புதன், 2 மார்ச், 2011

T.N.govt. reduces the tax on petrol: விற்பனை வரியைக் குறைத்து மாநில அரசு உத்தரவு

தமிழக அரசு என்று தெளிவாகக் குறிப்பிடலாமே! இதனை வெளியிடாவிட்டாலும் செய்திப் பிரிவினருக்குத் தெளிவாகக் குறிப்பிட அறிவுரை வழங்குங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி/

விற்பனை வரியைக் குறைத்து மாநில அரசு உத்தரவு

First Published : 02 Mar 2011 02:44:49 AM IST


சென்னை, மார்ச் 1: பெட்ரோல் மீதான விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.38 குறைகிறது.  இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய விற்பனை வரியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டுள்ளது. இப்போது, பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதம் குறைத்து 27 சதவீதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது.  இதனால் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.210 கோடி வரி இழப்பு ஏற்படும். பெட்ரோலைப் பயன்படுத்துவோருக்கு லிட்டருக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதன் காரணமாக ரூ.1.38 குறையும். இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு விற்பனை வரி குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள 27 சதவீதம் பெட்ரோல் மீதான விற்பனை வரி என்பது தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக