திங்கள், 6 டிசம்பர், 2010

பொன்சேகாவின் பேட்டியை அனுமதித்த அதிகாரி பணியிடை விலக்கம்

இச் செய்தியை உலகச் செய்தித் தலைப்பில் வெளியிடாமல் இந்தியச் செய்திப் பக்கததில் வெளியிட்டதன் நோக்கம் இந்தியமும் சிங்களமும் ஒன்று என உணர்த்தவா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பொன்சேகாவின் பேட்டியை அனுமதித்த
அதிகாரி சஸ்பெண்ட்

First Published : 05 Dec 2010 11:58:33 PM IST


கொழும்பு, டிச.5: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்த சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கொழும்பின் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக சிறை அதிகாரி துமிந்தா சென்றார்.விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த சரத் பொன்சேகாவை நிருபர்கள் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் பேட்டி கண்டனர். இதற்கு சிறை அதிகாரி துமிந்தா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்தார்.இந்த விஷயம் இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. முக்கிய வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை நிருபர்களுடன் பேச அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறியது. சரத் பொன்சேகாவுடன் பாதுகாப்புக்கு சென்ற சிறை அதிகாரி துமிந்தாவை சஸ்பெண்ட் செய்தது. நீதிமன்ற விசாரணைக்காக பொன்சேகாவை அழைத்துச் சென்ற வாகனத்தின் டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.பொன்சேகா கட்சி எதிர்ப்பு: சிறைத்துறை அதிகாரி, டிரைவர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ததற்கு சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட்டதால் சரத் பொன்சேகாவையும், அவரது ஆதரவாளர்களையும் வேண்டுமென்றே இலங்கை அரசு பழிவாங்குகிறது என்று அக்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. சரத் பொன்சேகா ராணுவத் தளபதியாக இருக்கும் போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதை விசாரித்த ராணுவ நீதிமன்றம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை விதித்தது. அவர் பலத்த பாதுகாப்புடன் வெலிகடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக