தினஇதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினஇதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2013

நவரசம் - நல்ல குறும்படம்


விமர்சனம்

பட ஆய்வு

நல்ல குறும்படம் என்பது திருக்குறள் மாதிரி இருக்க வேண்டும். அளவில் சிறியதாக இருக்கும் அதே நேரம் அமைப்பில் முழுமைத் தன்மையோடு இருக்க வேண்டும்.அப்படி ஒரு சிறந்த குறும்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜி ஸ்டுடியோஸ் சி.ஆர்.வெங்கடேஷ் தயாரிக்க ரங்கா யாளி, தீரஜ் வைத்தி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவான பதினெட்டு நிமிடங்களே ஓடுகிற நவரசம் என்ற குறும்படம்தான் அது.ஒரு பேருந்தில் கும்பலில் ஏறும் ஒரு இளம்பெண் (ஓகேவா வினோதினி?) காசை பாஸ் பண்ணி டிக்கெட் எடுக்கக் கோருகிறாள். பலர் கை மாறி ஒரு விழியிழந்த இளம்பெண்ணின் கைக்கு போகும் அந்த காசு டிக்கெட்டாக மாறி வருகையில், கண்டக்டர் ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்திருப்பதை தடவிப் பார்த்தே கண்டு பிடித்து வாங்கித் தருகிறாள் அந்த விழியிழந்த பெண்.
இது காசு கொடுத்த பெண்ணின் கவனத்தைக் கவர்கிறது. அடுத்து கொஞ்ச நேரம், கும்பலான பேருந்தில் மூன்று சீட்களை ஆக்கிரமித்துத் தூங்கும் ஒருவன், தூங்கி விழுந்து விழுந்து அடுத்தவரின் தோள்பட்டையை வீங்க செய்யும் இன்னொருவன்… இது போன்ற நிகழ்வுகள் வசனம் இன்றி கேமரா மொழியில் காட்டப்படுகின்றன. ஒரு நிலையில் விழி இழந்த பெண்ணிடம் ஒரு நாகரீகமற்ற மனிதன் , பாலியல் திருட்டு செய்ய முயல, டிக்கெட் வாங்க சொன்ன, பெண் அவனை கண்டிக்கிறாள். தவிர விழி இழந்த பெண்ணின் கையாலும் அவனுக்கு அறை வாங்கித் தருகிறாள். பஸ்ஸில் இருந்து விழி இழந்த பெண்ணோடு இறங்கி, அவளை அவளது வயதான வறிய தாத்தாவிடம் சேர்த்து விட்டுப் போகிறாள். அடுத்து மருத்துவமனை காட்டப்பட, அங்கே ஒரு இளம் பெண்ணுக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதும், அவள் மரணம் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதும் உணர்த்தப்படுகிறது. பேருந்தில் டிக்கெட் வாங்க சொன்ன பெண், அங்கே வர, அப்போதுதான் அவள் அங்கே பணிபுரியும் செவிலி என்பதும் அவள் பெயர் சாந்தி என்பதும் டாக்டர் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டே செல்கிறாள் என்பதும் விளங்க வைக்கப்படுகிறது.
சாந்தி ஒரு அறைக்குள் நுழைய, அங்கே மரண மாளிகையின் நுழைவாயிலில் இருக்கும் அந்த இளம்பெண் காட்டப்படுகிறாள். அந்த பெண்ணுக்கான செவிலியர் சேவையை சாந்தி பல நாட்களாக செய்து வருவது உரையாடல் மூலம் தெரிகிறது. அந்தப் பெண் புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்டவள். அவள் எடுத்த புகைப்படங்களின் ஆல்பத்தை அவள் சாந்தியிடம் காட்ட, ஒவ்வொரு புகைப்படத்தோடும் ஓர் அழகிய குறிப்பும் எழுதப் பட்டு இருக்கிறது. ‘இந்த ஆல்பத்தின் முடிவு முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை அவள் சாந்தியிடம் வைக்கிறாள். அடுத்த காட்சியில் மருத்துவமனையில் படுத்திருக்கும் பெண்ணின் முன்னால் ஒரு முகக் கண்ணாடி காட்டப்பட, தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து, தன் முகத்தையும் தடவிப் பார்த்து அவள் சிலிர்க்கிறாள். ஓ…! இவள் யார் தெரியுமா? பேருந்தில் நாம் பார்த்த விழியிழந்த பெண்! “நீ ரொம்ப அழகுன்னு நான் அப்பவே சொல்லல?” என்று குழந்தை போல அவளது தாத்தா குதூகலிக்க, இவள் வெட்கமாய் குறுகுறுக்க, சாந்தியின் முகத்தில் கலவையான உணர்வுக் குமிழிகள்.
பார்வை பெற்ற பெண்ணிடம் அந்த ஆல்பமும் ஒரு கேமராவும் கொடுக்கப்பட, அங்கே அந்த மருத்துவமனையில் ஒரு தேவதை நிசப்தமாய் உறங்குவது போல, முகத்தில் ஒரு திருப்திப் புனகையுடன், நோயுற்ற அந்தப் பெண் மரணத்தில் நிறைந்திருக்க, மரணித்த இந்தப் பெண்ணின் கண்தான் அவளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்க்கை ஒளிபெறும். நிறைவடையாது இருந்த அந்த புகைப்பட ஆல்பமும் தொடர்ந்து கவிதைப் பூர்வமான புகைப்படங்களை தொடர்ந்து பெறும் என்பதை கேமரா மொழியில் சொல்லி… படத்தை முடிக்கிறார்கள்.ஆர்.கே. பிரதாப்பின் ஒளிப்பதிவு, கவிஞர் பிறைசூடனின் மகனான தயானந்தின் இசை இவற்றின் உதவியோடு ஒரு அற்புதமான குறும்படத்தைக் கொடுத்துள்ளார்கள் ரங்கா யாளி, தீரஜ் வைத்தி என்ற இந்த இளம் இரட்டை இயக்குனர்கள்.
பதினெட்டு நிமிடத்தில் ஒரு முழுமையான நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு. சாந்தியாக நடித்து இருக்கும் எங்கேயும் எப்போதும் வினோதினி மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். முன்பே யமுனா படத்துக்கான நமது விமர்சனத்தில் மகுடம் சூடும் கலைஞராக பாராட்டப்பட்டவர்தான் இவர். இவர் மட்டுமில்லை மற்ற நடிகைகளின் நடிப்பும் மிக அருமை. ஆல்பத்தில் ஒவ்வொரு புகைப்படத்தின் பக்கத்திலும் இருக்கும் வாசகங்கள், பார்ப்பவர்களால் படிக்க முடியாத அவசரத்தில் புரட்டப்படுவதை தவிர்த்து, கொஞ்சம் பொறுமையாகக் காட்டி இருந்தால் அந்த வாசகங்கள் கூட, உணர்வுக்கு கனம் சேர்த்திருக்கும். இன்னொன்று…பெண்ணுக்கு கண் வந்த இடத்தில் விநோதினியின் சீருடையில் பொறிக்கப்பட்டு இருக்கும் சாந்தி என்ற பெயர் தகட்டை அணுக்கமாகக் காட்டி டைரக்டோரியல் டச் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
ஏன் ரங்கா தீரஜ்… இதை நோயுற்ற பெண் மரணத்தில் நிறைந்திருக்கும் இடத்தில் காட்டி இருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்காது?எனினும் என்ன.. அளவில் சிறிய ஒரு படத்துக்குள் ஒண்மான் சுவைகளும் இருக்கும்படியாக காட்சிகள் வைத்து, அதற்கு நவரசம் என்றும் பெயர் வைத்து, சிறப்பாக படைக்கப்பட்டிருக்கும் விதத்தில், ஓங்கி உயர்ந்ததொரு குறும்படமாகிறது இந்தப் படம். படத்தின் அறிமுக விழாவில் ஒய் நாட் புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் சஷிகாந்த், லிப்ரா புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இவர்களுடன் நிஷாந்தி அண்ணாதுரை உள்ளிட்ட பல, குறும்பட தயாரிப்பாளர்களும் வந்து கலந்து கொண்டு பாராட்டியது அற்புதமான விஷயம். “மறைந்து கிடக்கும் பலரின் திறமைகளை வெளிக் கொணரவே இதை எடுத்தேன். தொடர்ந்து இது போல எடுப்பேன்” என்று கூறும் ஜி ஸ்டுடியோஸ் சி.ஆர். வெங்கடேஷ், விரைவில் வெள்ளித் திரையிலும் கால் பதித்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மருத்துவ இடம் கிடைத்தும் தவிக்கும் மாணவன்


Home / சிறப்பு பகுதிகள் / மருத்துவ சீட் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்
மருத்துவ சீட் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்

மருத்துவ  இடம் கிடைத்தும் கட்டணம் இல்லாமல் தவிக்கும் சேலம் மாணவன்

சேலம், ஆக. 19
மருத்துவ படிப்பிற்கான சீட்டு கிடைத்தும் கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் திண்டாடுகிறான் சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவன்.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள வடுகப்பட்டி, தட்டாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நெசவுக்கூலித் தொழிலாளி வெங்கடாசலம். இவரது மனைவி பூங்கொடி. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு வினோத்குமார்(17), இளவரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
வினோத்குமார் அப்பகுதியில் உள்ள வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தார். 450 மதிப்பெண் பெற்ற அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பில் இலவசமாக படிக்க வைத்தது. வினோத்குமார் 12ம் வகுப்பில் 1107 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது கட்டாப் மார்க் 188.5. மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக படித்த இவருக்கு கவுன்சிலிங்கில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்துவிட்டது.
தாயும், தந்தையும் கூலித்தொழில் செய்வதால் மருத்துவம் படிப்புக்கு கட்டணம் செலுத்தும் அளவுக்கு பணவசதி இல்லாமல் போனது. அதிலும் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தாலும் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், ஹாஸ்டல், உணவு என பல்வேறு கட்டணங்கள் என சுமார் ரூ.6 லட்சம் வரை கேட்டுள்ளனர்.கல்விக்கட்டணமே கட்டமுடியாத நிலையில் உள்ள தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்.இரக்க மனம் உள்ளவர்கள் இந்த மாணவனின் கல்விக்கு உதவலாம். உதவுவார்கள் என்று நம்புவோம்.
- தினஇதழ்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு
மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

மறக்கப்பட்டவர்களின் மரண வரலாறு

எத்தனைப் பேருக்கு த் தெரிந்திருக்கும் இந்தத் தமிழர்களை? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்குக்கூட மனம் வரவில்லை? ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? என்ற உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில்… கீழே… அது இரண்டாம் உலகப் போர். தோட்டாக்களும், பீரங்கிகளும், விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் கந்தகத்தை டன் கணக்கில் வாரியிறைக்க… கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டிருந்தது மனிதம். அதே வேகத்தில் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வகையில் நாடுகள் தங்கள் எல்லைகளை விரித்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான். இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டுவருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.
அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க் கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியத் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் ராணுவத்தினர். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.போரினால் கடும் பஞ்சம் வேறு.
உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு லட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்கள் கதி. அதோகதிதான்.இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “ஜிலீமீ ஙிக்ஷீவீபீரீமீ ஷீஸீ tலீமீ ஸிவீஸ்மீக்ஷீ ரிஷ்ணீவீ” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லிவிட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடுதான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்”.
இதை தமிழோசை பதிப்பகம் 2007ம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது. மரவள்ளிகிழங்கும், கருவாடும், ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ, பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டு விடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்று போக்கும், காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்து விடுவார்களாம்.
எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால்அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்திலும், இரண்டு பெரிய குன்றுகளை குடைந்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்திலும் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணித்துள்ளனர்.இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. இறுதியில் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 90ஆயிரம் ஆசிய தொழிலாளர்களும், 30ஆயிரம் போர்க் கைதிகளும் இறந்து போயினர்.
இதில் குவாய் ஆற்றுப் பாலத்தில் கட்டப்பட்ட பாலம்தான் புகழ் பெற்றது. தொழிலாளிகள் சிந்திய ரத்தத்தினால் குவாய் ஆறு முழுவதும் சிவப்பாக ஓடியதாக கூறப்படுகிறது.அப்படிப்பட்ட பாலம் கடந்த 1943ம் ஆண்டு ஜூன் 27ம் நாள் குண்டு வீச்சில் முற்றிலும் சேதமடைந்தது. இறுதியில் ஜப்பானிய ராணுவம் சரணடைந்ததும் தாய்லாந்து, பர்மா எல்லையில் போடப்பட்டிருந்த 4 கி.மீ. நீளத்திற்கான தண்டவாளத்தை பிரிட்டன் ராணுவம் பெயர்த்தெடுத்தது. அதன் பின்னர் சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் தலைமை கண்காணிப்பாளராகப் பதவி வகித்த ஹிரோஷி ஆபே (பிவீக்ஷீஷீsலீவீ கிதீமீ) என்பவர் மீது தலையாயக் குற்றம் சுமத்தப்பட்டது. 3000 போர்க்கைதிகள் இறப்பதற்கு அவர் தான் மூலகாரணம் என்று குற்றப்பதிவுகள் எழுதப்பட்டன. போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அனைத்தும் முடிந்த பின்னர் காசனாபுரி என்ற இடத்தில் உள்ள கல்லறை ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் 7 ஆயிரம் போர் கைதிகள் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரங்களாகப் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்… வழக்கம் போல் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

‘வாசிங்டன் அஞ்சல்’ நாளிதழை ரூ.15000கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழை ரூ.1500 கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்
‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழை ரூ.1500 கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

வாசிங்டன் அஞ்சல்’ நாளிதழை ரூ.15000கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

வாஷிங்டன், ஆக. 7
வாஷிங்டன் போஸ்ட்’ அமெரிக்க நாளிதழ் நிறுவனத்தை ‘அமேசான் டாட் காம்’ இணையதள நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிஜாஸ் ரூ.1,500 கோடிக்கு வாங்குகிறார்.இ&காமர்ஸ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர், ‘அமேசான் டாட் காம்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பிஜாஸ் (49) என்ற அமெரிக்க தொழிலதிபர். ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். உலகின் 19வது கோடீஸ்வரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி, விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் நோக்கில் ஸ்பேஸ் கம்பெனி ஒன்றையும் நடத்துகிறார். இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் நிறுவனத்தை வாங்க பிஜாஸ் முடிவு செய்துள்ளார்.இதுபற்றி வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக வர்த்தக பரிமாற்றம் அடுத்த இரு மாதங்களில் முடிவாகும். இதை எனது அமேசான் டாட் காம் நிறுவனம் வாங்கவில்லை. தனிப்பட்ட சொத்தில் இருந்து வாங்குகிறேன். பத்திரிகையின் பாரம்பரியம், புகழ், கவுரவத்துக்கு எந்த பங்கமும் வராதபடி நிர்வகிப்பேன்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து உண்மையான, நடுநிலையான நாளிதழாகவே வாஷிங்டன் போஸ்ட் இருக்கும். போட்டிகளை சமாளிக்க ஏற்ற மாற்றங்கள் செய்யப்படும்’’ என்றார்.அமெரிக்காவின் 7வது மிகப்பெரிய நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கடந்த 1877ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் தொடங்கப்பட்டது. 135 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்த நாளிதழ் 1974ம் ஆண்டு நடந்த வாட்டர் கேட் ஊழலை வெளிப்படுத்தி, அதிபர் ரிச்சர்ட் நிக்சனை பதவியில் இருந்து இறக்கிய பெருமை கொண்டது. 47 முறை புலிட்சர் விருதுகளை பெற்றுள்ளது. தினமும் 4.75 லட்சம் பிரதிகளும், ஞாயிறன்று 8.25 லட்சம் பிரதிகளும் விற்பனையாகின்றன.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

அமெரிக்காவின் மண்ணைக் கவ்வ வைத்த தானே சாக இருந்த புழு..!


  தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / தானே சாகப்போற புழு..!
தானே சாகப்போற புழு..!

தானே சாகப்போகிற புழு..!

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது.
பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.”தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை” என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர்.
அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை. அந்த சிறுவன் கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.
இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது.
குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமெரிக்க இராணுவத்தோடு போரிட்டதால், உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.
போரின்போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாம். அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது.அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன்தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக்கொண்டிருக்கிற) அமெரிக்க படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது.
வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது. தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட “சைகான்” அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் “ஹோ சி மின்” நகரம் ஆனது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பூனைகள் குறுக்கே போனால்…

தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / பூனைகள் குறுக்கே போனால்…
பூனைகள் குறுக்கே போனால்…

பூனைகள் குறுக்கே போனால்…

அவசரமாக வெளியே போக…வீட்டு வாசல்படிக்கு வந்திருப்போம். அப்போது பார்த்துதான் ‘ங்கியாவ்வ்வ்வ்…’ என்ற சப்தத்துடன் நமக்கு சில அடிகள் முன்னே பூனை ஒன்று குறுக்கே செல்லும். அதைப் பார்த்தவுடன் ‘அடச் சனியனே… சகுனமே சரியில்ல…. இந்த எழவு குறுக்கே போயிடுச்சா… போற காரியம் வௌங்குன மாதிரிதான்…’ என்று சலிப்புடன் கூறியபடியே வீட்டுக்குள் திரும்பச் சென்று ஒரு செம்பு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வெளியே புறப்படும் பழக்கம் இன்று ஏராளமானோரிடம் உள்ளது.இதில் மட்டும் சாதி, மதம் என்று ஒன்றும் கிடையாது. எல்லா சகுனங்களும் சரியாகப் பார்த்து செய்யும் காரியம் மட்டும் நல்லபடியாக நடக்கிறதா என்றால், அதற்கு வியாக்கியானம் பேசுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
மற்ற விலங்குகளை விடுங்கள், அதென்ன பூனை மட்டும் என்ன பாவம் செய்தது. அதற்கு மட்டும் ஏன் இந்த அவப்பெயர். வாருங்கள் தொடர்ந்து படிப்போம். பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்
படுத்தினர்.
பூனையைப் பார்த்தால், குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம். பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்..!அதுபாட்டுக்கு அது போகட்டும் நாம பாட்டுக்கு நாம போவோம்.

அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!
அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!

அழிந்து போன அறிவுக் களஞ்சியம்!

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்குச் சொந்தமான நூலகங்களை அழித்தால் போதும். அந்த இனத்தையே அறிவு பெறச் செய்யாமல் முழுவதுமாக அழித்துவிடலாம் என்பார்கள். அதையேதான் செய்தார்கள் சிங்களவர்கள். இலங்கையில் தமிழர்களின் அறிவுப் பெட்டகமாக இருந்த யாழ்ப்பாணம் நூலகத்தை ஒரே இரவில் சாம்பல் குவியலாக மாற்றிவிட்டனர். தமிழர்கள் மீதான தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள அன்று நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் நிகழ்வுதான் யாழ்ப்பாண நூலகம் எரிப்புச் சம்பவம்.1934&ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசாக் தம்பையா தன் நண்பர்களுடன் ஒரு சிறிய கூட்டம் போட்டிருந்தார்.
அதில் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அனைவரும் பணம் போட்டு ஒரு சிறிய நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த க.மு.செல்லப்பா என்பவர் திரட்டிய 184 ரூபாய் பணத்தில்தான் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்க ஆயத்தமாகினர்.ஒரு வாடகை அறையில் 844 நூல்களுடன் 1934 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. அதில் புத்தகம் கூட படிக்க முடியாத இடர்பட்ட நிலையில் 1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பெரிய வீட்டினுள் தாராளமாக நடத்தினர். சகல வசதிகளையும் உடைய நவீன நூலகத்தை உருவாக்குவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகே அதற்கான பணியை செய்யத் தொடங்கினர்.1952&ஆம் ஆண்டு ஆனி மாதம் சபாபதி தலைமையில் நடந்த ஒரு மாநாட்டிற்குப் பிறகு நூலகத்தைக் கட்டு வதற்கான ஆயத்தப் பணியில் இறங்கினர். நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் இலங்கை சென்று நூலகக் கட்டடத்திற்கான வரைபடத்தை தயாரிக்க உதவினார். இதெல்லாம் முடியவே ஒரு வருடம் ஆக, 1953 ஆம் ஆண்டு கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.
பொது நூலகத்தின் முதற்கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டு 1959 ஆம் ஆண்டு அதி விமர்சையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து நூலகத்திற்கு மற்ற கட்டடங்களும் கட்டப்பட்டது.15 ஆயிரத்து 910 சதுர அடியில் கட்டப்பட்ட யாழ் நூலகம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது. இலங்கையில் இருந்த அரசு தலைமை நூலகங்களைவிட பெரிய நூலகமாக இருந்தது. புத்தகம் வாசிப்பதற்கு தனி இடம், சிறுவர் நூலகம், கலை அரங்கம், நூல் சேமிப்புக் கூடம் என பல்வேறு பகுதிகள் அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தன.நூலகத்திற்கு அன்பளிப்பாக வந்த நூல்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய நூல்களை பாதுகாக்க ஒரு அறை இருந்தது. ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு வாசகர்களுக்கு வசதியான ஒரு சூழலைக் கொண்டிருந்தது அந்த அறை. அதில் மட்டும் 29 ஆயிரத்து 500 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிறுவர் நூலகப் பிரிவில் மட்டும் 8ஆயிரத்து 995 நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. நூலகம் என்றாலே வயதானவர்கள் மட்டுமே பொழுதைப் போக்க வரும் இடமாகக் கருதப்படும் இந்தக் காலத்தில், அங்கே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்கியது யாழ் நூலகம். இலங்கை தமிழர்கள் தன் பெரும் பொக்கிஷமாக கருதிய, தன் உயிருக்கும் மேலாக கருதி அதைப் பாதுகாத்து வந்த அனைவருக்கும், 1981 மே 31ம் தேதி கருப்பு நாளாக மாறியது. இரவு பத்து மணிக்கு நூலகத்தினுள் புகுந்த ஒரு கும்பல், அதில் இருந்த புத்தகங்களை ஒன்றாக குவித்து தீயிட்டு தன் வெறியைத் தீர்த்துக்கொண்டனர். அதுவும் அரிய நூல்களைக் பாதுகாத்து வந்த அறையில் ஒரு துண்டு காகிதங்கள் கூட கிடைக்காத அளவுக்கு முழுமையாக அழித்துவிட்டனர். தமிழ் குழந்தைகள் அறிவில் சிறக்கக் காரணமாக இருந்த சிறுவர் நூலகத்தை முற்றிலுமாக கொளுத்தினர். அதுமட்டுமின்றி புதிய ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மட்டும் அதிக சேதமில்லை.
எனினும் அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து தீ மூட்டப்பட்டிருந்தன.‘‘நூலகம் தீப்பற்றி எரிவது, அன்றிரவு 10.15 மணிக்கே எனக்கு தகவல் கிடைக்க, தீயணைப்பு வாகனங்களையும், மாநகர சபை ஊழியர்களையும் அங்கு அனுப்பி தீயை அணைக்க முயன்றேன். ஆனால் நூலகத்திற்கு அருகிலிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்துவிட்டனர்’’ என்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு குழுவிடம் சாட்சியளித்திருக்கிறார் மாநகர சபையின் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம். தமிழ்ச்சொத்தை அழித்தொழிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் இலங்கை சிங்கள அரசின் அமைச்சர் காமினி திசநாயக்கா என்பது பின்நாளில் தெரியவந்தது.முதலில் தமிழனின் அறிவாயுதத்தை அழித்தார்கள். பின் உரிமைக்காக போராடிய தமிழர்களை அழித்தார்கள். இன்னும் அழிப்பதற்கு அங்கே என்ன இருக்கிறது?

திங்கள், 11 மார்ச், 2013

இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]

இராசபக்சே ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில் இறுதிச்சடங்கு [படங்கள்]

ராஜபக்சே  ,சோனியா ,மன்மோகன் சிங் ஆகியோருக்கு மலேசியாவில்  இறுதிச்சடங்கு [படங்கள்]

malesiyaஇன்று மலேசியாவில்   தமிழ்  மக்கள் நுதனமான  போராட்டத்தில் ஈடுபட்டனர் .இலங்கை  தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தத  மகிந்த ராஜபக்ச ,சோனியா காந்தி ,மன்மோகன் சிங் , பான்கிமூன் ஆகியவர்களின்  உருவப் பொம்மைகளை தீயிலிட்டு அவர்கள இறந்ததாக சடங்குகள் செய்து கடற்கரையில் அவர்களின் அஸ்தியை கடலில்  கரைத்து இறுதி சடங்கை செய்துள்ளனர்.
malesiya news