திங்கள், 28 பிப்ரவரி, 2011

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம்: கே.வீ.தங்கபாலு

சோனியா குடும்பத்தைத் தவிர எனச்சொல்ல நினைத்தது விடுபட்டு போயிற்று  . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் . / தமிழே விழி! தமிழா விழி ! / 

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம்: கே.வீ.தங்கபாலு

First Published : 28 Feb 2011 02:55:46 AM IST


காஞ்சிபுரம், பிப். 27: யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக் கேட்கும் அரசாக மத்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஓ.வி.அளகேசனார் நூற்றாண்டு விழாவுக்கு தலைமைத் தாங்கி அவர் பேசியது:காங்கிரஸ் கட்சியை முதன்மையான கட்சியாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி யாருக்கும் தலைவணங்காது. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் அரசாக காங்கிரஸ் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்து வருகிறோம். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தியாகி ஓ.வி.அளகேசனாருக்கு நூற்றாண்டு விழா தற்போது நடைபெறுகிறது. இதுபோல் மதுரையில் கக்கன்ஜிக்கும், கோவையில் சி.சுப்பிரமணியத்துக்கும், திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கும் நூற்றாண்டு விழாக்களை நடத்தினோம்.காங்கிரஸ் கட்சியின் நேர்மையும், தன்னலம் இல்லாமல் வாழ்ந்த தலைவர்களையும் நினைவு கூரும் விதமாக இந்த விழாக்களை நடத்தி வருகிறோம்.ஓ.வி.அளகேசனார் விடுதலைப் போராட்டத்துக்காக 6 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். ரயில்வேத்துறை இணை அமைச்சராக இருந்தபோது ரயில் விபத்து ஏற்பட்டதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர்.மத்திய அரசு சாதி, மதம், இனம் பாராமல் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது. மத்தியில் ஒரு நல்ல ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரால் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பான பிரதமராக செயலாற்றி வருகிறார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக