படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

பால் காய்ச்ச வேண்டியவனுக்கு...பால் ஊத்திட்டோமே! - கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

Comment (5)   ·   print   ·   T+  
2
நெல்லையில் இருந்து சேர்ந்தமரம் செல்லும் வழியெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. பேருந்துப் பயணத்தில் கூட "பார்த்தியாலே...நம்ம சுரேஷ் தங்கமான மனுசமுல்ல... ஊருக்கு நல்லது சொன்னவமுல்ல .. சின்ன பசங்க சேர்ந்து இப்புடி பண்ணிப்புட்டானுங்களே.. நல்ல நேர்மையா இருந்தவம்முல்லா.." என்று நெல்லை சீமையின் வெள்ளந்தி மனிதர்கள் அவர்களுக்குள் பரபரப்பு மாறாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சேர்ந்தமரம் பழைய காவல் நிலையத்தில் இறங்கினால் பொடிநடை போடும் தூரம்தான் சுரேசின் வீடு. கடந்த 10-ம் தேதி காலையில் பிச்சைக்கண்ணு, பிரபாகரன், டேனிஸ் என்ற மூன்று மாணவர்களின் வெறியாட்டத்தில் பலியான, இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷின் வீடு அது. வீட்டு முன்னால் உறவினர்கள் கூடி நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் விலகாத அதிர்ச்சியுடன் நம்மிடம் பேசினார் சுரேஷின் சித்தி கலைச்செல்வி.
“சுரேஷ் எனக்கு மகன் முறை வரும். எப்பையும் ரொம்ப நேர்மையா இருப்பான். அதுக்கு அவனுக்கு கிடைச்ச பரிசுதான், இந்த மரணம்ன்னு தோணுது. குடும்பத்துல யாருகிட்டயும் ஒரு வார்த்தை சத்தமா பேசிக்கூட பார்த்ததில்லை... அவன் கோபப்பட்டும் எங்களுக்கு தெரியாது. சேர்ந்தமரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான், பத்தாம் வகுப்பு வரை படிச்சான். இப்போ அது மேல்நிலைப்பள்ளி ஆகிடுச்சு. பத்தாம் வகுப்பு படிச்சப்போ சுரேஷ்தான் பத்தாம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குனான். இப்பவும் பள்ளிக்கூட போர்டுல சுரேஷ் பேரு இருக்கும். ஒவ்வொரு வருசமும் அவன் படிச்ச ஸ்கூலுல பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் வாங்கும் பசங்களுக்கு 1000 ரூபாய் மேனிக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்துவான். வருசத்துக்கு 50 ஏழை பிள்ளைகளுக்கு சீருடை, பாடநூல்களை கொடுப்பான். வருசாவருசம் தீபாவளிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் இருந்து நன்கொடை கேட்டு கடிதம் வரும். எல்லாருக்கும் தாராளமா கொடுப்பான். இதைப்பத்திக் கேட்டா ஏழை மக்களுக்கு சேவை செய்ற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடாது சித்தின்னு சொல்லுவான்... அவனை போய்..." கண்ணீர் விட்டு கதறுகிறார் கலைச்செல்வி.
அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் சுரேஷின் அத்தை விஜயராணி, ’’அவுங்க அப்பா கூட பிறந்தவ நான். ஆனாலும் என்னை சுரேஷ் அத்தைன்னு கூப்புட்டு தெரியாது. அன்பா அம்மான்னுதான் கூப்புடும். தென்காசி பக்கத்தில் உள்ள ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்துக்கும் நிதி கொடுப்பாரு. எங்க குடும்பத்துக்குன்னே பாரம்பரியமா ஊருக்குள்ள ஒரு மரியாதை உண்டு. சுரேஷின் தாத்தா ராமையா, சேர்ந்தமரம் பஞ்சாயத்து தலைவரா இருந்தாங்க. காமராஜரே இந்த வீட்டுக்கு வந்திருக்காரு. ராமையா தாத்தா காங்கிரஸ் கட்சியிலும் ஜில்லா போர்டு தலைவரா இருந்தாங்க. சேர்ந்தமரம் கூட்டுறவு வங்கியிலும் தலைவரா இருந்தாங்க. சுரேஷின் தாத்தா காலத்துலதான் இங்க துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளியெல்லாம் வந்துச்சு.
எப்போதுமே என்கிட்ட படிக்குற மாணவர்கள் எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வருவேன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. ஒரு விசேச வீட்டுக்கு வந்தாகூட பிள்ளைகள் படிப்பை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க. அதுக்காகவே திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரகுமத் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தாங்க. குழந்தை பிறந்து 3 மாசத்திலேயே கருத்து வேறுபாட்டால சுரேஷின் மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க. அப்போ இருந்தே அவரு பொண்ணு அக்‌ஷயாதான் உலகம்ன்னு வாழ்ந்த மனுசன். பலதடவை இரண்டாவது திருமணம் பண்ண சொல்லியும் அக்‌ஷயாவுக்காக வேண்டாம்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க.
சுரேஷுக்கு கடவுள் பக்தி அதிகம். போன புரட்டாசி சனிக்கிழமைக்கு கூட அக்‌ஷயாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. சனிக்கிழமை நாள் பூரா கோவிலில் ஓடுச்சு. ஞாயிற்றுக் கிழமை காலையில் நிறைய படிக்கனும்ன்னு கிளம்பி போயிட்டாங்க. ஆனால் இந்த சனிக்கிழமைக்கு…? செமஸ்டர் லீவு அப்பவும் பிள்ளைங்க, படிப்புன்னு அதை சுற்றியே அவரு மனசு சுத்திட்டு இருக்கும். எப்பவும் ஸ்டூடண்ட்ஸ் பத்தியே சிந்திச்சுட்டு இருப்பான். இப்போதான் திருநெல்வேலியில் சொந்தமா ஒரு வீடு கட்டுனான். 25-ம் தேதி புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறிச்சவனுக்கு..பால் ஊத்த வைச்சுட்டாங்க பாவிப்பசங்க.." என்று தேம்பி,தேம்பி அழுதார்.
கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்‌ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.
தமிழகம் முழுவதும் 21-ம் தேதி வேலைநிறுத்தம்.....
குமரி மாவட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் சேர்ந்து சுரேஷ் படுகொலையை கண்டித்தும், கல்லூரி பாடத்திட்டத்தில் பண்பாட்டு கல்வியை சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் கொடுத்த மனுவில் சுரேஷின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சுரேஷின் படுகொலையை கண்டித்து வரும் 21-ம் தேதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன் முடியல....
சுரேஷ் வீடு கட்டுவதற்காக வாங்கி இருந்த வங்கி கடன் லட்சங்களில் இருக்கிறது. அக்‌ஷயாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருக்கிறது. அரசும், கல்லூரி நிர்வாகமும் வழங்கும் நிவாரணமே, அவரது குடும்பத்தின் மன ரணத்தை ஓரளவாவது ஆற்றும்.

புதன், 26 ஜூன், 2013

யாருக்கு வாக்கு என்பதைக் கட்சி முகவரிடம் காட்ட வேண்டும்



தேர்தல் ஆணைய அறிவிப்பு குடியாட்சி முறைக்கு எதிரானதாகும். கட்சித்தாவலை எதிர்ப்பதாகக் கூறி நடத்தும் மக்களாட்சிப் படுகொலைகளில் இதுவும் ஒன்றாகும். மறைவாகக் காக்கப்படவேண்டிய வாக்குரிமைப் பயன்பாட்டைக் கட்சி முகவரிடம் காட்டச் சொல்வதைவிடத் தேர்தலே இல்லாமல் கட்சித்தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு அக் கட்சியின் அனைத்து வாக்காளர்களும்(ச.ம.உறுப்பினர்களும்) வாக்களித்ததாகக் கருதித் தேர்தல் முடிவை அறிவிக்கலாமே! கட்சித் தலைமையின் அறிவிப்பிற்கும் தனியர் இருப்பின் அவரது அறிவிப்பிற்கும் இணங்கத் தேர்தல் முடிவைக் கூறாமல் தேர்தல் நடத்துவதன் நோக்கமே மக்களாட்சி முறையின் மாண்பு  காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான்! வாய்ப்பு உள்ள்வர்கள் நீதிமன்றத்தைநாடியாவது இக்கேலிக்கூத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


யாருக்கு வாக்கு என்பதை க்  கட்சி  முகவரிடம் காட்ட வேண்டும் 


சென்னை: மாநிலங்களவை த் ‌தேர்தலில், ஓட்டு போடும் எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் பதிவு செய்த ஓட்டுகளை, கட்சி ஏஜென்டிடம் காட்ட வேண்டும். இல்லையெனில், செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கட்சி மாறி ஓட்டு போட நினைத்த எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், நான்கு பேர், இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - தி.மு.க., சார்பில், தலா ஒருவர் என மொத்தம், ஏழு பேர் போட்டியிடுகின்றனர். சட்டசபையில் உள்ள, 234 எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.தற்போது, தேர்தலை புறக்கணிப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளதால், ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, தேவைப்படும் எம்.எல்.ஏ., எண்ணிக்கை குறையும்.

தேர்தல் நடைமுறை குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில், பதிவான ஓட்டுகளில், செல்லத்தக்க ஓட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே, ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தேவை என்ற விவரத்தை தெரிவிக்க முடியும்.
வீடியோவில் பதிவு:

ஓட்டுப்பதிவு முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டுப்பதிவு அறையில், வேட்பாளர், தனக்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள், அதிகாரப்பூர்வ ஏஜென்ட் ஒருவரை, நியமித்துக் கொள்ளலாம்.எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டை, ஓட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன், ஓட்டுச் சீட்டில், யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற விவரத்தை, கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட்டிடம் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால், அது, செல்லாத ஓட்டாக கருதப்படும். கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட் தவிர, மற்றவரிடம் காட்டினாலும், அந்த ஓட்டு செல்லாததாக கருதப்படும். ஏஜென்ட்டிடம் காட்டிய பிறகு, ஓட்டு சீட்டில் திருத்தம் செய்தாலும், அந்த ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும்.

கண்காணிப்பு:
கட்சி ஏஜென்ட்கள் அமர, தனி இருக்கைகள் போடப்படும். ஒவ்வொருவருக்கும் நடுவில் தடுப்பு அமைக்கப்படும். வேட்பாளரின் ஏஜென்ட், யாரெல்லாம் ஓட்டளிக்க வருகின்றனர் என்பதை கண்காணிப்பர்.எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஓட்டளிக்க வேண்டும் என, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போட வருபவர், ஓட்டுச் சீட்டை பெற்று, அங்கு வழங்கப்படும், ஊதா வண்ண, "ஸ்கெட்ச்' பேனாவால், வேட்பாளரின் பெயர் முன் கட்டத்தில், "ஒன்று, இரண்டு' என, எண்ணில் எழுத வேண்டும். எழுத்தால் எழுதினால், அந்த ஓட்டு செல்லாது.ஓட்டுச் சீட்டை நிரப்பிய பின், கட்சி ஏஜென்ட்டிடம் காட்டிவிட்டு, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். ஓட்டுச் சீட்டு, வெள்ளை நிறத்தில் இருக்கும். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, கட்சி ஏஜென்ட்கள், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளைப் பார்வையிட அனுமதி உண்டு.ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் வழங்கப்படும் ஓட்டுச் சீட்டில் உள்ள வரிசை எண், வாக்காளர் பட்டியலில் உள்ள, அந்த எம்.எல்.ஏ., பெயர் முன் எழுதப்படும். இதன்மூலம், செல்லாத ஓட்டு விழுந்தால், அதை யார் போட்டிருப்பார், என்பதை கண்டறிய முடியும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், அதன் விவரம் உடனடியாக, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து, அனுமதி கிடைத்த பிறகு, ஓட்டுக்கள் அன்றே எண்ணப்படும்.வேட்பாளர்களுக்கு, வெற்றிக்கு தேவையான முதல் ஓட்டுகள் கிடைக்காவிட்டால், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஓட்டு போட்டவர்கள், இரண்டாவதாக யாருக்கு ஓட்டளித்தனர் என்ற விவரம் கணக்கில் எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், தாங்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை, கட்சி ஏஜென்ட்டிடம் காட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கட்சி மாறி ஓட்டு போட நினைத்த எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தே.மு.தி.க.,வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள், இந்த தேர்தலில் எப்படி ஓட்டுப் போடப் போகின்றனர் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது.பா.ம.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி, புழல் சிறையில் உள்ளார். சிறையிலிருந்து, ஓட்டளிப்பதற்கு வசதியாக, அவருக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது ஓட்டை, சிறைக்காவலர் மூலம், அனுப்பி வைக்கலாம். ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளதால், காடுவெட்டி குரு ஓட்டளிக்க மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தல் கமிஷன், அவருக்கு தபால் ஓட்டை அனுப்பியுள்ளது.




செல்லாத ஓட்டு:


ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் வழங்கப்படும் ஓட்டுச் சீட்டில் உள்ள வரிசை எண், வாக்காளர் பட்டியலில் உள்ள, அந்த எம்.எல்.ஏ., பெயர் முன் எழுதப்படும். இதன்மூலம், செல்லாத ஓட்டு விழுந்தால், அதை யார் போட்டிருப்பார், என்பதை கண்டறிய முடியும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், அதன் விவரம் உடனடியாக, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து, அனுமதி கிடைத்த பிறகு, ஓட்டுக்கள் அன்றே எண்ணப்படும்.வேட்பாளர்களுக்கு, வெற்றிக்கு தேவையான முதல் ஓட்டுகள் கிடைக்காவிட்டால், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஓட்டு போட்டவர்கள், இரண்டாவதாக யாருக்கு ஓட்டளித்தனர் என்ற விவரம் கணக்கில் எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், தாங்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை, கட்சி ஏஜென்ட்டிடம் காட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கட்சி மாறி ஓட்டு போட நினைத்த எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தே.மு.தி.க.,வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள், இந்த தேர்தலில் எப்படி ஓட்டுப் போடப் போகின்றனர் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது.

குருவுக்கு தபால் ஓட்டு :
பா.ம.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி, புழல் சிறையில் உள்ளார். சிறையிலிருந்து, ஓட்டளிப்பதற்கு வசதியாக, அவருக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது ஓட்டை, சிறைக்காவலர் மூலம், அனுப்பி வைக்கலாம். ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளதால், காடுவெட்டி குரு ஓட்டளிக்க மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தல் கமிஷன், அவருக்கு தபால் ஓட்டை அனுப்பியுள்ளது.


 

வெள்ளி, 8 மார்ச், 2013

இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை

இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.சனதா குற்றச்சாட்டு
இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி, மார்ச். 8-

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைபற்றி நேற்று விவாதம் நடந்தது.

விவாதத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் துயரம் என்பது நமது காலக்கட்டத்தில் நடந்துள்ள மிக மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக்கொண்டிருந்த காட்சியும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும். அங்கு வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. 'தேவைப்பட்டபோது இந்தியா செயல்பட தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியா காப்பாற்றி இருக்க முடியும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச்செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

'மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்' என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள்.

(காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முலாயம்சிங் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத்தா ராய் கூறியதாவது:-

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் (பதவியில்) ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.

லாலு பிரசாத்-பகுஜன்சமாஜ்

ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, 'இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தாராசிங் பேசும்போது, 'இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பிரபாகரனின் இளைய மகன் படுகொலை ஆதாரம் வெளியீடு

பிரபாகரனின் இளைய மகன் உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் வெளியீடு




தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை ஆதாரம் வெளியீடு, உயிரோடு பிடிக்கப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடந்த மனித இனப் படுகொலையின் பல்வேறு முகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி வரும் ஆதாரங்களின் மூலமாக, இலங்கையில் ஒரு மனித இனமே படு பயங்கரமாக அழிக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை தெரிவிப்பதாக உள்ளது.
ஏதோ போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது கொல்லப்பட்டதாகவோ இதுவரை இருந்த பாலச்சந்திரனின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை தெளிவாக்கும் விதத்தில இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.
ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் அவன் பார்வை ஏதாவது ஒரு தெரிந்த முகம் கண்ணுக்குப் படாதா என்று தேடுகிறது.
அடுத்த புகைப்படத்தில் அவனது நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து உயிரற்ற உடல் கிடக்கிறது.
இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை எவ்வாறு திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்னும் மனதை பிளக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.

சனி, 10 நவம்பர், 2012

பரிதி படுகொலை கொடுந்துயர் நிகழ்வு : வைகோ அதிர்ச்சி

பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம் : வைகோ அதிர்ச்சி

First Published : 10 November 2012 11:57 AM IST
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஒர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம்; தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், ஃபிரான்ஸ நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளபதிகளுள் பரிதியும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில், வன்னிக்காடுகளில் இடைவிடாத இந்திய-சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே, வான்வெளிக் குண்டு வீச்சுக்கும் பீரங்கி தாக்குதளுக்கும் ஊடே பிரபாகரனோடு நான் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்றபோது, மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்துக்குச் சென்றேன். அங்குதான் ஈழத் தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார்.
1990 ஆம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்சு நாட்டின் புலிகளின்  பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபின், பரிதி கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில், கொடியோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில், கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமான கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்து விட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில், தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும், தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும்வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
விடுதலைப்புலி தளபதி சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்
சென்னை, நவ.10-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 8-ந்தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஓர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம், தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்திரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது 8-ந்தேதி இரவில் கொலைகார நயவஞ்சகர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்களுள் பரிதியும் ஒருவர் ஆவார். 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக் காடுகளில் இடைவிடாத இந்திய- சிங்கள ராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே வான்வெளிக் குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதல்களுக்கும் ஊடே நான் எனது உயிரினும் மேலாக போற்றுகின்ற மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த என் வாழ்வின் பொன்னான அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் கடந்த ஆண்டு மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின்போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போது மனம் பாறையாக கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த ஆண்டு ஜுன் 1-ந்தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்ற நான், மே 30-ந்தேதி பாரீஸ் நகரத்துக்கு சென்றேன். அங்குதான் ஈழத்தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த சந்திப்பு நடந்தது. பரிதியின் துணைவியாரையும், மகனையும், மகளையும் கண்டு உரையாடினேன்.
ஈழத்தில் நான் தலைவரோடு தங்கியிருந்தபோது வன்னிக் காட்டின் வேறொரு பகுதியில் பரிதி செயல்பட்டார். 1990-ம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்க முடியாத நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டபின் பரிதி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில் கொடி யோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில் கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலக்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமாக கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்துவிட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில் தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும் தமிழ்ஈழ விடுதலை லட்சியத்திற்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ்ஈழ லட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.