கட்டுரைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2022

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்

 அகரமுதல


 


ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான

கட்டுரைப் போட்டி முடிவுகள்

உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு:

முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி

இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி

மூன்றாம் பரிசு:  முனைவர் வதிலை பிரதாபன்

முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால்,  உரூ 2,000/  பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு பெறுநர்

எழுத்தாளர் ஞானப்பிரகாசன்

திருவாட்டி புனிதா சிவக்குமார்

இரண்டாம் பரிசு பெற்ற முனைவர் தானப்பனின் கட்டுரையில் சில கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பெற்றமையால் பரிசுத்தொகை மூவாயிரம் உரூபாயில் உரூ.ஐந்நூறு பிடிக்கப்பட்டு பங்கேற்பாளர் ஒருவருக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்பெறுகிறது.

அவ்வாறு பரிசு பெறுநர்

ஆரணி பாலு (எ) கு.பாலாசி

இவர்களுக்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான கார்த்திகை 1 இல் / 17.11.2022 அன்று கூகுள் செலுத்துகை வழிப் பரிசுப் பணம் அனுப்பப்படும்.

பரிசுப் புரவலர்கள்

மேனாள் முதல்வர் முனைவர் மதியழகி

இலக்குவனார் மன நல மருத்துவமைனத் தலைவர் மரு.செல்வமணி தினகரன் ஆகியோருக்கு நன்றி.

கவிஞன் தமிழ்க்காதலன்

செயலாளர், தமிழ்க்காப்புக் கழகம்

சனி, 30 ஜனவரி, 2021

வ.உ.சி ஆய்வு வட்ட த்தின் கட்டுரைப் போட்டி


வ.உ.சி ஆய்வு வட்டம் நடத்தும்

கட்டுரைப் போட்டி

பரிசுத்தொகை (மூவருக்கு) ஐயாயிரம் உரூபாய்

முதல் பிரிவின் தலைப்பு:

வ.உ.சியும் இந்திய விடுதலையும்

இரண்டாம் பிரிவின் தலைப்புகள்:

வ.உ.சி.யின் தமிழ்த்தொண்டு

வ.உ.சியும் மொழி பெயர்ப்பும்

மூன்றாம் பிரிவின் தலைப்புகள்:

வ.உ.சி.யின் சுதேசியக் கொள்கை

வ.உ.சி.யும் தொழிலாளர் இயக்கமும்

வ.உ.சி.யின்அரசியல் பெருஞ்சொல்

கட்டுரை அனுப்ப இறுதி நாள்:

சித்திரை 17, 2052 / 30.04.2021

பிறவற்றை அறிக்கையில் காண்க.


வியாழன், 31 அக்டோபர், 2019

உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்

அகரமுதல

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666)
உலகத் தமிழ் நாள்
கட்டுரைப் போட்டி
30 பரிசுகள்
தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.
விவரம் வருமாறு:
தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்!
தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி என எல்லா நிலைகளிலும் திகழவும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் தமிழ் பரவவும் தமிழக அரசும் இந்தியஅரசும் தமிழாசிரியர்களும் தமிழ் அமைப்புகளும் மக்களும் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கட்டுரை விளக்கப்பட வேண்டும்.
பரிசு விவரம்:
மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் வழங்கும் உரூ. 500/- வீதம் 10 முதல் பரிசுகள்
கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள்   குடும்பத்தினர் வழங்கும் உரூ. 250/- வீதம் 20 இரண்டாம் பரிசுகள்
போட்டியாளர்கள் தத்தம்  பெயர், படிப்பு, கல்லூரி அல்லது பணி, பணியிடம், வீட்டு முகவரி விவரங்களுடன் மின்வரி குறிததும் தொலைபேசி, அலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும். விழா இடம் முடிவானதும் தெரிவிக்கப்படும்.
பக்க அளவு:   முழுத்தாள் அளவில் குறைந்தது 4 பக்கங்களும் 6 பக்கங்கள் மிகாமலும் கட்டுரை இருக்க வேண்டும்.
சீருரு(யுனிகோடு) எழுத்துருவில் கணியச்சிட்டுப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப் பெற வேண்டும்.
கட்டுரை வரவேண்டிய இறுதி நாள்: ஐப்பசி 19, 2050  /11.11.2019
அனுப்ப வேண்டிய மின்வரிகள்: thamizh.kazhakam@gmail.com ;
தொடர்பிற்கு:  
எ.த. இளங்கோ, தலைவர், வடசென்னைத் தமிழ்ச்சங்கம்; 73959 20276 ; vadachennaitamilsangam@gmail.com
முனைவர் பா.தேவகி 97100 07577 ; devaki0574@gmail.com
இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்