சனி, 5 மார்ச், 2011

dont obey to cong.compulsion-veeramani request: காங்கிரசின் கட்டாயத்திற்கு அடிபணிய வேண்டாம்: கி.வீரமணி வேண்டுகோள்


மடியில் கனமிருந்தால்தான் வழியில் அச்சம்  இருக்கும் என்கிறார்கள். தி.மு.க. துணிவுடன் உள்ளதால் அலைக்கற்றை ஊழலில் காங்.கின் பிடி தி.மு.க.கையில்  இருக்க வேண்டும். எனவே,  இப்படியாவது கொலைகாரக் காங். ஒழிக்கப்படட்டும். வீரமணியாரின் அறிக்கை சரிதான். 
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழே விழி! தமிழா விழி!



காங்கிரஸின் நிர்பந்தத்துக்கு அடிபணிய வேண்டாம்: 
கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை, மார்ச், 5: திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட 63 தொகுதிகள் வேண்டும் என்றும், போட்டியிடும் தொகுதிகளை தாங்களே முடிவு செய்வோம் என்றும் காங்கிரஸ் நிர்பந்திப்பதாகவும், இது முறைதானா என்றும் திமுக தலைவர் கருணாநிதி மனம் வெதும்பிய நிலையில் நேற்று இரவு கேள்வி எழுப்பினார்,. இதற்கு, காங்கிரஸின் நிர்பந்தத்துக்கு திமுக தலைமை அடிபணிய வேண்டாம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுகுறித்த கி.வீரமணியின் அறிக்கை...தி.மு.க. தலைவரது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான -நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை, காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்களின்நிபந்தனையை ஏற்கும் கட்சியாகவும் உள்ளது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இந்தக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இல்லை. மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டிதொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கம். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு (விஸ்வரூபம்) கொள்ள வேண்டும். எனவே திமுகவின் உயர்நிலை அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது...- என்று தி.க தலைவர் கி.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.திமுக, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளக்கூடும் என்று சில ஆங்கில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், திமுகவின் உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இந்தச் செய்திகளை காங்கிரஸ் வட்டாரம் மறுத்துள்ளது. இருப்பினும், திமுக உயர்மட்ட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தங்கள் நிலையை காங்கிரஸ் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.
கருத்துகள்

அடேய் வீரமணி, நீயெல்லாம் ஒரு மனுஷன? பெரியார் சினிமா பார்க்க கூடாதுன்னு சொன்னார். நீ கருணாநிதி சினிமாவை பார்த்து கலைஞர் டிவி யில் கமெண்ட் அடிக்கிறாய். .. நாளை ஜெயலலிதா முதல்வரானால் நீ காலை ...
By raman
3/5/2011 1:48:00 PM
"காங்கிரஸ் இப்படி பண்ணுவது தப்பு,பாரம்பரியமான ஒரு கட்சி அரசியல் ப்ளக்க்மாயில் செய்கிறதோ எண்டு எண்ண தோன்றுகிறது.இப்படி குளறுபடிகள் பண்ணிவிட்டு makkazhidam தான் வரவேண்டும்.ஊழலில் காங்கிரஸ்க்கும் தொடர்புண்டு .கமேன்வீழ்த் ஊழல் ,அதர்ஸ் ஊழல் அதற்கெல்லாம் ஒரு சட்டம்
By kumar
3/5/2011 1:47:00 PM
கலைஞர் இரவோடு இரவாக அவசர அவசரமாக எழுதிக் கொடுத்ததை உங்கள் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளது போல் தெரிகிறதே! "சுயமரியாதை" என்னும் வெறும் வார்த்தையை நமக்கு அவ்வப்போது நினைவு படுத்த இன்னும் சிலர் இருப்பது சற்று ஆறுதலே! மணியாரே! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உமக்கு தெரியாயதா?? மத்தியில் ஆட்சி அமைக்கும்போது நம்ம முதியவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?? காங்கிரசுக்கு எப்படியெல்லாம் கிடுக்கிப்பிடி போட்டு திணற வைத்தார். வடநாட்டு சேட்டு சும்மா விடுவானா? சமயம் பார்த்து மஞ்சள் துண்டை இறுக்குகிறான். ஏற்கனவே "கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை" என்று நம்ம பெரியவருக்கு "செக்" வைத்து அவர் வாயை அடைத்து வைத்துள்ளான். இப்போது சும்மா கும்மு கும்முன்னு குத்துறான். போதாக்குறைக்கு கலைஞரை பணிய வைக்க "கனிமொழிக்கு சிபிஐ சம்மன்" என்னும் துருப்புச் சீட்டை வேறு கையில் வைத்துக் கொண்டு நம்ம பெரியவரின் தூக்கத்தை கலைத்துக் கொண்டு இருக்கிறான். கலைஞரின் சாணக்கியத்தனம் காலாவதியாகி வெகு நாட்களாகி விட்டது. முதியவர் திணறத்தானே செய்வார்.
By Abdul Rahman - Dubai
3/5/2011 1:37:00 PM
காங்கிரஸ் குட்டன்யில் சேந்தாலும் சரி சேராவிட்டாலும் சரி தி மு க குட்டனி மண்ணை கவ்வ போவது உறுதி .
By mohan
3/5/2011 1:20:00 PM
நீ ஒரு திருட்டு பயல் மு.க. ஒரு திருட்டு பயல் காங் ஒரு திருட்டு பயல் total ஒரு திருட்டு பயல்கல்
By ஜெய் indian
3/5/2011 1:12:00 PM
அப்படியானால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி வரச்சொல்லுங்கள் பார்க்கலாம் ...
By நவநீதகண்ணன்
3/5/2011 1:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக