எழுத்தாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 டிசம்பர், 2012

எழுத்தாளர் செல்வராசின், "தோல்' புதினத்திற்குச் சாகித்ய அகடமி விருது


எழுத்தாளர் செல்வராசின், "தோல்'  புதினத்திற்குச்  சாகித்ய அகடமி விருது

புதுதில்லி: இந்தாண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர், டி.செல்வராஜ் எழுதிய, "தோல்' என்ற நாவலுக்கு, விருது கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன.தமிழில் திருநெல்வேலியை சேர்ந்த, டி. செல்வராஜ் எழுதிய, "தோல்' நாவல், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.
தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்து, "தோல்' நாவலை எழுதியுள்ளார்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

kannada writer narasimmayyaa expired: கன்னட எழுத்தாளர் நரசிம்மையா காலமானார்

கன்னட எழுத்தாளர் நரசிம்மையா காலமானார்

First Published : 26 Dec 2011 04:41:29 PM IST


பெங்களூர், டிச.26: கன்னட புலனாய்வுக் கதை எழுத்தாளர் என். நரசிம்மையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.சுவாச பிரச்னை காரணமாக 2 வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.அவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மனைவிகள் உள்ளனர்.சித்ரதுர்காவில் 1925-ம் ஆண்டு பிறந்த இவர் 500-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.கன்னட சாகித்ய பிரசாதி, ராஜ்யோத்சவ் பிரசாதி மற்றும் அத்திமபீ பிரசாதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார்

செவ்வாய், 29 நவம்பர், 2011

அசாமிய எழுத்தாளர் இந்திரா கோசுவாமி காலமானார்


அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி காலமானார்

First Published : 29 Nov 2011 09:12:15 AM IST


புதுதில்லி, நவ.29: புகழ்பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (வயது 69) இன்று கௌஹாத்தியில் காலமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆறு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை 7.45க்கு காலமானார்.  இவர் உல்ஃபா பயங்கரவாதிகளுடனான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டவர். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரான இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திரா கோஸ்வாமியின் மறைவு இலக்கிய உலகுக்கு மிகப் பெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.