வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

Yaazh corp. Refused to pass the condolence resolution for parvathy ammaal : பார்வதி அம்மாளுக்கு இரங்கல்: யாழ்.மாநகராட்சி இசைவு மறுப்பு

தமிழ் மக்களுக்குத் தங்கள் தலைவரின் தாயின் மறைவிற்குக் கூட இரங்கல்  தெரிவிக்க உரிமையில்லை எனில் தமிழர் நாடாக ஒன்றும உருவாகாமைதானே காரணம். வீதிகளில் மக்களைக் கூட்டி  இரங்கல் தீர்மானங்களையும் கண்டனத் தீர்மானங்களையும் நிறைவேற்றுங்கள். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி /


பார்வதி அம்மாளுக்கு இரங்கல்: 
யாழ்.மாநகராட்சி அனுமதி மறுப்பு

First Published : 24 Feb 2011 05:42:56 PM IST

Last Updated : 24 Feb 2011 06:24:30 PM IST

கொழும்பு, பிப்.24: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற யாழ்ப்பாண மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அதுதொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். எனினும் மாநகராட்சியின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் என அதற்கு மாநகராட்சி முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அனுமதி மறுத்துவிட்டார்.இதனால் பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது அஸ்தி சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கவும் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சி உறுப்பினர் சங்கையா பெரும் அதிருப்தி அடைந்ததாக இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இவர்களுக்கு இன்னமும் பிரபாகரன் பீதி போகவில்லை என்பது தெளிவாகிறது.
By vel
2/24/2011 10:20:00 PM






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக