புதன், 2 மார்ச், 2011

Ramdoss welcomes the central budget

என்ன செய்வது? தேர்தல் நிதி அளிததமைக்குப் பாராட்டுகள் என வெளிப்படையாகச் சொல்ல முடியாதே! கொலைகாரக் கட்சியிடம் கூட்டணி வைத்தால் பத்தும் பறந்து போகத்தான் செய்யும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/ 


மத்திய பட்ஜெட்: ராமதாஸ் வரவேற்பு

சென்னை, மார்ச் 1: திங்கள்கிழமை (பிப்ரவரி - 28) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.  இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக வரவேற்கிறது. தமிழகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசின் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்க இந்த கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும். நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு, மாத வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிதாக கல்வி உதவித் தொகை ஆகியவை வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் நலிந்த பிரிவு மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக