திங்கள், 18 ஜூலை, 2011

உலகமரபுச் சின்னமாக சிம்லிபால் அறிவிப்பு

உலக பாரம்பரிய சின்னமாக சிம்லிபால் அறிவிப்பு

First Published : 18 Jul 2011 12:31:20 AM IST

Last Updated : 18 Jul 2011 05:33:22 AM IST

புவனேஸ்வரம், ஜூலை 17: ஒரிசாவிலுள்ள சிம்லிபால் தேசிய பூங்கா உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஒரிசா மாநில தலைமைச் செயலாளர் பி.கே. பட்நாயக் தெரிவித்தார்.ஒரிசா மாநிலம் மயூர்ஹஞ்ச் மாவட்டத்தில் சிம்லிபால் பூங்கா உள்ளது. 5,569 சதுர கிலோ மீட்டர் பரப்பரளவில் பரந்து விரிந்து உள்ள இந்த பூங்கா சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகும். இப்பூங்காவில் 1,076 அரியவகை மரங்கள், மற்றும் பறவைகள், விலங்குகள், மீன் வகைகள், வண்ணத்துப்பூச்சி வகைகள் என பல உள்ளன. இப்பூங்காவை சர்வதேச பாரம்பரிய சின்னமாக சர்வதேச ஒருங்கிணைப்பு கவுன்சில் அங்கீகரித்துள்ளது. பூங்கா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பி.கே.பட்நாயக் இத்தகவலை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக