அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜனவரி, 2026

இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு

      20 January 2026      கரமுதல



தமிழ்க்காப்புக் கழகம்,  வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. ஆ.) இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. பேரா.முனைவர் ப.மருதநாயகம்
  3. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  4. முனைவர் பொ.நா.கமலா
  5. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  6. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  7. முனைவர் ப.பாண்டியராசன்
  8. முனைவர் செங்கைப் பொதுவன்
  9. முனைவர் செ.இராசேசுவரி
  10. புலவர் ச.ந.இளங்குமரன்

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது

60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக

  1. இயக்குநர் திருவாட்டி சுதா
  2. கதை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்

.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது

  • முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
  • எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக

ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது

  • குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
  • மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர் ஆவணப்பட எழுத்திற்கும் இயக்கத்திற்கும்

இவ்விருதுகள் வரும் தை 11. 2057  ஞாயிறு  மாலை 5.30 மணிக்கு வழங்கப் பெறும்.

நிகழ்விடம் : தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

தை 06, 2057 / 20.01.2026


புதன், 26 ஜனவரி, 2022

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

 அகரமுதல




தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.

பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்து
மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருட்டிணகுமார்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்
சொல்லின் செல்வர் விருது – சூரியா சேவியர்
சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை – திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன்
உமறுப்புலவர் விருது – நா. மம்மது
கி.ஆ.பெ. விருது – முனைவர் ம. இராசேந்திரன்,
கம்பர் விருது – பாரதி பாசுகர்
சி.யு.போப்பு விருது – ஏ.எசு. பன்னீர்செல்வம்
மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்
இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான. அலாய்சியசு


மேலும், இந்தாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை உரூ1 இலட்சத்தில் இருந்து 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கூடுதலாக, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு

வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு

veatti08
பரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும்  ஊழியர்களும் ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு  கூட்டு நெசவு (கோஆ டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாகக்  கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில்  உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப்  பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு.  பரம்பரையின்  பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டிதான். sakayam i.a.s.01
இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேட்டி அணிவது குறைந்து விட்டது.இப்போது,  வீறார்ந்த வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டி என்பது வெறும் ஆடையின்  அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு. வேட்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும், வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், “வேட்டி  நாள்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது .
veatti07வேட்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல்  திருநாளுக்கு  முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி  நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.
இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும்,  கூட்டு நெசவு(கோஆப்டெக்சின்) விற்பனைக்கு உதவவும்கூடிய இத் திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக்  கூட்டுநெசவு(கோஆப்.டெக்சு) இயக்குநர் சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஆட்சியர்கள்,  அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ‘வேட்டி  நாள்’ கொண்டாடும் வகையில் அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக்   கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) உற்பத்தி செய்துள்ளது. உரூ. 130 முதல் உரூ. 500 வரையிலான வகைகள் உள்ளன. தேவையான வேட்டிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கும்  கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) மூலம் வழங்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”veatti02
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்: செயலலிதா

 தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி பரப்பலுக்கான நல்ல திட்டங்கள். இவற்றைக் குறித்த காலத்தில்  நிறைவேற்றிச் சிறப்பாகப்  ப‌ேண வேண்டும். தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுவதாக இன்றை ய முதல்வர் தன் முந்தைய ஆட்சியில்  அறிவித்து இருந்தார். அதனையும் செயல்படுத்த வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 மதுரையில் ரூ.75 இலட்சத்தில் நிலையான சங்கத் தமிழ் காட்சிக் கூடம்: செயலலிதா அறிவிப்பு

தமிழ் இந்து Comment (2)   ·   print   ·   T+  
மதுரையில் 75 இலட்சம் ரூபாய் செலவில் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைக்கபடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் மற்றும் தொல்காப்பியர் ஆய்விருக்கை ஆகியவை அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
'சிறப்பு மிக்க நூலாகிய திருக்குறளில் உள்ள அரிய வாழ்வியல் கருத்துக்களை எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருக்குறள் ஓவியக் கூடத்தில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தல், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் சேகரித்து காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துக்களை நிகழ்கால ஓவியங்களாக தீட்டப்படுதல், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படும்.
உலகத் தமிழ் பண்பாட்டு தகவல் மையம்
உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களை ஒருங்கிணைக்கவும், நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்கும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டு பயணம் மேற்கொள்கையில் அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தொல்காப்பியர் ஆய்விருக்கை
தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கண வளத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நூல் தொல்காப்பியமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்திற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியுள்ளனர். ஆனால் இவ்வுரைகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்காமல் அங்காங்கே சிதறி உள்ளது. தொல்காப்பியத்திற்காக வெளிவந்துள்ள அனைத்து உரைகளையும் கண்டெடுத்து, அவற்றை முறைப்படுத்துதல், தொல்காப்பியத்தில் இதுவரை வந்துள்ள மொழிப் பெயர்ப்புகளை ஒருங்கிணைத்து முறைப்படுத்துதல், இந்நூலை பிற மொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தல், தொல்காப்பியம் விளம்பும் வாழ்வியல்
இலக்கணங்களை இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தல், மாணவர்கள் தொல்காப்பியம் நூலைக் கற்க ஊக்கப்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை ஆற்றுவதற்காக தொல்காப்பியர் பெயரால் ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனவே தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தினை நினைவு கூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கென 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம்
தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் வாயிலாக 6 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஓராண்டுக்கு ஒரு முறை பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும் ஆண்டுக்கொரு முறை தொல்காப்பிய இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு 10
நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும். பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைக் கொள்ளும் வகையில், சங்கத் தமிழ் பாடல்களை ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் ஒன்று 75 லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் அரசு அருங்காட்சியகத்திற்கு எதிரில் 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்படும்.
இக்கூடத்தில் முதற்கட்டமாக பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் காட்சிப்படுத்தும் விதமாக, அருங்காட்சியக முகப்பு சுவர்களில் ஓவியங்கள், காட்சிக் கூடத்திற்குள் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்படும்.
சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தில் எந்தெந்த இலக்கியக் காட்சிகளை ஓவியங்களாகவும், புடைப்பு சிற்பங்களாகவும், சிற்பக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் அமைக்கலாம் என்பதை தெரிவு செய்திடவும், உருவாக்கியதை ஏற்பளிக்கவும் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்' என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

அக்.2 - இலங்கை புறக்கணிப்பு நாள்


தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்கமுடியாது: இலங்கை அறிவிப்பு
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்கமுடியாது: இலங்கை அறிவிப்பு
கொழும்பு, செப். 29-

இலங்கையில் தமிழர் பகுதி மாகாணங்களான வடக்கு மற்றும் கிழக்கு உள்பட 9 மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே சந்தித்து ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

இதில் மாகாணங்களுக்கு நிலம் மற்றும் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது குறித்து 13-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனால், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான அதிகாரத்தை வழங்க கோரி இந்தியாவும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மையாக வெற்றிப்பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சி. விக்னேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் வருங்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் தலைவர்கள் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள், வடக்கு மாகாணத்தில் நிலங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகார உரிமையை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை தகவல் தொடர்பு துறை மந்திரியும் அரசின் செய்தித்தொடர்பாளருமான கெஹெலியா ராம்புக்வெல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாகாண சபைகள் தங்களுக்கென உரிய அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்படவேண்டும். நிலம் மற்றும் போலீஸ் துறைகளில் மாகாணங்கள் அதிக அதிகாரங்களை பெறப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மஹிந்தா ராஜபக்‌ஷே தலைமையிலான கூட்டணி அரசு, நிலம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு அதிகாரம் வழங்குவது தமிழர்களின் தனி நாடு கோரிக்கைக்கு வழிவகுக்கும் என்று கூறி அந்த அதிகாரத்தை தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சனி, 15 ஜூன், 2013

கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: செயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயற்கை பொய்த்தாலும், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தாலும், நாட்டின் முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வெகுவாக வளர்ச்சி அடையச் செய்வதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போதைய நிலவரப்படி, 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 17.65அடி நீர் மட்டுமே உள்ள சூழ்நிலையில், காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்து இன்று (14.6.2013) தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர்,வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின்தலைவர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர்,வேளாண்மைத் துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், சட்டத் துறை செயலாளர்மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணையின் இருப்பு 3.45 டிஎம்சி அடியாக மட்டுமே உள்ளது என்றும், அணையின் நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடி என்ற வீதத்தில் உள்ளது என்றும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமானதாக இருந்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க முடியும் என்றும், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.65 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டில் இதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 180மில்லி மீட்டருக்கு பதிலாக 156 மில்லி மீட்டர் அளவே மழை பெறப்பட்டுள்ளது என்றும்,நடப்பாண்டிலும், கடந்த ஆண்டிலும் மழையின் அளவு குறைவாக உள்ளதால் நிலத்தடிநீரின் அளவும் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில், தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனை வைத்து, நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும்சில ஏக்கர் நிலப்பரப்பில் நெல் நாற்றங்கால் விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.இதனையடுத்து, இந்த இக்கட்டான சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் அதிக அளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்குத் தேவையான உதவிகள் புரிவது மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளை கையாளுவது குறித்து நான் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினேன். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி,
1. நிலத்தடி நீரை தற்போது பயன்படுத்தி நெல் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில்,டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல்,நடப்பாண்டிலும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இந்த மும்முனைமின்சாரம் நாளை (15.6.2013) முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படும்
.2. நீர் ஆதாரத்திலிருந்து வயலுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக 180 மீட்டர்நீளம், 90 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட 6000 ழனுஞநு குழாய்கள் விலை ஏதுமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
3. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்கள்,நுண்ணூட்ட சத்துக்கள், தாவரப் பூச்சிக்கொல்லி ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படும். இதனால் அரசுக்கு 6 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும்.வரும் நாட்களில் தமிழகத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும்,கர்நாடகாவிலும் இயல்பான அளவில் மழை பெய்யும் என நான் நம்புகிறேன். தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீர் பெறப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் பேரில் குறுவை சாகுபடிப் பரப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் இடைக்கால மனு 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,கர்நாடகம் சார்பில் தற்காலிகமாக ஒரு மேற்பார்வைக் குழு அமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழு 12.6.2013 அன்றுகூடிய போது, கர்நாடக அரசு இந்தக் குழு முறைப்படி அமைக்கப்படவில்லை என்றும், இந்தக் குழு எந்த முடிவினையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தது. இதிலிருந்து, கர்நாடகம்,தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பதுதெள்ளத் தெளிவாகிறது. கர்நாடகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழுவிற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுவதால்,இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழகத்தின் சார்பில் கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதே போன்று,காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அந்தஆணையின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு திருப்தியையும், மன நிறைவையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

புதன், 29 மே, 2013

கலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம்: முதல்வர்

கலை  அறிவியல் கல்லூரித் தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம்: முதல்வர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும்  மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து இன்று (28.5.2013) தலைமைச் செயலகத்தில்  உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.  இந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என கூறியுள்ளார்.

http://img.dinamalar.com/data/gallery/gallerye_235031372_723018.jpg 
சென்னை: தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டில், ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை, வாபஸ் பெறும்படி, உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள், தங்களுடைய உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிக் கல்வி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் விருப்பப்படி தேர்வுகளை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். தமிழில் தேர்வு எழுத அனுமதித்ததன் மூலம், கிராமப்புற மாணவர்கள், அதிகம் பயன்பெற்றனர்.
ஆங்கிலம் கட்டாயம்
இச்சூழலில், "வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ, மாணவியர், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும்' என, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என, தேர்வு முறை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் கூறப்பட்டது.இதுதவிர, ஆசிரியர்களும், பாடங்களை, ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு, மாணவ, மாணவியரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து, "தினமலர்' நாளிதழில், 26ம் தேதி, விரிவாக
செய்தி வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.
ஆலோசனை
அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோரை அழைத்து பேசினார். அதன்பின், மாணவர்கள் விரும்பும் மொழியில், தேர்வு எழுத அனுமதிக்க முடிவு செய்தார்.
இது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், தங்களுக்கான உள் தேர்வுகளை, ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.
விவாதத்தின் போது, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, தங்களது உள் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழ்நாடு மாநில, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு, என்கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.ஆங்கில மொழி வழி அல்லது தமிழ் மொழி வழியில் படித்தாலும், மாணவ, மாணவியர், தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும்
Advertisement
என்பது தான் என் எண்ணம். எனவே, ஆங்கில மொழி வழியில் படிக்கும் மாணவ, மாணவியரும், தங்களுடைய உள் தேர்வுகளை, தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால், வெளியிடப்பட்டுள்ள உத்தரவை, திரும்பப் பெற ஆணையிட்டுள்ளேன். அனைத்து மாணவ, மாணவியரும், தங்களுடைய, உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.