குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜனவரி, 2013

முதல்வர் மறு ஆய்வு செய்ய வேண்டும்!


முதல்வர் மறு ஆய்வு செய்ய வேண்டும்!

கல்வியாளரும், சமூக ஆர்வலருமான டாக்டர். வி.வசந்திதேவி: தமிழகத்தில் பெண்கள், சிறுவர்கள், தலித் மக்கள் போன்ற, எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களின் நலனுக்காக, ஏற்படுத்தப்பட்ட பல சட்ட அமைப்புகளையும், கண்காணிப்பு அமைப்புகளையும், மாற்றியும், திருத்தியும் அமைக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.உதாரணமாக, தமிழக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தலைவர் கிடையாது. பெண்களுக்கான, மாநில ஆணையத்துக்கு தலைவர் மட்டுமே செயல்படுகிறார். உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தும், குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படவில்லை. இவையெல்லாம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், உரிய நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.
பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக, கடும் தண்டனைகள் மட்டுமல்லாது, நீண்ட காலத் திட்டமாக, ஆணாதிக்க கலாசார சிந்தனையை மாற்றி, பெண்கள் பற்றிய புரிதலும், மனிதாபின மானமும் கொண்ட, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். அதுவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாத மாநிலமாக, தமிழகம் மாறுவதற்கு அடித்தளமாக அமையும். மனிதநேய மற்றும் ஜனநாயக உணர்வுகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது; ஊடகங்களில் ஆண்களின் இன்பத்துக்கான பொருளாக பெண்களை சித்தரிப்பதை தடுப்பது; வன்முறையை பெருமைக்குரிய விஷயமாகக் காட்டுவதைத் தடுப்பது; சட்ட கண்காணிப்பு அமைப்புகளையும், அரசியலமைப்புகளையும் பலப்படுத்துவது; இவற்றை அரசியல் சார்பற்ற, தன்னாட்சி அமைப்புகளாக மாற்றுவது போன்ற, முற்போக்கு நடவடிக்கைகள் மூலம், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும்.முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும், மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம் இரண்டும், சீர்திருத்தத்துக்கு வழிவகுப்பவை அல்ல என்ப தோடு, மனித உரிமையை அடித்தளமாக கொண்ட, ஒரு பண்பட்ட ஜனநாயக நாட்டின் கொள்கையைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை. அதேபோல, குண்டர் தடுப்பு சட்டம் என்பது, அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கவும் கூடும். இவற்றை, முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.




செவ்வாய், 25 டிசம்பர், 2012

குழந்தைகள் நிகழ்ச்சிகளில் அதிக க் கவனம் தேவை:


 
 
 
 
குழந்தைகள் நிகழ்ச்சிகளில் அதிக க் கவனம் தேவை:   தொலைக் காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி
 
புதுடில்லி: "குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது' என, "டிவி' சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
"டிவி' சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுது போக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர்.
பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இது போன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுது போக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, "டிவி' சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

செவ்வாய், 20 நவம்பர், 2012

சிரியா குழந்தைகளைக் கடுங்குளிரில் இருந்து காப்பாற்றுங்கள்.

தலைப்பில் உள்ள  (இ)லட்சம் என்ற சொல்லை எடுத்து விடுங்கள். அல்லது ௨ இற்குப் பின் உள்ள சுழிகளை நீக்கி விடுங்கள்.  இதே போன்று செய்திகளிலும் எண்களைச்சரியாக எழுத்தில் அல்லது இலக்கத்தில் குறிப்பிடுங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



கடும் குளிரில் பாதிக்கப்போகும் 2,00,000 லட்சம் சிரியா  ஏதிலி(அகதி)களின் குழந்தைகளை க் காப்பாற்ற வேண்டுகோள்
கடும் குளிரில் பாதிக்கப்போகும் 2,00,000 லட்சம் சிரியா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டுகோள்
திரிபோலி, நவ. 20-
சிரியாவின் உள்நாட்டுக்கு போருக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனன் மற்றும் ஜோர்டன் நாடுகளின் எல்லையில் அகதிகளாக தங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கான போதுமான தங்குமிடமும் உடைகளும் இன்றி தவித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது மிகக் கடும் குளிர் காலம் நெருங்கி வருகிறது. இதிலிருந்து அவர்களை காக்க போதுமான உதவிகள் தேவை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தங்கியுள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தொண்டு நிறுவனத்தினர் எச்சரித்துள்ளனர்.

டமாஸ்கஸ், அலெப்போ என முக்கிய நகரங்களில் அதிபர் - புரட்சிப் படையினரிடையே தீவிர சண்டை நடக்கிறது. இதனால் இதுவரை 4,00,000 லட்சம் பேர் அகதிகள் என்பது இந்த வருட இறுதிக்குள் அது 7,00,000 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கிறது. 
 
Tuesday, November 20,2012 01:06 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
தலைப்பில் உள்ள (இ)லட்சம் என்ற சொல்லை எடுத்து விடுங்கள். அல்லது ௨ இற்குப் பின் உள்ள சுழிகளை நீக்கி விடுங்கள். இதே போன்று செய்திகளிலும் எண்களைச்சரியாக எழுத்தில் அல்லது இலக்கத்தில் குறிப்பிடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 

வெள்ளி, 16 நவம்பர், 2012

பெற்றோரே எச்சரிக்கை : குழந்தைகளுக்கும் நீரிழிவு

பெற்றோரே எச்சரிக்கை : 

குழந்தைகளுக்கும் நீரிழிவு

First Published : 16 November 2012 03:14 PM IST
நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் நோய்களில் முதன்மையானதாக விளங்குவது நீரிழிவு நோயாகும். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதே அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.
கோயம்பத்தூரில், 12ம் வகுப்பு மாணவிக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த மாணவி மட்டுமல்ல, கோவையில் ஏராளமான குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உணவுகளை அதிகம் உண்ணாமல், குளிர்பானங்களை அதிகமாக அருந்தும் குழந்தைகளுக்குத்தான் நீரிழிவு நோய் எளிதில் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
ஒன்றரை வயது சிறுவனுக்குக் கூட நீரிழிவு நோய் இருப்பது உறுதி செகய்யப்பட்டுள்ளதாகக் கூறும், கோயம்பத்தூர் நீரிழிவு அறக்கட்டளையின் மூத்த மருத்துவர் வி. சேகர், ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு அவனது பெற்றோர் எப்போதும் குளிர்பானங்களை அதிகமாக கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
முறையான உணவும், தினமும் செய்யும் உடடற்பயிற்சியும் நீரிழிவில் இருந்து காக்க உதவும்.

திங்கள், 15 அக்டோபர், 2012

பக்குவமாய்ச் சொல்லுங்கள்!



சொல்கிறார்கள்

"பக்குவமாய்ப் பதில் சொல்லுங்கள்!'

குழந்தைகள் மன நல நிபுணர் கண்ணன்: பொதுவாக, 14 வயது வரையுள்ள குழந்தைகள் தான், அதிகமாக கேள்விகள் கேட்பர். எல்லா குழந்தைகளும், தன் பெற்றோர் மூலமாகவே, அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, குழந்தைகளிடமும், அவர்கள் முன், மற்றவர்களிடமும் எந்தெந்த விஷயங்கள் பேசலாம், அவர்கள் முன்னிலையில், "டிவி'யில் என்னென்ன விஷயங்கள் பார்க்கலாம் என்பதில், வீட்டினர் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர் தவிரவும், உறவினர்கள், நண்பர்கள், சினிமா என, குழந்தைகள் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தில், நல்லது, கெட்டது என, அனைத்தையும் கடக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, "நாப்கின்னா என்னம்மா?' என்று கேட்டால், அதிர்ந்து விடாதீர்கள். ஏதோ ஒரு சூழலில், குழந்தைக்கு, அந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்தப் புதிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால், கேட்கிறது என்பதை, பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு குழந்தைகளுக்குத் தேவை, தான் அறிந்த அந்த புதிய சொல்லைப் பற்றிய விளக்கம் தான். அதற்கு மேல், அதைப் பற்றி அவர்கள் ஆராய மாட்டார்கள். இதுவே, "அடி பின்னிடுவேன், ஒழுங்கா படி...' என, எதிர்மறையாக நடந்து கொண்டால், அந்த வார்த்தைப் பற்றிய குறு குறுப்பு அதிகரிக்கும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் வயதைப் பொறுத்து, விவரம் சொல்ல வேண்டியது அவசியம். பொதுவாக, 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், பாடப் புத்தகங்கள், இணையம், நண்பர்கள் என, விரிந்திருக்கும் அவர்களின் வட்டத்திலேயே, தங்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி, விளக்கங்கள் பெற முயல்வர்.பெற்றோரிடம், பர்சனலான கேள்விகள், அதிகம் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால், அதற்கான உண்மையான விளக்கத்தை, நாகரிகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் பதில், அவர்களை தெளிவுபடுத்துவதுடன், உங்கள் மேல், மரியாதை வரும்படியும் இருக்க வேண்டும்.