இலக்குவனார் பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்குவனார் பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2023

இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும் : இணைய உரையரங்கம்

 

     14 November 2023      அகரமுதல



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023

உலகத்தமிழ் நாள்

இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள்

பெருமங்கல விழா

இணைய உரையரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

கவியரங்கம்:

தலைமை:  பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்

கவிஞர் முருகையன்***கவிஞர் தேனி இளங்குமரன்***

கவிஞர் தமிழ்க்காதலன்

உரைஞர்கள்:

முனைவர் இந்திரா சவகர்   ***  தோழர் மகிழன்

நிறைவுரை: குமுகாயப் போராளி தோழர் தியாகு         

நன்றியுரை : மயிலை இளவரசன்




வியாழன், 17 நவம்பர், 2022

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்

 அகரமுதல


 


ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான

கட்டுரைப் போட்டி முடிவுகள்

உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு:

முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி

இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி

மூன்றாம் பரிசு:  முனைவர் வதிலை பிரதாபன்

முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால்,  உரூ 2,000/  பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு பெறுநர்

எழுத்தாளர் ஞானப்பிரகாசன்

திருவாட்டி புனிதா சிவக்குமார்

இரண்டாம் பரிசு பெற்ற முனைவர் தானப்பனின் கட்டுரையில் சில கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பெற்றமையால் பரிசுத்தொகை மூவாயிரம் உரூபாயில் உரூ.ஐந்நூறு பிடிக்கப்பட்டு பங்கேற்பாளர் ஒருவருக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்பெறுகிறது.

அவ்வாறு பரிசு பெறுநர்

ஆரணி பாலு (எ) கு.பாலாசி

இவர்களுக்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான கார்த்திகை 1 இல் / 17.11.2022 அன்று கூகுள் செலுத்துகை வழிப் பரிசுப் பணம் அனுப்பப்படும்.

பரிசுப் புரவலர்கள்

மேனாள் முதல்வர் முனைவர் மதியழகி

இலக்குவனார் மன நல மருத்துவமைனத் தலைவர் மரு.செல்வமணி தினகரன் ஆகியோருக்கு நன்றி.

கவிஞன் தமிழ்க்காதலன்

செயலாளர், தமிழ்க்காப்புக் கழகம்

வியாழன், 10 நவம்பர், 2022

இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும்

 அகரமுதல




இணைய உரையரங்கம்

ஐப்பசி 27, 2053 * ஞாயிறு காலை 10.00 *13.11.2022

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

கவியுரைஞர்கள்: நற்றமிழ் வேந்தன் மறத்தமிழ் வேங்கை

பைந்தமிழ்ப் புலவர் பழ.தமிழாளன்

உரையாளர்கள்: பேரா.முனைவர் நா.இளங்கோ

பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன்

இணைப்புரை : தோழர் தியாகு

பதிவு இணைப்பு:  தோழர் மகிழன்

நன்றியுரை: மாணவர் ஆரணி பாரதி

தமிழ்க்காப்புக்கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம் * தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

செவ்வாய், 19 நவம்பர், 2019

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்

அகரமுதல

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன.
இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.
உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில் கவியரங்கமும் உரையரங்கமும் நிகழ்ந்தன.
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் செயலர் கவிஞர் புலவர் உ.தேவதாசு கவியரங்கத்தைத் தாெடங்கி வைத்து நெறியாளராகச் செயல்பட்டார்.
எழில்கலை மன்றம் நிறுவனர் கவிஞர் வேணு.குணசேகரன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் கவிஞர் வெற்றிச் செழியன், கவிஞர் திருக்குறள் உரையாசிரியர் செம்பியன் நிலவழகன்,
பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் கவிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கவிஞர் மின்னூர் சீனிவாசன், கவிஞர் இராசராசன், கவிஞர் வேல் சுபராசர், கவிஞர் வே.கசுமீர் இராசா, உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கத் தலைவர் புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
தொடர்ந்து உரையரங்கம் நிகழ்ந்தது. பேரா.முனைவர் மருதநாயகம் தொடக்கவுரை யாற்றினார். பேரா.இலக்குவனாரின் ஆய்வுச் சிறப்புகளையும் அவர் குறித்த பிற அறிஞர்களின் சிறப்பு மதிப்பீடுகளையும் தம் உரையில் குறிப்பிட்டார். தமிழ்ச் சங்கப்பலகை அமைப்பின் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன், உலகத்திருக்குறள் பேரவையின் திருக்குறள் தூதர்  வெ.அரங்கராசன், ஆகியோர் உரையாற்றினர்.
இந்திய உயர் அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு இரா.கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப., கட்டுரைப்போட்டியில் வென்றவர்களுக்கான மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் & கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள் குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
முனைவர் இரா.அகிலன், திருவாட்டி அ.அரும்பொற்செல்வி ஆகியோர் முதல் பரிசுகளையும் (ஒவ்வாெருவருக்கும் உரூபாய் 1,500/-), திருவாட்டி புனிதா சிவகுமார் இரண்டாம் பரிசையும்(உரூபாய் 500/-) திருமிகு சு.இரேணுகுமார் மூன்றாம்பரிசையும்(உரூபாய் 250/-) பெற்றனர்.
பரிசுகள் வாங்க வராதவராதவர்களுக்கு அவர்கள் பகுதிகளைச்சேர்ந்த அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்கு தெரிவிக்கப்பட்டது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ  வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பேராட்டச் செயல்பாடுகளையும் அரசியல் பங்களிப்பையும் குறிப்பிட்டு நிறைவுரையாற்றினார்.
இலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளர் பொறி. இ.திருவேலன், தஞ்சதைத் தமிழ்ப்பித்தன்,  தமிழ் ஆர்வலர் திரு வாசுதேவன் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு நினைவளிப்பு நூல்களை வழங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய இசைமணி சத்திய சீலனுக்குக் கவிஞர் வேணு.குணசேகரன் தம்முடைய ‘குணத்தமிழ்’ நூலையும் ‘திருத்தமிழ்ப்பாவை’ நூலையும் நினைவளிப்புகளாக வழங்கினார்.
திருப்புகழ் அறக்கட்டளைத் தலைவர் முனைவர் இரா.தேவகி நன்றி நவின்றார்.   
மூலிகைப் பானத்துடன் தொடங்கிய விழா நண்பகல் உணவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

ஒளிப்படங்களை அழுத்திப் பெரிதாகக் காணக.