திங்கள், 29 டிசம்பர், 2014

வத்தலக்குண்டு நகரில் கலை இலக்கிய மாலை

59kalaimaalai

தமிழ்நாடு முற்போக்கு

எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்

கலை இலக்கிய மாலை

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் வானொலித்திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாகக் கலை இலக்கிய மாலைமார்கழி 5, 2045 / 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், ஊரகக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரம்பரைக் கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி மேளம், பள்ளி மாணவ, மாணாக்கியர்களின் கலைநிகழ்ச்சிகள் முதலானவை நடைபெற்றன.
  பேராசிரியர் தண்டபாணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
  திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, பழைய வத்தலக்குண்டு ஊராட்சிமன்றத் தலைவர் ஆர்.தனபாலன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், வசந்தமுகில், வதிலை வெங்கடேசு, வைகை முத்து, நிலவை முருகேசன், எல்.ஐ.சி.இலட்சுமணன், பாடகர் கண்ணன், அஞ்சல்துறை அலெக்சாண்டர் முதலான பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணாக்கியர்களுக்கு அறிவுசார்ந்த நூல்கள் வழங்கப்பட்டன. செயலாளர் கவிஞர் கவிவாணன் நன்றி கூறினார்.
செயலர் - கவிவாணன் பரிசு வழங்கல்
செயலர்  கவிவாணன் பரிசு வழங்கல்
வைகை அனிசு
3, பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக