கருநாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருநாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜூன், 2013

கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: செயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயற்கை பொய்த்தாலும், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தாலும், நாட்டின் முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வெகுவாக வளர்ச்சி அடையச் செய்வதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போதைய நிலவரப்படி, 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 17.65அடி நீர் மட்டுமே உள்ள சூழ்நிலையில், காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்து இன்று (14.6.2013) தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர்,வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின்தலைவர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர்,வேளாண்மைத் துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், சட்டத் துறை செயலாளர்மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணையின் இருப்பு 3.45 டிஎம்சி அடியாக மட்டுமே உள்ளது என்றும், அணையின் நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடி என்ற வீதத்தில் உள்ளது என்றும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமானதாக இருந்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க முடியும் என்றும், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.65 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டில் இதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 180மில்லி மீட்டருக்கு பதிலாக 156 மில்லி மீட்டர் அளவே மழை பெறப்பட்டுள்ளது என்றும்,நடப்பாண்டிலும், கடந்த ஆண்டிலும் மழையின் அளவு குறைவாக உள்ளதால் நிலத்தடிநீரின் அளவும் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில், தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனை வைத்து, நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும்சில ஏக்கர் நிலப்பரப்பில் நெல் நாற்றங்கால் விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.இதனையடுத்து, இந்த இக்கட்டான சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் அதிக அளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்குத் தேவையான உதவிகள் புரிவது மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளை கையாளுவது குறித்து நான் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினேன். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி,
1. நிலத்தடி நீரை தற்போது பயன்படுத்தி நெல் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில்,டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல்,நடப்பாண்டிலும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இந்த மும்முனைமின்சாரம் நாளை (15.6.2013) முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படும்
.2. நீர் ஆதாரத்திலிருந்து வயலுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக 180 மீட்டர்நீளம், 90 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட 6000 ழனுஞநு குழாய்கள் விலை ஏதுமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
3. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்கள்,நுண்ணூட்ட சத்துக்கள், தாவரப் பூச்சிக்கொல்லி ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படும். இதனால் அரசுக்கு 6 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும்.வரும் நாட்களில் தமிழகத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும்,கர்நாடகாவிலும் இயல்பான அளவில் மழை பெய்யும் என நான் நம்புகிறேன். தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீர் பெறப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் பேரில் குறுவை சாகுபடிப் பரப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் இடைக்கால மனு 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,கர்நாடகம் சார்பில் தற்காலிகமாக ஒரு மேற்பார்வைக் குழு அமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழு 12.6.2013 அன்றுகூடிய போது, கர்நாடக அரசு இந்தக் குழு முறைப்படி அமைக்கப்படவில்லை என்றும், இந்தக் குழு எந்த முடிவினையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தது. இதிலிருந்து, கர்நாடகம்,தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பதுதெள்ளத் தெளிவாகிறது. கர்நாடகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழுவிற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுவதால்,இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழகத்தின் சார்பில் கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதே போன்று,காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அந்தஆணையின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு திருப்தியையும், மன நிறைவையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி மடல்

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி க் கருநாடக முதல்வருக்கு த் தமிழ்ச் சங்கம் கடிதம்

எல்லைப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டருக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தலைவர் கோ.தாமோதரன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழ்ச்சங்கத்தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகமாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தை சேர்ந்த ஆலம்பாடி, ஜம்புருட்டி, மாருகொட்டாய், பாலாறு எல்லைகிராமங்களை சேர்ந்த 600 தமிழ் குடும்பங்களை,அப்பகுதியில் வெளியேறுமாறு வன அதிகாரிகள் சிலர் மிரட்டியுள்ளனர். அப்பகுதியில் இருந்து காலி செய்யாவிட்டால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, அங்குள்ள நிலையை நேரில் அறிந்துவர தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினரும், கன்னடர்-தமிழர் நல்லிணக்கசமூகநல அறக்கட்டளையின் தலைவருமான ராமசந்திரன் தலைமையில் குழு ஒன்று கொள்ளேகால் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்குள்ள தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறைகளாக வாழ்ந்துவருவதாகவும், அம்மக்களுக்கு கர்நாடக அரசும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பட்டாநிலங்களை வழங்கியுள்ளது. மேலும் அக்கிராமங்களில் சாலைகள், கோயில், பள்ளிக்கூடம், அங்கன்வாடி வசதிகள், சூரியஒளி மின்விளக்குகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதி தமிழர்கள் விதிகளுக்கு முரணாக வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாக கூறி வன அதிகாரிகள் பொய்வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதில் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்துள்ளது.
இதை பொருள்படுத்தாத துணைவனபாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடந்தவாரம் இப்பகுதி மக்களை மிரட்டி, இங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அக்கிராமங்களில் எடுத்த புகைப்படங்களை இணைத்து, தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், வனத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், காவல்துறை டிஜிபி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தமிழர்களை தாக்கி, அச்சுறுத்திய வன அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 10 அக்டோபர், 2012

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: கருணாநிதி

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: இறுதி முடிவெடுக்க கண்ணீரும் கம்பலையுமாக கருணாநிதி வேண்டுகோள்!

First Published : 09 October 2012 07:33 PM IST
பிரதமரின் உத்தரவை மதிக்காதது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடக அரசின் மீது 356வது பிரிவைப் பயன்படுத்த மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை...
நெடுங்காலமாக காவேரி தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தீர்வு காணமுடியாமல் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நிலவிட வேண்டியசகோதர உணர்வுக்கும் நெருக்கடி ஏற்பட்டு,இரு மாநிலமக்களும்ஒற்றுமையாகப் பேசி விவாதித்து நட்புணர்வோடு பழகத் தலைப்பட்டால் தான்இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலிவு என்ற நிலையில், என் தலைமையிலே இருந்த தி.மு. கழக ஆட்சியில், அன்றைக்குப் பிரதமராக இருந்த வாஜ்பாய்-ஐச் சந்தித்து, காவேரி ஆணையத்தை 1998ஆம் ஆண்டு உருவாக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் கூட, அந்த ஆணையத்திற்கு மரியாதை காட்டாமல்அதை ஏற்றுக் கொள்ளாமல் “பல் இல்லாத ஆணையம்”, அதனால் ஒரு பயனும்விளையாது என்று, அப்போது இங்கேயிருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாஅவர்கள் அறிக்கைகள் விட்டும், அந்த ஆணையத்தின் கூட்டங்களுக்குச்செல்லாமல் புறக்கணித்து, இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட வேண்டியஉறவும் நேசமும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது.அந்த நேரத்தில் நல்ல வேளையாக திரு. எடியூரப்பா அவர்கள் முதல்அமைச்சராக இருந்த போது நான் அவரிடம் பல முறை விவாதித்து, கர்நாடகமாநிலத்தார்,தமிழக மாநிலத்தார் என்ற இரு மாநிலத்தாரும்விரோதஉணர்வைக் கை விட்டு நட்புணர்வோடு பழகிட வேண்டும் என்பதற்காக பலஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை நான் சென்று திறந்து வைத்தும், அதற்கு ஈடாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையை திறப்பது என்றும் முடிவு செய்து அவ் வண்ணமே இரு மாநிலங்களிலும் இரு விழாக்கள் சகோதர உணர்வோடு நடத்தப்பட்டது.இப்போது திடீரென்று தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரைத்தராமல் கர்நாடக அரசு பிடிவாதம் செய்ததை ஒட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு அதிலும் உரிய பயன் கிடைக்க முடியாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் தர மறுத்த நிலையில்காவேரி ஆணையத்தின் அதிகாரப் பூர்வமான தலைவரான பிரதமர் அவர்களேதமிழகத்திற்குத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்று ஆணைபிறப்பித்த நிலையிலே கூட - அந்த ஆணையை, காவேரி ஆணையத்தின்தலைவர் பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஆணையாகவோ கர்நாடக அரசு கருதாமல் - மேலும் மேலும் வறண்டுகிடக்கும் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரை தர மறுத்து -தாமதம் காட்டி வருவதுமட்டுமல்ல,தண்ணீரைக் கேட்கின்றஉரிமைதமிழ்நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு - அதன்காரணமாக இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு தேடி வருகிறது.தமிழ் நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங்காலமாகவிவசாயத்தையேநம்பி வாழும்தமிழக உழவர் பெருமக்களைபரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாககர்நாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர்கன்னட மக்களுக்கும்,தமிழ்மக்களுக்கும்நிரந்தரமானஒரு பகையை உருவாக்கும்முயற்சியிலேஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக ஆக்கியிருக்கிறது.இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.
தமிழகத்தின் சார்பில் அமைதியான முறையிலும், நீதி மன்றங்களின்வாயிலாகவும்எடுத்து வந்தநிலைப்பாட்டுக்குஎதிராககர்நாடக அரசுஒத்துழையாமை கிளர்ச்சியை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது, இந்திய நாட்டு ஒற்றுமையை வலியுறுத்துகிற அனைவருக்கும் எதிரானசெயலாகும்.காவேரி ஆணையத்திற்கு தொடக்க காலத்தில் இந்த ஆணையத்தின்குழுவின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு வலிவு உண்டு என்பதைநிரூபிக்கும் வகையில்ஆணையத்தின்தலைவரானஒரு பிரதமருடையகருத்தையே அலட்சியப்படுத்தி, அதற்குப் பணிய மறுத்து செயல் படும் அந்தஅரசுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்குமுற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையோடு,நான் பிரதமரைக் கேட்டுக் கொள்வது - இரு மாநிலத்தாரும் அன்பால்பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக்கட்டிக் காக்க வேண்டும்என்பதற்காக, கர்நாடக அரசின் மீதுஅரசியல்சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும். இந்த வேண்டுகோள் கர்நாடகத்தார் மீது எந்த காழ்ப்புணர்வோடும்கூறப்படுவதல்ல. எதிர் காலத்திலாவது மத்திய அரசு கர்நாடகம் போன்று கடியநெஞ்சத்தோடு செயல்படுகிற மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகவும்,தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயான பூமிகளாகஆகி விடக் கூடாது என்பதற்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்

செவ்வாய், 14 ஜூலை, 2009

திருவள்ளுவர் சிலையைத் திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு



பெங்களூர், ஜூலை 13: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.


பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9-ல் திறந்துவைக்கிறார்.

அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆகஸ்ட் 13-ம் தேதி திறந்துவைக்கிறார்.


இந்நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு போன்றவற்றைச் சேர்ந்தோர் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"தமிழக அரசு மேற்கொண்டுவரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு இரு மாநிலங்கள் சேர்ந்து கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகு திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம்' என்று கன்னட அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

கருத்துக்கள்

'ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால் சாக இந்தியா என்று சாற்றிடுவோம்!' என முழங்கியவர்கள்தாம் இதற்கு மறுமொழி தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திருக்குறள் கட்டாயமாகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட ஒத்தூதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகனாகத் தமிழனே இருந்தபோதும் திறக்கப்படாத் திருவள்ளுவர் சிலை நமக்கு எந்த சூடு சொரணையும் தராத பொழுது நாம் இதுபற்றிப் பேச என்ன இருக்கிறது? அங்குள்ள தொலைக்காட்சிக் கட்டமைப்புகள் கொட்டிக் குவிக்கும் பணத்தைப் பாதுகாத்தால் போதுமே! சிலை - அது வெறும் கல்! அதைப்பற்றி நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை தமிழ்இன நல ஆன்றோர்களிடம் இருந்தால்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். இல்லையேல் கொத்தடிமைத் தமிழர்கள் குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டிருப்பதை விட வேறு எதுவும செய்ய மாடடோம். ஓங்குக குறள்நெறி! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2009 4:44:00 AM