சுரேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

பால் காய்ச்ச வேண்டியவனுக்கு...பால் ஊத்திட்டோமே! - கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

Comment (5)   ·   print   ·   T+  
2
நெல்லையில் இருந்து சேர்ந்தமரம் செல்லும் வழியெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. பேருந்துப் பயணத்தில் கூட "பார்த்தியாலே...நம்ம சுரேஷ் தங்கமான மனுசமுல்ல... ஊருக்கு நல்லது சொன்னவமுல்ல .. சின்ன பசங்க சேர்ந்து இப்புடி பண்ணிப்புட்டானுங்களே.. நல்ல நேர்மையா இருந்தவம்முல்லா.." என்று நெல்லை சீமையின் வெள்ளந்தி மனிதர்கள் அவர்களுக்குள் பரபரப்பு மாறாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சேர்ந்தமரம் பழைய காவல் நிலையத்தில் இறங்கினால் பொடிநடை போடும் தூரம்தான் சுரேசின் வீடு. கடந்த 10-ம் தேதி காலையில் பிச்சைக்கண்ணு, பிரபாகரன், டேனிஸ் என்ற மூன்று மாணவர்களின் வெறியாட்டத்தில் பலியான, இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷின் வீடு அது. வீட்டு முன்னால் உறவினர்கள் கூடி நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் விலகாத அதிர்ச்சியுடன் நம்மிடம் பேசினார் சுரேஷின் சித்தி கலைச்செல்வி.
“சுரேஷ் எனக்கு மகன் முறை வரும். எப்பையும் ரொம்ப நேர்மையா இருப்பான். அதுக்கு அவனுக்கு கிடைச்ச பரிசுதான், இந்த மரணம்ன்னு தோணுது. குடும்பத்துல யாருகிட்டயும் ஒரு வார்த்தை சத்தமா பேசிக்கூட பார்த்ததில்லை... அவன் கோபப்பட்டும் எங்களுக்கு தெரியாது. சேர்ந்தமரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான், பத்தாம் வகுப்பு வரை படிச்சான். இப்போ அது மேல்நிலைப்பள்ளி ஆகிடுச்சு. பத்தாம் வகுப்பு படிச்சப்போ சுரேஷ்தான் பத்தாம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குனான். இப்பவும் பள்ளிக்கூட போர்டுல சுரேஷ் பேரு இருக்கும். ஒவ்வொரு வருசமும் அவன் படிச்ச ஸ்கூலுல பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் வாங்கும் பசங்களுக்கு 1000 ரூபாய் மேனிக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்துவான். வருசத்துக்கு 50 ஏழை பிள்ளைகளுக்கு சீருடை, பாடநூல்களை கொடுப்பான். வருசாவருசம் தீபாவளிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் இருந்து நன்கொடை கேட்டு கடிதம் வரும். எல்லாருக்கும் தாராளமா கொடுப்பான். இதைப்பத்திக் கேட்டா ஏழை மக்களுக்கு சேவை செய்ற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடாது சித்தின்னு சொல்லுவான்... அவனை போய்..." கண்ணீர் விட்டு கதறுகிறார் கலைச்செல்வி.
அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் சுரேஷின் அத்தை விஜயராணி, ’’அவுங்க அப்பா கூட பிறந்தவ நான். ஆனாலும் என்னை சுரேஷ் அத்தைன்னு கூப்புட்டு தெரியாது. அன்பா அம்மான்னுதான் கூப்புடும். தென்காசி பக்கத்தில் உள்ள ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்துக்கும் நிதி கொடுப்பாரு. எங்க குடும்பத்துக்குன்னே பாரம்பரியமா ஊருக்குள்ள ஒரு மரியாதை உண்டு. சுரேஷின் தாத்தா ராமையா, சேர்ந்தமரம் பஞ்சாயத்து தலைவரா இருந்தாங்க. காமராஜரே இந்த வீட்டுக்கு வந்திருக்காரு. ராமையா தாத்தா காங்கிரஸ் கட்சியிலும் ஜில்லா போர்டு தலைவரா இருந்தாங்க. சேர்ந்தமரம் கூட்டுறவு வங்கியிலும் தலைவரா இருந்தாங்க. சுரேஷின் தாத்தா காலத்துலதான் இங்க துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளியெல்லாம் வந்துச்சு.
எப்போதுமே என்கிட்ட படிக்குற மாணவர்கள் எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வருவேன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. ஒரு விசேச வீட்டுக்கு வந்தாகூட பிள்ளைகள் படிப்பை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க. அதுக்காகவே திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரகுமத் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தாங்க. குழந்தை பிறந்து 3 மாசத்திலேயே கருத்து வேறுபாட்டால சுரேஷின் மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க. அப்போ இருந்தே அவரு பொண்ணு அக்‌ஷயாதான் உலகம்ன்னு வாழ்ந்த மனுசன். பலதடவை இரண்டாவது திருமணம் பண்ண சொல்லியும் அக்‌ஷயாவுக்காக வேண்டாம்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க.
சுரேஷுக்கு கடவுள் பக்தி அதிகம். போன புரட்டாசி சனிக்கிழமைக்கு கூட அக்‌ஷயாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. சனிக்கிழமை நாள் பூரா கோவிலில் ஓடுச்சு. ஞாயிற்றுக் கிழமை காலையில் நிறைய படிக்கனும்ன்னு கிளம்பி போயிட்டாங்க. ஆனால் இந்த சனிக்கிழமைக்கு…? செமஸ்டர் லீவு அப்பவும் பிள்ளைங்க, படிப்புன்னு அதை சுற்றியே அவரு மனசு சுத்திட்டு இருக்கும். எப்பவும் ஸ்டூடண்ட்ஸ் பத்தியே சிந்திச்சுட்டு இருப்பான். இப்போதான் திருநெல்வேலியில் சொந்தமா ஒரு வீடு கட்டுனான். 25-ம் தேதி புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறிச்சவனுக்கு..பால் ஊத்த வைச்சுட்டாங்க பாவிப்பசங்க.." என்று தேம்பி,தேம்பி அழுதார்.
கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்‌ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.
தமிழகம் முழுவதும் 21-ம் தேதி வேலைநிறுத்தம்.....
குமரி மாவட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் சேர்ந்து சுரேஷ் படுகொலையை கண்டித்தும், கல்லூரி பாடத்திட்டத்தில் பண்பாட்டு கல்வியை சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் கொடுத்த மனுவில் சுரேஷின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சுரேஷின் படுகொலையை கண்டித்து வரும் 21-ம் தேதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன் முடியல....
சுரேஷ் வீடு கட்டுவதற்காக வாங்கி இருந்த வங்கி கடன் லட்சங்களில் இருக்கிறது. அக்‌ஷயாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருக்கிறது. அரசும், கல்லூரி நிர்வாகமும் வழங்கும் நிவாரணமே, அவரது குடும்பத்தின் மன ரணத்தை ஓரளவாவது ஆற்றும்.

திங்கள், 24 ஜூன், 2013

மருத்துவ படிப்புக்கு உதவுமாறு ஏழை மாணவன் வேண்டுகோள்

மருத்துவ படிப்புக்கு உதவுமாறு ஏழை மாணவன் வேண்டுகோள்


ஊத்தங்கரை: அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க, உதவுமாறு ஏழை மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊத்தங்கரை அடுத்த, சோளாக்காப்பட்டியை சேர்ந்தவர் சுமதி, 40, சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஏழ்மையான சூழ்நிலையிலும் சுமதி தன் மகன் சுரேஷ், 17, மகள் சுஷ்மிதா, 15 ஆகியோரை அதியமான் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தார்.

இவர்களுடைய ஏழ்மை நிலையை பார்த்து, அதியமான் மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமால் முருகன், சுரேஷ், சுஷ்மிதாவை பள்ளியில் இலவசமாக சேர்த்து கொண்டார். சுரேஷ், எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 487 மதிப்பெண் பெற்று பள்ளியில், மூன்றாவது மாணவராக தேர்ச்சி பெற்று, ப்ளஸ் 2 தேர்வில்,1,173 மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கு, கட் ஆப் மதிப்பெண், 198.25 பெற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வரும் சுமதி, தன் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மை நிலை காரணமாக, மகனை படிக்க வைக்க முடியாமல், வேதனை அடைந்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் கூறியது:என் தந்தை இறந்து விட்டதால், என்னையும், என் தங்கையையும் தாய் மிகவும் கஷ்டபட்டு படிக்க வைத்தார். ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், எங்களுக்கு இலவசமாக கல்வி அளித்தது. தற்போது, எனக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.ஆனால், ஏழ்மை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில், தாராள மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள், என் மருத்துவ படிப்புக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மாணவன் சுரேசுக்கு உதவி செய்ய விரும்புவர்கள், 96297 01481 என்ற மொபைல் ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேசு . நூல் ஆய்வு : கவிஞர் இரா .இரவி .

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேசு . நூல் ஆய்வு  : கவிஞர் இரா .இரவி .

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு பதிவு செய்த நாள் : 24/09/2012

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !
நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501


நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய 
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .    
திரு  பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத்  தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு    பெருஞ்சித்திரனார்    ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர்  அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .
வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை  மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் 
திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த  ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .
திருக்குறள் பற்றி  ம .பொ.சி. அவர்களின்  கருத்து நூலில் உள்ளது .
” பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி ” என்று கூறுகிறார் வள்ளுவர் .
இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது .”பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள்  நம்மைக் காட்டும் .”

பாவலரேறு  பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !
” திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று  கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் .”   
திருக்குறளை  முதன் முதலில்  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து  கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

” உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை .”

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .
வள்ளுவர் தந்த திருமறைத் – தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார்  பார்வையில் திருவள்ளுவம் .
வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத்தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம்  அதுவே .
தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .
கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம்  அல்லது பெரிய  புராணத்தில்  200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில்   
திருக்குறள் .
ஒரு பெரிய பாராங்  கல்லை விட  ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .
தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .
திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல  முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ்  
அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!