தொடரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடரும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மார்ச், 2013

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி
சென்னை, மார்ச். 25-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உலகத் தமிழர்களின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தாலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. அழுத்தம் கொடுக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய போதிலும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்து போய்விட்டது. அதில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்திய அரசு தீர்மானம் கொண்டு வரும் வரை மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம். மாணவர்கள் எழுச்சியை தடுக்க முடியாது. போராட்டம் அறிவித்த உடனேயே கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. காலவரையற்ற விடுமுறை என்பதை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுவரையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. மாணவர்களுடைய போராட்டத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் ஆதரவு தர முன் வந்தார்கள். வெளியில் இருந்து ஆதரவு தந்தால் போதும், போராட்ட களத்திற்குள் வரவேண்டாம் என்று வலியுறுத்தினோம். அதனால் அரசியல் கட்சிகள் மாணவர்களை கையில் எடுக்க முடியாது. அரசியல்வாதிகளை அனு மதிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

போராட்ட களத்தில் உள்ள சில மாணவர்கள் பல்வேறு அரசியல் அடையாளங்களை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அந்த அடையாளத்தை போராட்டத்தில் வெளிகாட்ட வில்லை. மாணவர்கள் என்ற ஒரே அடையாளத்தில்தான் போராடி வருகிறார்கள். மாணவர்கள் கட்சி அடையாளத்தை புறக்கணித்து விட்டனர்.

கல்லூரி மாணவர்களை காவல்துறை விரட்டி பணிய வைக்க முயற்சி செய்தது. மாணவர்கள் ஒன்று கூடினாலே அழைத்து சென்று கல்லூரி அடையாள அட்டை போன்றவற்றை பிடுங்கினார்கள். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு விடுவித்தனர். தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாகம் டி.சி. கொடுப்பதாக மிரட்டல் விடுக்கிறது. அது போன்ற முடிவை நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். எந்த பிரச்சினைக்காக போராட்டம் என்பதை உணர்ந்து அவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும். போராட்டம் ஓய்ந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து நடைபெறும். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது, நசுக்கி விட முடியாது.

இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் அணி திரள்வதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்கள் பல்வேறு அமைப்புகளாக பிரிந்திருக்கலாம் அவரவர் வலியுறுத்தும் கோரிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் போராடக் கூடியவர்கள் மாணவ சமுதாயம். ஒவ்வொருவருடைய இலக்கு வேறாக இருக்கலாம். போராட்ட களம் ஒன்றுதான். தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்ட குழு அடுத்த கட்டமாக மத்திய அரசை முடக்கும் வகையில் தொடர் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளது.

கல்லூரிகள் திறந்தாலும் மாணவர்கள் போராட்டம் தொடரும். வாரம் இரு முறை சென்னை உள்ளிட்ட மத்திய பகுதியிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும். போராட்டம் பெரும்பாலான மாணவர்களுக்கு போய் சேரவில்லை. மக்களுக்கும் போய் சேர வில்லை. அதனால் இதனை மக்கள் போராட்டமாக கொண்டு செல்கிறோம். நாளை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் துண்டு பிரசுரம், ரெயில், பேருந்து மூலம் கொண்டு செல்கிறோம்.

மக்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்லும் போது வெற்றி பெறும், மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர்களின் போராட்டம் படிப்படியாக குறைந்தாலும் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு திவ்யா கூறினார்.

திங்கள், 11 மார்ச், 2013

ஆயுதப்படைச் சட்டம் திரும்பப்பெறும்வரை உண்ணாநோன்பு தொடரும்









"ஆயுதப்படை ச் சட்டம்  திரும்பப்பெறும்வரை உண்ணாநோன்பு  தொடரும்



புதுதில்லி:""மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறும் வரை, உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்,'' என, கடந்த, 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளா, திட்டவட்டமாக கூறியுள்ளார்.மணிப்பூரில், பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினருக்கு, சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த, 2000ல், மணிப்பூரில், அசாம் ரைபிள் படைப் பிரிவினரால் பொதுமக்கள், 12 பேர், கொல்லப்பட்டனர்.இதை எதிர்த்தும், சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், மணிப்பூரைச் சேர்ந்த ஷர்மிளா, சாகும் வரை உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 12 ஆண்டுகளாக, திட உணவு எதுவும், இவர் சாப்பிடுவது இல்லை.மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு, திரவ உணவு செலுத்தப்படுகிறது. இவருக்கு எதிராக, தற்கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, கடந்த வாரம், டில்லி கோர்ட்டில் ஆஜரான ஷர்மிளா, "இதுபோன்ற வழக்குகள் மூலம், என் போராட்டத்தை தடுக்க முடியாது' என்றார்.

நேற்று, அவர் கூறியதாவது:பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தால், மணிப்பூர் மக்கள், தினமும் பயத்திலேயே உயிர் வாழ வேண்டியுள்ளது. இந்த சட்டத்தை, மத்திய அரசு வாபஸ் பெறும் வரை, என் போராட்டம் தொடரும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.இது தொடர்பாக, என் சார்பாக எந்தவித சமரச முயற்சியும் மேற்கொள்ளவில்லை. என் போராட்டத்துக்கு மாணவர்கள் அளிக்கும் ஆதரவு, பெரும் பலமாக உள்ளது. என்னுடன் சேர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும்படி, யாரையும் நான் வற்புறுத்தவில்லை.அதற்கு பதிலாக, என் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும், ஆக்கப்பூர்வமான ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே, என் விருப்பம். மணிப்பூர் விவகாரம் குறித்து விசாரித்த, நீதிபதி வர்மா கமிஷன், சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, வலியுறுத்தியது.நானும், இதே கருத்தை வலியுறுத்தி தான், உண்ணாவிரதம் இருக்கிறேன். ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள தலைவர்கள், மணிப்பூர் விவகாரத்தில், தாங்கள் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர வேண்டும்.ராணுவத்தை, அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நான், தற்கொலை செய்யப் போவதாக, பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர். தற்கொலை செய்ய முடிவு செய்திருந்தால், அதை எப்போதோ செய்திருப்பேன். இத்தனை நாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, ஷர்மிளா கூறினார்.