பாலச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 அக்டோபர், 2013

பாலச்சந்திரனை இலங்கைப் படை சுட்டுக் கொன்றது:இதழாளர்கள் மாநாடு

பாலச்சந்திரனை இலங்கை இராணுவம்தான் சுட்டு க் கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் சுட்டு கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
கொழும்பு, அக். 12–
சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரையாற்றும் போது கூறியதாவது:–
2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே, படுகொலை செய்தனர்.
போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது.
அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

புதன், 27 மார்ச், 2013

கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்

கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
சென்னை, மார்ச். 27-

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம்  சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடந்த போது அந்த 5 பாதுகாவலர்களையும் பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்ப வைத்தார். அவர்களில் ஒரு பாதுகாவலர் கடந்த வாரம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் நடத்திய  போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

பாலச்சந்திரன் நன்றாக படிப்பான். புத்தகம் வாசிப்பதில்தான் அவன் அதிக நேரத்தை செலவிடுவான். அவனுக்கு பெரும்பாலும் தனிமையில் இருப்பதுதான் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது. சார்லஸ் போன்று அவனிடம் போராட்ட குணம் இருந்தது இல்லை. தலைவர் எங்களை ஈழத்தில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பிய போது சிங்கள ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் குடும்பத்தினரின் படங்கள் இருப்பதை அறிந்தோம்.

தலைவர் குடும்பத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அவர்கள் வெறி கொண்டு அலைந்தனர். அவர்களுக்கு கருணா பக்க பலமாக இருந்தார். பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டபோது,  அங்கு கருணா இருந்துள்ளார். அவர்தான் பாலச்சந்திரனை பிரபாகரன் மகன் என்று அடையாளம் காட்டியுள்ளார். அவரது கண் முன்னிலையில்தான்  பாலச்சந்திரன்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

முதலில் எங்களுக்கு இது தெரியவில்லை. ஜெனீவா நகரில் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து  பேசிய போதுதான் கருணாவின் துரோகம் தெரிந்தது. பாலச்சந்திரனுக்கு  போர் பற்றி எதுவுமே தெரியாது. அப்பாவியான அந்த பாலகனுக்கு ஏதோ சாப்பிட கொடுத்து விட்டு சுட்டிருக்கிறார்கள். ஒரு பிஞ்சு உயிரை அருகில் நின்று சுட்டு பறித்தவர்கள் எந்த அளவுக்கு கொடியவர்களாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் தலைவர் தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் உலக மக்களின்  எழுச்சி தமிழ் ஈழத்தைப் பெற துணை நிற்கும் என்றார். தற்போது அதுதான்  நடக்க தொடங்கியுள்ளது. ஈழத்தில் இருந்து வெளியேறிய நாங்கள் தற்போது ஒன்று சேர தொடங்கியுள்ளோம். முக்கிய மூத்த தலைவர்கள் பலர் உயிருடன் இருப்பது எங்களுக்கே இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

நாங்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்த போது மீண்டும் தலைவரிடம் இருந்து உத்தரவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்றனர்.  இப்போது நாங்கள் அந்த உத்தரவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அந்த விடுதலைப்புலி பாதுகாவலர் கூறினார்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா...மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விளங்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.

அதனுள் ஒரு மரப்பலகை.

அந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்.

சந்தையில் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டவன் போல பரிதாபமான தோற்றத்துடன், சட்டை இல்லாத வெற்று உடம்புடன், பார்த்த உடனேயே அள்ளி, அரவணைத்து தூக்கி கொஞ்ச தோன்றும் பால்மணம் மாறாத குழந்தை முகத்துடன் அந்த பாலகன் அமர்ந்து இருக்கிறான்.

கறுப்பு கலரில் கால்சட்டை, தோளில் கந்தலாய், கசங்கிப் போன, அணிந்து கொள்ள பிடிக்காமல் போட்டிருப்பது போல ஒரு லுங்கி.
கையில் பிஸ்கெட் போன்ற ஒன்றை வாயில் வைத்திருக்கிறான் ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை என்பதை பரிதாபமான அவனது முகம் காட்டுகிறது. ஏதோ ஒரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம், அம்மா, அப்பா முகம் கூட வேண்டாம், ஏதாவது ஒரு தெரிந்த முகம் தென்படாத என்ற ஏக்கம் கண்களில் அலை பாய்கிறது.
அடுத்த படத்தில் அவன் கண்களில் ஒருவித பதட்டம் தென்படுகிறது, ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கும் சிறுவனின் அந்த பார்வையே நம்மை திகைக்கவைக்கிறது.
அடுத்த வினாடி அவன் கைநீட்டி தொட்டுவிடும் தூரத்தில் இருந்து வெடித்த சிங்கள சிப்பாயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மார்பை துளைக்க, அப்படியே மல்லாந்து சாய்கிறான், மண்மீது கைகால் இழுத்தபடி சரிகிறான், "இதற்குதான் கூட்டிவந்து பிஸ்கட் கொடுத்தீர்களா?' என்பது போல கையறு நிலைகொண்டு பரிதாபமாக பார்க்கிறான், சிப்பாயின் துப்பாக்கி மீண்டும் சீறுகிறது, மீண்டும் மீண்டும் சீறுகிறது, தொடர்ந்து நான்கு முறை அந்த பாலகனின் உடலை சல்லடையாக துளைக்கிறது, நிறைய கனவுகளுடன் வளர்ந்த அந்த சிறுவன் சின்ன, சின்ன துள்ளலுக்கு பிறகு செத்து போகிறான்.
இறந்து போன அந்த சிறுவன் பெயர் பாலசந்திரன்.
விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன்.
மூன்று நாட்களுக்கு முன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட "கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா' என்ற தலைப்பில் வெளியிட்ட புதிய ஆவண படத்தில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பார்த்தவர்கள் அத்தனைபேர் இருதயத்தையும் வெட்டிப் பிளந்தது போன்ற உணர்வு.
கொஞ்சமும் மனிதாபிமானமற்ற மன்னிக்கமுடியாத இந்த செயலை செய்தததன் மூலம் இலங்கை மன்னிக்கமுடியாத மாபெரும் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை மீது சர்வதேச பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற்ற பிறகே பொருளாதார தடையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மனிதகுலத்தின் மனசாட்சி இன்னுமா விழிக்கவில்லை, உலகத்தில் நீதி மொத்தமாக செத்து விட்டதா? இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா? ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட இவர்கள் நடத்திய இந்த இனப்படுகொலைதான் மிகவும் கொடூரமானது, என்னால் தாங்க முடியவில்லை என் இதயத்தை வெட்டி கூறுபோட்டது போல உணர்கிறேன் என்று மனம் வெதும்பியுள்ளார் வைகோ.
இல்லை இவையெல்லாம் நம்பமுடியாது என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருடன் நான்தான் திருடினேன் என்று எப்போது ஒத்துக்கொண்டுள்ளான், அது போலத்தான் இவர்கள் கூற்றும்.
சில நிமிடங்களே ஒடும் இந்த ஆவண படத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையின் பக்கம் மட்டுமே நின்று தயாரித்துள்ளதாக கூறுகிறார் கெலம் மெக்ரே.
ஆவண படத்தை பார்த்த பல தடயவியல் நிபுணர்களில் ஒருவரான டெரிக் பவுண்டர் இந்த படத்தில் எந்த பகுதியிலும் பொய்யில்லை, சிறுவன் பாலசந்திரன் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பிறகும் எடுத்த நான்கு படங்களுமே ஒரே டிஜிட்டல் கேமிராவில் ஒரே நாளில் ஒரு சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்த இடத்தின் நிறத்தையும், அது உடலை சிதைத்துள்ள விதத்தையும் பார்க்கும் போது மிக அருகில் நின்று சிறுவனை குரூரமாக கொன்றிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது என்று சொல்லியுள்ளார்.
நாங்கள் நடத்தியது மனிதாபிமானப் போர்தான், பிரபாகரன் குடும்பத்தை பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம், போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் காயம்பட்டே பிரபாகரன் இறந்தார். அவரது மனைவி, மகன் பற்றியெல்லாம் எங்களுக்கு தகவல் தெரியாது, பிரபாகரன் உடலையே கருணா அடையாளம் காட்டித்தான் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் ராஜபக்ஷே சொன்னது அத்தனையும் பொய், புளுகு என்பதை இந்த படங்கள் இப்போது உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருதுகிறார்கள்.
இது வெறும் கருத்து மட்டுமல்ல, உணர்வு, ஒரு தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு, ஒரு சின்னஞ்சிறு குருத்து காரணமேயில்லாமல் இனவாத அடிப்படையில் சாய்க்கப்பட்டதே என்ற வேதனை.
மனதிலும், கண்களிலும் ரத்தத்தை வரவழைத்த இந்த சம்பவம் வெறும் அனுதாப அலையோடு நின்றுவிடக் கூடாது, விரைவில் கூடவிருக்கும் ஐ.நா சபையில் எதிரொலிக்க வேண்டும், மன்னிக்கமுடியாத போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று இலங்கைக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் இதில் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய தேதிக்கு அனைவரது கருத்தாகும்.
- எல்.முருகராசு
Bookmark and Share
 









செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

பிரபாகரனின் இளைய மகன் படுகொலை ஆதாரம் வெளியீடு

பிரபாகரனின் இளைய மகன் உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் வெளியீடு




தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை ஆதாரம் வெளியீடு, உயிரோடு பிடிக்கப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடந்த மனித இனப் படுகொலையின் பல்வேறு முகங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி வரும் ஆதாரங்களின் மூலமாக, இலங்கையில் ஒரு மனித இனமே படு பயங்கரமாக அழிக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை தெரிவிப்பதாக உள்ளது.
ஏதோ போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது கொல்லப்பட்டதாகவோ இதுவரை இருந்த பாலச்சந்திரனின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை தெளிவாக்கும் விதத்தில இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.
ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் அவன் பார்வை ஏதாவது ஒரு தெரிந்த முகம் கண்ணுக்குப் படாதா என்று தேடுகிறது.
அடுத்த புகைப்படத்தில் அவனது நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து உயிரற்ற உடல் கிடக்கிறது.
இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை எவ்வாறு திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்னும் மனதை பிளக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.