புதன், 23 பிப்ரவரி, 2011

German minister relinquish the doctorate : முனைவர் பட்டத்தை துறந்த அமைச்சர்!

இங்கு முனைவர் பட்டத்திற்குத் தகுதியே அதுதான். எனவே, அவர் தன் ஆய்வேட்டை இங்கு அனுப்பி எவ்விதத் தடங்கலுமின்றி முனைவர் பட்டத்தைப் பெறலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
<  தமிழே விழி! தமிழா விழி! >
டாக்டர் பட்டத்தை துறந்த அமைச்சர்!


பெர்லின்,பிப்.22: ஜெர்மன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கார்ல் தியோடர் ழூ குட்டன்பர்க் தன்னுடைய டாக்டர் பட்டத்தைத் துறந்துவிட்டார்.மற்ற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் திரட்டி (திருடி) தன்னுடையதைப் போல தொகுத்து டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார் என்று கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் நடந்த தீவிர பிரசாரத்தின் விளைவாக அவர் இந்த முடிவை எடுத்தார்.407 பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வறிக்கையைத் தானே கைப்பட எழுதியதாகவும் நன்கு ஆய்ந்த பிறகே அறிக்கையைத் தயார் செய்ததாகவும் அமைச்சர் கார்ல் தியோடர் தெரிவிக்கிறார்.அதே சமயம், எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்குப் பிறகு தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை கூர்ந்து படித்துப் பார்த்ததாகவும் பல இடங்களில் மற்ற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து தான் கையாண்ட மேற்கோள்கள் பற்றிய விவரக் குறிப்புகளைச் சேர்க்காமலேயே விட்டுவிட்டது அப்போதுதான் தெரிந்தது என்றும் எனவே டாக்டர் பட்டமே வேண்டாம் என்று கூறி திரும்பத்தந்துவிட முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அந்த ஆய்வறிக்கையில் 70% தகவல்கள் மற்றவர்களுடைய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்றும் 250 இடங்களில் அடுத்தவர்களின் ஆய்வுக் குறிப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அவருடைய ஆய்வறிக்கையைப் பார்த்தால் சொந்தமாக தயாரித்ததெல்லாம் முன்னுரை, முடிவுரை, விளக்கம் போன்ற அவயங்களும் இணைப்பு வாக்கியங்களும்தானே தவிர உருப்படியான கருதுகோள்களோ, முடிவுகளோ, விளக்கங்களோ அல்ல என்பது தெரியும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஜெர்மன் நாட்டில் உள்ள அரசியல் தலைவருக்கும் கூட இந்த டாக்டர் பட்டம் மீது இப்படியொரு மோகம் இருக்கிறது என்பதும் அதற்காக அவர் மெத்தவும் அலைந்து திரிந்து அறிக்கை தயார் செய்திருக்கிறார் என்பதும் தெரிகிறது. ஆய்வின் முக்கியமான பகுதி தொடர்ச்சியாக 10 பக்கம் வருகிறதாம். இந்த அன்பர் வேறொரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை அப்படியே ஒரு வார்த்தைகூட மாற்றாமல் தன்னுடைய அறிக்கையில் சேர்த்துவிட்டார். இதையும் பேரூத் பல்கலைக்கழகம் (லெபனான் தலைநகர் பெய்ரூத் அல்ல) ஏற்று பட்டம் வழங்கியிருப்பது வியப்பாக இருக்கிறது.இந்த அற்பத்தனம் அம்பலமாகிவிட்டதால் அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள டாக்டர் பட்டத்தைத் தியாகம் செய்ய முன்வந்திருக்கிறார் கார்ல் தியோடர் என்று எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது. அமைச்சர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக