற இளம் தலைமுறையினரிடம் எங்களது போராட்டம் நியாயம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அறவழிச் சிந்தனையாளர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாட்டையும், தமிழ் சமூகத்தையும் மதுவின் மூலமாக பாழாக்க விட மாட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 6 டிசம்பர், 2010

பொன்சேகாவின் பேட்டியை அனுமதித்த அதிகாரி பணியிடை விலக்கம்

இச் செய்தியை உலகச் செய்தித் தலைப்பில் வெளியிடாமல் இந்தியச் செய்திப் பக்கததில் வெளியிட்டதன் நோக்கம் இந்தியமும் சிங்களமும் ஒன்று என உணர்த்தவா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பொன்சேகாவின் பேட்டியை அனுமதித்த
அதிகாரி சஸ்பெண்ட்

First Published : 05 Dec 2010 11:58:33 PM IST


கொழும்பு, டிச.5: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்த சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கொழும்பின் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக சிறை அதிகாரி துமிந்தா சென்றார்.விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த சரத் பொன்சேகாவை நிருபர்கள் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் பேட்டி கண்டனர். இதற்கு சிறை அதிகாரி துமிந்தா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்தார்.இந்த விஷயம் இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. முக்கிய வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறியது. சரத் பொன்சேகாவுடன் பாதுகாப்புக்கு சென்ற சிறை அதிகாரி துமிந்தாவை சஸ்பெண்ட் செய்தது. நீதிமன்ற விசாரணைக்காக பொன்சேகாவை அழைத்துச் சென்ற வாகனத்தின் டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.பொன்சேகா கட்சி எதிர்ப்பு: சிறைத்துறை அதிகாரி, டிரைவர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ததற்கு சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட்டதால் சரத் பொன்சேகாவையும், அவரது ஆதரவாளர்களையும் வேண்டுமென்றே இலங்கை அரசு பழிவாங்குகிறது என்று அக்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. சரத் பொன்சேகா ராணுவத் தளபதியாக இருக்கும் போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதை விசாரித்த ராணுவ நீதிமன்றம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை விதித்தது. அவர் பலத்த பாதுகாப்புடன் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.