MGR01

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்

ஒன்றியச்செயலர் செல்லமுத்து மாலையணிவிக்கிறார்
ஒன்றியச்செயலர் செல்லமுத்து மாலையணிவிக்கிறார்
தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
  தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர்.
  மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர். இராசேந்திரன், என்.எம்.சாகுல்அமீது சிறுபான்மை ஒன்றியச்செயலாளர், தேவதானப்பபட்டி பள்ளிவாசல் சமாஅத் தலைவர் அப்துல் கபார்கான், எம்.எம்.நிசாம்தீன், எம்.எசு.அசீசு, சலீம், அ.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி, தே.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் செல்வக்குமார், செயமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் சங்கரலிங்கம், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் அப்பாசு, ஒன்றிய உறுப்பினர்கள் குள்ளப்புரம் கணேசன், வடபுதுப்பட்டி அன்னபிரகாசு,செயமங்கலம் கண்ணன், தாமரைக்குளம் பேரூராட்சித்தலைவர் இராமதண்டபாணி முதலான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

vaigai_aneesu_name