போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால், இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில் இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு. இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா? அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா? ஆராய்ந்து முடிவெடுப்போம்!
‘பெருஞ்சோறு வழங்குதல்’ என்றால் போர் வீரர்கள் படைக்குப் புறப்படும் முன்னர், இறந்த போர் வீரர்களை நினைந்து போற்றி, இருக்கின்ற வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் வகையில் அனைவருக்கும் விருந்து வழங்குவதே! தமிழ் ஈழப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இவ்வாறு விருந்து வழங்கிய செய்தியை நாம் படித்திருக்கிறோம். இது வழி வழி வந்த தமிழர் பண்பாடே. மூத்தோரையும் இறந்த முன்னோரையும் வணங்குவது தமிழர் பண்பாடு.
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களைப் போற்றி நினைவு கூரும் வழக்கம் எல்லா நாடுகளிலும் காணப்படுவதே. ஆனால், பழந்தமிழர், இறந்த வீரர்களைப் புதைத்து அவ்விடத்தில் கல்நட்டு, அக்கல்லில் அவர்களுடைய பெயர்களையும் புகழ்ச்செயல்களையும் பொறித்து வைப்பர். இம்முறையைப் பின்பற்றியே பிற நாட்டுக் கல்லறைகளிலும் இறந்தவர் பெயர் விவரங்களுடன் குறிப்பையும் பொறிக்கும் வழக்கம் வந்திருக்கலாம்.
ஆனால், அவர்களை வழிபட்டுப் பெருஞ்சோறு வழங்குவது தமிழர் பண்பாடாகும்.
துறக்கத்திற்குச் – சொர்க்கத்திற்குச் -சென்ற வீரர்கள் நினைவைப் போற்றுவது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே, போரில் வாகை சூடுவோம் என்ற நம்பிக்கையை போர்க்களம் புகும் வீரர்கள் பெறுகிறார்கள். நடுகற்களை வணங்குவதன் மூலம் நாளை நாமும் வணங்குதற்குரிய நிலையை அடைய வேண்டும் என்ற வீர உணர்வை வணங்கும் வீரர்கள் பெறுகிறார்கள்.
பெருஞ்சோறு வழங்குவதைத் தமிழ் இலக்கணம் வஞ்சித்திணையின் உட்துறையாக வகுத்துள்ளது. இதனைப் ‘பெருஞ்சோற்று வஞ்சி’ என்றும் குறிப்பர். நமக்குக் கிடைத்த மூத்த இலக்கணமாம் தொல்காப்பியம், இதனைப் ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ என்று குறிப்பிடுகிறது.
வெற்றியை ஈட்டித் தருவர் என வாழ்த்தி வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குவதைப் புறப்பொருள் வெண்பாமாலை (58),
திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்
பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று
எனக் கூறுகிறது.
எடுத்துக்காட்டுஆக
இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய – வயவர்
பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
இறும் முறையால் எண்ணி இறை
என்னும் பாடலையும் தருகிறது.
இயவர் என்றால் கருவியிசைக் கலைஞர்கள். அவர்கள் இசைத்துப் புகழும்படியும் கொட்டும் முரசு ஆர்ப்பரிக்கும்படியும் வரிப்புலி போன்ற வீரர்கள் பெறத்தகும் முறைப்படி மன்னன் பெருஞ்சோறு வழங்கினான் என்பதாகும்.
எனவே, பெருஞ்சோறு வழங்குவது என்பது பொதுவான பண்பாட்டுப்பழக்கமாக இருந்துள்ளது.
துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
முதியர்ப் பேணிய உதியன் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை
என்னும் பாடல் வரிகள் (மாமூலனார், அகநானூறு 233 அடிகள் 7-9) பெருஞ்சோறு கொடுக்கும் வழக்கத்தை நமக்குத் தெரிவிக்கிறது.
இறந்த வீரர்கள் அருள் புரிந்து துணை நிற்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. எனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்னும் துணிவை வீரர்கள் பெறுகின்றனர். படை வீரர்களுக்கு விருந்து அளிக்கும் வேந்தன் தானும் அவர்களுடன் விருந்துண்டு மகிழ்கிறான். முதல் நிலை படைத்தலைவர் முதல் கடைநிலை வீரன் ஈறாக அனைவரையும் மதித்து உண்டு உரையாடுகிறான். நாட்டு மன்னருடன் உண்ணும் சமன்மைச் சிறப்பு வீரர்களுக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. இதனால் வாழ்வின் பயனைப் பெற்றதாக எண்ணி உற்சாகம் கொள்கிறார்கள்.
ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே போர் நிகழ்ந்த பொழுது இரு தரப்பார்க்கும் பெருஞ்சோறு வழங்கிய மன்னன் உதியன் சேரலாதன். தன் நாட்டுப்படை வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடப்படும் வேந்தன் சேரல். இவன் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவன். எனவே, இருவரும் வெவ்வேறு என உரை விளக்கத்தில் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் மாமூலனார் பாடல் ஆராய்ச்சியில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களும் கூறியுள்ளனர். எனவே, இங்கே குறிப்பிடப்படும் பெருஞ்சோறு வழங்கல் பிற நாட்டுப்போர்க்களத்தில் வழங்கப்பட்டதல்ல எனத் தெளியலாம்.
அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த
பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து
(சிலப்பதிகாரம்,26: 48-49)
என இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். இங்கேயும் படைமறவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அளிக்கும் பெருஞ்சோற்று விருந்துதான் கூறப்பட்டுள்ளது.
பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை
(சிலப்பதிகாரம், 23 : 55)
என்னுமிடத்திலும் இளங்கோ அடிகள் பொதுவான பெருஞ்சோற்று விருந்தையே குறிப்பிடுகிறார்.
இப் படையல் பழக்கத்தைத்தான் பின்னால் வந்த ஆரியர்கள், தங்களிடம் அரிசி, காய்கனி, பணம், செல்வம் முதலானவற்றைச் சேர்த்தால் முன்னோர்களிடம் சேர்ப்பதாக ஏமாற்றும் மூடப்பழக்கத்தைப் புகுத்தி விட்டனர். இப்பழக்கத்தை நிறுத்தும் காலம் எப்பொழுது வருமோ?
தம் நாட்டு வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குதலையே பிற நாடுகளுக்கிடையே நடந்தபோரில் இரு தரப்பாருக்கும் உணவு வழங்கும் கொடைச்செயலாகவும் பின்பற்றி உள்ளனர். அதைக் கூறுவதுதான்,
அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக்கொண்ட பொலம் பூந்தும்மை
ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(முரஞ்சியூர் முடிநாகனார், புறநானூறு 2, அடிகள் 13-16)
என்னும் பாடலடிகள்.
இதனையே இளங்கோ அடிகளும்,
ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்
என்கிறார்.
இப்பாடல்களில் குறிக்கப் பெறும் ஐவரையும் ஈரைம்பதின்மர் – அஃதாவது நூற்றுவரையும் பஞ்ச பாண்டவராகவும் கெளரவர் நூற்றுவராகவும் உரையாசிரியர்கள் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர். இப்பாடலடிகளுக்கான வெவ்வேறு கோணங்களைப் பார்ப்போம்.
ஐவர் = பஞ்ச பாண்டவர்
ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்
சேர அரசன் உதியன் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக் கொண்டபோது இந்தச் பெருஞ்சோறு வழங்கினான் என்பதே முதல் கோணம்.
ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்
நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)
பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான். இது மற்றொரு கோணம்.
சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் வட நாடு சென்றபொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னனும் அவன் படைகளும் கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதகர்ணி என்னும் சமசுகிருதப் பெயரே நூற்றுவர் கன்னர் எனத் தமிழாக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஏறத்தாழக் கி.மு. 235 முதல் கி.பி.220 வரையில் நடு இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டவராவர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். இந்நூற்றுவர் கன்னரைத்தான் குறிப்பிடுவதாக மற்றொரு சாரார் குறிக்கின்றனர். குறிப்பிட்டுள்ள பாடலடிகள் மூலம் இரு தரப்பு மன்னர்களும் இறந்துவிட்டனர். எனவே, சிலப்பதிகாரத்தில் துணை புரிந்ததாகக் கூறப்படும் மன்னர்கள் அதற்கு முன்னரே இறந்துவிட்டதாகக் கூறுவது பொருத்தமாக இல்லை. எனவே, இக்கருத்து ஏற்கும் படி இல்லை.
வளைவு வலைப்பூத் தளத்தில் வேறு செய்தி கூறப்பட்டுள்ளது. “சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், “நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். “அவனைப் போட்டுச் சாத்திட்டான்” என்று இன்றைய தமிழ் வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? ….. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவர் என்பதையும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும் என இவ்வலைப்பூ தெரிவிக்கிறது. எனவே, மேற் குறித்தவாறு இவ்வடிகள், சேரன் செங்குட்டுவனுக்கு உதவிய மன்னர்கள் நூற்றுவர் கன்னரைக் குறிப்பிடவில்லை என்பதற்கு இவ்வாய்வுக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.
அப்படியானால் ஐவரைப் பஞ்ச பாண்டவராகவும் நூற்றுவரைக் கெளரவர் நூறு பேராகவும் கருதுவதில் என்ன தவறு என்ற வினா எழுகிறதா? பாரதப்போர் என்பது கற்பனையே! இக்கற்பனைக் கதை அடிப்படையில் வரலாற்றுச் செய்தியைத் திரிக்கக்கூடாது என்பதுதான் வரலாற்று ஆய்வர்கள் கருத்து.
வாதத்தற்காகப் பாரதப்போர் நடைபெற்றது உண்மை என்றே கொள்வோம். கற்பனைக் கதையின் காலத்தையும் கற்பனையாகக் கி.மு. 3000 என்பதுபோல் காலத்தை முன்னுக்குத் தள்ளிக் கூறுகின்றனர். உதியன் சேரலாதன் காலத்துடன் ஒப்பிடும் பொழுது இக்காலம் பொருந்தி வரவில்லை. கி.மு.400இற்குப்பிந்தையதே பாரதக் காலம் என்கின்றனர். இவ்வாறு பார்த்தாலும் பொருந்தி வரவில்லை. எல்லாவற்றிலும் முதன்மையானது பாரதப்போரில் பாண்டவர்களின் பிள்ளைகள் அனைவரும் இறந்தாலும் பாண்டவர்கள் ஐவரும் இறக்கவில்லை. கெளரவர்கள் நூறுபேரும் இறந்துள்ளனர். மேற்குறித்த பாடலடிகளில் இரு தரப்பும் பொருது போர்க்களத்தில ஒழிந்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க உயிரோடு இருந்த பாண்டவரை எப்படி இந்த அடிகள் குறித்ததாகும்?
எனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உணவு வழங்கியது பாரதப் போரில் அல்ல என்பதும் பெருஞ்சோறு வழங்கல் தமிழ் மன்னர்களின் பொதுவான பண்பாடு என்பதும் தெளிவாகின்றன.
எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல் கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம் நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது. எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?
அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.
இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.
பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!
11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.
ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.
இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
அது மட்டுமல்ல. தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார். கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.
காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலாசெய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன. பாசக தலைவர்களும் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?
இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும். பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர். மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.
“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக, தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.